Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label நிழற்பட கருவி. Show all posts
Showing posts with label நிழற்பட கருவி. Show all posts

கேமரா (நிழற்பட கருவி)..! - குறுந்தொடர் - 1 31

அதிரைநிருபர் பதிப்பகம் | July 22, 2013 | , , , ,


க்ளிக்.. கிளிக்… கிளிக்… முன்பெல்லாம் சுற்றுலா தளங்களில் ரொம்பப் பிரபலமாக கேட்கும் இந்த சத்தம், இப்போது எங்குபார்த்தாலும் கேட்க ஆரம்பித்து விட்டது. பொதுவான ஃபங்கஷனிலும் இந்தச் சத்தங்களை அடிக்கடி கேட்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஸ்மார்ட் மொபைல் ஃபோன்களின் வருகையால் எங்கு பார்த்தாலும் (தனிமையில் இருப்பவர்களும் தங்களின் முகத்துப் பக்கம் திருப்பிக் கொண்டு) கிளிக் என்ற சத்தம் கேட்கிறது.

நம்ம எல்லோராலும் இலகுவாக புரிந்து கொள்கின்ற, ஒரு சப்த மொழிதான் இந்த கிளிக் கிளிக்குடன் கூடிய அந்த பளிச் என்ற வெண்பளீர் ஒளியும் சேர்ந்தால் கேமராவில் பதியும் படம் பிரகாசமாக இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் கிடையாது. இந்த கிளிக்கும் பளிச்சும் கேமராவின் முகவரி என்றால் அது மிகையாகாது.

தற்போது கேமராவில் ‘க்ளிக்’ சத்தம் வந்த காலம் எல்லாம் மலை ஏறி போய் போய்விட்டது. இன்றைய கேமராக்கள் 100% டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு , சத்தமே இல்லாமல் நூற்றுக்கணக்கான புகைப்பட நகல்களை எடுத்து தள்ளி விடுகின்றன !

பிலிம் ரோல்

எந்தவகை கேமராவாக இருந்தாலும் நம் கண்ணில் படுகிற முதல் விஷயம் லென்ஸ்தான் (குவித் தகடு கண்ணாடி). அதுதான் கேமராவின் நெற்றிக்கண். ‘லென்ஸ்’ என்பது ஒரு வித்தியாசமான வடிவத்தில் தயாரிக்கப்படுகிற ஒரு வகை சிறப்புக் கண்ணாடிக் குவித் துண்டு. இதன் வேலை, ஒளியைக் குவித்து ஒரே இடத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பதுதான்.


கடை மற்றும் அலுவலக வாசல்களில் பொருத்தப்படும் . பெரிய கண்ணாடி. வழியாக வெளிச்சம் கடைக்குள் ஊடுருவி வந்து பரவலாக விழுகிறது. இதுக்குக் காரணம், அந்தக் கடையில் இருக்கிற கண்ணாடி, தட்டையான வடிவத்தில் இருப்பதால் இப்படி வெளிச்சத்தை பரவலாக பிரதிபளிக்கின்றது. இதற்கு   சமதள ஆடி என்று பெயர்  (ஆடி மாத தள்ளுபடி உண்டா என்று கிண்டல் அடிக்க கூடாது ) அதனால், சூரிய ஒளி அதைத் துளைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து பரவலாக வெளிச்சத்தை பாய்ச்சுகின்றது.

அதே கண்ணாடியைக் கொஞ்சம் மாற்றி வேறு வடிவத்தில் தயாரித்து. நடுவில் தடிமனாகவும் ஓரங்களில் மெலிதாவும் கிட்டத்தட்ட, ஒரு மினி இட்டலி ரேஞ்சுக்கு வடிவமைத்து இந்த ஸ்பெஷல் கண்ணாடி வழியாகச் சூரிய வெளிச்சம் நுழையு ம்போது, அது லேசாக வளைந்து, திரும்பி தலைகீழாய் பரவலாக இல்லாமல் ஒரே இடத்தில் குவிக்கப்படுகிறது. அதுதான் லென்ஸின் அடிப்படை நுட்பம்.

கேமராவுக்கு முன்னால் இருக்கிற லென்ஸும்(அதாங்க நெற்றிக்கண் ) கிட்டத்தட்ட இதே வேலையைத்தான் செய்கின்றது. நாம் எந்தப் பொருளைப் படம் எடுக்கின்றோமோ அந்த பொருளில் இருந்து வருகின்ற ஒளிக் கதிர்களை ஒரே இடத்தில், அதாவது கேமராவுக்குள்ளே இருக்கிற பின்பகுதியில் கொண்டு போய்க் குவிக்கின்றது.

அப்படி குவிக்கின்ற அந்த இடத்தில்தான் ஃபிலிம் ரோலின் ஒவ்வொரு பிரேமும் இருக்கும் அது ஒரு விசேஷமான பிளாஸ்டிக் தகடு. அதில் சிலரசாயனப் பொருள்கள் பூசப்பட்டிருக்கும். (அது பற்றி அண்ணன் NAS அவர்கள்தான் விவரம் தரணும்) இந்த ரசாயனங்களின் சிறப்பு அவற்றின் மேல் கொஞ்சம் வெளிச்சம் பட்டாலே போதும், அந்த வெளிச்சத்துக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்ளும் பட்சோந்தி தனம் அந்த ரசயனங்களுக்கு உண்டு.

இதனால் நாம் போட்டோ எடுக்கும் பொருளில் இருந்து வருகிற வெளிச்சம் லென்ஸ் வழியாக ஊடுருவி இந்த ரசாயனங்களின் மீது விழும்போது, அந்த காட்சி அப்படியே ஃபிலிம் ரோலின் ஒரு பகுதியில் பதிவாகி விடுகிறது. இதே மாதிரி அடுத்தடுத்து நாம் எடுக்கும் ஒவ்வொரு போட்டோவு ம் இச்சுருளில் வரிசையாகப்  பதிவாகிக் கொண்டே வரும்.


போட்டோ எடுத்து முடித்ததும் கேமராவிலிருந்து ஃபிலிம் ரோலை வெளியோ எடுத்தால், வெளியோ  இருக்கிற அதிக வெளிச்சம் முழுவதும் பிலிம் ரோலில் பட்டு , இதற்க்கு முன் நாம் எடுத்த அனைத்து  படங்களும் அம்பேல்தான் இப்படி அம்போவான படங்களை எந்த சாப்ட் வேர் போட்டும் ரெக்கவர் பண்ண முடியாது.

அதனால், இதற்கென்று வடிவ மைக்கப்பட்ட டார்க் ரூம் அதாவது இருட்டு அறைகளில்தான் ஃபிலிம் ரோலைப் பிரித்து வெளியில் எடுப்பார்கள். சில விசேஷக் கெமிக்களில் முக்கி எடுத்து அந்த பிலிம் ரோலை டெவலப் என்று சொல்லக் கூடிய பணியை செய்வார்கள் அதன்மூலமாக நம் படங்கள் என்றும் அழியாத படிநெகடிவாக பாதுகாக்கப்படுகிறது.

அந்த ‘நெகட்டிவ்வை நாம் வெளிச்சத்தில் பார்த்தால், நமக்கு ஒன்றுமே புரியாது. தலை சுற்றும் (வாந்தி வருமா என்று கேட்கக் கூடாது ) அந்த ’நெகட்டிவ்வைச் சில விசேஷக் கருவிகளில் செலுத்தி, பாசிட்டிவாக மாற்றுவார்கள். அதாவது, கொஞ்சம் தடிமனான ஒரு காகிதத்தில் (இதில் இரு வகை காகிதங்கள் உண்டு ஒன்று கிளாசிக் இது

பளபளவென்று இருக்கும் மற்றொன்று மேட் பேப்பர் அது கொஞ்சம் சொரசொரப்பா இருக்கும் ) அழகாக அச்சடித்துத் தருவார்கள். அதைத்தான் நாம் போட்டோகிராஃப்’ புகைப்படம் என்று சொல்கிறோம்.

படச் சுருள் சுழலும்...
S.ஹமீது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு