அஸ்ஸலாமு அலைக்கும்
அதிரைநிருபரில் வலம் வரும் பேசும் படத்திற்காக அதிரை மற்றும் அதனைச் சுற்றிய ஊர்களையும் கிளிக்கிக் கொண்டிருந்த மூன்றாம் கண்ணுக்கு தேடலின் பார்வை விரிந்தது (பார்வையைகூட யோசிக்க வைத்தது அதிரைநிருபரின் ஆஸ்தான கவி சபீர் அவர்களின் கவிதா(க்)கம்). மூன்றாம் கண்ணின் தேடலோ விமானம் ஏறி சிங்கப்பூருக்கே சென்றது (அட நம்ம பே.ம.த. ஊராச்சே!). இரவு பத்து மணிக்கு நண்பர் அவரின் குடும்பத்தோடு நம்மை வரவேற்க ஏற்போர்ட்டுக்கு வந்திருந்தார்.
சுத்தம் சோறு போடும் என்பார்கள் இங்கு சிங்கப்பூரில் சோறு போடும் இடமும் சுத்தமாத்தான் இருக்கு. மார்க்கெட்டில் மாட்டுக்கறி வியாபாரம் கொடிக்கட்டி பறந்தது அங்கும் சுத்தம்தான் (அங்கு மாடு ரயிலில் அடிபட சான்ஷே இல்லைங்க).
சிங்கப்பூரில் உழைத்தால்தான் சாப்பிடமுடியும் என்ற நிலையை உருவாக்கி வைத்துள்ளனர். வயதானவர்கள் கூட ஹோட்டல்களில் படு சுறுசுறுப்பாக வேலை செய்கின்றார்கள் இலவசங்களை கொடுத்து அங்கு மக்களை சோம்பேறியாக்க வில்லை.
என்னை அதிகமதிகம் ஆச்சர்யப்படுத்தியது அங்கு உள்ள மெட்ரோ ரயிலோ, சுத்தமோ, உயர்ந்து நிற்கும் கட்டிடமோ அல்ல நம் நாட்டு மக்கள் அங்கு உள்ள சட்ட திட்டங்களை மதித்து நடப்பதுதான். அதே ஆட்கள் நம் நாட்டின் மண்ணில் கால் பதித்து விட்டால் நம் நாட்டு சட்டத்தை மிதித்து(தான்) நடக்கிறார்களே என்ற ஆதங்கமும், ஏக்கமும் விஞ்சியதை தவிர்க்க முடியவில்லை.
சிங்கப்பூரில் நம் மூன்றாம் கண் கிளிக்கியதை உங்களின் கண்களுக்கு விருந்தாக பகிர்ந்துள்ளேன்…
கோடு போட்ட ரோடு போடுவேன்னு சொல்வாங்களே ஆனா இங்கே உல்டாவா ரோடு போட்டு கோடு போட்டு இருக்காங்களே !
எங்கே ஒருத்தரையும் விளையாட காணோம் இதைவிட நல்ல இடமா பார்த்து விளையாட போய்டாங்களா !
கலர்புல் கலர்புல்ன்னு சொல்வாங்களே அது இதுதானோ !
அதிரை பட்டினத்தில் இதேபோல் ஒரு மைதானம் அமைந்தால் எப்படி இருக்கும் !?
வலைத்து வலைத்து கட்டுறதுன்னு சொல்வாங்களே அது இதுதானோ
டேபிள் செட்டபெல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா முக்கியமான ஐட்டம் சாப்பாட்டை காணோம் (அதான் கூட்டத்தையும் காணோமோ )
கொடல கையில புடிச்சிக்கிட்டு போனேன்னு சொல்வாங்களே அது இதுலே போறதையா?
அங்கே எல்லாம் ரோட்டுலே சோறு போட்டு தின்னலாம் என்று விடுவாங்களே ஒரு புருடா அது இந்த ரோடு தானோ !
சிங்கப்பூரில் என்னதான் பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டினாலும் பழசை மறக்காமல் சுற்றுலா தளங்களில் மரங்களில் கூடாரம் அமைத்து அழகு பார்க்கின்றனர்.
இதை தொங்கு பாலம்முன்னு சொல்றதா அல்லது தொட்டில் பாலம்ன்னு சொல்றதா
புது மாப்பிள்ளையைதான் வசியம் பண்ணிட்டாங்கன்னு சொல்வாங்க ஆனா இந்த பறவையை எப்படி வசியம் பன்னுனாங்கன்னு தெரியலே
Sஹமீது