Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அரசு வேலை. Show all posts
Showing posts with label அரசு வேலை. Show all posts

I.A.S. வழிகாட்டு மையம் 7

அதிரைநிருபர் | December 27, 2011 | , , , ,

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


அன்பான சகோதரர்களே,

இன்றைய அரசியலில் முஸ்லிம் சமுதாயத்திற்கென்று தலைமை இல்லை, விழிப்புணர்வில்லை, எந்த அரசியல் கட்சிகளும் சமுதாயத்தை மதிப்பதில்லை, சமுதாய தலைவர்களுக்கு சமுதாயத்தை பற்றிய அக்கறை இல்லை.

இதனால் தான் நமது சமுதாயம் கல்வி மற்றும் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் பின் தங்கி கீழ்மட்டத்தில் உள்ளது என்றெல்லாம் புலம்பியே காலத்தை கழித்துக்கொண்டிருக்கும் நாம், முஸ்லிம் சமுதாயம் மேம்படவும், இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்து துறைகளையும் இயக்கும் உயர் பதவியை சென்றடைய ஓர் அரிய, எளிய மாற்று வழி இருப்பதை நாம் ஏன் மறந்து விட்டோம்?

இதற்காக உருவாக்கப்பட்டது தான்


அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்


இதன் நோக்கம்

நமது சமுதாய இளைஞர்கள் I.A.S படிப்பு என்றாலே "எட்டா கனியாக" நினைத்து மனதளவில் அச்ச உணர்வுக்கு ஆளாகின்றனர். ஆனால் அரசியல் வாதிகளாலும், ஆட்சியாளர்களாலும், MLA, MP, அமைச்சர், பிரதம அமைச்சர் போன்றோர்களாலும் சாதிக்க முடியாததெல்லாம் I.A.S அதிகாரிகளால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதையும். மேற்கண்ட பெரிய பதவிகளில் இருப்பவர்களை எல்லாம் இயக்குபவர்கள் I.A.S அதிகாரிகள் தான் என்பதையும், அந்த அதிகார மையத்தை கை பற்றுவது இயலாத காரியம் இல்லை என்பதையும் உணர மறுக்கின்றனர்.
 
இதை பற்றி முழுமையான முறையில் விழிப்புணர்வூட்டி I.A.S-க்கு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலவசமாக செய்து, சென்னை, மற்றும் டெல்லியில் உள்ள சிறந்த I.A.S பயிற்சி அகாடமிகளுடன் இனைந்து செயலாற்றவும், அதன் மூலம் நமது இளைஞர்களை இறை அச்சம் மற்றும் தக்வாவுடன் சமுதாய உணர்வுகளை ஊட்டி பக்குவபடுத்தி இஸ்லாத்திற்கும், இந்தியாவிற்கும் விசுவாசமான IAS அதிகாரிகளாக உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
 
ஆலோசனை குழு

இதற்கான ஆலோசனை குழுவில் (ADVISORY BOARD) தற்போது பணியில் உள்ள மற்றும் ஒய்வு பெற்ற I.A.S அதிகாரிகளை இணைத்து அவர்களது மேலான ஆலோசனைகளுடன் இயங்க உள்ளது.
 
ஆர்வமுள்ள முஸ்லிம் இளைஞர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
 

அடிப்படை தகுதிகள்

·         ஏதேனும் ஒரு UG டிகிரி முடித்து இருக்க வேண்டும்

·         21 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்

தொடர்புக்கு
அழகிய கடன் அறக்கட்டளை.
822, மக்காஹ் மஸ்ஜித் வளாகம்,
அண்ணா சாலை, சென்னை .
Ph. 98408 99012, 98847 06795


தகவல்: முதுவை ஹிதாயத்துல்லாஹ்

கவர்ண்மென்ட் உத்தியோகம்..! 13

அதிரைநிருபர் | July 28, 2010 | , , ,

ஆரம்ப பள்ளி, வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பக்கத்தில் சகவயதுடைய மாணவன் தன்னுடைய புது வகையான லெதர் பேக்கிலிருந்து ஜாமின்ட்ரி                                             பாக்ஸ் திறந்து அழகழகான நிறமும் வடிவமுடைய பென்சில்,                 பேனா, ரப்பர், ஸ்கேல் எடுத்து இது என் வாப்பா சிங்கப்பூரிலிருந்து அனுப்பிருக்காங்க என்று பெருமையடித்துக்கொண்டிருந்தான். அதைப்பார்த்த இவன் தன்மேல் வெறுப்பும் கோபமும் வருகிறது. நாம் ஏன் வெளிநாட்டிலிருக்கும் தந்தைக்கு மகனாக பிறந்திருக்கக்கூடாது, இங்கு ஏன் பிறந்தோம் என்று அழுதே விட்டான் தான் கொண்டுவந்திருக்கும் அழுக்கான பரக்கத்ஸ்டோர் என்று எழுதிருக்கும் மஞ்சள்பையையும் அதுலே கூருடைந்த ஒரு பெண்சிலும், சிறு துகள்களாக உள்ள சில கல்லுக்குச்சிகளும் இருப்பதை பார்த்து.

இவனுடைய தந்தை மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஆர‌ம்ப‌ப்ப‌ள்ளியின் தலைமையாசிரிய‌ர், எல்லாத்துலேயும் க‌ண்டிப்பு நேர‌ம் த‌வ‌றாமை ப‌டிப்பு, குரான் ஓதுத‌த‌ல், இறைதொழ செல்லுத‌ல், இப்ப‌டியாக‌... வீட்டிலேயிருந்து ப‌டித்துக்கொண்டிருக்கும்(ப‌டிப்ப‌து மாதிரி ந‌டிப்ப‌து)வெளியில் விளையாடும் கிளித்த‌ட்டு, க‌ண்டுவிளையாட்டு, சில்லுக்கோடுக‌ளால் போடும் கூக்குர‌லால் ம‌ன‌து எதிலேயுமே ல‌யித்திருக்காது. இப்போதும் அதே ம‌ன‌நிலை நாம் ஏன் இங்கே பிற‌ந்தோமென்று ஏனென்றால் வெளியே விளையாடும் ப‌ச‌ங்க‌ளின் த‌ந்தைக‌ள் வெளிநாட்டில் உத்தியோக‌ம். சிறுவ‌ய‌த்திற்கேயுரிய‌ ப‌டிப்பு/ஓதுத‌ல் த‌விர‌ அனைத்திலும் மன‌துசெல்லும் அதுலே இவ‌ர்க‌ள் ச‌ந்தோஷ‌மாக‌ இருக்கிறார்க‌ள், இதுலே தொலைக்காட்சி/சினிமா பார்ப்ப‌து. இதுமாதிரி தான் அனுப‌விக்காத‌ ஒவ்வொரு நிமிட‌மும் இதேம‌ன‌நிலையில் இவ‌னின் ம‌ன‌தும் அழுத‌து.

பல வருடம் கழித்து வேலைக்காக அப்ளைசெய்து கடைசியில் இவனே வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டான். அந்த வெளிநாட்டுவேலை, கைநிறைய சம்பளம், நினைத்தமாதிரி வாழ்க்கை என்ற மனநிலையின் வெளிப்பாடாக கூட இருக்கலாம். ஆனால், எவ்வளவுதான் சம்பாதித்தாலும் குடும்பத்தாருடனும், தெரு/ஊரு ஆட்களுடனும் மனசு ஏனோ ரொம்ப தூரம் தள்ளியிருப்பதுபோல்தான் தோன்றுகிறது, இதே இவனின் தந்தை குறைந்த சம்பளம் வாங்கினாலும் நிறைவான வாழ்க்கை, தன் மனைவியை விட்டு என்றும் பிரியாநிலை, மகன்/மகள், பேரன்/பேத்தியை விட்டு பிரியாமல் அவர்களின் சுக/துக்கத்தில் பங்கெடுத்து, குடும்பத்திலும் ஊரிலும் நடக்கும் அனைத்துவகையான சுக/துக்கத்திலும் பங்கெடுத்து, தன் வேலை நேரம் போக பொதுப்பணியில் தந்தை ஈடுபத்தி தன்னாலான சேவையை இந்த சமுதாயத்திற்காக செய்தது எல்லாம் இந்த உத்தியோகத்தினால் மட்டுமே சாத்தியம்.

இன்று எத்தனையோ வெளிநாட்டு வாழ்கைப்பற்றி கவிதைகள், சம்பவங்கள் படித்தும் பார்த்தும்கொண்டிருக்கிறோம், இதுலே தங்கை கல்யாணம், பெற்றோரை கவனிப்பது, தனக்கென்று ஒரு வீடு, ஏதாவது பிஸினெஸ் பண்ண கொஞ்சம் பணம் இப்படிபட்ட காரணத்திற்க்காக வெளிநாடு செல்ல கட்டாயப்படுத்தபடுகிறது, ஆனால் இதன்மூலம் மேற்சொன்னதை முழுமனதோடு நிறைவேற்றிருக்கிறோமா? அப்படியே நிறைவேற்றுவதற்கு தன் இளமை, தளர்ச்சி, நோய்கள்தான் மிச்சமிருக்கிறாது. ஒரு நாள் ரிடையர் என்ற ஒன்று பெறும்போது நல்ல கம்பெனியில் வேலைசெய்தால் கிராஜுவிட்டி என்ற பணம் கிடைக்கும், அதை வைத்து தனக்கு வைத்தியம் செய்யவே போதுமானதாக இருக்கும், தன் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ கடைசிவரை நிரந்தரமாக ஒன்றுமே விட்டுவைக்கவில்லை.

இதுவே கவுரவம் பாராமல் உத்தியோகம் செய்த இவனின் தந்தையால் எல்லாமே நிறைவேறியது, தான் வேலையிலிருந்து ஓய்வுப்பெற்றாலும் தனக்கென்ற ஒரு வருமானம். இன்று தான் இறந்தாலும் அந்த ஓய்வூதிய வருமானத்தில் ஒரு பகுதி தன் மனைவிக்கு வருகிறது, அவர் மனைவிக்கூட யாரிடமும் எந்த வித பண உதவிக்கூட எதிர்ப்பாராமல் வாழ வழிவகை செய்கிறது அந்த உத்தியோகம்.

இன்று திரும்பிப்பார்கிறான் தன் பள்ளிக்கால வாழ்வை, இவர்களுக்கு மகனாகப்பிறந்ததுக்கு இறைவனுக்கு நன்றிக்கூறுபவனாக..

ஆக்கம்: அப்துல் மாலிக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு