ஊருக்குச் செல்லனும் என்று முடிவெடுத்தாகி ஊருக்கும் சென்றாகி விட்டது, நோன்பு நெருங்கி விட்டதால் நண்பர்கள் டூர் போவதற்கு நெருக்கடி கொடுத்தனர் நோன்புக்கு முன்பே ஒரு டூர் போய் வர வேண்டும் என்றும் சால்ஜாப் காரணம் சொன்னனர். நோன்பு முடிந்ததும் புறப்படும் நெருக்கடி வந்துவிடும் என்பதால் நண்பர்களின் விருப்பமும் நியாயமானதாக(!!?) இருந்ததால் போடு ஒரு டூர் பயணம் என்று ஒரே மனதாக(!!!) முடிவானது.
செல்ல வேண்டிய இலக்கு – குற்றாலம், முன்பெல்லாம் அதிரையிலிருந்து குற்றாலம் செல்ல அறந்தாங்கி புதுக்கோட்டை வழியாக மதுரை, அதன் பின்னர் குற்றாலம் போய் வருவோம் தற்போது E.C.R.ரோடு விரித்து கிடப்பதால் ராமநாதபுரம் வழியாக போகலாம் என்று வழி நிர்ணயம் செய்து ஊரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டோம்
என் வழி அமைதி வழி என்று போகாமல் எனக்கு இது புது(மையான) வழி என்பதால் நிதானமாகவே இன்னோவாவை செலுத்தினேன். E.C.R.ரோடு நன்றாக இருந்ததால் கூட வந்த நண்பார் வேகமா போப்பா என்று உற்சாக மூட்டினார். அவர் கொடுத்த உற்சாகம் என் காதில் விழுந்ததே தவிர அது என் காலுக்கு விழவில்லை அதனால் இன்னோவா அமைதியின் ஆளுமையாகவே (என்ன பன்றது அந்திரைநிருபர் அப்படித்தான் பக்குவப் படுத்தி வைத்திருக்கிறது) பயணித்துக் கொண்டிருந்தது.
இப்படியே போய் கொண்டிருந்தபோது ராம்நாடு தாண்டி ஏர்வாடி என்ற பெயர் பலகை வந்ததும்..
“ஏர்வாடியா? அது இந்தப் பக்கமா இருக்குது?” என்று கூட வந்த அப்பாவி நண்பர் கேட்க.
“ஏன் உனக்கு தெரியாதா முக்கியமா இது உன் போன்றவர்களுகுத்தானே இந்த இடம் நன்றாக விளங்கி இருக்கணும்” என்று விபரமான நண்பர் டபாய்க்க.
முடிவாக அனைவரும் (என்னை தவிர !!!??) அங்கே செல்வதென்று முடிவானது.
நான் கேட்டேன் “ஏம்ப்பா இந்த ராத்திரி நேரத்தில் அங்கே பார்க்க என்ன இருக்கு போக வேண்டாம்” என்றேன்.
அதற்கு விபரமான(!!??) நண்பர் சொன்னார் “இரவில்தான் விசேசமா இருக்கும் வண்டியை திருப்புபா” என்றார்.
“ஓகே திருப்புறேன்.ஆனால் அங்கே தர்காவிர்ற்கு போய் யாரும் சி(லி)ர்க்கு(ம்) வேலை(களைப்) பார்த்தால் அங்கேயே உங்களை கட்டி போட்டு விட்டு வந்து விடுவேன்” என்ற கண்டிசன் போட்டு விட்டு E.C.R.ரில் போன வண்டி யு டென் எடுத்து ஏர்வாடிகுள் நுழைந்தது.
ஏர்வாடி தர்காவை நெருங்கியதும் அந்த இரவிலும் விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. (பவர் கட் (ஆக்வே)இல்லை ) மக்கள் நடமாட்டமும் அதிகம் இருந்தது டீ கடையில் வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது அந்த நள்ளிரவிலும். தர்கா நுழைவாயில் கட்டிக் கொடுத்தவரின் பெயர்தாங்கி இங்கே கம்பீரமாய் நின்றது (மறுமையில் இதற்கெல்லாம் பதில் சொல்லியாகனும்) இன்னும் மக்கள் திருந்தவில்லையோ என்பது புரிந்தது. காரணம் நுழைவாயிலை தாண்டியதும் மணலில் மக்கள் நேர்த்திக்கடனுக்காக கொத்துக்கொத்தாக கால்நடை ஜீவராசிகள் படுத்து கிடப்பதுபோல் படுத்து கிடந்தனர்
தூங்கி கொண்டிருந்தவர்களை மிதித்து விடாமல் நடந்து செல்வது பெரும்பாடாகி விட்டது. இதில் விபரமான(!!?) நண்பர் வேறு புளியை கரைத்தார் (கொட்டை எடுத்த புளியா கொட்டை எடுக்காத புளியான்னு கேட்டுபுடாதிய).
“படுத்து தூங்கிக்கொண்டு இருப்பவர்களில் யார் பைத்தியம் யார் நல்லவர் என்று தெரியாது பட்டுன்னு எழும்பி வேட்டியை பிடித்துவிடும்” என்று கிளியை கிளறிவிட்டார்.
இதைக்கேட்டதும் அனைவரும் வேட்டியை இறுக்கி பிடித்தவாறு அருகே இருந்தா பள்ளிவாசலை நோக்கி நடந்து சென்றபோது (தர்கா உள்ளே ஒரு பள்ளிவாசல் உள்ளது) ஒரு அதட்டலான குரல் நம்மை நோக்கி வந்தது.
“டேய் இங்கே வாங்கடா” என்று குரல் வந்த திசையை நோக்கி நாங்கள் அனைவரும் திரும்பி பார்த்ததும் அதிர்ந்து போய்விட்டோம் அனைவரும் அப்படி ஒரு காட்சியை அங்கே கண்டோம் அப்படியா கடப்பாசியாக உரைந்து விட்டோம்.
தொடரும்….
Sஹமீது