டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் (அதே):
கூகிலானந்தாவிடமோ அல்லது பிங்கு மாஸ்டரிடமோ அல்லது யாஹூ-மாணவரிடமோ தட்டி தட்டி கேட்டுப் பார்க்க கூடாது !
பதில் தெரியவில்லை என்று அங்கே இங்கே சுற்றிக் கொண்டெல்லாம் இருக்கப்டாது, தெரியாத கேள்விகளுக்கு நீங்களே 'PASS'ன்னு சொல்லிக் கொண்டே அடுத்த கேள்விகளுக்குச் செல்லலாம்.
முன்னாள் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி ! தொடர்கிறது...
- முதல் உலக தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?
- கடைசியாக கோயம்புத்தூரில் செம்மொழி மாநாடு பெயரில் நடந்த உலக தமிழ் மாநாடு எத்தனையாவது மாநாடு?
- அறிவியல் கண்டுபிடிப்புக்காக நோபல்பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
- கொல்கத்தா விமானத் தளத்தின் பெயர் என்ன?
- கடற்படையின் தலைமை அலுவலர் பதவிப் பெயர் என்ன?
- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைப்படும் நகரம் எது?
- சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் சுந்திரப் போர் எந்த ஆண்டு நடந்தது
- சமீபத்தில் வெளியிடப்பட்ட புத்தகங்களின் ஆசிரியர்கள் யார்? - அ) மூன்றாம் உலகப்போர், ஆ) தமிழும் கம்பனும்.
- இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யார்?
- சுதந்திர இந்தியாவின் முதலும் கடைசியுமான கவர்னர் ஜெனரல் யார்?
- வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த ஆண்டு எது?
- 1943ல் இந்திய தேசியப் படையை (INA) உருவாக்கியவர் யார்?
- தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க் கட்சி தலைவர் யார்?
- சமீபத்தில் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிய புயல் காற்றின் பெயர் என்ன?
- சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி ஆய்வு செய்த மொத்த நாட்கள் எத்தனை?