Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அம்மாபட்டினம். Show all posts
Showing posts with label அம்மாபட்டினம். Show all posts

CMN சலீம் - சிறப்பு காணொளிப் பேட்டி ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | May 03, 2014 | , , , , ,


தமிழக முஸ்லிம் மக்களின் பொருளாதார நிலையை மேன்படுத்தவும் சட்டம், கல்வி, அரசியல், மத்திய மாநில அரசு நிர்வாகங்களின் மற்றும் IAS,IPS போன்ற துறைகளில் முஸ்லிம் மக்களின் நிலையை மேன்படுத்தி சமுதாய மக்களை மார்க்க கல்வி மற்றும் உலக கல்வி இரண்டிலும் அறிவில் சிறந்தவர்களாக உருவாக்க தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் தமிழக முழுவதும் விழிப்புணர்வு பொதுக்கூட்டங்களை நடத்தி வருவது தாங்கள் அறிந்ததே !

முஸ்லிம் சமுதாயத்தில் பெண்களின் கல்வி நிலையை மேன்படுத்தி மார்க்கம் காட்டும் வழிமுறையை பின்பற்றி பெண் கல்வியாளர்களை உருவாக்கும் நோக்கத்தில் அம்மாபட்டினத்தில் அன்னை கதீஜா பெண்கள் கல்லூரி உருவாக்க சமுதாயநலனில்  அக்கறைக்கொண்ட சமுதாய சிந்தனையாளர்களின் பங்களிப்பில் 8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு அரசு ஆணை பெற்று 100 மாணவிகளைக்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.

அன்னை கதீஜா (மகளிர்) கல்லூரி 200 பங்குகள் சேர்க்க தீர்மானிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது, 165 பங்களிப்பாளர்களின் மூலம் திரட்டப்பட்ட நிதியில் கல்லூரியின் கட்டிட பணி, அனுமதி மற்றும் நிர்வாக ரீதியிலான பணிகள் முடிவடைந்து அன்னை கதீஜா கல்லூரி செயல்பட்டு வருவதும் மேலும் மீதமுள்ள பங்குகளின் சேர்க்கையை முடிக்கவேண்டிய நிர்பந்தத்திலும் உள்ளது, மீதமுள்ள 35 பங்குகள் நிறைவடைய அன்புள்ளமும் கொடையுள்ளமும் கொண்ட சகோதரர்களின் உதவியை நாடுகிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் மாதம்  சகோதரர் CMN சலீம் அமீரகம் (UAE) வருகை தந்தார்கள், அவர்களின் தொடர் சொற்பொழிவுகள் மற்றும் சந்திப்புகளுக்கு இடையே நமது அதிரைநிருபர் தளத்திற்கென சிற்ப்பு பேட்டி கண்டோம், அதன் காணொளித் தொகுப்பை இங்கே பகிர்வதில் மகிழ்கிறோம்.

மேலும் அன்னை கதீஜா (மகளிர்) கல்லூரிக்கான உதவிகள் பற்றிய விரிவான தகவலுக்கு கீழ்கானும் தொடர்பு கொள்ள வேண்டி அதன் பொறுப்பாளர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தமிழகம் - CMN சலீம் -0091-9840182251
அமீரகம் - இம்ரான் கரீம் - 00971-559739408



அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக்கிட  - ஒருகிணைந்து சமுதாய சேவை செய்வோம் - சமூகத்தை உயர்த்துவோம் !

அதிரைநிருபர் பதிப்பகம்

எங்கே வீழ்ந்தோம்...? - பயிலரங்கம்...! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | February 10, 2014 | , , ,

முஸ்லிம்களின் கல்வி "எங்கே வீழ்ந்தோம்...?" என்ற தலைப்பில் Power Point பயிலரங்கம் வரும் 14-02-2014 வெள்ளிக்கிழமை அன்று அன்னை கதீஜா கலை அறிவியல் மகளீர் கல்லூரி, அம்மாபட்டினத்தில் நடைபெற இருக்கிறது,

சகோதரர் CMN சலீம் அவர்கள் இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியும்... அது வீழ்த்தப்பட்ட சதியும்... இனி நமது பயணமும் என்று ஏராளமான தகவல்கள் அடங்கிய பயிரங்கத்தினை நடத்த இருக்கிறார்கள்.

தொடர்புக்கு : 9944122616 / 9842910132


பரிந்துரை : ஜமீல் M.ஸாலிஹ்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு