Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label ஒரு உரையாடல் With சீனிவாசன் சார்.. Show all posts
Showing posts with label ஒரு உரையாடல் With சீனிவாசன் சார்.. Show all posts

ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். 19

ZAKIR HUSSAIN | June 05, 2011 | ,

SRINIVASAN M.Com.M.Ed.,
ஒரு உரையாடல் With சீனிவாசன் சார்.

இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது அப்துல்காதர் சார் [ அப்போது எங்களுக்கு பொருளாதாரம் போதித்த ஆசிரியர் ] சீனிவாசன் சாரை அழைத்துக்கொண்டு வந்து இனிமேல் இவர் உங்களுக்கு வணிகவியல், கணக்கியல் [Commerce & Accountancy ] நடத்தப்போகும் ஆசிரியர் என்று அறிமுகப்படுத்திய நாள். ஆனால் சமீபத்தில் கேள்விப்பட்டேன் அவர் ஒய்வு பெற்றுவிட்டார் என...காலம் ஒடிவிட்டாலும் நம்ப முடிய வில்லை.


தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது ஒரு நண்பரிடம்
பேசிய உணர்வுதான். வழக்கமான நலவிசாரிப்புகளுடன்...

"வேலையில் சேர்ந்தது 11- 09 -1979, ..M.Com படித்தது பூண்டி புஸ்பம் கல்லூரி , M.Ed படித்தது ண்ணாமலை பல்கலைக்கழகம். ..ஒடி விட்டது ஏறக்குறைய 31 வருடம் 7 மாதம்...26 ஏப்ரல் 2011 ல் ஓய்வு பெற்றேன்...ஏறக்குறைய 31 set of students படிக்கவைத்து உயர்கல்விக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது'

இந்த 31Set Of students ல் யாராவது உங்களுக்கு நல்ல பழக்கமான மாணவர்கள் என்று...

எல்லோரும் பழக்கம்தான்... இன்னும் சொல்லப்போனால் நான் இந்த ஊரிலேயே தங்கிவிட்டதால் மாணவர்க்களின் பெற்றொர்களும், அவர்களது குடும்ப சூழ்நிலையும் தெரிய வாய்ப்பு இருந்தது..பிறகு மாணவர்கள் தவறு செய்ய நேர்ந்தாலும், படிப்பில் கவனம் குறைந்தாலும் அவனது குடும்ப சூழ்நிலையையும் அவனது பெற்றோர்களின் எதிர்பார்ப்பையும் எடுத்து சொல்லி அவனை நேர்வழிப்படுத்தவும், படிப்பில் நல்ல மார்க் எடுக்க வைக்கவும் என்னால் முடிந்தது. இப்படி பல மாணவர்களை நல் வழிக்கு கொண்டு வந்திருக்கிறேன்.

ஆனாலும் உங்கள் காலங்களில் உள்ள மாணவர்கள் மாதிரி பணிவன்பும் , மரியாதையும் இப்போதைய மாணவர்களில் குறைவுதான் ...காரணம் இப்போதைய கலாச்சாரமா , இல்லை வாழ்க்கை முறையா என எனக்கு தெரியவில்லை...மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் உள்ள நெருக்கம் இப்போது மிக மிக குறைவு'

'சார்...இதையே தான் ஹாஜாமுகைதீன் சார் அவர்களும் சொன்னார்கள்'

' அப்படியா....உண்மைதான்...எல்லோரும் இதைத்தான் சொல்வார்கள்'

இத்தனை வருடங்களின் உங்கள் பணியை பற்றி...

' இந்த ஆசிரியர் பணியை ஆத்மார்த்தமாக நான் ஏற்றுக்கொண்டதுதான்...அதனால் தான் மாணவர்களின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க முடிந்தது...உன்னைப்போல் மாணவர்களும் இன்னும் என்னை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்."

சார் என்னிடம் நாம் இருவரும் டுத்துக்கொண்ட போட்டோ இன்னும் இருக்கிறது

ஒ..அதுவா...நான் தங்கியிருந்த வீட்டில் எடுத்ததா?...அப்போது நீ ஒரு Instant Camera [Polaride Brand] வைத்திருந்தாய்...அதில் எடுத்ததுதானே..அப்போது அது போல் Instant Camera வந்த சமயம். போட்டோ எடுத்த இடம் கூட நான்

தங்கியிருந்த வீட்டின் கிணற்று மேடு..

"சார் உங்கள் ஞாபக சக்தி ஆச்சர்யப்பட வைக்கிறது..

மறக்க முடியாத நிகழ்வுகள் ஏதாவது...

' இன்று வரை என் மனதில் மறக்கமுடியாத நினைவு எதுவென்றால் நீங்கள் எல்லோரும் செய்தSocial break up தான். அன்று ஒரு மெழுகுவர்த்தியை தலைமைஆசிரியர் விளக்கேற்ற அந்த தீபத்திலிருந்து வகுப்பாசிரியர்கள், வகுப்பாசிரியர்களிடமிருந்து மாணவர்கள் தீபத்தை ஏற்றிச்சென்ற அந்த நிகழ்வு இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது..அதற்க்கு பிறகு யாரும் அப்படி செய்யவில்லை’

கொஞ்சம் Flash back போவோமா...18 / 03 / 1981ல் நாங்கள் ஹையர் செக்கன்டரி முடித்தோம். [ஹையர் செக்கன்டரி ஆரம்பித்தபோது நான் 2 வது செட் மாணவர்கள்..] அந்த கடைசிநாளில் 18/03/1981 ல் Social Break Up [or] Farewell Party வழிநடத்தவும் , நெறியாள நான் தேர்ந்தெடுக்கப்பட்டு..எனக்கு மிகவும் உதவியாக என்னோடு படித்த இக்பால், சரபுதீன் [ சரபுதீன் நூஹு ] ,AES சாகுல் [ இப்போது துபாயில் ], ஹாஜி முஹம்மது, AHஅமானுல்லாஹ் ,AH மீராசா, அபுல்கலாம், அப்துல் ஃபத்தாஹ் , ரவிச்சந்திரன், மோகன், விஜேந்திரன், திருஞானம், குணசேகரன் , ரவி, சத்யமூர்த்தி, இப்படி ஏராளமான நண்பர்கள் அனைவரின் உதவியுடன்அழகாக செய்து முடித்தோம் [சிலரை குறிப்பிட மறந்திருப்பேன்...மன்னிக்கவும்]



சார் உங்கள் பிள்ளைகள் பற்றி...

எனக்கு 3 மகன்கள். எல்லோரும் நான் வேலை பார்த்த அதே ஸ்கூலில்தான் படித்தார்கள். அதற்க்காக எந்த சலுகையும் அவர்களுக்கு நான் காட்டவில்லை. மற்ற பிள்ளைகளைப்போல்தான் நடத்த வேண்டும் என பிடிவாதமாக எல்லா விசயங்களிலும் இருந்தேன் பசங்களும் இப்போது நல்லபடியாக படித்து முதல் மகன் IT Group Company [ Overseas Established] பெங்களூரில் வேலை, இரண்டாவது மகன் Communication Engineering துறையில் வேலை. மூன்றாவது மகன் இப்போது Final year B.Tech.

ரொம்ப நன்றி சார்...உங்களிடம் பேசியதில் நான் மாணவனாக இருந்தகாலம் அதிகம் ஞாபகம் வருகிறது.

- ZAKIR HUSSAIN


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு