பிரபல நரம்பியல் நிபுணர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதன்மை மருத்துவர், மதுரை அரசு மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் மனிதநேய மருத்துவர் ஜஹபர் சாதிக் அவர்களின் புதல்வி மதுரை மருத்துவக் கல்லூரி மாணவி தஹ்ஸின் நிலோஃபர், பள்ளிப்பருவத்தில் இருந்தே சாதனைகளை நிகழ்த்தும் அற்புத அறிவு இவருக்கு. பத்தாம் வகுப்பு பொது தேர்விலும் ..பனிரண்டாம் வகுப்பு பொது தேர்விலும் இராமநாதபுர மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர் இந்த மாணவி.
மதுரை மருத்துவக் கல்லூரி மாணவி தஹ்ஸின் நிலோஃபர், கடந்த 2007-ல் சேர்ந்து 2013-ல் மருத்துவப் படிப்பை முடித்தார். முதலாம் ஆண்டு தேர்வில் உடற்கூறியியலிலும், இரண்டாம் ஆண்டில் மருந்தியல் பாடத்திலும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக அளவில் முதலிடத்தைப் பெற்றவராவார்.
தற்போது மருத்துவக் கல்வியை முடித்துள்ள மாணவி தஹ்ஸின் நிலோஃபர், அறுவைச் சிகிச்சை, மருந்தியல் தங்கப் பதக்கங்களையும், நோய்க் குறியியல், நுண்ணுயிரியல் சிறப்புத் தகுதிச் சான்றுகளையும் பெற்றுள்ளார். இவரின் தந்தை ஜ அஃபர் சாதிக் ராமநாதபுரத்தில் நரம்பியல் துறை மருத்துவ நிபுணராக உள்ளார். இம்மாணவியின் தாயார் சாதிக்கா சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணராக உள்ளார்.
தஹ்ஸின் நிலோஃபரரின் சகோதரிகளில் ஒருவரான பாய்க்கா மதுரை மருத்துவக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். மற்றொரு சகோதரியான ஜுமானா கோவையில் தனியார் மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
மருத்துவக் கல்வியில் பதக்கங்களைக் குவித்துள்ள தஹ்ஸின் நிலோஃபர் பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1184 மதிப்பெண்கள் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
அதுமட்டுமின்றி கடந்த 2007-ல் மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை வகித்தவர்.
தஹ்ஸின் நிலோஃபர் அகச் சுரப்பியல் சிகிச்சைத் துறையில் மருத்துவப் பட்ட மேற்படிப்பைத் தொடர உள்ளதாக தெரிவித்தார்.
முகநூல் பகிர்விலிருந்து...
அதிரைநிருபர் பதிப்பகம்