Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label மக்கா. Show all posts
Showing posts with label மக்கா. Show all posts

அழுவுனாத்தான்....! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | February 12, 2016 | , , , , , , ,


`உம்ரா` சென்றார்கள்...

தவாப் சுத்தவும், தொழுகைக்கும் ஒன்றாக சென்று வந்தவன் பின்னர் தனியாகத்தான் செல்வேன் என அடம் பிடித்திருக்கிறான்...

ம்ம்ஹும் அனுமதி கிடைக்கவில்லை... பெண்கள் பகுதியில் நின்று தொழமாட்டேன் ஆண்கள் பகுதிக்குதான் செல்வேன் என்ற அவனது வேட்கை... அங்கு சென்ற மூன்று நாட்கள் வரை நிறைவேறவில்லை...

`மக்கா ஹில்டன் டவரில்`தங்கியிருந்தாலும்... அங்கே இருக்கும் ரம்மியமான சூழலைப் பார்த்ததும்... அருகில்தானே இருக்கிறது ஹரம் என்று தனியாக சென்றவன் திரும்பி வர வழி அறியாமல் குழம்பியதால் இரண்டு மணிநேரம் அலைந்து பார்த்து இருக்கிறான்.

அதற்கிடையில் ஹோட்டலில் இருந்த வீட்டினரும் தேட ஆரம்பிக்க... ஹோட்டலை விட்டு ஹரம் நோக்கி ஆளுக்கு ஒருவராக தேட... அவனைக் காணோம்... !

எப்படியும் வந்துவிடுவான் என்று வீட்டினரும் தைரியமாக இருக்க இருந்தாலும் மனதில் பதபதைப்பு அனைவரிடமும் இருந்தது.

அசந்து போய் ஹோட்டலுக்கு திரும்பியவர்களுக்கு அங்கே அவனைக் கண்டதும்தான் நிம்மதியானது...

`எங்கேடா போனே இப்படி கலங்கடிச்சுட்டியே...` என கேட்க

`கரெக்டாதாம்மா போனேன்... அங்கே ஒரு கும்பலா வந்தவங்க கிராஸ் பண்ணி அப்படியே சுத்தி விட்டாங்க ரூட்டை மாத்தி விட்டாங்க... அங்கே தான் மாறிப்போயிட்டேன்...`

`ஏன் இவ்வ்ளோ நேரமாச்சு ?`

`சுத்தி சுத்தி வர்ரேன் எல்லா எண்டரன்சும் ஒன்னாவே இருக்கு... எங்கிட்டு போறதுன்னு தெரியலை யாருமே கண்டுக்கல என்னைய`

`சரி எப்படி இங்கே வந்து சேர்ந்தே !?`

`ஹெ ஹே... நம்ம கிட்டேதான் `மேஜிக்` இருக்கே...`

`என்னடா சொல்றே...?`

`ஒரு இடத்துல நின்னுகிட்டே சத்தமா அழுதேன் அப்போதான் ஒவ்வொருத்தரா வந்து என் முதுகில் தடவிக் கொடுத்துட்டு கேட்க ஆரம்பிச்சாங்க. `அதுல ஒருத்தர்கிட்டே நாம தங்கியிருக்கிற ஹோட்டல் பேரு சொன்னதும் கூட்டிட்டு வந்து ரிசப்சன்ல விட்டுட்டாரு`

`அப்புறம் ?`

`அதான் அழுவுனா தாம்மா வீட்டுல மட்டுமல்ல வெளியிலேயும் எல்லா(மே) ஹெல்ப் கிடைக்குது...`

`ஙே...`

போட்டிருந்த மொட்டையில் வாங்கிய குட்டு `வலி`க்கவும் மீண்டும் `அழுகை`

அபுஇப்ராஹிம்

மெளன ஓலம்! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | September 25, 2015 | , , , , ,


மக்காவிலிருந்து
மரணச் செய்திகள்

எவன் ஒருவனிடமிருந்து
வந்தோமோ
அவன் ஒருவனிடமே
மீள்வோம்

எனினும்...

மாண்டவர் எண்ணிக்கை
கூடக்கூட
'ஆண்டவா போதுமெ'ன
அலறுகிறது மனம்

சுவாசக் குழாயைச்
சோகம் அடைக்க
கண்களில்
கண்ணீர்த் தழும்ப
கனக்கிறது மனம்

சிறியொதொரு ஒழுங்குமீறல்
சிதறடிக்க...
இரும்புக்காற்று
வீசியதுபோல்
இறந்து விழுந்தனர்
வீடுபேறு
நாடிவந்த நல்லோர்

எறும்புச்சாரையை
ஏறி மிதித்துபோல்
கரும்புத் தோட்டத்தில்
கருயானைப் புகுந்ததுபோல்
கதிகலங்கி
விதிமுடிந்து வீழ்ந்தனர்
சகோதர யாத்ரிகர்கள்

புயல்காற்றைப்போல்
பூகம்பம்போல்
கூட்டமும் ஒரு
காத்திருக்கும் பேரிடர்தான்...
வரிசையோ வேகமோ
சற்றே பிசகியதால்
விநாடிகளில்
வீழ்த்தியது
நூற்றுக்கணக்கில் யாத்ரிகர்களை

சென்றது மீள்பயணம்தான்
எனினும்
வந்துவிடுவர் என்று
நம்பி
வழியனுப்பிய சொந்தங்களும்
வாழ்த்திவிட்ட பந்தங்களும்
துக்கத்தைக்
துறந்து மறக்க
வகையறியாமல் தவிக்கின்றனர்

வாழ்க்கையின் வடிவமைப்பை
இத்தனை எளிதாக
எத்தி வைக்கும் இறைவா...

பாவச்சுமையின்
பகுதியையாவது குறைக்கவந்தோர்
புனித மக்காவில் மரணித்ததால்
இனிய சொர்க்கம்
ஏகட்டும்

தற்காலிகத்
தங்குமிடமாம்
தரைநீண்ட பூமியைவிட்டு

நிரந்தர வாழ்விடத்தில்
நீரோடும் சுவனம் நாடி
மக்காவில் மரணமுற்ற
மனிதர்கட்கு

நாடியவாரே -
நன்மையை
நல்கிவிடு நாயனே!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

வருக...! வருக...! வருக...! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | October 13, 2014 | , , , , , , ,

அன்றலர்ந்த மலர்களைப்போல்
அகம் திலங்கும் பாலகர்களே
'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...'

சென்றுவந்த தளங்களில்
வென்றுவந்த இறையருள்
நின்று நிலைக்கட்டுமாக
என்றும் இருக்கட்டுமாக

மக்கமா நகர்தன்னில்
மக்களோடு மக்களாக
மாண்புமிகு கஃபாவை
மனதாரக் கண்டிருப்பீர்

முதன்முதலில் கண்டபோது
முகம் மலர்ந்திருக்கும்
கண்களும் கலங்கி
கண்ணீர் உகுந்திருக்கும்

கண்டதும் கையேந்தி
கேட்ட துஆ நினைவுண்டா
நிறைவேற்றித் தருவான்
இறைவனென நம்புவீராக

கஃபாவைச் சுற்றிவந்து
தவாபைச் செய்ததுவும்
சஃப்வா மர்வாவுக்கிடை
சயீ செய்த நினைவுகளும்

இறக்கும் காலம்வரை
மறக்க மனம் ஒப்பாது
இறக்கி வைத்த பாரமென
இன்னல்கள் விலகட்டுமாக

திறவா அருட்கதவும்
அரஃபாவில் திறக்கவைக்கும்
கரமேந்திக் கேட்டுவந்த
தரமானப் பிரார்த்தனைகள்

அரஃபாத் பெருவெளியில்
அபரித வணக்கங்கொண்டு
அழுதழுது கேட்டவற்றை
அல்லாஹ் தருவானாக

ஷைத்தானுக்குக் கல்லெறிந்து
பொய்த்தான் அவன் என்றொழித்து
முடிமழித்து மொட்டையிட்டு
பலி கொடுத்தத் தியாகங்களும்

ஈருடைதனைக் களைந்து
இயல்புடைக்குள் நுழைந்து
மினாவில் நிகழ்ந்ததெல்லாம்
கனாவில் தொடர்ந்துவரும்

கடைசிக் கிரியையென
விடைபெறும் காலத்தில்
தவாபில் மனம் கணத்து
தவிப்போடு பயணித்ததும்

மாநபி(ஸல்)யின் நவபியிலே
மதினத்து அமைதியிலே
தொழுதுநின்ற நேரங்களில்
அழுதக் கண்ணில் அர்த்தமுண்டு

எல்லாவற்றையும் கண்டு வந்தும்
ஏங்க வைத்தக் குறையாக
தங்க நபி(ஸல்)யைக் காணாத
உங்கள் குறை நீங்கிடுமா

இனிச் செய்யும் செயல்யாவும்
இறைப் பொருத்தம் கிடைத்திட்டால்
மறுமையும் சிறந்திடும்
மதிப்புமிக்க ஹாஜிகளே

தங்கள் ஹஜ்ஜை
அல்லாஹ்
ஏற்றுக் கொண்ட ஹஜ்ஜாக்க
அதிரை நிருபரின் துஆ

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
அதிரைநிருபர் பதிப்பகம் - wwww.adirainirubar.in

மக்காவில் தெரு கூட்டும் தொழிலாளி கோடிஸ்வரனான சம்பவம்..!! 33

அதிரைநிருபர் பதிப்பகம் | November 03, 2012 | , , , , ,


பங்களாதேசை சேர்ந்த சகோதரர் ஒருவர் மக்காவின் தெருவை கூட்டி சுத்தம் செய்துவரும் பல்தியாவின் கூலி வேலையை செய்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அவ்வாறு ரோட்டில் நின்று சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது, இஹ்ராம் அணிந்த நிலையில் உள்ள முதியவர் ஒருவர், திடீரெண்டு தன்னை கட்டி ஆரத்தழுவி தன்னை மன்னித்துவிடும்படி கண்ணீர்விட்டு அழுததை கண்ட அந்த கூலித் தொழிலாளி அதிர்ந்தேவிட்டார்...! ஆம். அதற்கான காரணம் அந்த முதியவர் வேறு யாரும் அல்ல..! தன் உடன் பிறந்த சகோதரர்தான் அந்த முதியவர். 


கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் தமக்கிடையே ஏற்பட்ட சொத்து தகராறில், தன் தம்பிக்கு சேரவேண்டிய பங்கினை தராமலும், பங்கை கேட்கும் போதெல்லாம் தன்னை சிறைக்கு தள்ளிய அந்த கொடூர சகோதரர்தான், தற்போது புனித மக்காநகரில் தன்னை கட்டித்தழுவி மன்னிக்கும்படி மன்றாடிய அந்த முதியவர் ஆவார். 

மேலும் இந்த இரு சகோதரர்கள் ஒன்றும் பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் உள்ளவர்களும் அல்ல. பொருளாதாரத்தில் மிக வலிமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் கைவசம் இருக்கும் ரொக்கம் மட்டுமே இந்திய ரூபாயில் சுமார் 25 கோடிக்கும் மேல். இது அல்லாமல் பல சொத்துக்களுக்கும் சொந்தக்காரர்கள் ஆவார்கள். இப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்த இந்த இளைய சகோதரர்தான் இன்று மக்கா நகரில் சில நூறு ரியால் சம்பளத்திற்காக தெருக்களை கூட்டி சுத்தம் செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். தன் மூத்த சகோதரர் தனக்கு செய்த தவறினால் சவூதி சென்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். 

கடந்த ஐந்து வருடத்திற்கு முன், மூத்த சகோதரர் தன்தம்பிக்கு, தான் செய்த தவறை நினைத்து வருந்தி தன் தம்பியை தேடி பல இடங்களுக்கும் அலைந்துள்ளார். காண்போரிடம் எல்லாம் தன் தம்பியை கண்டுபிடித்து தந்தால் தக்க சன்மானம் வழங்குவதாகவும் தெரிவுத்துள்ளார். இந்த நிலையில், இந்த வருடம் புனித ஹஜ் சென்றபோதுதான் மக்கா நகரின் தெருவில் ஏதேச்சையாக தன் சகோதரரை கண்டு ஆரத்தழுவி உள்ளார். தன்னை மன்னிக்கும்படியும் மன்றாடியுள்ளார். தற்போது தான் புற்று நோயால் (கேன்சர்) அவதிபடுவதாகவும், இன்னும் எத்தனை காலம் இந்த உலகில் தான் வாழப்போகிரேனோ தெரியவில்லை என்றும், உடனே ஊருக்கு திரும்பும்படியும், தன் தம்பிக்கு சேரவேண்டிய அனைத்து பங்கினையும் தருவதாகவும் உறுதியளித்துள்ளார். 

தம்பியும் தன் சகோதரர் தனக்கு செய்த அணைத்து பாவங்களையும் மன்னித்து விட்டதாகவும், சகோதரருடன் ஊருக்கு திரும்பவும் சம்மதித்துள்ளார். மேலும் தனக்கு தம் சகோதரர் செய்த அணைத்து தீமைகளையும் மன்னித்துவிட்டு ஊர் சென்று புதுவாழ்வு தொடங்க உள்ளதாகவும், தான் எப்போதும் ஏழைகளிடமும், தேவை உள்ளோரிடமும் இரக்கம் காட்டுவதாகவும், அவர்களுக்கு உதவி செய்யப் போவதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏழ்மை என்றால் என்ன என்ற பாடத்தை தான் கற்றுக்கொண்டதாகவும், கோடிஸ்வரனாக இருந்து குப்பை பொறுக்கி தற்போது மீண்டும் கோடிஸ்வரனாக மாறியுள்ள அந்த சகோதரர் கூறியுள்ளார். 

பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்ற வசனத்திற்கு இந்த நிகழ்வை ஆதாரமாகவும், தான் செய்த நல்ல அமல்கள் மட்டுமே தன் மரணத்திற்கு பின் வரும் தாங்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் அல்ல என்ற உண்மையையும் பிரிந்த அந்த சகோதரர்களை இணைத்து வைத்து அல்லாஹ் இந்த ஹஜ்ஜின் மூலம் நிலைநாட்டியுள்ளான். 

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் மூலம் அன்று பிறந்த பாலகன் போல் தான் திருப்ப வேண்டும் என்று மூத்த சகோதரரின் நினைப்பிற்கும், தனக்கு அநீதி இழைக்கப்பட்ட காரணத்தினால் கடும் வெயிலில் நின்று தெரு கூட்டி பிழைத்தாலும், மன்னிப்பைவிட இந்த உலகில் சிறந்த பண்பு வேறொன்றும் இல்லை என்ற இளைய சகோதரரின் நடத்தைக்கும் அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த வாழ்வை தர நாமும் துவா செய்வோம். 

இந்த நிகழ்வுமூலம் பல முஸ்லிம் சகோதர்களுக்கு நல்ல படிப்பினையுண்டு. 

அதிரை முஜீப்

அரஃபா நேரலை - HAJ LIVE 1

அதிரைநிருபர் | October 25, 2012 | , , , , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்று துல்ஹஜ் 9 ஆம் நாள், அதுதான் அரஃபா நாள்... ஏக இறைவனை இறைஞ்சும் நாள் ! உலகம் முழுவதும் குவிந்த ஹஜ் பயணிகளின் முக்கிய கடமை அரங்கேறும் நாள்! ஒவ்வொரு முஸ்லிமும் மறக்காமல் நினைவு கூறும் நாள்!

இன்றைய ஹஜ் கிரியைகளை சவுதி அரசாங்கத்தின் அதிகாரபூர்வ சேனல்களில் ஒன்றான Saudi-2 தொலைக்காட்சியிலும் லண்டலிருந்து ஒலிப்பரப்பாகும் ISLAM தொலைக்காட்சியிலும் ஆங்கில வர்ணனையும், சிறப்பு விருந்தினர்களின் கலந்துரையாடலும், அன்றைய அனைத்து நிகழ்வுகளின் நேரலை சுட்டிகளை இங்கே உங்கள் அனைவரின் பார்வைக்கும், செவிக்கும் விருந்தாக பெருமையுடன் வழங்குகிறோம். இணைக்கப்பட்டுள்ள தேவையான சுட்டிகளுக்கு சென்று பயனைடையுங்கள்.

ARAFA LIVE ENGLISH







ARAFA LIVE ARABIC











இந்தச் சேவையை இலவசமாக கண்டுகழிக்க உதவும் அனைத்து சகோதரகளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கான நற்கூலியை வழங்குவானாக !

அதிரைநிருபர்-குழு

உலகின் மிகப் பெரிய கடிகாரம் - மக்கா நகரில் 0

அதிரைநிருபர் | August 07, 2010 | , ,

புனித மக்கா மாநாகரில் மிக உயரமான ஓட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
                                                              
துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா என்ற கட்டடத்தை விட, உயரத்தில் இந்த ஓட்டல் 36 அடி மட்டுமே குறைவு. எனினும், இந்த ஓட்டலின் உச்சியில் வைக்கப்பட இருக்கும் கடிகாரம், உலகின் மிகப் பெரிய கடிகாரம் என்ற பெருமையைப் பெற உள்ளது.

“மக்கா கிளாக் டவர் ராயல் ஓட்டல்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓட்டலைச் சுற்றி, ஏழு உயரமான கட்டடங்கள் உள்ளன. லண்டன் பிக்பென் கடிகாரத்தை விட 4.7 மடங்கு பெரிய கடிகாரம் இந்த கட்டடத்தின் உச்சியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த ஓட்டலின் மொத்த உயரம் 1591 அடி, மொத்தம் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் இந்த ஓட்டல் கட்டப் பட்டுள்ளது. புனித நகரமான மெக்காவில்  அதிக கட்டணம் கொண்ட ஓட்டல் இதுதான். இந்த ஓட்டலில், 1005 அறைகள் உள்ளன. அதில் தங்கி இருப்பவர்கள் பயணிக்க, 76 லிப்ட்கள் உள்ளன,  இந்த ஓட்டல் அறைகள், கிட்டத்தட்ட அரண்மனை போல இருக்கும் என இந்த ஓட்டல்களை நிர்வகிக்க இருக்கும் உலகப் பிரசித்தி பெற்ற, “பெயர்மன்ட்’ ஓட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த ஓட்டலின் உச்சியில் உள்ள கடிகாரம்  ஜெர்மனி யில் தயாரிக்கப்பட்டது, இந்த கடிகாரம் 147 அடி அகலம், 141 அடி உயரம் கொண்டது. கட்டடத்தின் நான்கு பக்கங்களிலும் இந்த கடிகாரம் இருக்கும். "ஹஜ்' நேரத்தில் மட்டும் மக்காவிற்கு 40 லட்சம் மக்கள் வருகின்றனர், மற்ற மாதங்களில் பல லட்சம் பேர் வருகின்றனர். எனவே இந்த ஓட்டலுக்கு எப்போதும் கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.









வரும் ரமலான் மாதம் முதல் இந்த கடிகாரம் அதிகாரப்பூர்வமாக இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தப்படுகிறது என்ற செய்தியும் ஊடகங்களிலும் மடல் குழுமங்களிலும் காணப்படுகிறது. மேலதிக தகவல்கள் இருந்தால் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்.

தகவல்: மு செ மு நெய்னா முகம்மது, அப்துல் மாலிக், சாஹுல் ஹமீது மற்றும் நண்பர்கள்.
புகைப்படம்: www.alriyadh.com


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு