மனித சமுதாயத்தில் எழுத்தாளர்.., பேச்சாளரின் பங்கு ஓர் ஆய்வு..!
மனித வளத்திற்கு அறிவுசார் உலகின் பங்கு மிக அபரிதமானது..! பண்டைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை அறிவுகளைப் புகட்டும் கருவியாக எழுத்தும் பேச்சும் எவ்வாறு அமையப் பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். கற்கால மனித சமுதாயத்தின் தேவைகளின் தேடல் அன்றாட அத்தியாவிசயத்தை சார்ந்ததாக இருந்தது. அன்றாடம் உண்ண உறங்க தேவை சார்ந்தவைகளாக இருந்தது. கொடிய மிருகங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் முழு கவனமும் இருந்தது. அந்தத் தேடலின் விளைவு மனித இனம் வாழ தகுந்த நகர அமைப்பு, ஆற்றங்கரை ஓர குடியிருப்பாக அமைந்தது.
கொடிய மிருகங்களிடமிருந்து மீண்ட மனிதன் மனிதனுக்குள் உள்ள கொடிய குணத்திடமிருந்து மீள அறிவு புகட்ட அவசியமேற்பட்டது. அறிவு தேடலின் முக்கிய கண்டு பிடிப்புதான் மொழி தனது தேவையைக் கூற, மற்றும் எச்சரிக்க ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்தியை எடுத்துச் செல்ல மொழி இன்றி அமையாததாய் ஆனது. களத்தின் அவசியம் மொழி என்றானதும் அந்த மொழிக்கு எழுத்து வடிவம் அவசியம் ஆனது. அந்த தேடலில் வெற்றி கண்ட மனித இனம் எழுத்தின் மூலம் பதிவுகளை மனித சமுதாயம் வருங்கால சந்ததிகளுக்கு விட்டுச்சென்றது. இந்த பதிவு துறையின் பங்கு அறிவு சார் உலகிற்கு இன்றி அமையாததாய் அமைந்து விட்டது என்பது உண்மையானது.
எழுத்துலகமும் – எழுத்தாளரும்.
இன்றைய கால கட்டத்தில் முதல் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை அறிவு ஜீவிகளின் படைப்புகள் பாடம். எழுத்தாளர்களின் படைப்பு அங்கீரிக்க படுவதென்பது அவ்வளவு சுலபமல்ல. எழுதுபவரை விட எழுத்தை நுகரும் வாசகர்கள் நுன்னிய அறிவுடைவர்களாக இருக்கிறார்கள். எழுத்தை படிக்கும் ஒவ்வொருவரும் எழுத்தாளரின் எண்ணங்களை தன் இதய ஏட்டில் பதிந்து கொள்கிறார்கள் என்றால் மிகையாகாது. எனவே, எழுத்தாளர்கள் தனது படைப்பை வெளியிடு முன் பலமுறை சரி பார்ப்பான் அப்படி படைக்க பட்ட ஆக்கம் மக்களிடம் சென்றடைய பல காலமாகும். பண்பட்ட எழுத்தாளர்கள் மட்டுமே எழுத்துலகில் பிரகாசிக்க முடியும். அதிகம் படிக்கும் வழக்கம் உடையவர்கள் அமைதியாக இருப்பார்கள். எழுத்துலகின் முன்னேற்றம் நவீன யுக்திகளால் இக்காலத்தில் சற்று மந்த நிலை அடைத்துள்ளது.
மேலை நாடுகளில் உள்ள பெரும் அரசியல் தலைவர்கள் தனது ஒய்வு காலங்களில் தனது அனுபவங்களை ஒரு நூலாக வெளியிட்டு பெரும்காசு பார்த்து விடுகிறார்கள் அந்த புத்தகம் உலகில் பெரிய அரசியல் தாkகத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடும்எழுத்துக்களால் ஏற்படும் மாற்றம் மிக பெரியதாக இருந்தாலும் அதிரை நிருபரின் தாரக மந்திரம் அமைதியின் ஆளுமை எழுத்துலகதிற்கு பொருந்தும்.
பேச்சின் வீரியம்
ஆதி மனிதனின் கண்டு பிடிப்பான மொழி எப்போது உருவானதோ அன்றே பேச்சின் வீரியம் உலகில் கொடி கட்டி பறக்க ஆரம்பித்து விட்டது. கல் தோன்றி மண் தோன்றா காலம் தொட்டே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ் என்பார்கள். அது போன்று மொழி தோன்றிய காலம் தொட்டே மக்களை ஈர்க்கும் தன்மை பேச்சுகலைக்கு உண்டு.
பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ராணுவத்தினர் போருக்கு செல்லும் முன் அவர்களுக்கிடையே படை தளபதிகளால் போருக்கான பேருரை வழங்க படும் அந்த பேச்சு ஒவ்வொரு வீரனின் உள்ளத்திலும் தன் உயிரை விட நாட்டின் வெற்றியே பெரிது என்கிற உணர்ச்சி வெள்ளத்தை அள்ளி தரும் ஒன்றாக அது அமையும் ..அதே போன்று ..நம் நாட்டில் இருக்கும் பல் வேறு அரசியல் கட்சிகளாகட்டும் அதில் உள்ள பல்லாயிர கணக்கான தொண்டர்கள் தனது தலைவனுக்காக கட்சிக்காக தொண்டர்கள் உயிரையும் கொடுக்க துணிவார்கள்..! அந்த உணர்ச்சியைத் தூண்டிவிடும் ஒரே கருவி பேச்சு கலைதான்.
- எழுத்தாளனின் எழுத்து பிரசவிப்பது மனித பிரசவம் போன்றது. அவ்வளவு இலகுவாக முழுமை பெற்று வெளிவராது. ஆனால், பேச்சாளரின் பேச்சு கோழி முட்டையிடுவது போன்றது வில்லிலிருந்து அம்பு வெளியாவது போன்று மிக இலகுவானதும், இலகுவாக வெளிவரகூடியது.
- எழுத்தாளர் என்ன எழுதினாலும் அதை நுகரும் வாசகர் ..படித்தவர்கள். மிகவும் கவனமாக பகுத்தறிந்து நல்ல விசயமாக இருந்தால் ஏற்பார்கள், இல்லையெனில் இவர் எதோ எழுதுகிறார் ஏற்க தக்கதல்ல என்று நிராகரித்து விடுவார்கள். எழுத்தாளன் என்னதான் உணர்ச்சி பூர்வமான எழுத்துக்களை எழுதினாலும்.
- அவ்வளவாக போய் சேராது தனது உணர்வுகளை ஓரளவே காண்பிக்க இயலும். ஆனால், பேச்சாளர் பேசுகின்ற பேச்சில் ஏற்ற இரக்கத்தால். தனது உணர்வுகளைப் பிரதிபலிக்க வைக்க முடியும் துயர நிகழ்வுகளை நாவு தழுதழுத்த நிலையில் கூறி சபையையே அழ வைத்து விடுவார். துயர சூழல் கூடி இருந்த சபையையேத் தொற்றிக்கொள்ளும்.
- எழுத்தாளர்கள் மீது வாசகர்கள் வைக்கும் பாசத்திற்கும், பேச்சாளர்கள் மீது நேசர்கள் வைக்கும் நேசத்திற்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள பாகுபாடு..!
எழுத்துலகின் நுகர்வு நூறு சதவிகிதம் படிப்பறிவு உள்ளவர்களின் உலகம். ஆனால், பேச்சை கேட்பதற்கு படிப்பறிவு அவசியம் இல்லை பாமரர்களின் பாசறை என்றே கூறலாம்.
எழுத்தாளர் எங்கோ ஒரு மூலையில், ஆனால் பேச்சாளரோ சபையின் நாயகன், எழுத்து மனதை பண்படுத்தும், பேச்சு மனதை சலனப் படுத்தும், நூலினை படிக்க அமைதியான சூழல் தேவை, பேருறைக்கு இரைச்சலே துணை.
என் அன்புள்ளம் கொண்ட வாசகர்களே..! நீங்களும் பேச்சுக்கும் எழுத்திற்கும் உள்ள நிறை குறைகளை பின்னூட்டம் மூலம் எழுத வேண்டுகிறேன். எழுத்துலகம் என்பதால் உணர்ச்சி பிளம்பிற்கு இங்கு அனுமதி இல்லை
நன்றி ..!
அதிரை சித்தீக்


