Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label ADT. Show all posts
Showing posts with label ADT. Show all posts

இன்று ஈகைத் திருநாள் திடல் தொழுகை நடந்தது... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | July 06, 2016 | , , , ,

பிறை பார்த்து நோன்பை துவங்குங்கள் பிறை பார்த்து நோன்பை நிறைவு செய்யுங்கள் ! - நபிமொழி


அல்ஹம்துலில்லாஹ்...!

பிறை கண்டதற்கான நம்பகமான சாட்சியங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களிலிருந்து உறுதி செய்யப்பட்டதால்... அதிரை ஈத் கமிட்டியின் சார்பாக அதிரையில் மிகச் சிறப்பான முறையில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது !

ஆண்களும் பெண்களும் வழமைபோல் திரளாக வந்து கலந்து கொண்டனர்...!




இறைவனிடம் கையேந்துங்கள் என்ற புத்துணர்வூட்டும் தலைப்பில் இன்றைய தவ்ஹீத் வாதிகளால் சிறுக சிறுக சுருக்கி கொள்ளப்பட்ட பிராத்தனையின் பலத்தையும் அதனை இறைவன் எவ்வாறு நம்ம்பிடமிருந்து எதிர் பார்க்கிறான். நாம் எவ்வாறு பிரார்த்தனைகளை அல்லாஹ்விடம் மட்டுமே வைக்க வேண்டும் என்று அருமையானதொரு பெருநாள் உரை அமைந்து இருந்தது.

இன்றைய பெருநாள் தொழுகையின் முத்தாய்ப்பாக தாருத் தவ்ஹீத் செயலாளரின் அறிவிப்பு கலந்து கொண்ட அனைவரையும் உவகை கொள்ளச் செய்தது அதுதான் ‘ஏழு சகோதரர்கள் புதிதாக இறைமார்க்கத்தை ஏற்க இருப்பதாக’ இருந்த அந்த அறிவிப்பு.


அல்ஹம்துலில்லாஹ்... அந்த எழுவருக்கும் ஏகத்துவ மார்க்கத்தை எடுத்துரைத்த சகோதரர் தவ்ஃபீக் வெண்கலக் குரலில் உரக்க உரைத்தார் ‘அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதித் தூதரும் அல்லாஹ்வின் அடியாரும் ஆவார்கள்’ அதனை அந்த எழுவரும் ஏழு வானங்களைப் படைத்தவனின் மார்க்கத்தில் இனிதே இணைந்தனர்.

பெருநாள் திடல் தொழுகைக்குப் பின்னர் அனைவரும் தங்களுக்குள் அன்பை பரிமாரிக்கொண்டனர்.

அபூஇப்ராஹிம்

அதிரை தாருத் தவ்ஹீத் நடத்தும் கோடை கால பயிற்சி முகாம் 2016 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 20, 2016 | , ,

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால் !

அதிரை தாருத் தவ்ஹீத் | அர்ரவ்ழா மகளிர் கல்லூரி | இஸ்லாமியப் பயிற்சி மையம் |ஏ எல் எம் பள்ளி..

இணைந்து வழங்கு, குர்ஆன்-ஹதீஸ் ஒளியில்...

“கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016”

மே மாதம் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை...


கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாமுக்கான விண்ணப்பம்.

பகிர்வு : அதிரை தாருத் தவ்ஹீத்

காட்டுப்பள்ளி தர்கா கந்தூரி - அமைதிக் கூட்ட நிகழ்ச்சிக் குறிப்புகள் 4

அதிரைநிருபர் பதிப்பகம் | April 16, 2015 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கையெழுத்திட்டு அறிவிப்புக் கடிதம் ஒன்று (ந.க 200 / 2015 அ 3 - தேதி 11.4.2015) அதிரை தாருத் தவ்ஹீதின் அமீருக்கும் செயலருக்கும் கட்ந்த 14.4.2015 அன்று வழங்கப்பட்டது.


அதிராம்பட்டினத்தில் கந்தூரி என்றாலே கந்தூரி எதிர்ப்பாளர்களாக அரசு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தாருத் தவ்ஹீதுக்குக் கோட்டாட்சியரிடமிருந்து அழைப்பு வந்துவிடும். இம்முறை நான்கு அமைப்பினருக்கு அழைப்பு வந்தது.


அமைதிக் கூட்டம் நடத்துவதற்கு முடிவு செய்த 15.4.2015 அன்று கடைசி நேரத்தில், கூட்டம் தள்ளிவைக்கப் படுவதாகத் தகவல் வந்தது. வழக்கம்போல் கந்தூரிக்கான எதிர்ப்பைத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியருக்கு 13.4.2015 நாளிட்டுக் கடிதம் எழுதியிருந்தோம்.

மறுநாள் 16.4.2015 காலையில் மறு அழைப்பு வந்து, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். எங்களுக்கு முன்னதாக கந்தூரிக் கமிட்டியினர் அங்கு வந்து குழுமியிருந்தனர். எஸ்டிப்பிஐ அமைப்பினர் வரவில்லை. த.மு.மு.க.வினர் வந்திருந்தனர். இறுதியாகத் ததஜவினர் வந்து சேர்ந்த பின்னர் 12 மணியளவில் கூட்டம் தொடங்கியது.

தொடக்கமாக, கந்தூரிக் கமிட்டியினரோடு கூடவே வந்து அமர்ந்த முத்துப்பேட்டை தர்கா ட்ரஸ்டி பாக்கர் அலியை வெளியேற்றுமாறு அதிரை தாருத் தவ்ஹீதின் துணைத் தலைவர்  ஜமாலுத்தீன் கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பப்பட்டவர்களைத் தவிர மற்ற அனைவரையும் வெளியேறுமாறு கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

ம்றைந்த கோல்டன் நிஜாமும் இதுபோல் ஒருமுறை வெளியேற்றப்பட்டது நினைவுக்கு வந்தது.

பின்னர் இரு தரப்பினரின் கருத்துகளையும் கோட்டாட்சியர் கேட்டார். கந்தூரியால் விளையும் தீமைகளையும் அனாச்சாரங்களையும் பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியருக்கு அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் எழுதிய கடிதத்தின் நகலைக் கோட்டாட்சியருக்கு வழங்கி, அக்கடிதத்தின் சாரத்தையும் செயலர் விளக்கினார். அத்துடன், காட்டுப்பள்ளி கந்தூரியை ஒரு காலத்தில் மேலத்தெருவினரும் கீழத்தெருவினரும் இணைந்து நடத்தியதில் இரு தெருவினருக்கும் கந்தூரியின்போது வெட்டு, குத்துகள் நடந்தேறி, யார் கந்தூரி நடத்துவது? என்ற் கேள்வியோடு நீதிமன்றம் வரை சென்று, தெருவுக்கு ஓர் ஆண்டு எனத் தீர்ப்பான பழைய வரலாறும் எடுத்துக் கூறப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 526ஆவது ஆண்டு கந்தூரி, இந்த ஆண்டு நோட்டீஸில் 756ஆம் ஆண்டு கந்தூரியான எப்படி என்றும் கேள்வி வைக்கப்பட்டது.

இந்த ஆண்டு கீழத்தெருவினருக்கான முறை வந்தும், கீழத்தெரு ஜமா அத்தினர் கந்தூரி எடுக்க மாட்டோம் என மறுப்புத் தெரிவித்து, கந்தூரித் தீமையிலிருந்து விலகிக் கொண்டுத் தீர்மானம் நிறைவேற்றியதும் கோட்டாட்சியருக்குச் சுட்டிக் காட்டப்பட்டது.

கடற்கரைத் தெருவில் கடந்த  நவம்பர் 2014இல் நடைபெற்ற கந்தூரியின் ஊர்வலம் மற்றும் கூடு சுற்றல் இரவின்போது நடந்தேறிய விதி மீறல்கள் அராஜகங்கள் பற்றி ததஜவின் அன்வர் அலீ விவரித்து, இஸ்லாத்துக்கு எதிரான கந்தூரியை எதிர்ப்பதற்கான காரணங்களை விளக்கினார். முத்துப்பேட்டை பாக்கர் அலி, அதிராம்பட்டினத்தாரின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, ஆதாயம் அடையப் பார்ப்பதாகவும் அதற்கான வீடியோ ஆதாரங்கள் தம்மிடம் இருப்பததாகவும் ததஜ அன்வர் அலீ கூறினார்.

கந்தூரிக் கமிட்டியினர், அவர்களின் தொன்மைப் பாட்டான, "காலங் காலமாக எடுத்து வரும் கந்தூரி" என்பதையே வளைந்து, நெளிந்து, குழைந்து பலமுறை சொல்லிக் கொண்டிருந்தனர். சலிப்படைந்த கோட்டாட்சியர், ஒரு கட்டத்தில், "இந்த விழா இஸ்லாத்தில் உள்ளதுதான் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லாதபோது, அதைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொள்வதுதான் நல்லது" என்று அறிவுரை கூறினார்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் கடந்த 9.5.2013 அமைதிக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்திய வேறொரு கோட்டாட்சியர், "கந்தூரி விழா கொண்டாடுவதற்கு உங்க வேதத்திலிருந்து ஒரு சூரா ஆதாரம் சொல்லுங்க" என்று கேட்டதும் பதில் சொல்ல முடியாமல் அப்போதைய கந்தூரி கமிட்டியினர் தலைகுனிந்ததும் நினைவுக்கு வந்தது.

"நாங்கள் அமைதியாகக் கந்தூரி நடத்துவோம்" என்று கந்தூரிக் கமிட்டித் தலைவர் சேக் தாவூது கூறினார். அதற்கு மறுப்புத் தெரிவித்த த.மு.மு.க. அஹ்மது ஹாஜா, அமைதியாகக் கந்தூரி நடத்துவோம் என்ற உறுதி கொடுக்கப்பட்ட அதே காட்டுப்பள்ளி ஊர்வலத்தில், தான் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானதையும் அவ்வழக்கில் பதியப்பட்ட முதல் தகவல் அறிககை 96&97/2012யின் கீழ் இன்னும் வழக்கு நடந்து வருவதாகவும் விவரித்து, ஊர்வலம் என்பதே உள்நோக்கத்தோடு (ஹிடன் அஜண்டாவாக) நடத்தப் படுவதுதான் உண்மை என்றார்.

இன்னும் பல்வேறு விளக்கங்களுக்குப் பின்னர், கீழ்க்காணும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு, எழுதிக் கையெழுத்துகள் பெறப்பட்டன:



இந்த அமர்வின் தீர்மானங்கள் பழைய தீர்மானங்களையும் உள்ளடக்கும் என்பதோடு ஊர்வலம் செல்லக்கூடிய பகுதிகளில் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பகுதியையும் இன்றைய தீர்மானத்தில் கூடுதலாக நான் சேர்த்திருக்கிறேன் என கோட்டாட்சியர் வலியுறுத்திக் குறிப்பிட்டார்.

உளத் தூய்மையுடன் எடுக்கப்படும் தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு வெற்றியைத் தருவதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனையே நாம் சார்ந்திருக்கிறோம்.

பகிர்வு : அதிரைதாருத் தவ்ஹீத்

கந்துரிக்கு தடைவிதிக்க - அதிரை தாருத் தவ்ஹீத் அதிரடி நடவடிக்கைகள் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | November 21, 2014 | , , , , ,

பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில்...!

அதிரையின் கடற்கரைத் தெருவில் நடைபெறவிருக்கும் கந்தூரி தொடர்பாக இன்று (21.11.2014) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு, கடற்கரைத் தெரு கந்தூரிக் கமிட்டியினர் வந்திருந்தனர்.

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக

1. அதிரை அஹ்மது (தலைவர்)
2. ஜமாலுத்தீன் புகாரீ (துணைத் தலைவர்)
3. ஜமீல் முஹம்மது ஸாலிஹ் (செயலாளர்)
4. அப்துர் ரஹ்மான் (துணைச் செயலாளர்)
5. நிஜாமுத்தீன் (பொருளாளர்)
6. அஹ்மது ஹாஜா (உறுப்பினர்)
7. கமாலுத்தீன் (உறுப்பினர்)

ஆகியோர் கலந்துகொண்டோம்.

கந்தூரி வழிபாடும் ஊர்வலமும் இஸ்லாத்துக்கு எதிரானவை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ததோடு, அவற்றில் எங்களுக்கு எவ்வித உடன்பாடும் இல்லை என்பதை, கூட்ட நடவடிக்கைக் குறிப்பில் எழுத வைத்தோம்.

வழக்கமாக அமர்வுக் கூட்டத்தை வழிநடத்திச் செல்லவேண்டிய கோட்டாட்சியரும் உள்ளூர் நடப்புகளை விவரிக்கக்கூடிய அதிரை நகரக் காவல்துறை ஆய்வாளரும் இல்லாமல் அமர்வு தொடங்கியது. மூன்று நாட்களுக்கு முன்னரே நமதூருக்குப் பதவியேற்று வந்திருக்கும் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு நமதூர் நிலவரங்களைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. உருப்படியாக அழைப்பாணை தயாரித்து அனுப்பத் தெரியாமல் கந்தூரிக் கமிட்டியினரைப் பற்றியே குறிப்பிடாமல் அழைப்பாணை வந்தது. ஆவணமாகப் பதிவாகிவிட்ட அழைப்பாணையை மாற்றவேண்டும் என்றுகூடத் தெரியாதவராக வட்டாட்சியர் செயல்பட்டார். மாவட்ட ஆட்சியாளருக்கு நாம் அனுப்பிய வேண்டுகோள் மனுவைக்கூட அவர் படித்துப் பார்க்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

நகரக் காவல்துறை ஆய்வாளர் அனுப்பியிருந்த குறிப்புகளின் அடிப்படையில் கீழ்க்காணும் 4 நிபந்தனைகளைக் கந்தூரிக் கமிட்டியினர் ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டனர்:

1. கந்தூரி ஊர்வலம் செல்லும் வழி: ஹாஜா நகர், ஈஸிஆர் ரோடு, தக்வாப் பள்ளி, கீழத் தெரு, (பாக்கியாத் பகுதி நீங்கலாக) மேலத் தெரு, பெரிய நெசவுக்காரத் தெரு, சிறிய நெசவுக்காரத் தெரு, மெயின் ரோடு, தரகர் தெரு, பள்ளிவாசல் தெரு வழியாக மட்டும் ஊர்வலம் செல்ல அனுமதி.

2. ஊர்வலத்தில் 6 வண்டிகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

3. ஊர்வலத்தை மாலை 4:30 முதல் இரவு 7:30 மணிக்குள் முடித்துக் கொள்ளவும்.

4. ஊர்வலம் புறப்படும் இடத்தில் மட்டும் குறைந்த அளவாக வாணவேடிக்கைகள் நடத்திக் கொள்ளலாம்.

--------------0O0O00O0O00O0O00O0O0-------------

மின்வாரிய விதிமுறைகள் மீறப்பட வேண்டாம்

அதிரை உதவி மின் பொறியாளர் அவர்களுக்கு 20.11.2014 தேதியிட்டு எழுதிய கடிதம்.


--------------0O0O00O0O00O0O00O0O0-------------

கந்தூரிகளுக்குத் தடை வேண்டும்!

கந்தூரிகளுக்குத் தடை வேண்டி, மாவட்ட ஆட்சியருக்குக் கடந்த 17.11.2014 அன்று கூரியரிலும் மின்னஞ்சலிலும் அனுப்பிய வேண்டுகோள் மனு:



பகிர்வு : ADT

சூனியம் வைக்கத் தூண்டியது யார் ? - காணொளி 7

அதிரைநிருபர் பதிப்பகம் | November 16, 2014 | , , ,

அதிரையில் அமைதியாக நிகழ்ந்தேறிய ADT v/s TNTJ விவாதத்தின் கருப் பொருளை முடக்க முயன்றவர்களின் சூழ்சிக்கும் அவர்களின் எதிர்பார்ப்புக்கும் சவுக்கடி கொடுக்கும் விதமாக அமைந்ததை காணொளிகள் அனைத்தும் வெளியான பின்னர் அனைவரும் அறிந்து கொண்டனர்.

விவாதக்களத்தின் முன்றாவது நாள் அதிரை தாருத் தவ்ஹீத் செயலாளர் சகோ ஜமீல் M.ஸாலிஹ் அவர்களின் தெளிவான அறிவிப்பும் எழுப்பப்பட்ட வேள்விகளுமே இந்த கணொளிப் பதிவின் தலைப்பு விடுக்கும் வினாவிற்கான விடையும் உள்ளடக்கியிருப்பதை அனைவரும் நன்கறிந்து கொண்டனர் - அல்ஹம்துலில்லாஹ் !


அதிரைநிருபர் பதிப்பகம்

இன்னுமா தயக்கம்? 2

அதிரைநிருபர் பதிப்பகம் | November 14, 2014 | , , , ,

(இன்று 14.11.2014 அதிரை ஜும்ஆப் பள்ளிகளில் வெளியிடப்பட்ட பிரசுரம்)

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!
அல்லாஹ்வின் அடியார்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).


23.12.2012 பகல் 2.45 மணி!

அதிரையின் கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள தர்ஹா கபுருக்கு சந்தனம் பூசுவதற்காக  மூலஸ்தானத்துக்கு உள்ளே சென்ற பட்டத்து அலாவுத்தீன் இறப்பெய்து இரண்டாண்டுகள் ஓடிவிட்டன; இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் இறப்பில் நாம் பெறவேண்டிய படிப்பினைகள் அநேகம் உள்ளன.

ஆகக் கூடுதலாக 45 நிமிடத்தில் வழக்கமாக வெளியே வரவேண்டிய சர்க்கரை நோயாளியான அவர், ஏறத்தாழ மூன்றுமணி நேரம் (மாலை ஐந்தரை) வரை என்னவானார்? என்று கபுருக் கதவைத் திறந்து பார்க்காமல் வாயிலில் காத்துக் கிடந்தனர் பலர். ஓருயிர் பலியான பின்னும் இந்த அறிவீனத்தை விட்டொழிக்கஇன்னுமா தயக்கம்?

அல்லாஹ் மனிதனுக்குப் பகுத்தறிவை வழங்கி, படைப்பினங்கள் அனைத்திலும் உயர்ந்த படைப்பாக ஆக்கியருளியிருக்க, அவனளித்த அருட்கொடையான அறிவை, என்றோ இறந்துபட்ட அவ்லியாவிடம் அடகு வைத்துவிட்டு, "அல்லாஹ்வுடைய மௌத்து" என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதை விட்டொழிக்க இன்னுமா தயக்கம்?

என்றோ மரணித்து, பதினொரு இடங்களில் அடங்கப்பட்டதாகக் கூறப்படும் ஹாஜா அலாவுத்தீன் ஜிஷ்தீ எனும் பெரியாரின் உடல் அதிரையின் கடற்கரைத் தெருவில்தான் உண்மையில் அடக்கப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், அந்தக் கபுருக்குமேல் கட்டடம் கட்டப்பட்டிருப்பதும் அந்தக் கபுருக்கு சந்தனம் பூசுவதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் வன்மையாகத் தடுக்கப்பட்டவை என்பதை ஏற்றுக்கொள்வதற்கு இன்னுமா தயக்கம்?

"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்"
 ஜாபிர் (ரலி) : திர்மிதீ 972, அஹ்மது 14748.

அவ்லியாக்களின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, ஆண்டு தோறும் கந்தூரி என்ற பெயரால் விழாக்கள் எடுப்பதும் அதில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதும் எவ்வளவு பெரிய வழிகேடு என்பதைப் பல நபிமொழிகள் எச்சரிக்கின்றன. அல்லாஹ்வின் கோபமும் அல்லாஹ்வின் தூதரின் சாபமும் கந்தூரிக்கு நிச்சயமாக உண்டு என்பதை விளங்குவதற்கு இன்னுமா தயக்கம்?

"உங்கள் வீடுகளை(த் தொழுகையற்ற) கபுருஸ்தான்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கி விடாதீர்கள்... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எச்சரித்தார்கள்"அபூஹுரைரா (ரலி) : அஹ்மது 8449, அபூதாவூது 1746.

"... இறைவா, எனது சமாதியை வழிபடுமிடமாக ஆக்கி விடாதே... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்" அதா இப்னு யஸார் (ரலி) : அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 .                 `

"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்" இபுனு அப்பாஸ் (ரலி) : நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.

"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்து விட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் உறுதிபடக் கூறினார்கள். தம்முடைய சமாதியை அவ்வாறு ஆக்கிவிடுவதைப் பற்றி எச்சரித்தார்கள்"
 அன்னை ஆயிஷா (ரலி) : புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.

கந்தூரியும் கப்ரு வழிபாடும் அல்லாஹ்வால் மன்னிக்க முடியாத பெரும் பாவம் என்பதை மக்களுக்குத் தெளிவாக, உறுதியாக எடுத்துச் சொல்லித் தடுக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாகும். குறிப்பாக, மார்க்கம் அறிந்த ஆலிம்கள் என்போர் மீது கட்டாயக் கடமையாகும். ஏனெனில், மறுமையில் அவர்களுக்குக் கூடுதல் கேள்வியுண்டு. "கந்தூரி என்பது இஸ்லாமிய வழிபாடுகளுள் ஒன்று" என்று பிற மதத்தவர்  குறிப்பாக அரசு அதிகாரிகள்  தவறாக விளங்கி வைத்திருக்கின்றனர். அதனால்தான் இதில் தலையிடத் தயங்குகின்றனர்."கந்தூரி என்பது இஸ்லாமிய வழிபாடுகளுக்கு எதிரானது; தடை செய்யப்பட வேண்டிய ஒன்று" என்று அரசு அதிகாரிகளுக்குப் புரியும்படி வெளிப்படையாக, தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டியது மார்க்க அறிஞர்களின் பொறுப்பாகும். ஆலிம்களுக்கு இன்னுமா தயக்கம்?

கந்தூரி ஆதரவாளர்கள், 'பெரியாரின் பெயரால் கந்தூரி' எனும் மடமையிலிருந்து இனியாவது விடுதலை பெறவேண்டும்; அதற்கு வல்ல அல்லாஹ்வின் அருள் துணை நிற்க வேண்டும்.



பகிர்வு : ADT

சூடு பறக்கும் விவாத ஒப்பந்தம் ! [காணொளி] 17

அதிரைநிருபர் பதிப்பகம் | November 06, 2014 | , , , ,

விவாத ஒப்பந்தம்...!

யார் முதலில் விவாதத்தை எடுத்து வைப்பது ?

நீயா ? நானா ?

என்ன நீயா ? நானா ?

அதாங்க நீயா? நானா ?

என்ன நீயா ? நானா ?

அதேதான் நீயா ? நானா ?

சரி டாஸ் போடனும்... !

என்ன டாஸ் போடனும் ?

ஹா ஹா டாஸ் டாஸ் தெரியாம வந்துட்டாங்க ?

என்ன தெரியாம வந்துட்டாங்க ?

கிரிக்கெட் டாஸ்..

என்ன கிரிக்கெட் டாஸ் ?

கிரிக்கெட்டுன்னா பாமரனுக்கும் தெரியுமே ங்ங்ஙே...?

அதான் என்ன கிரிக்கெட் டாஸ்...!?

இப்போ பாருங்க இந்த காணொளியை...


அதிரை வள்ளல்

TNTJயின் முக்கிய தாயி சகோதரர் மௌலவி அப்பாஸ்அலி.... ::: விலகல்... ::: அதிரை விவாத எதிரொலி..! [காணொளி இணைப்பு] 12

அதிரைநிருபர் பதிப்பகம் | November 05, 2014 | , , ,

அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் TNTJயின் முக்கிய தாயி சகோதரர் மௌலவி அப்பாஸ்அலி அவர்களின் உள்ளத்தில் நேர்வழியை செலுத்தி இந்த வழிகேடான முஃதஸிலாக்களின் பாதையில் இருந்து நீங்கச் செய்து முழு முஸ்லிம் உம்மத்துக்கும் ஒரு உதாரணமாக மாற்றிவிட்டான். இவரை இந்த வழிகெட்ட பீஜேயின் சுய சிந்தனை பாதையில் இருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே புகழ்அனைத்தும் அல்ஹம்துலிலாஹ்....!!!! எமது விவாதமும் அல்லாஹ்வின் உதவியால் இதற்க்கு ஒரு காரணமாகும்!!!!!!!!!!!!!
-----------------------------------------------------------------------------------------------------------------

Abbas Ali Misc

அல்லாஹ்வை அஞ்சி எடுத்த முடிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

அன்பான சகோதரர்களே! சில ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை குா்ஆனுக்கு முரண்படுகின்றது என்று சகோதரர் பீஜே முதலில் கூறினார். அவர் கூறியது உண்மை என உளப்பூர்வமாக நம்பி நானும் அந்த ஹதீஸ்களை மறுத்து வந்தேன். இது தொடர்பாக ஹதீஸ்கள் குா்ஆனுக்கு முரண்படுமா? என்ற நுாலையும் நான் எழுதினே். தவ்ஹீத் ஜமாத்தில் மற்றவர்களை விட இது பற்றி நான் அதிகமாக பேசியும் எழுதியும் இருக்கிறேன்.

இந்நிலையில் முன்பு முரண்பாடாக தெரிந்த பல ஹதீஸ்கள் தற்போது அவற்றுக்கும் குா்ஆனுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை என்ற உண்மை எனக்கு தெரியவந்தது. குா்ஆனுக்கு முரண்படுகிறது என்ற வாதத்திற்கு பின்னால் தேவையற்ற சந்தேகங்களும் அறியாமையும் சம்பந்தமில்லாமல் வசனங்களை மோதவிடும் போக்கும் காஃபிர் இதை ஏற்றுக்கொள்வானா என்ற மனநிலை மட்டுமே மறைந்துள்ளது என்பதை உணர்ந்துகொண்டேன்.

குறிப்பாக நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸ் குா்ஆனுடன் முரண்படவில்லை. அதை மறுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. அது ஆதாரப்பூர்வமான நபிவழிதான். முஃதசிலாக்களையும் சகோதரர் பீஜேவையும் தவிர இஸ்லாமிய வரலாற்றில் யாரும் இந்த நபிமொழியை மறுக்கவில்லை. 2 102வது வசனத்தின் நேரடி பொருளை மாற்றி இஸ்லாமிய வரலாற்றில் இது வரை எவரும் கொடுக்காத சகோதரர் பீஜே கொடுத்த மாற்று விளக்கமும் குா்ஆனுக்கு மாற்றமாக உள்ளது.

இந்நிலையில் நான் சிஹ்ரை நம்பியவர்கள் முஷ்ரிக் என்று கூறினால் முதலில் நபி (ஸல்) அவர்களை நான் முஷ்ரிக் என்று கூறுவதாக அர்த்தம். (அவூதுமில்லாஹ்). அடுத்து சகோதரர் பீஜேவையும் இவ்விசயத்தில் அவருடைய கருத்தை ஏற்றுக்கொள்பவர்களைத் தவிர்த்து உலகில் உள்ள மற்ற முஸ்லிம்கள் அனைவரையும் முஷ்ரிக்குகள் என்று கூற வேண்டிய நிலை உள்ளது. முஃமின்களை முஷ்ரிக்குகள் என்று நான் கூறுவதை விட பெரிய வழிகேடு வேறு ஒன்றும் இருக்க முடியாது.

இந்நிலையில் இதுபற்றி நான் மக்களுக்கு தெளிவுபடுத்தாமல் மரணித்துவிட்டால் என்னுடைய மறுமைவாழ்வு கேள்விக்குறியாகிவிடும்? எனவே நான் வெட்கப்படாமல் எனக்கு சரி என்று படும் விசயத்தை பகிரங்கமாக அறிவிக்கிறேன்.

நான் சிஹ்ர் தொடர்பாக முன்பு தெரிவித்த கருத்துக்களுக்கும் ஹதீஸ்கள் குா்ஆனுக்கு முரண்படுமா? என்று எழுதிய நுாலுக்கும் இனி எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இது தொடர்பாக சில தினங்களுக்குப் பிறகு நான் எனது விளக்கத்தை இன்ஷா அல்லாஹ் வெளியிடுவேன்.

தவ்ஹீத் ஜமாத்தில் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் நாளுக்கு நாள் நியாயமின்றி மறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. மறுப்பதற்கு முன்பு மற்ற அறிகர்கள் யாரிடமும் ஆலோசனை செய்வதில்லை. மறுத்தப் பிறகு மற்றவர்களும் மறுத்தாக வேண்டிய நிலை வருகின்றது. மறுப்பதற்கு முன்பு மற்ற அனைவரிடமும் ஆலோசனை செய்யுங்கள் என்று நான் கோரிக்கை வைத்தப் பிறகும் அதை ஏற்காமல் சமீபத்தில் அதிராம்பட்டிணத்தில் நடந்த விவாவதத்தில் சில ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அநியாயமாக சகட்டுமேனிக்கு மறுக்கப்பட்டது.



தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து கொண்டு இதை உரியவா்களிடத்தில் தெரிவிக்க என்னால் இயலவில்லை. எனவே வெளியில் இருந்து இதுபற்றி பேச முடிவு செய்துள்ளேன். இது திடீரென அவசர கோலத்தில் நான் எடுத்த முடிவில்லை. பல பிரச்சனைகளை சந்தித்து பலமாதங்கள் சென்ற பிறகு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனுபவத்தில் உணர்ந்த அடிப்படையில் எடுத்த முடிவாகும். யாரையும் காயப்படுத்துவது என் நோக்கமல்ல. பொறுமையுடனும் சகோதர உணர்வோடும் இந்தப் பிரச்சனையை நோக்குமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.
பகிர்வு : ADT
as received

அதிரை தாருத் தவ்ஹீத் - நட்சத்திரமாக மின்னியது ! [காணொளி முன்னோட்டம் இணைப்பு] 9

அதிரைநிருபர் பதிப்பகம் | October 31, 2014 | , , ,

அதிரை மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து தமிழ் பேசும் முஸ்லீம்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது நான்கு நாட்கள் நடைபெற்ற "கொள்கையற்றவர்கள் யார்" என்ற தலைப்பிலான விவாதம்.

அதிரை தாருத் தவ்ஹீத் மற்றும் த த ஜ வினர் முறையாக எழுத்துபூர்வமான ஒப்புதலோடு அக்டோபர் 27, 28, 29 மற்றும் 30 தேதிகளில் பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தேறியிருக்கிறது.

அல்ஹம்துலில்லாஹ் ! ஒவ்வொரு அமர்விலும் அதிரை தாருத் தவ்ஹீத் தங்களது பொறுமையாலும், தகுந்த சான்றுகளுடனும் கண்ணியம் காத்து விவாதத்தை சிறப்புடன் முன்னெடுத்துச் சென்றது அவர்களின் அனுபவம் மற்றும் பண்பட்ட பண்பாளர்களின் ஆளுமையையும் போற்றத்தக்கதாக அமைந்தது சிறப்பு அம்சம்.

மாறாக, பல்வேறு விவாதக் களம் கண்ட த த ஜ வினரும் இன்னும் பண்பட்டவர்களாக விவாத அமர்வை எடுத்துச் செல்வார்கள் என்று அவர்கள் மீது பற்றும் அபிமானமும் வைத்திருந்தவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமாக அமைந்தது. அவர்களின் பிற விவாதங்களில் ஈடுபடுவது போன்றே வழமையான சாடல் போக்கை கையாண்டது வந்திருந்தவர்களில் பெரும்பாலோருக்கு சலிப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஓட்டம், தலை தெறிக்க ஓட்டம், பிடரியில் பின்னங்கால் அடிக்க ஓட்டம் இந்த பல்லவியே அவிழ்த்து விடப்படும் என்று விவாதம் துவங்கும் முன்னரே பலராலும் கருத்துக்கள் சொல்லப்பட்டது, அதற்கு மேலும் சொல்லத் துணிவார்கள் என்றும் எதிர்பார்க்கவும் செய்தார்கள். அதையும் தாண்டி விவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே சில வினாடிக் காட்சிகளை குறும்படமாக பரப்பி விட்டுக் கொண்டிருந்தது அவர்களின் தோல்வி பயம் பற்றிய குழப்பத்திலிருப்பதை உறுதி செய்தது.

ஒட்டுமொத்த த த ஜ அதிரை கிளைக்காக விவாதம் செய்ய வந்த அதன் மாநில நிர்வாகிகள் மற்றும் த த ஜ அதிரைக் கிளயின் வலைத்தளத்தின் சார்பாக பொறுப்பேற்றுக் கொண்டவரும் அந்த வலைத்தளத்தில் 'அதிரை தாருத் தவ்ஹீத்' கொள்கையற்றவர்கள் என்று அள்ளி வீசிய அவதூறான குற்றச்சாட்டுகள் பற்றி ஒரு வார்த்தைகூட த த ஜ தரப்பில் பேசப்படவில்லை என்பது தான் இந்த விவாதத்தின் மிகப்பெரிய ஹைலைட்.

விவாதம் தொடங்கி, அது முடியும் நான்காம் நாள் வரை சூனியம் மற்றும் தனிமனித வசைபாடல்களை வைத்து நான்கு நாட்களை த த ஜ காலம் கடத்தியுள்ளது, த த ஜ-வின் தரப்பில் 'அதிரை தாருத் தவ்ஹீத்' பற்றி குற்றம் சுமத்த ஒன்றுமில்லை என்பது 100% சதவீதம் இந்த விவாதத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

நிமிர் நடை கொண்டு, தூற்றல் வாடை இன்றி, நேர் பேச்சுகளே துணிவு என்று படைத்த இறைவன் மீது மட்டுமே ஆழமான நம்பிக்கையை வைத்து களம் கண்ட அதிரை தாருத் தவ்ஹீதை தூற்றியவர்களின் அதிரை த த ஜ கிளைக் கூடாரம் கலகலத்து போனது என்னவோ ஊரரிந்த உண்மையாகிப் போனது மட்டும் நிதர்சனம் - அல்ஹம்துலில்லாஹ்.

ஏகத்துவ கொள்கைப் பற்றுடன் த த ஜ அதிரைக் கிளையில் இருக்கும் சகோதரர்கள் இந்த விவாதத்தை சீர்தூக்கிப் பார்த்து தங்களது இயக்க மயக்கத்திலிருந்து மீண்டு வெளியில் வந்து ஏகத்துவதுவ பற்று கொண்ட மற்ற சகோதரர்கள் அனைவரோடும் ஒருசேர மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில் தொடர முன்வர வேண்டும் என்பதே எம் அவா ! - இன்ஷா அல்லாஹ் !

அதிரை வள்ளல்

காணொளி முன்னோட்டம்.... சொல்வதோ த.த.ஜ.(அ.கி.) ஓட்டமெடுக்கப் போவதை...



'ADT' - அறிய வேண்டிய அதிரையின் அகம் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | October 30, 2014 | , ,

அதிரை தாருத் தவ்ஹீத் - (ADT) என்ற பெயர் அதிரை மக்கள் மட்டுமல்லாது சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒன்றே !. அதன் தூய பரிணாமத்தின் சுவடுகளை அறிந்திருக்கும் வாய்ப்புகள் இன்றைய இளைய தலைமுறையினருக்கும் அறியும் வண்ணமாக "தூய பரிணாமத்தின் அறிமுகம்" என்ற மடக்கோலையை வெளியிட்டிருந்தார்கள்

அதிரை தாருத் தவ்ஹீத் பரந்து விரிந்து நிமிர்ந்த நடைபோடும் தூய பரிணாமத்தின் நினைவூட்டல் இதோ:-







அதிரைநிருபர் பதிப்பகம்
இது ஒரு மீள்பதிவு

சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15 - காணொளி உரை…! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | August 15, 2014 | , , ,


இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் சுதந்திர தினத்தில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளப்பட வேண்டிய வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு, உண்மைகளை உரக்கச் சொல்லும் இந்த காணொளி உரையை மீள்பதிவாக பகிர்வதில் மகிழ்வடைகிறோம்.


அதிரைநிருபர் பதிப்பகம்
காணொளி பகிர்வு (நன்றி) : ADT

அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும் ரமளான் 1435 சிறப்பு நிகழ்ச்சிகள் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | June 27, 2014 | , , ,


ரமளான் 1 முதல் 20 வரை மவ்லவீ முர்ஷித் அப்பாஸி அவர்கள் வழங்கும் சிறப்பு அமர்வுகள்...

இடம் :

இரவு 10:00 முதல் 11:30 மணி வரை ஈ.பி.எம்.ஸ்கூல் நடுத்தெரு, அதிராம்பட்டினம் மற்றும்,

காலை 11:00 முதல் பகல் 12:30 மணி வரை இஸ்லாமியப் பயிற்சி மையம், பிலால் நகர், அதிராம்பட்டினம்.

சிறப்பு சொற்பொழிவு தலைப்புகள்:-
  • நோன்பின் மாண்புகள்
  • ரமாள் ஏற்படுத்தும் மாற்றங்கள்
  • நரக விடுதலை
  • சொர்க்கம் செல்லும் வழி
  • அல்குர்ஆன் அழைக்கிறது
  • பெற்றோரைப் பேணுவோம்
  • இஸ்லாமிய இல்லறவியல்
  • நவீன சாதனங்கள் ஓர் ஆய்வு
  • குழந்தை வளர்ப்பு
  • இன்னும் பல...

காலை அமர்வுக்குத் தொலைவிலிருந்து வரும் பெண்களுக்கு வர-போக வாகன வசதி உண்டு.

வாகனங்கள் நிறுத்தங்கள்:-
  1. பெண்கள் மார்கெட், கடற்கரைத் தெரு
  2. ஹனீஃப் டாக்டர் வீடு, PKT ரோடு
  3. ஹனீஃப் மஸ்ஜித், CMP லேன்
  4. EPM ஸ்கூல், நடுத்தெரு
  5. பாலம், கீழத்தெரு
  6. புகாரி மாளிகை, மேலத் தெரு
  7. கருணா வீடு முக்கம், மேலத்தெரு

அன்புடன் அழைக்கிறது....

அதிரை தாருத் தவ்ஹீத்
மின்னஞ்சல் : salaam.adt@gmail.com

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு - காணொளி உரை…! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | June 13, 2014 | , , ,

அன்பிற்கினியவர்களுக்கு !

அதிரையில் ஸ்திரமான தாஃவாக் களம் அமைத்து மிகச் சிறப்புடன் செயல்பட்டு வரும் அதிரை தாருத் தவ்ஹீத் கடந்த மே-2014 பள்ளி விடுமுறையில் இருந்த மாணவ மணிகளுக்கென்று நடத்திய 'கோடகால பயிற்சி முகாம்' அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.

அதிரைநிருபரில் அனைவரின் பேராதரவைப் பெற்று தொடராக பதிக்கப்பட்ட "மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள்" தொடர் வெளிவந்து கொண்டிருக்கும்போதே, அதிரை தாருத் தவ்ஹீத் சகோதரர்கள் வேண்டிக் கொண்டதன் படி கடந்த மே மாதம் 3ம் தேதி ஆரம்பித்த பயிற்சி முகாமில் ஒரு பகுதியாக எங்களது மூத்த பங்களிப்பாளர் சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் மே மாதம் 10 தேதி அன்று மாணவ மணிகளுக்கு (கூட்டாக) ‘சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம் வீரர்களின் தியாக வரலாறு’ என்ற தலைப்பில் சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார்கள்.

அதில் பங்கெடுத்த மாணவமணிகள் அனைவரின் ஆர்வமும், அவர்கள் அந்த உரையில் மோற்கோளிட்ட நிகழ்வுகளை குறிப்பெடுப்பதில் காட்டிய துடிப்பும் மகிழ்வை அளித்தது. 

அதிரை இளைய சமுதாயம் விழி கொண்டும் மொழி கொண்டும் தீர்க்கமான, தூய்மையான இறைகோட்பாட்டிற்குட்பட்டு நபிவழியில் வெற்றியடைய மனதார வாழ்துகிறோம்... இன்ஷா அல்லாஹ் !


அதிரைநிருபர் பதிப்பகம்
காணொளி பகிர்வு (நன்றி) : ADT

ADT கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் - நன்றி ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | May 22, 2014 | , , ,

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

‘அதிரை தாருத் தவ்ஹீத்’ தொடர்ந்து நடத்திவரும் ‘கோடைகால இஸ்லாமிய நல்லொழுக்கப் பயிற்சி முகாம்’ பற்றிய அறிவிப்பைக் கண்ட நாள் முதல், ஒவ்வோர் ஆண்டும் இப்பயிற்சி முகாமினால் பயன் பெற்றுவந்த மாணவ மாணவியர்களிடமும் கல்வித் தேட்டம், பொறுப்புணர்வு, ஆர்வம் முதலான தன்மைகளில் செயலூக்கம் காணப்பட்டது!  பெயர்ப் பதிவும் இதர முன்னேற்பாடுகளும் மாணவ மாணவியரிடத்தில் காணப்பட்டது, ‘அதிரை தாருத் தவ்ஹீத்’ (ADT) நிர்வாகிகளுக்கு ஆர்வத்தையும் ஊக்கத்தையும் தந்தது.

களமிறங்கக் காத்திருந்த செயல் வீரர்கள், பயிற்சி முகாமுக்கான முன்னேற்பாடுகளில் இறங்கத் தொடங்கினர்.  முதலில், பயிற்சிமுகாம் பற்றிய அறிவிப்பு வெளியாயிற்று.

நமதூரைப் பொருத்தவரை, பயிற்சிமுகாமில் கலந்துகொண்டு பயன்பெறுவோர் மாணவிகளே.  ஆனால், இவ்வாண்டு மாணவர்களின் பங்கு முன்னைய ஆண்டுகளின் பதிவைவிடக் கூடுதலாகவே இருந்தது.  இந்த நிழற்படம், இதனை உறுதிப் படுத்தும்.


நமது ‘அர்ரவ்ழா பெண்கள் கல்லூரி’யின் ஆசிரியைகளும் களத்தில் இறங்கிப் பயிற்சியளிக்க ஆயத்தமாயினர்.  அவர்கள் இத்தூய பணியில் ஆர்வத்துடன் கலந்து, பொறுப்புகளைச் சிறப்புடன் நிறைவேற்றினார்கள். அவர்கள் அனைவருக்கும்  ADT நிர்வாகம் தனது நன்றியைத் தெரிவிக்கின்றது.  

இவ்வாண்டு நமக்குக் கிடைத்த இலங்கை முத்து, அப்துல் ஹமீத் (ஷரஇ). இவர் ‘ஆலிம்’ பட்டம் பெற்றதுடன், மனோதத்துவ அறிஞரும் கூட.  இவர் பெரும்பாலும் மாணவர்களுக்கே ‘தர்பியா’ என்னும் ஒழுக்கவியல் பாடங்களைப் போதித்தார்.       


எமது அமீரகச் சகோதரர்களின் அழைப்பை ஏற்று, அதிரைக்கு வந்தவர்.  நமது ஊரைச் சூழவிருக்கும் ஊர்த் தவ்ஹீத் சகோதரர்கள் தம் ஊர்களில் வகுப்பெடுக்க வேண்டும் என்று நம்மிடம் விரும்பி வேண்டி அழைத்தனர். முத்துப்பேட்டை மதுக்கூர், நாகூர், அறந்தாங்கி, மஞ்சக்கொல்லை ஆகிய ஊர்ச் சகோதரர்களின் ‘ஜுமுஆ’ மற்றும் மாலை நேர வகுப்புகளும் எடுக்கச் செய்து பெரும்பலனைப் பெற்றனர்.


காலை முதல் முற்பகல்வரை பயிற்சி முகாமில் பாடங்கள் முடிந்தபின், மாணவ மாணவிகள் தத்தமக்கு ஒதுக்கப்பட்ட ‘வேன்’களில் வீடுகளுக்குச் சென்றபின், மதிய உணவுக்குப் பின்னர், குடும்பத் தலைவியருக்குப் பொருத்தமான பயனளிக்கும் மனோதத்துவப் பாடங்களை எடுத்துணர்த்தி, அவர்களை அதிசயிக்க வைத்துப் பயிற்சியளித்தார்.     


மவ்லவி அப்துல் ஹமீத் (ஷரஈ) அவர்களுக்கு ADT நிர்வாகம் தன் நன்றிக் கடப்பாட்டைத் தெரிவிக்கின்றது.

இடையில் இன்னொரு அப்துல் ஹமீது!  அவர்தான், நமதூருடன் நட்புறவு கொண்ட ‘அழைப்பாளர்’, சென்னைவாசி.  இவரும் பிலால் நகர் ‘தர்பியா செண்ட’ரில் பயனுள்ள வகுப்புகளைப் பையன்களுக்கு எடுத்து, பயிற்சி முகாமில் கிடைத்த நன்மைகளை நுகரச் செய்தார்.  அவருக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

இடையில் ஒருநாள், ‘இஸ்லாமிய அழைப்பாளர்’ தருமபுரி சாதிக் அவர்கள் நமதூருக்கு வந்தவர், நமது அனுமதியைப் பெற்று, சிறுவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.  அவருக்கும் நாம் கடப்பாடுடையோம்.


நமது நன்றியுணர்வுக்கு, இன்னும் முடிவில்லை!  இன்னும் சிலருக்கும் நாம் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளோம். மாணவ மாணவிகளின் பயிற்சி முகாமிலும் இடம் பெறாத, அவர்களின் படிப்புக்குத் தொடர்புடைய, பாட நூல்களில் இடம் பெறாத, 'இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களின் வீர வரலாறு' எனும் தலைப்பில் இணையதள எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் பயனுள்ள உரையொன்றை நிகழ்த்தி, மாணவ மாணவியரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.  இதன் கட்டுரை வடிவப் பதிப்பு, ‘அதிரை நிருபர்’ என்ற தளத்தில் இடம் பெற்றதாகும். சகோதரர் இபுராஹீம் அன்சாரி அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முத்துப்பேட்டையிலிருந்து வந்து, நமது வேண்டுதலுக்கு அவருடைய சொற்பொழிவின் மூலம் தம் கடமையை நிறைவேற்றினார்.  அன்னாருக்கும் நமது நன்றி உரித்தாகும்.

நாம் திட்டமிட்டுத் தொகுப்பாக அமைத்திருந்தபடி, இன்னொரு அருமையான நிகழ்ச்சியை ‘செக்கடி மேட்டில்’ வயது வரம்பின்றி அனைவரும் பயன்பெறும் விதத்தில் நடத்தினோம். இது ஓர் அற்புதமான அழைப்புச் சாதனமாகும். அது இதுதான்:


இந்த நிகழ்ச்சியை, மிகச் சிறப்பாகப் ‘பவர் பாயின்ட்’ முறையில் நடத்தித் தந்தவர், ‘உளவியல் அறிஞர்’, மவ்லவி அப்துல் ஹமீத் (ஷரஇ) அவர்கள்தாம்.  மிகச் சிறப்பாக அமைந்த இந்நிகழ்ச்சியைப் பற்றிப் பாராட்டாதவர் இல்லை!  இதற்காகவும் மவ்லவி அவர்களுக்கு நம் உளம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

இந்த எல்லா நிகழ்ச்சிகளுக்கும் முத்தாய்ப்பாக அமைந்தது, ‘தக்வாப் பள்ளி’ முனையில் நாம் நடத்திய பரிசளிப்பும்,  அதைத் தொடர்ந்து,  'குடும்பப் பிரச்சினைகளும் அவற்றுக்கு இஸ்லாம் கூறும் உளவியல் தீர்வுகளும்' என்ற தலைப்பில் அப்துல் ஹமீத் (ஷரஇ) நிகழ்த்திய சிறப்புரையுமாகும்.

அபுதாபியிலிருந்து துபாய்க்கு வந்து, நம் சகோதரர்களைக் கூட்டி, இந்தப் பயிற்சி முகாமின் வெற்றியை நோக்கமாகக் கொண்டு, இறுதிச் சிறப்பு நிகழ்ச்சிவரை பக்கபலமாக நின்ற ஆர்வலர் அமீன் அவர்களின் பங்களிப்பு, அனைவரையும்விட அதிகமாகும். பரிசுப் பொருள்களைக்கூட அமீரகத்தில் வாங்கி, அதிரைக்கு அனுப்பித் தந்து, பரிசு பெற்ற மாணவ மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய பெருமைக்குச் சொந்தக்காரரான சகோதரர் அமீனை எவ்வாறு புகழ்வதென்று புலப்படவில்லை!  அத்துணைக்கு அமைந்து விட்டது, அவருடைய பங்களிப்பு!


ADTயின் பொதுச் செயலாளர் தம்பி ஜமீல் ஆற்றிய களப்பணியின்போது, அவரின் உடை வியர்வையால் சொட்டச் சொட்ட நனைந்து போயிருந்ததைக் கண்டவன் என்ற முறையில், நான் அவருடைய பங்களிப்பை உயர்த்தியே கூறுவேன்.  இடையிடையில், சில படிவங்களுக்குப் பிரதியெடுக்கும் தேவை ஏற்படும்போது, அதனையும் தானே முன்வந்து, கணினியில் பதிந்து, அதைப் பிரதியெடுத்து, அதைக் கொண்டு ஆகவேண்டிய பணியைத் தான் ஒருவரே செய்து, எனக்கு மலைப்பூட்டியவர்!  மட்டிட்டுக் கூற முடியாத அவருடைய dedication காரணமாக எனது பங்களிப்பைக் குறைத்துக்கொண்டேன் என்பதுவே உண்மையாகும்.  ‘நன்றி’ எனும் ஒற்றைச் சொல்லில் கூறினால், அவர் ஈடுபட்டுச் செய்த பணிகளுக்கு நம் நன்றி போதாது.  அவரின் திட்டமிடுதல், அதன்படி இயக்குதல், குறைபாடுகள் இருந்தால், அவற்றைச் சரிப்படுத்துதல் போன்ற dedications அவருக்கே உரிய ஒன்றாகும்.


மழை வருகின்றதா என்று வானத்தை நோக்கியபோது, அது நமது பயிற்சி முகாம் தடையின்றி நடைபெறச் சாதகமற்ற சூழலை உருவாக்கிவிடுமோ என்ற கவலையில்,  அதே நேரம், இந்தக் கோடை வெயிலின் தாக்கத்துக்கு இம்மழையின் தேவை நிலையில், மாணவ மாணவியர் தத்தம் வீடுகளுக்குச் சென்று சேர்ந்த பின் மழை வந்தால் போதும் என்ற எண்ணத்தில், வானை நோக்கிய எனது கவலைப் பார்வை!


தனது பள்ளி விடுமுறையின்போது எமது பயிற்சி முகாமுக்காகத் தன்னால் இயன்ற எல்லா வசதிகளையும் செய்து தந்தமைக்காக, இப்பள்ளியின் தாளாளர் அப்துர்ரஸ்ஸாக் அவர்களுக்கு ADT நிர்வாகம் மிக்க நன்றியைக் கூறுகின்றது.

பயிற்சி முகாம் நடக்கும்போது தாமும் ஊரில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் தனது விடுப்பை முன்னோ பின்னோ அமைத்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்து, எங்களுடன் இணைந்து செயல்பட்ட அப்துல் காதர் அவர்களுக்கு மிக்க நன்றி.

எம்மோடு இணைந்து செயல்பட்ட அப்துர்ரஹ்மான், அஹ்மது ஹாஜா, பிலால் நகர் கமாலுதீன் ஆகியோருக்கு என் இதயம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.

வஸ்ஸலாம்.


ADT/ அமீர்
அதிரை தாருத் தவ்ஹீத்

கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2014 - பரிசுகள் 11

அதிரைநிருபர் பதிப்பகம் | May 20, 2014 | , , , ,

கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2014

போட்டிகள், பரிசுகள்

மாணவிகள் பிரிவு

பதிவு செய்த மொத்த மாணவிகள் : 228

நிலை 1 (3, 4 & 5 வகுப்புகள்) மாணவிகள் : 74

            பத்துப் பிரார்த்தனைகள் - போட்டியார்கள் : 27

முதல் பரிசு :                  நதீரா பானு முஹம்மது அப்துல்லாஹ், மேலத்தெரு
இரண்டாம் பரிசு :         நபீஹா அஹ்மது அனஸ், கடற்கரைத் தெரு
மூன்றாம் பரிசு :            நஸூஹா ஸாதிக் பாட்சா, CMP லேன்
ஆறுதல் பரிசுகள் : 24

          மனனம் : ஸூரத்துல் ஆதியாத் (+ தஜ்வீத்) - போட்டியாளர்கள் : 40

முதல் பரிசு :                  ஜுல்ஃபா முஹம்மது தமீம், CMP லேன்
இரண்டாம் பரிசு :         முபீனா முஹம்மது நளீம், பிலால் நகர்
மூன்றாம் பரிசுகள் :      ஃபழீலா & ஃபஹ்மிதா இத்ரீஸ் முஹைதீன், புதுமனைத் தெரு
ஆறுதல் பரிசுகள் : 36

நிலை 2 (6 & 7 வகுப்புகள்) மாணவிகள் : 68

            பேச்சுக் கலை : "மனிதனை அழிப்பது எது?" போட்டியாளர்கள் : 29

முதல் பரிசு :                  ஹம்னா அப்துர் ரஹ்மான், சேது ரோடு
இரண்டாம் பரிசு :         சுமையா முஹம்மது யூஸுஃப், புதுத் தெரு
மூன்றாம் பரிசுகள் :      ஆமினா அப்துர் ரஸ்ஸாக், நடுத்தெரு & முஃப்லிஹா நஜ்முத்தீன், தட்டாரத் தெரு
ஆறுதல் பரிசுகள் : 25

            மனனம் : ஸூரத்துல் இன்ஃபிதார் (+ தஜ்வீத்) போட்டியாளர்கள் : 28

முதல் பரிசு :                  ஃபாத்திமா முஹம்மது ஃபாஸி, ஆலடித் தெரு
இரண்டாம் பரிசு :         வஃபியா ஸல்மான் , ஆலடித் தெரு
மூன்றாம் பரிசுகள் :      ஃபழீலா அலாவுத்தீன், கடற்கரைத் தெரு & மர்யம் முனவ்வரா முஹம்மது மீரா ஸாஹிப், ஆலடித் தெரு
ஆறுதல் பரிசுகள்  : 25

            கட்டுரைப் போட்டி - போட்டியாளர்கள் : 68

முதல் பரிசுகள் :            ஹம்னா அப்துர் ரஹ்மான், சேது ரோடு & ஆயிஷா அப்துர் ரஸ்ஸாக் புதுமனைத் தெரு
இரண்டாம் பரிசு :         சமீஹா ஹாஜா அலாவுத்தீன், மேலத் தெரு
மூன்றாம் பரிசு :            சுமையா முஹம்மது யூஸுஃப், புதுத் தெரு

நிலை 3 (8 & 9 வகுப்புகள்) மாணவிகள் : 51

            பேச்சுக் கலை :"குர் ஆன் கூறும் நல்லுபதேசம்" - போட்டியாளர்கள் : 26
முதல் பரிசு :                  சஃபீனத்துர் ராபியா அப்துல் ஹமீது, கடற்கரைத் தெரு
இரண்டாம் பரிசு :         தஹ்ஸீனா அபுல் ஹஸன், ஆலடித் தெரு
மூன்றாம் பரிசு :            ருமைஸா அஹ்மது ஹாஜா, நடுத் தெரு
ஆறுதல் பரிசுகள் : 23

            மனனம் : ஸூரத்துல் கியாமா (+ தஜ்வீத்) - போட்டியாளர்கள் : 26

முதல் பரிசு :                  தஹ்ஸீனா அபுல் ஹஸன், ஆலடித் தெரு
இரண்டாம் பரிசு :         அஸ்மா அப்துஸ் ஸாதிக், மேலத் தெரு
மூன்றாம் பரிசு :            கதீஜா காமிலா சய்யித் அஹ்மது புகாரீ, ஆஸ்பத்திரித் தெரு
ஆறுதல் பரிசுகள் : 23

          கட்டுரைப் போட்டி - போட்டியாளர்கள் : 68

முதல் பரிசு :                  சஃபீனத்துர் ராபியா அப்துல் ஹமீது, கடற்கரைத் தெரு
இரண்டாம் பரிசு :         அஸ்மா அப்துஸ் ஸாதிக், மேலத் தெரு
மூன்றாம் பரிசு :            ருமைஸா அஹ்மது ஹாஜா, நடுத் தெரு

நிலை 4 (10, +1 & +2 வகுப்புகள்) மாணவிகள் : 35

            பேச்சுக் கலை : "மதி மயக்கும் உலக ஆசைகள்" - போட்டியாளர்கள் : 14
முதல் பரிசு :                  தவ்ஹீதா ஷேக் தாவூது, மேலத் தெரு
இரண்டாம் பரிசு :         பெல்ஹா முஹம்மது முஹைதீன், மேலத் தெரு
மூன்றாம் பரிசு :            அனீஸா அப்துஸ் ஸாதிக், மேலத் தெரு
ஆறுதல் பரிசுகள் : 11

            மனனம் : ஸூரத்துல் முத்தஃதிர் (+ தஜ்வீத்) - போட்டியாளர்கள் : 13

முதல் பரிசு :                  சுஹைமா அப்துல் கரீம், புதுமனைத் தெரு
இரண்டாம் பரிசு :         முஃப்லிஹா முஹம்மது தமீம், புதுமனைத் தெரு
மூன்றாம் பரிசு :            பெல்ஹா முஹம்மது முஹைதீன், மேலத் தெரு
ஆறுதல் பரிசுகள் : 10

          கட்டுரைப் போட்டி - போட்டியாளர்கள் :

முதல் பரிசு :                  சுஹைமா அப்துல் கரீம், புதுமனைத் தெரு
இரண்டாம் பரிசு :         ரிஹானா நர்கிஸ் அஹ்மது அலீ, பழஞ்செட்டித் தெரு
மூன்றாம் பரிசு :            பெல்ஹா முஹம்மது முஹைதீன், மேலத் தெரு


மாணவர்கள் பிரிவு
பதிவு செய்த மாணவர்கள் - 65 ; வருகையாளர்கள் - 38
எழுத்துப் போட்டியாளர்கள் - 21

          எழுத்துப் போட்டி அ-பிரிவு

முதல் பரிசு :          தவ்ஃபீக் ஷாஹுல் ஹமீது, பிலால் நகர்
இரண்டாம் பரிசு : அப்துர் ரஹ்மான் பஹ்ருத்தீன், மேலத்தெரு
மூன்றாம் பரிசு :    ஷேக் உமர் அஹ்மது ஹாஜா, நடுத் தெரு

          எழுத்துப் போட்டி ஆ-பிரிவு

முதல் பரிசு :          அப்துல் பாஸித் ஜியாவுல் ஹக், ஹாஜா நகர்
இரண்டாம் பரிசு : இர்ஃபான் அலீ சஹாபுத்தீன், பிலால் நகர்
மூன்றாம் பரிசு :    ஜாஹிர் ஹுஸைன் கமாலுத்தீன், பிலால் நகர்
எழுத்துப் போட்டி ஆறுதல் பரிசுகள் - 15
வாய்மொழி ஆறுதல் பரிசுகள் 17

        துஆ மனனப் போட்டி - பங்கெடுத்த மாணவர்கள் : 19

முதல் பரிசு :          ஜாஹிர் ஹுஸைன் கமாலுத்தீன், பிலால் நகர்
இரண்டாம் பரிசு : ஹாமித் அப்துர் ரஹ்மான், சேது ரோடு
மூன்றாம் பரிசு :    இர்ஃபான் அலீ சஹாபுத்தீன், பிலால் நகர்
ஆறுதல் பரிசுகள் : 16

        சூரா மனனப் போட்டி - பங்கெடுத்த மாணவர்கள் : 21

முதல் பரிசு :          ஹாஸர் மாஜுத்தீன், சான வயல், மேலத்தெரு
இரண்டாம் பரிசு : இர்ஃபான் அலீ சஹாபுத்தீன், பிலால் நகர்
மூன்றாம் பரிசு :    நிஅமத்துல்லாஹ் ஷேக் அப்துல் காதிர், நடுத் தெரு

ஆறுதல் பரிசுகள் : 18

SEC-ADT
அதிரை தாருத் தவ்ஹீத்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு