பேசும் படம் மவுன விரதம் இருந்ததாக சரித்திரம் இல்லை, பார்த்ததும் பேசத்தூண்டும் அழகு பெண்மைக்கு மட்டுமா இருக்கனும், இதோ இந்தப் படங்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது.
பேரிக்காய் இரண்டும் நல்லாத்தான் இருக்கு அதுக்கு பின் பக்கம் ரவுண்டா ஓட்டை ஓட்டையா இருக்கே அது என்ன காய் என்று கேட்டுறாதிய !
கலர் படம் கலர் படம்ன்னு சொல்வாங்களே அது இதுவா என்று கொஞ்சம் பாத்து சொல்லுங்க !
வண்ணாத்தி பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் என்றால், பூக்களின் இதழ் மேல் வண்ணாத்தி பூச்சி ஓவியம் அதிசயத்திலும் அதிசயம் !
சூரிய வெளிச்சம் மேகத்தின் ஓட்டம் இவை அனைத்தும் இறைவனின் நாட்டம்
கொடைக்கானலுக்கு குடை பிடிக்கும் வானவில், அதில் ஊஞ்சல் கட்ட கவிஞர்களுக்கு இந்தப் படம் ஓர் அழைப்பு!
இனி ரசனையாளர்களின் சாய்ஸ்...
Sஹமீது