Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label புறம். Show all posts
Showing posts with label புறம். Show all posts

அகமும் - புறமும் ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | March 27, 2016 | , ,

சங்க காலத்தில் அகத்தையும் (அன்பு, ஈகை) புறத்தையும் (வீரம்) பெருமைப் படுத்துவதற்காக அகநானூறு, புறநானூறு என்ற இலக்கியங்கள் உருவாகின. இலக்கியத்துக்கும் பெருமை சேர்ந்தது. ஆனால் இன்று அகமும் புறமும் நம்மைச் சிறுமைப் படுத்திக் கொண்டிருக்கின்றன.

அகம் :

அகம் என்ற சொல்லுக்கு உள், மனம் என்று பொருள். அகத்திற்கு கர்வம் என்ற பொருளும் உண்டு. தன்னைப் பற்றிய செய்திகளைப் பெருமையாக நினைத்துக் கொண்டு, மற்றவர்களை இழிவாக நினைப்பது. மனத்தினுள்ளே இதைத் தேக்கி வைத்திருப்பதால் அகம் என்று பெயர் வந்திருக்கலாம்.

இது பாவம் என்பதால் அகம்பாவம் பெரும்பாலும் பதவியில் இருப்பவர்களிடம் தான் அகம்பாவம் அதிகம் காணப்படுகிறது. இன்று அரசியலே அகம்பாவத்தில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு அகபாவம் தோற்றால் இன்னொரு அகம்பாவம் தலை தூக்குகிறது. இரண்டு அகம்பாவங்களுக் கிடையில் மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.

பணக்காரர்கள், படித்தவர்கள் அகம்பாவத்தின் சொந்தக்காரகள். பணக்காரரின் அகம்பாவம் அவரை நம்பி இருக்கும் ஏழைகளை மாய்க்கிறது; படித்தவர்களின் அகம்பாவம் அவர்களையே சாய்க்கிறது. அகம்பாவம் என்பது மனித இனத்துக்கே சொந்தமானது. ஒரு பிச்சைக்காரருக்கு காசைக் குறைத்துக் கொடுத்தால், “நீயே வெச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு நடக்கிறாரே! இது அவரது அகம்பாவம்.

தன் தவறை உணர்ந்தவர் கூட அதைத் திருத்திக் கொள்ளா திருப்பதற்கு அவருடைய அகம்பாவமே காரணம். தனது செயலே சரி என்ற நினைப்பு!

புறம்:

புறம் என்றால் வெளி என்று பொருள். ஒருவரைப் பற்றி அவர் அறியாத வகையில் மற்றவரிடம் வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருப்பதற்கு புறம் என்று பெயர்.

புறம் பேசுவது ஒரு பொழுது போக்காகவே ஆகிவிட்டது. இரண்டு பேர் பேசிக் கொண்டிருக்கும் போது மூன்றாவதாக ஒருவர் அரூபமாக வந்து விடுகிறார். அவரது கறை போகும்வரை அவர் நன்றாக அலசப்படுகிரார். பாவம்! யாருக்கு?

புறம் பேசுவதை எல்லா மதங்களும், நீதி நூல்களும் புறக்கணிக்கின்றன. இருந்தும் மனிதன் அவற்றைப் புறந்தள்ளி விடுகிறான்.

புறம் பேசப்படுவதற்கு முக்கிய காரணம் மனிதனுக்கு நேரம் இருப்பது. அதற்குக் காரணம், உழைப் பில்லாமல் இருப்பது. உழைப்பு என்பது உடல் உழைப்பு மட்டுமல்ல, தன் வசமுள்ள செயல்களை, அது படிப்பதாக இருந்தாலும் சரி, இறைவனைத் தொழுவதாகாக இருந்தாகும் சரி, அடுத்த பணிக்குப் போகும் வரை, அதைச் செய்து கொண்டு இருக்கவேண்டும்.

ஜப்பான் போன்ற நாடுகளில் புறம் பேசுவதைப் பார்க்க முடியுமா? பேச முடியாமல் உழைப்பு தடுக்கிறது. எந்த நாட்டில் அனத்துத் துறைகளிலும் உழைப்பு இருக்கிறதோ அங்கே புறம் பேசுதல் இருக்காது. புறம் பேசத் துடிப்பவர்கள் தங்களைப் பற்றி தங்கள் மனத்துக்குச் சொல்லிக் கொள்ளட்டும்! தன்னை உணரும் மனப் பக்குவம் ஏற்படும். அப்புறம் புறம் புற முதுகிட்டு ஓடும்.

அகமும் புறமும் நகையும் சதையுமல்ல; இரண்டும் வெவ்வேறானவை. கேடு விளைவிக்கக் கூடிவை. இணக்மான சமுதாயத்தில் பிணக்கை ஏற்படுத்தக் கூடிவை. இதை உணராமல் மனிதன் அகம் கொண்டு நன்நெறிகளைப் புறந்தள்ளி விடுகிறான்!

வாவன்னா
நன்றி : (உமர்)தென்றல்.

புறம்பேசுதல் நல்ல பழக்கமாகுமா.!? 7

அதிரைநிருபர் பதிப்பகம் | November 15, 2015 | , , , ,

அதாவது அடுத்தவன் குறைகாண்பவன் அரை மனிதன் தன்குறை உணர்பவன் முழுமனிதன் என்று ஒரு பழமொழி சொல்வார்கள் இப்பழமொழி பெரும்பாலும் புறம்பேசும் மனிதர்களுக்கே மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஏதாவது ஒரு ரீதியில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பார்க்கும்போது தன்னிடத்தில் பல குறைகளையும் வைத்துக்கொண்டு அடுத்தவர்களின் குறைகளை அடுத்தவர்களின் பிரச்சனைகளை, அடுத்தவர்களின் போக்குகளை ஆராய்ந்து அதைப்பற்றி புறம்பேசுவது என்பது எப்படி நல்ல பழக்கமாக இருக்கமுடியும்.?

பொதுவாக உலக நடைமுறைப் பேச்சில் சில செய்திகளுக்கு உதாரணம் காட்டி பேசும்போது அடுத்தவர்களின் நடவடிக்கையை சுட்டிக் காட்டியபடியும், வேறு ஏதாவது சம்பவங்களை காரணம் காட்டி இணைத்துப் பேசுவதும் இயல்பான ஒன்றாக இருக்கிறது. இதுவும் ஒருவகையில் புறம்பேசுவது போன்றுதான்.ஆனால் இப்படிப் பேசி பழக்கப்பட்டு போய்விட்டதால் இதை அதிகபட்சம் நாம் புறம்பேசுவதாக எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் நாம் அன்றாட வாழ்க்கையில் ஒருசிலரை பார்த்திருப்போம். சதா அடுத்தவர்களுடைய செயல்பாடு, குறைபாடு, நடவடிக்கையை ,வாழ்க்கை விசயங்களை கண்காணிப்பதும், அதனைப்பற்றி பின்னால் இருந்து விமரிசிப்பதும் அதுமட்டுமல்லாமல் சில நடக்காத சம்பவங்களையும் சேர்த்து அல்லது மிகைப்படுத்தி பேசுவதும் அவர்களை குறித்து சமுதாயத்தார் மத்தியில் அவப்பெயர் ஏற்ப்படும்படி கலங்கப்படுத்தியும் உரையாடிக் கொண்டிருப்பார்கள். 

இது முற்றிலும் தவறான போக்கு மட்டுமல்ல. தவிர்த்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது.ஒருமனிதனைப் பற்றி அவர் இல்லாதபோது புறம்பேசுவது தனது சொந்த சகோதரனின் மாமிசத்தை சுவைப்பதுபோன்று என்று இஸ்லாம் மார்க்கம் சொல்கிறது. அப்படியானால் புறம்பேசுவது எந்த அளவுக்கு மோசமான செயல் என்பதினை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இன்னும் சொல்லப்போனால் தன்னை புறம்பேசுவதை அறிந்த ஒருவன் மனவேதனை அடைந்தால் அதனால் பாதிக்கப்பட்டவர் மன்னிக்காதவரை இறைவன் ஒருபோதும் மன்னிப்பதில்லை. 

இது அப்படி இருக்க சாதாரணமாக நாம் யோசித்துப் பார்த்தோமேயானால் புறம்பேசுதல் என்பது ஒரு மனிதாபிமானம் இல்லாத மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட செயலாகவே இருக்கிறது.இப்படி புறம்பேசும்போது ஒரு நல்ல மனிதர் மனிதாபிமானம் உள்ள மனிதர் காதில் கேட்பாராயின் காரி உமிழ்வார்கள். புறம்பேசுபவர் என்று தெரிந்தால் நல்லமனிதர் இனிமையானவர் என்ற நற்ப் பெயர் மறைந்து சமுதாயத்தார்களுக்கு மத்தியில் வெறுப்பிற்க்குரியவர்களாகி விடுவார்கள்.

இதிலிருந்து அடுத்தவர்களை குறைகூறிக் கொண்டும் புறம்பேசிக் கொண்டிருப்பது பலவீனமான செயலாகும் என்பது நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த உலகம் இந்த வாழ்க்கை எதுவும் நிலையானதல்ல. மரித்து மண்ணோடுமண்ணாக மக்கப்போகும் இவ்வுடலை மண்ணும் மனம்பொருந்தித் தின்னவேண்டும். இப்படி புறம்பேசி அடுத்தவர்கள் வயிற்றெரிச்சலுக்கும் மனவேதனைக்கும் ஆளானோமேயானால் இந்த உடம்பை எப்படி மண் திங்கும்.? இதையெல்லாம் சற்று யோசித்தால் மறந்தும்கூட அடுத்தவர்களை யாரும் புறம்பேசமாட்டார்கள்.

முகத்துக்கு முன்னாள் ஒருமனிதனின் தவறுகள், குறைபாடுகளை சுட்டிக்காண்பிப்பதையும்  முகத்துக்குப் பின்னால் அம்மனிதனின் நிறைவுகளை புகழ்ந்து பேசுபவர்தான் உண்மையான நல்லலெண்ணம் கொண்ட சிறந்த மனிதர்களாவர். 

புறம்பேசுவதால் அடுத்தவர்கள் வயிற்றெரிச்சலுக்கும் சாபத்திற்கும் ஆளாகுவதுடன் மேலும் பகைமையை வளர்த்துக் கொண்டு பலவகையிலும் நமக்கு கேடுவிளைவிக்க கூடியதாகவே இருக்கிறது. ஆகவே எந்தப் புண்ணியமும் இல்லாத இத்தகைய புறம்பேசும் போக்கை கைவிட்டு எதுவாயினும் சம்மந்தப்பட்டவர்களிடம் நேருக்கு நேர் கேட்டறிந்து உண்மை நிலையை அறிந்துகொள்வதை பழக்கப்படுத்திக் கொண்டு சமூகத்தார் மத்தியில் புறம்பேசாத நல்லமனிதர் என்கிற களங்கமில்லாத நற்பெயரை நிலைநாட்டிக் கொள்வோமாக.!!!

அதிரை.மெய்சா

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 81 2

அதிரைநிருபர் பதிப்பகம் | August 08, 2014 | , , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

புறம் பேசுதல்:

''என்னை (மிஹ்ராஜ் பயணத்திற்கு) உயர்த்தப்பட்ட போது நான் ஒரு கூட்டத்தார் அருகில் சென்றேன். அவர்களுக்குப் பித்தளை நகங்கள் இருந்தது. தங்களின் முகங்களையும் தங்களின் நெஞ்சுகளையும் அவர்கள் பிறாண்டிக் கொள்கிறார்கள். ''ஜிப்ரிலே இவர்கள் யார்?'' என்று கேட்டேன். ''இவர்கள் மனிதர்களின் இறைச்சியை சாப்பிட்டார்கள் (புறம் பேசியவர்கள்). அவர்களின் கண்ணியத்தை இவர்கள் குலைத்தார்கள்'' என்று ஜிப்ரீல் கூறினார் என, நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (அபூதாவூது)  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1526 )

''ஒவ்வொரு முஸ்லிமின் ரத்தம், அவரின் கண்ணியம், அவரின் பொருள் அனைத்தும் (சீர்குலைக்க) இன்னொரு முஸ்லிமின் மீது தடையாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1527)

கோள் சொல்வது:

''கோள் சொல்பவன், சொர்க்கத்தில் நுழையமாட்டான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹூதைஃபா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்)  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1536 )

''நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகள் அருகே நடந்து சென்றார்கள். அப்போது ''இவ்விருவரும் வேதனை செய்யப்படுகின்றனர். மிகப் பெரும்பாவம் காரணமாக இருவரும் வேதனை செய்யப்படவில்லை. எனினும் அது பாவம்தான். அவ்விருவரில் ஒருவர், கோள் சொல்பவராக இருந்தார், மற்றொருவர் சிறுநீரைக் கழித்தபின் சுத்தம் செய்யாதவராக இருந்தார்.'' (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1537)

''என் தோழர்களில் ஒருவர், மற்றொருவர் பற்றி எதையும் என்னிடம் கூற வேண்டாம். நிச்சயமாக நான் அமைதியான இதயத்துடன் உங்களிடம் வரவே விரும்புகிறேன்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1539)

பொய் பேசுவது கூடாது !

''நான்கு செயல், ஒருவனிடம் இருந்தால், அவன் தெளிவான நயவஞ்சகன் ஆவான். இவற்றில் ஒரு குணம் ஒருவனிடம் இருந்தால், அதை அவன் விடும் வரை நயவஞ்சகத்தின் குணம் அவனிடம் இருக்கும். அவை 1) அவன் நம்பினால், மோசம் செய்வான். 2) பேசினால் பொய் பேசுவான் 3) ஒப்பந்தம் செய்தால், மீறுவான்  4) வழக்குரைத்தால் வரம்பு மீறுவான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1543 )

''தான் பார்த்திராத கனவைக் கண்டதாகக் கூறுபவர், இரண்டு மணிக் கோதுமைகளுக்கிடையே முடிச்சுப் போடும்படி நிர்பந்திக்கப்படுவார். அவரால் (இதற்கு) இயலாது. ஒரு கூட்டத்தாரின் பேச்சை, அவரை அவர்கள் வெறுக்கும் நிலையில் ஒருவர் கேட்க முயற்சித்தால், மறுமை நாளில் அவரின் காதுகளில் ஈயத்தை ஊற்றப்படும். உருவத்தை ஒருவர் வரைந்தால், அவர் வேதனை செய்யப்படுவார். மேலும் அதில் உயிரை ஊதிட வற்புறுத்தப்படுவார். (ஆனால்) அவரால் அது முடியாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)  அவர்கள் (புகாரி)  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1544 )

''தன் இரு கண்களும் பார்த்திராத ஒன்றைப் பார்த்ததாகக் கூறுவதே, மிகப்பெரும் அவதூறாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1545)

ஒரு பேச்சைக் கேட்டு, அதை உறுதிபடுத்துதல்:

அல்லாஹ் கூறுகிறான் :
உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! (அல்குர்ஆன் : 17 :36)

அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் (வானவர்) இல்லாமல் இருப்பதில்லை. (அல்குர்ஆன் : 50:18)

''தான் கேட்ட அனைத்தையும் (நம்பி பிறரிடம்) கூறுவது, ஒருவன் பொய்யன் என்பதற்கு போதுமானதாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1547)

''பொய் என்று தெரிந்தே ஒரு செய்தியை (நான் கூறியதாக) என்னைப் பற்றி ஒருவன் கூறினால், அவன் பொய்யர்களில் ஒருவனாவான்'' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸமுரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1548)

''பெரிய பாவங்கள் பற்றி உங்களுக்கு நான் கூறட்டுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! சரி'' என்று நாங்கள் கூறினோம்.  ''அல்லாஹ்வுக்கு  இணைவைத்தல், பெற்றோரை நோவினை செய்தல்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, ''அறிந்து கொள்ளுங்கள். பொய் சாட்சி கூறுவதும் தான்'' என்று கூறினார்கள். ''அவர்கள் மவுனமாகி விட மாட்டார்களா?'' என்று நாங்கள் கூறும் அளவுக்கு திரும்ப திரும்ப அதைக் கூறிக் கொண்டே இருந்தார்கள். (அறிவிப்பவர்: அபூபக்கர் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1550)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு
வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

அகமும் - புறமும் ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | June 14, 2011 | , ,

சங்க காலத்தில் அகத்தையும் (அன்பு, ஈகை) புறத்தையும் (வீரம்) பெருமைப் படுத்துவதற்காக அகநானூறு, புறநானூறு என்ற இலக்கியங்கள் உருவாகின. இலக்கியத்துக்கும் பெருமை சேர்ந்தது. ஆனால் இன்று அகமும் புறமும் நம்மைச் சிறுமைப் படுத்திக் கொண்டிருக்கின்றன.

அகம் :

அகம் என்ற சொல்லுக்கு உள், மனம் என்று பொருள். அகத்திற்கு கர்வம் என்ற பொருளும் உண்டு. தன்னைப் பற்றிய செய்திகளைப் பெருமையாக நினைத்துக் கொண்டு, மற்றவர்களை இழிவாக நினைப்பது. மனத்தினுள்ளே இதைத் தேக்கி வைத்திருப்பதால் அகம் என்று பெயர் வந்திருக்கலாம்.

இது பாவம் என்பதால் அகம்பாவம் பெரும்பாலும் பதவியில் இருப்பவர்களிடம் தான் அகம்பாவம் அதிகம் காணப்படுகிறது. இன்று அரசியலே அகம்பாவத்தில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு அகபாவம் தோற்றால் இன்னொரு அகம்பாவம் தலை தூக்குகிறது. இரண்டு அகம்பாவங்களுக் கிடையில் மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.

பணக்காரர்கள், படித்தவர்கள் அகம்பாவத்தின் சொந்தக்காரகள். பணக்காரரின் அகம்பாவம் அவரை நம்பி இருக்கும் ஏழைகளை மாய்க்கிறது; படித்தவர்களின் அகம்பாவம் அவர்களையே சாய்க்கிறது. அகம்பாவம் என்பது மனித இனத்துக்கே சொந்தமானது. ஒரு பிச்சைக்காரருக்கு காசைக் குறைத்துக் கொடுத்தால், “நீயே வெச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு நடக்கிறாரே! இது அவரது அகம்பாவம்.

தன் தவறை உணர்ந்தவர் கூட அதைத் திருத்திக் கொள்ளா திருப்பதற்கு அவருடைய அகம்பாவமே காரணம். தனது செயலே சரி என்ற நினைப்பு!

புறம்:

புறம் என்றால் வெளி என்று பொருள். ஒருவரைப் பற்றி அவர் அறியாத வகையில் மற்றவரிடம் வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருப்பதற்கு புறம் என்று பெயர்.

புறம் பேசுவது ஒரு பொழுது போக்காகவே ஆகிவிட்டது. இரண்டு பேர் பேசிக் கொண்டிருக்கும் போது மூன்றாவதாக ஒருவர் அரூபமாக வந்து விடுகிறார். அவரது கறை போகும்வரை அவர் நன்றாக அலசப்படுகிரார். பாவம்! யாருக்கு?

புறம் பேசுவதை எல்லா மதங்களும், நீதி நூல்களும் புறக்கணிக்கின்றன. இருந்தும் மனிதன் அவற்றைப் புறந்தள்ளி விடுகிறான்.

புறம் பேசப்படுவதற்கு முக்கிய காரணம் மனிதனுக்கு நேரம் இருப்பது. அதற்குக் காரணம், உழைப் பில்லாமல் இருப்பது. உழைப்பு என்பது உடல் உழைப்பு மட்டுமல்ல, தன் வசமுள்ள செயல்களை, அது படிப்பதாக இருந்தாலும் சரி, இறைவனைத் தொழுவதாகாக இருந்தாகும் சரி, அடுத்த பணிக்குப் போகும் வரை, அதைச் செய்து கொண்டு இருக்கவேண்டும்.

ஜப்பான் போன்ற நாடுகளில் புறம் பேசுவதைப் பார்க்க முடியுமா? பேச முடியாமல் உழைப்பு தடுக்கிறது. எந்த நாட்டில் அனத்துத் துறைகளிலும் உழைப்பு இருக்கிறதோ அங்கே புறம் பேசுதல் இருக்காது. புறம் பேசத் துடிப்பவர்கள் தங்களைப் பற்றி தங்கள் மனத்துக்குச் சொல்லிக் கொள்ளட்டும்! தன்னை உணரும் மனப் பக்குவம் ஏற்படும். அப்புறம் புறம் புற முதுகிட்டு ஓடும்.

அகமும் புறமும் நகையும் சதையுமல்ல; இரண்டும் வெவ்வேறானவை. கேடு விளைவிக்கக் கூடிவை. இணக்மான சமுதாயத்தில் பிணக்கை ஏற்படுத்தக் கூடிவை. இதை உணராமல் மனிதன் அகம் கொண்டு நன்நெறிகளைப் புறந்தள்ளி விடுகிறான்!

-வாவன்னா
-நன்றி : (உமர்)தென்றல்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு