இப்படியிருந்த அம்மாவை ! எப்படி மாத்திட்டாங்க !
மாணவ மணிகளே !
சீற்றமான மூச்சுக் காற்றுகள் அடங்கி இப்போது சீரான மூச்சுக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்து இருப்பீர்கள், தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் சமச்சீர் கல்விப் புத்தகங்கள் அனைத்தும் இணைய வழி தரவிறக்கம் செய்து கொள்ள மிகச் சிறப்பான ஏற்பாட்டை தமிழக அரசு பாடப் புத்தக கழகம் செய்திருக்கிறது.
இதோ கீழ்கண்ட சுட்டிகளைத் தட்டினால் மாணவச் சுட்டிகள் கெட்டியாக தாங்கள் படிக்கும் வகுப்புப் பாடங்களை வீட்டுக் கணினியிலேயே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இனிமேல், வீட்டாரை நான் படிக்கனும் கம்ப்யூட்டரை எனக்கு ஒதுக்கிடுங்கள் என்று சொல்லிக் கொள்ளலாம்!
கனினியின் ஊடே சாதிக்க எத்தனையோ விடயங்கள் இருக்கிறது, அதனைப் போகப் பொருளாகவும், பொழுதுபோக்கு சாதனமாகவும் மாற்றிக் கொள்ளாதவரை. அப்படி ஒரு சூழல் உங்கள் வீடுகளில் இருக்குமானால் தயை கூர்ந்து நளினமாக உங்கள் வீட்டாரிடம் எடுத்துச் செல்லி அப்படிப் பயன்படுத்தாமால் பார்த்துக் கொள்ள வேண்டியது இளம் மாணவ மணிகளாகிய உங்களின் கடமை இது உங்களுக்கும் பொருந்தும்தானே செல்வங்களே !
- அதிரைநிருபர் குழு