Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label டிசம்பர். Show all posts
Showing posts with label டிசம்பர். Show all posts

டிசம்பர் 6 [ நிர்வாண பாரதம்! ] 32

அதிரைநிருபர் பதிப்பகம் | December 05, 2014 | , , , , , ,


நினைக்கும் போதெல்லாம்
பதைக்கிறது நெஞ்சம்
நிலைத்த மஸ்ஜிதை
குலைத்த நாளெண்ணி

இந்திய இறையாண்மை
இயலாமல் வீழ்ந்த நாள்
மதச் சார்பற்ற அரசின்
மானம் போன நாள்

இந்திய உள்ளம் துடிதுடிக்க
இறை யில்லம் இடிக்கப்பட
இரட்டை வேட அரசாங்கத்தை
இனங்கண்டு கொண்ட நாள்

கடப்பாறை ஏந்தி கரசேவகன்கள்
தடுப்பாரே இன்றி தகர்த்தனன்
காக்கிச்சட்டை காவல்துறையோ
காவிச்சட்டையின் ஏவல்துறையானது

மகாத்மாவை சுட்டதற்குப் பிறகு
மஸ்ஜிதை உடைத்துத்தான்
மறுபடியும் தலைகுணிந்தது பாரதம்
உலகே சிரித்தது; உமிழ்ந்தது

மதச்சார்பற்ற போர்வை
கிழித்தெரியப்பட
இந்துத் தீவிரவாதிகள்
இந்தியாவை நிர்வாணப் படுத்தினர்

நாட்டுக்காக தாம் வாழும்
வீட்டையே தியாகம் செய்யும்
வரலாறு சொல்லும் இஸ்லாமியர்
இறையில்லம் இழந்தும் பொறுத்தனர்

எப்படியெல்லாம் இழுத்துப் பிடித்தும்
எல்லா ஓட்டை வழியாகவும்
நழுவிச் சென்றது நாட்டின்
நீதியும் நியாயமும்

இருப்பதை இல்லையென்றும்
இல்லாததை உண்மையென்றும்
திரித்துச் சொல்லும் இந்திய வரலாறு
டிஸம்பர் 6ஐ - இந்துக்களின்
ஜனவரி 26 என புனிதப்படுத்தும்

நடப்பது நன்றாகவே நடக்கிறது
என்னும் கொள்கைவாதிகளுக்கு
நரக நெருப்பைப் பற்றித்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

நீதித்துறையை
நிதித்துரைகளும் சாதிக்கறைகளும்
கட்டுப்படுத்தி வைக்கட்டும்
தேவைக ளற்றவனின்
தீர்ப்புநாள் வரும்வரை!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

என்னாம்மா பெரளியெ(புரளி) கெழப்புறாங்கைய்யா..! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | December 11, 2012 | , , , , ,


என்னுடம் பணிபுரியும் கடலூரைச்சார்ந்த நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னது "பாய், ஊருக்கு ஃபோன் பண்ணுனேன். அங்கு ஒரே பீதியாகவும், அச்சத்துடனும் எல்லோரும் இருந்து வருவதாக சொல்றாங்க".

"ஏன் எதுக்காக?" என்றேன். 

அதற்கவர் "வர்ர டிசம்பர் 23ம் தேதி உலகம் அழியப்போவுதாம், (என்றோ மாயமா மறைந்து போன எவனோ ஒரு மாயன் என்பவன் தயாரித்த காலண்டர் 23ம் தேதி டிசம்பர், 2012 வுடன் முடிவடைகிறதாம். அதுக்கு நாம என்னா செய்றது? அவருக்கு மேக்கொண்டு தயாரிக்க இயலாமல் சுகக்குறைவா போய் இருக்கலாம்? அந்நேரம்  காசு, பணம் முடையாக இருந்திருக்கலாம்? அதை விட வேறு நல்ல ஒரு இடத்தில் கை நிறைய சம்பளம் கிடைத்து அந்தப்பணியை பாதியிலேயே விட்டிருக்கலாம்? யாருக்குத்தெரியும்?)

எல்லோரும் பரவலா பேசிக்கிடுறாங்களாம் ஊரில்" அதைக்கேட்டு மெய்சிலிர்ப்பதாக சொல்லி கொஞ்சம் சிலிர்த்துக்கொண்டார்.

அதற்கு நான் உடனே பதில் சொன்னேன். பருவ நிலை மாற்றங்களாலும், பனிப்பாறை உருகுவதனாலும், உலகம் வெப்பமயமாதலாலும், சுனாமி, பூகம்பம், எரிமலை வெடித்தல் போன்ற எதிர்பாராத சம்பவங்களாலும், ஓசோன் படலம் ஓட்டையானதாலோ இன்னும் வேறு பிற காரணங்களால் உலகின் சில பகுதிகள் ஆங்காங்கே அழியலாம். ஆனால் இறைவனின் திருமறையிலும், கிருஸ்தவர்களின் பைபிளிலும் பிரகடணப்படுத்தப்பட்ட ஈஸா (அலை.)/ஜீஸஸ் வருகை நிச்சயம் இருக்கிறது. பிறகு ஒற்றைக்கண்ணன் தஜ்ஜாலின் வருகை இருக்கிறது. குள்ளர்களின் வருகை இருக்கிறது. இறைவனால் அவனுடைய திருவேதத்தில் என்றோ சொல்லப்பட்ட இவர்களின் வருகைகளெல்லாம் இல்லாமல் உலகம் நிச்சயம் ஒருபோதும் அழியப்போவதில்லை. அதனால் நீங்கள் தேவையில்லாத  பதஸ்ட்டத்திற்கு(பேனிக்) ஆளாக வேண்டாம் என்றேன்.

"90 சதவித இந்தியர்கள் முட்டாள்கள்" என சமீபத்தில் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவரும், நீதிபதியுமான திரு. மார்கண்டேய கட்ஜூ வெளிப்படையாக பேசியது இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது.

வருடம் 1857க்குப்பிறகு நம் நாட்டில் மக்கள் கண்டதையும் நம்பி நாட்டையே (மத)கலவர பூமியாக மாற்றியுள்ளனர் என்றும் அதனால் வானுயர வளர்ச்சியை இந்நேரம் எட்டிப்பிடித்திருக்க வேண்டிய நாம் 150 வருடங்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் அவர் தைரியமாக ஒரு உயர் பதவியில் இருந்து கொண்டு போட்டுடைத்தது நம்மை எல்லாம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு