தமிழ்கூறும் மக்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்ட மார்க்க அறிஞர், ஒடுக்கப்பட்ட சமுதயத்தை தட்டி எழுப்பிய அற்புதமான சிந்தனையாளர்களில் முக்கியமானவர் தமிழக முஸ்லீம்களால் P.J. என்று அனைவராலும் அழைக்கப்படும் சகோதரர் P.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் உடல் நலம் குறித்த தகவல் அடங்கிய செய்தியை தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளிவந்திருப்பது ஒவ்வொரு முஸ்லீமுக்கும் கவலையளிக்கும் செய்தியாகும்.
வல்லமை நிறைந்த அல்லாஹ் அவனது சக்தியைக் கொண்டு சகோதரர் P.J.அவர்களுக்கு ஆரோக்கியத்தையும் மீண்டும் அவர்கள் எடுத்துக் கொண்ட மார்க்கப் பணி தொடரவும் அருள்புரிவானாக !
அவர்களின் ஆரோக்கியத்திற்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் குழு
குறிப்பு : இயக்கமென்ற மயக்கமெல்லால் தனிமனித ஆரோக்கியத்திற்கு பொருந்தாது என்பதில் அதிரைநிருபர் குழு தெளிவுடன் இருக்கிறது.
மேலும் தகவல்களுக்கு : http://pinnoottavaathi.blogspot.com/2012/10/pj.html
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு : (நன்றி : http://www.tntj.net/108877.html)
சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.
வழக்கம் போல் அவர்கள் தமது பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவே அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து சகோதரர் பி.ஜே. அவர்கள் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தை கீழே தருகிறோம்.
இப்படிக்கு
மாநில நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
10.10.2012


