அழகிய அதிரைத் தெருக்கள், அசர வைக்கும் வானிலை மாற்றம் தந்த சாந்தமே அந்த தூறலோடு தாலாட்டிக் கொண்டு வந்த அட! மழை.... !
மழை என்றால் பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை என்ற தண்ணீரில் எழுதி வைக்காத விதியொன்று மனதில் ஆட்கொண்டு தெருக்கோடியையும், அன்னாந்து வாணத்தையும் பார்க்கும் தருணம் ஒரு சுகமான சுகந்தமே !
எது எப்படியிருந்தாலும், என் பள்ளிக்கூடம் செல்ல இந்த மழை என்ன! எந்த மழையும் தடையில்லை! என்று பள்ளிச் சீருடையில் சின்னஞ்சிறு மொட்டு ஒன்று வெறிச்சோடி கிடக்கும் தெருவை விழித்தெழ வைக்கும் எழில் நடை !
பள்ளிக்கூட காலங்களை அசைபோட வைக்கும் குடைக்குள் இந்த மொட்டு ! அழகிய சிட்டு !
இனி உங்கள் ரசனைப் பார்வை எப்படி !?
புகைப்படம் : அபூமஹ்மூத்
அதிரைநிருபர் பதிப்பகம்


