இறைவன் படைப்பில் ஏராளம் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாதவை உள்ளன ஆனால் வல்லநாயன் நம் கண்ணெதிரே அற்புதங்களை காட்டிக் கொண்டிருக்கும்போது நாமோ வல்லமை பொருந்திய அல்லாஹ்வின் மகிமையை ஆராயாது உலகவாழ்வில் லயித்து இருக்கிறோம்.
மொழியால் பினைப்பு தேடும் நாம்மால், அது மொழியென்றும் உணரமுடியாமல், உச்சரிப்பின் உயிரோட்டத்தையும் அறியாமல் சையகையாலே சாதனைகளும், சாகசமும் செய்யும் சகோதரர் மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா அவர்களை அறியாதவர்கள் குறைவே என்று சொல்வதைவிட அவரோடு நன்கு பழகியவர்களும் அவரை அறிந்தவர்களுமே அதிகமதிகம்.
இனிய ரமளான் பொழுதில் புன்னகையே பொருத்தமான இடத்தில்தான் இருக்கிறது என்று ஏங்க வைக்கும் அழகிய பொன்சிரிப்புக்கு சொந்தக்காரர் இவர்கள், தினமும் அவர்களை கண்டு வந்தாலும் இன்று அவரோடு மொழியாடும்போது விழியும் விரலும் பேசியது அங்கே அவர்களிடம் ரமளான் பாலிசி என்றொரு விடயத்தை விவரித்தார்கள் அதோடு அவர்கள் கையில் இருந்த நீண்டதொரு பட்டியலை நம்மிடம் காட்டியதும் ஆச்சர்யத்தில் அசந்தே விட்டோம் !
இன்றல்ல, இது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் வழக்கமென்பது அவர்களோடு பழகியவர்களுக்கு நன்றாகத் தெரியும் (பின்னுட்டங்களில் தெரியவரும் அவைகள் யாவென).
கையில் சுருட்டி வைத்திருக்கும் 29 பள்ளிவாயில்களின் பெயர்கள் அடங்கிய பெயர் பட்டியல். அதில் நாள் ஒன்றுக்கு ஒரு பள்ளிவாயில் என்று ரமளானில் இரவுத் தொழுகையை நிறைவு செய்வது வழக்கம் என்பதே அந்த பாலிசி. இதுவரை பத்து ரமளானை கடந்து விட்டதால் பத்து பள்ளிவாயில்கள் பெயர்கள் டிக் அடிக்கப்பட்டு விட்டது, இனி மீதமிருக்கும் பத்தொன்பது பள்ளிவாயில்கள் இன்ஷா அல்லாஹ்.
நம் சகோதரர்களிடையே இதனை பகிர்ந்து கொள்ள தூண்டியது இவர்களின் அன்றாட செயல்கள் மட்டுமல்ல இவர்களின் சுறுசுறுப்பும், வேக நடையும் இன்னும் கண்முன்னால் அடிக்கடி வந்து செல்லுவதனாலே….
எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களுடைய மற்றும் இவர்களைப் போன்று வல்லமை மிக்க அல்லாஹ்விடம் இறைஞ்சும் அனைவரின் பிரார்த்தனைகளையும் இந்த புனித ரமளான் மாதத்தில் அங்கீகரித்து அருள்புரிவானாக.
அதிரைநிருபர் குழு


