தமிழ் கூறும் நல்லுள்ளம் கொண்ட மக்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கும் மனித உரிமை ஆர்வர்களும் கண்ணீர்விடும் கொடுமைகள் இலங்கை மக்களால் சொல்லெனாத் துயரை அனுபவப் பட்டிருப்பதை எழுத்திலும், புகைப்படங்களாலும் , காணொளிகளாவும் விவரித்துக் கொண்டிருக்கும் ஊடகங்களும், அந்த மக்களுக்காக ஆதரவுக் கரங்கள் நீட்டும் அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் வாழ்வாதார தீர்வுதான் என்ன என்று சொல்வதில் குழம்பிக் கொண்டிருக்கின்றனர்.
தனி ஈழம் கேட்டு ஆயுதம் ஏந்திய இயக்கம் எதர்க்காக போராடத் துணிந்தார்களோ அவர்களாலே தன் இன மக்களான தமிழ் மொழியை மட்டுமே பேசக்கூடிய மக்களை பாகுபாடின்றி கொன்று அழித்த அத்து மீறல்களை மறைத்து விட்டு, இலங்கை இரணுவ அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக் நீதி கேட்டு போராடும் இயங்கங்ளால் இன்றைய நிலையில் இருக்கும் அந்த அப்பாவித் தமிழர்களுக்கு எவ்வகை நன்மைகள் செய்திருக்கிறார்கள் !?
அம்மக்களின் அமைதியான வாழ்வுக்கும், செழிப்பான எதிர்காலத்திற்கும் ஆக்கபூர்வமாக செயல்படத் தவறும் இந்த கேடுகெட்ட அமைப்புகளும், அரசியல்கட்சிகளும் அவர்களின் வேதனையிலும், வெந்த புண்ணிலும் நெருப்பை கொழுத்திப் போட்டு குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றனர்.
போருக்கு பின்னர் எவ்வாறு அரசும், மக்களும், கைதிகளும், பாதிக்கப்பட்டவர்களும் நடத்தப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறும் நெறிகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இதுவரை வெளிவந்தும் வராததுமான காணொளிகள், விரட்டியடிக்கப்பட்ட ஒரு சமுதாயம், கொன்று குவிக்கப்பட்ட சமுதாயம், பரதேசிகளாக தெருவில் தூக்கியெறியப்பட்ட சமுதாயம் ஒன்றின் கதறலை திட்டமிட்டே மறைத்து, தனது காலில் குத்திய முல்லுக்கு செருப்பை தேடும் இந்த கயவர்களின் கயமையை போட்டு உடைக்கும் இந்த ஆவணப்படம் சொல்லும் உண்மையை நன்னெறியாளர்களுக்கும், மனிதம் போற்றும் ஆர்வலர்களுக்கும் உண்மையை உரக்கச் சொல்லும்.
அதிரைநிருபர் பதிப்பகம்





