அதிரையின் பாரம்பரியமிக்க கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் MKN டிரஸ்டிற்கான புதிய உறுப்பினர்கள் நியமன நீதிமன்ற ஆணை, தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தினால் நேற்று (21-செப்-2012) அளிக்கப்படது. இதில் பின் வரும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
வம்சாவளி குடும்ப உறுப்பினர்கள்
1. A. அப்துஸ் ஸுக்கூர்
2. K.S. சரபுதீன்
3. K. அப்துல் காதர்
4. K. அப்துர் ரசூல்
5. M. முஹம்மது இபுறாஹீம்
6. A.J. அப்துல் ஜலீல்
வம்சாவளியல்லாத அதிரைக் காரர்கள்
7. M.J. ஜஸி முஹம்மது
8. M.A. அப்துல் ஜப்பார்
9. H. முஹம்மது இப்றாஹீம்
மூன்று ஆண்டுக்கு ஒருமுறை MKN டிரஸ்டிற்கான உறுப்பினர்களின் தேர்வு தஞ்சை நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நியமனம் செய்யப்பட்டு வருவதை யாவரும் அறிந்ததே.
மேற்குறிப்பிட்டுள்ள 9 உறுப்பினர்கள் இன்று (22-செப்-2012) காலை, இடைக்கால தலைவர் மீ.மு. அப்துல் ஜப்பார் அவர்கள் தலைமையில் கூடி பின்வரும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தார்கள்.
A.அப்துஸ் ஸுக்கூர் அவர்கள் - தலைவர்
K.S. சரபுதீன் அவர்கள் - செயலாளர்
நமதூரின் பாரம்பரியமிக்க மிகவும் பிரபலமான கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் சுழற்சி முறையில் மூன்று வருடத்திற்கு ஒரு முறை மாற்றப்பட்டு வருவதால் நிர்வாகத் திறனும், அதன் தொடர் முன்னேற்ற பணிகளும் பாதிப்படையப் போவது கல்வி நிறுவனங்களுக்கும் ஊர் மக்களும் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
புதிய நிர்வாகம் இறையச்சத்துடன் பாரம்பரியமிக்க கல்வி நிறுவனத்தின் மீது அக்கறையுடனும் கவலையுடன் ஊர் மக்களின் நலன் கருதி, காதர் முகைதீன் கல்லூரி, காதர் முஹைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளின் தரத்தினை மென்மேலும் உயர்த்த அயராது பாடுபடவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
அதிரைநிருபர் குழு