என்
சிந்தையில் நிற்கும்
ஆசான்கள்
சிலரைப் பற்றிய
சிறு குறிப்பு இது
இந்தச்
சிறு மதியினனைச்
சீர் திருத்தி
பெரு மதியினனாக்கிய
ஆசான்களுக்கு
வெகு மதியாக
இந்த நினைவலைகள்
'ரெண்டாம்' நம்பர் பள்ளியில்
'அஞ்சாம்ப்பு':
துள்ளித் திரிந்த
பள்ளிப் பிராயத்தில் - காதுமடல்
கிள்ளித் தண்டிக்கும்
கணக்கு வாத்தி வகுப்பில்
இரும்புக்கை மாயாவியின்
பாம்புத்தீவு சித்திரக்கதை...
பாடத்தைக் கவனிக்காமல்
மறைத்து வைத்துப் படித்ததை
வாத்தி
முறைத்துப் பார்த்து பிடித்துவிட
தீயிட்டுக் கொளுத்தி அதை
வெளியே வீசியதும்
காது நுணி வலியை
கையால் தடவிக் கொண்டே
கண்கலங்கி நின்றதுவும்
கலையாத நினைவுகள்
கா மு மே பள்ளி
ஏழாம் வகுப்பு கணக்கு:
வீட்டுப் பாடம்
கேட்டு வாங்கி பார்த்து
ஏட்டில் இல்லாததால்
நறுக்கென்று கிள்ளினார்
நாக ரத்திணம் ஐயா
அழுத முகம் கண்டு
'ஆரடிச்சா?' என்று கேட்ட
அம்மாவுக்கு
கிள்ளியதைச் சொன்னாலும்
கிள்ளுப்பட்ட
இடம் காட்ட முடியாமல்
வெட்கி
மலங்க மலங்க விழித்ததுவும்
மறக்கவொண்ணா நினைவு
மேல்நிலை வகுப்பு அறிவியல்:
வாத்தியார் வரும்வரை
வகுப்புத் தோழர்களோடு
கலை கட்டியது கச்சேரி
மீசை யில்லா பசங்களுடன்
மேசை யடி மேளத்தின்
ஓசை நயம் கிடுகிடுக்க
வாத்தியார் வந்ததை
பார்த்தது யாரய்யா!
படம் வரைந்து காட்டாமல்
பாடம் நடத்தாத
தர்மலிங்க ஐயா
எங்கள்
கபாலத்தில் வாசித்த
மேலைநாட்டு மேள ஒலி
இன்னும் கேட்கிறது
ஐயா... இன்றும் கேட்கிறது ஐயா!
'வா...இப்டி' என்றழைத்து
நசுக்கிக் கிள்ளும்
நாடிமுத்து சார் நினைவும்
பிரம்படியை மிஞ்சும் வலி
அலியார் சார்
முறைத்துப்
பார்க்கும் பார்வை வலி!
எல்லா ஆசான்களும்
எமக்கு
சொல்லித் தந்ததோ...
மேம்படுத்த!
கிள்ளியதும் குட்டியதும்
பண்படுத்த!
நன்றி ஆசான்களே!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
மற்றும் அதிரைநிருபர் பங்களிப்பாளர்கள்

ஆசான்கள்
சிலரைப் பற்றிய
சிறு குறிப்பு இது
இந்தச்
சிறு மதியினனைச்
சீர் திருத்தி
பெரு மதியினனாக்கிய
ஆசான்களுக்கு
வெகு மதியாக
இந்த நினைவலைகள்
'ரெண்டாம்' நம்பர் பள்ளியில்
'அஞ்சாம்ப்பு':
துள்ளித் திரிந்த
பள்ளிப் பிராயத்தில் - காதுமடல்
கிள்ளித் தண்டிக்கும்
கணக்கு வாத்தி வகுப்பில்
இரும்புக்கை மாயாவியின்
பாம்புத்தீவு சித்திரக்கதை...
பாடத்தைக் கவனிக்காமல்
மறைத்து வைத்துப் படித்ததை
வாத்தி
முறைத்துப் பார்த்து பிடித்துவிட
தீயிட்டுக் கொளுத்தி அதை
வெளியே வீசியதும்
காது நுணி வலியை
கையால் தடவிக் கொண்டே
கண்கலங்கி நின்றதுவும்
கலையாத நினைவுகள்
கா மு மே பள்ளி
ஏழாம் வகுப்பு கணக்கு:
வீட்டுப் பாடம்
கேட்டு வாங்கி பார்த்து
ஏட்டில் இல்லாததால்
நறுக்கென்று கிள்ளினார்
நாக ரத்திணம் ஐயா
அழுத முகம் கண்டு
'ஆரடிச்சா?' என்று கேட்ட
அம்மாவுக்கு
கிள்ளியதைச் சொன்னாலும்
கிள்ளுப்பட்ட
இடம் காட்ட முடியாமல்
வெட்கி
மலங்க மலங்க விழித்ததுவும்
மறக்கவொண்ணா நினைவு
மேல்நிலை வகுப்பு அறிவியல்:
வாத்தியார் வரும்வரை
வகுப்புத் தோழர்களோடு
கலை கட்டியது கச்சேரி
மீசை யில்லா பசங்களுடன்
மேசை யடி மேளத்தின்
ஓசை நயம் கிடுகிடுக்க
வாத்தியார் வந்ததை
பார்த்தது யாரய்யா!
படம் வரைந்து காட்டாமல்
பாடம் நடத்தாத
தர்மலிங்க ஐயா
எங்கள்
கபாலத்தில் வாசித்த
மேலைநாட்டு மேள ஒலி
இன்னும் கேட்கிறது
ஐயா... இன்றும் கேட்கிறது ஐயா!
'வா...இப்டி' என்றழைத்து
நசுக்கிக் கிள்ளும்
நாடிமுத்து சார் நினைவும்
பிரம்படியை மிஞ்சும் வலி
அலியார் சார்
முறைத்துப்
பார்க்கும் பார்வை வலி!
எல்லா ஆசான்களும்
எமக்கு
சொல்லித் தந்ததோ...
மேம்படுத்த!
கிள்ளியதும் குட்டியதும்
பண்படுத்த!
நன்றி ஆசான்களே!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
மற்றும் அதிரைநிருபர் பங்களிப்பாளர்கள்