Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label இலட்சினை. Show all posts
Showing posts with label இலட்சினை. Show all posts

இக்கணம் முதல்... ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | November 06, 2011 | , , ,

இக்கணம் முதல்
இத் தளத்தில்
இளைமை மிளிர
இலங்கு மிந்த
இலச்சினை

இலக்கியத் தாகம்
இதயத்தில் தேக்கி
இலக்கு நோக்கிய
இலட்சியப் பயணத்திலும்
இருக்கும் இந்த
இலச்சினை

இன்னும் வர இருக்கும்
இலட்சோப லட்சம்
இடுகைகளையும்
இதுவரை இயற்றிய
இனிமையானவர்களோடும்
இணைந்துத் தொடரும்
இப் பயணம்

இவ்வுலகமெங்கும்
இன்று ஈத் அல்அதா
இனிப்பான உணவோடு
இல்லங்ககளிலெல்லாம்
கொண்டாட்டம்

மழை கழுவிய
அதிரையைப் போல
மனம் தெளிந்த
சகோதரர்களைப்போல

புத்தாடைபோல
புதியகாலையைப் போல
புதுமணத் தம்பதியரின்
புன்னகைகளைப் போல

புத்துணர்வு பெற்ற
வலைப்பூக்கள் போல
புலரும் புது நாளைப்போல
புது இலச்சினை அறிமுகம்

பளபள வென கட்டிடங்களையோ
பாரினிற் சிறந்த ஆசிரியர்களையோ
கொண்டதல்ல இப்பள்ளிக்கூடம்
படைக்கும் ஆசையில்
வகுப்புகள் நிறைத்த
மாணவர்களை
மட்டும் கொண்டது.

கருத்து ஓடையே
சிலிர்த்து ஓடுமிங்கு
எழுத்து நடையில்
வெளுத்து வாங்கும்

கட்டுரை எழுதுவர்
காட்டு காட்டெனக் காட்ட
கவிதை எழுதுவர்
கருக்களும் உயிர்பெற

அருவா கத்தியாலோ
அவதூறு கத்தினாலோ
அடக்க வியலா திந்த
ஆத்மார்த்தப் பயணத்தை

அதிரை நிருபர்
அமைதியின் ஆளுமை
அதிரையின் அழகு !

- சபீர்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு