கொழுப்பெடுத்து திரியிறாண்டா என்று நண்பர்கள் வட்டத்தில் வழக்காடினாலும் இந்த டாக்டருங்க அவங்க பங்கிற்கு உங்களுக்கு ரொம்பதான் கொழுப்பு இருக்குன்னு அதை குறைக்கனும், அதிகமா மட்டன் சாப்பிடாதீங்கன்னு அட்வைஸ் ஒருபக்கம்.
சரி, கொழுப்பு (கொலஸ்டாலுக்கு) மட்டனுக்கு மட்டும்தான் குத்தகைக்கு கொடுத்த மாதிரி ஆளாலுக்கு அட்வைஸ் வேற, மட்டன்னு நெனப்பு வந்தாலே ஆட்டுக்கறி தாங்க இதுநாள் வரைக்கும் நெனப்புல வரும்... ஆனா இப்பொவெல்லாம் என்னான்னே தெரியலைங்க மட்டன் சொன்னாலே பின்னாடி யாரோ முட்டுற மாதிரியெல்லாம் பிரம்மையா இருக்குங்க !
களரிச் சாப்பாட்டுக்கு போகலாம் கெளம்பினா, மாடு எதிர்ல வருது... இது எதேச்சையா ! இல்லே இதுதான் டிரெண்டான்னு தெரியலைங்க !
மாட்டுக் கறியை வச்சு சமையலுக்குத்தான் கறி ஆக்குவங்கன்னு இருந்த காலம் போயி... மாட்டுக்கறியை வச்சு நிறைய நியூஸ் போடலாம், வீடியோ பேட்டி போடலாம், போஸ்டர் அடிக்கலாம், நீயா நானா போட்டி வைக்கலாம், மாட்டுக்கறிய போட்டவய்ங்க ஏன், அந்த மேட்டரை போடல, இந்த மேட்டரை போடலைன்னு வேற குடைச்சல் கொடுக்கலாம் !
இதெல்லாத்தையும் விட, கூடும், கூடாது என்பதையும் தாண்டி யார் மாட்டுகறியோடு தொடர்பாக இல்லையோ அவங்க எல்லோருக்கும் முக்கிய பேசுபொருளாகவும், கிடைத்ததை மெல்லுவதற்கு இந்த மாட்டுக்கறிதாங்க இப்ப ஹாட் !
ஒன்னுமட்டும் தெளிவா தெரியுதுங்க, நங்கள் சொல்வதுதான் சரி, இதுக்கு அவங்க என்ன சொல்றாங்க !? இப்படியே தொடரும் !! மாட்டுகறிக்கென்று தனி பிளாக் ஆரம்பிக்க யாராவது முயற்சிக்கலாம்… !
ரொம்ப சிம்பிள் தலைங்களா !
அறுக்கிற வரைக்கும்தாங்க இந்த ஆடுகள் / மாடுகள் முரண்டு பிடிக்கும் அறுத்துட்டா சூப்பர் கறிதாங்க !
அரசியல்ல இருக்கிற வரைக்கும்தாங்க இந்த ஆடு / மாடெல்லாம் விவாதப் பொருள் அதற்கு அப்புறம் நாமெல்லாம் தாயா பிள்ளையா பழக்கியெடுத்த மக்களாச்சே சும்மா இருந்துடுவோமா....
நாளைக்கே தாத்தாவும் (இல்லேன்னா தளபதி / மதுர வீரன்) சமுதாய தூண்களும் ஒன்னாயிட்டாங்கன்னா ! அங்கே மாட்டுக் கறி சாப்பாடுதானே !
பாஸ் அந்த மாட்டை கொஞ்ச நேரம் அவுத்து விட்டுங்களேன் இரண்டு பேருமே ! :)
அபுஇபுறாஹிம்


