
சிறிது காலம் சென்றது.வேலை பார்க்கும் பார்ட்னரில் ஒருவர் பொய்யான தகவல்களை புனைந்து அந்தக் கடையை எடுத்துக் கொள்கிறார். ஏகபோக உரிமை அவருக்கு என்றாகியது.
இன்னொரு சம்பவம் ! இரண்டு பேர்களுடன் ஆரம்பித்த ஒரு நிறுவனம் செழித்து வளர்ந்து - உச்சம் தொடுகிறது. இரண்டு பங்குதாரர்களும் தங்கள் பங்குகளை மகிழ்ச்சியாக பிரித்துக் கொள்கிறார்கள் .காலம் சுழன்றது ! வியாபாரம் நொடிக்கும் நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. பார்ட்னரில் ஒருவர் கழன்று கொள்கிறார். அடுத்த பங்கு பங்குதாரர் முழு நஷ்டத்தையும் சுமந்து கடன்காரராகிறார்,
உதாரணத்துக்கு இரண்டே இரண்டு சம்பவங்களை கோடிட்டு காட்டியிருக்கிறோம். இது இன்று சர்வசாதாரனமாகப் போய்விட்டது.
அந்த இரண்டும் வேறு எங்கோ நடைபெற்றதல்ல, நம் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற சம்பவங்கள்தான் அவைகள். இப்படி வியாபாரம், கொடுக்கல் - வாங்களில் நேர்மை இல்லாது இருந்து,கொண்டதே கோலம், கண்டதே காட்சி என்று நடக்கும் சம்பவங்கள் எத்தனை, எத்தனை ? பிற மத மக்களின் வாழ்வை செம்மைப் படுத்தும் படியான சட்டதிட்ட்ங்கள் அவர்கள் நம்பும் புத்தகங்களில் இல்லை. ஆனால், முஸ்லிம்களில் பலரே இப்படி பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுவது ஏன் ? உலகை உய்விக்க வந்த திருக்குர்ஆன் மற்றும் நபிவாழ்வியல் நம்மிடையே இருக்க, அதைப் பின்பற்றி நடவாமல் இப்படி தான் தோணித் தனமாய் நடப்பது ஏன் ?
நம் மனைவியர் கழுத்திலும், கைகளிலும் தங்க நகை அணிந்து வலம் வர வேண்டும், நம் பிள்ளைகள் ராஜ போக வாழ்வு வாழ வேண்டும், நம் பெற்றோர் மனங்குளிர வேண்டும் நம் ஆடம்பர வாழ்வை எண்ணி என்ற எண்ணத்தின் வெளிப்பாடா இவைகள் ?
மறுமை வாழ்வு என்று ஒன்று உண்டு, அதில் எந்தத் தாயும் தந்தையும் மனைவியும், மக்களும் உதவ முடியாதே அந்த நாளை நினைத்து பயந்து நடந்தால், இப்படி ஏமாற்றுவோமா ? எல்லாவர்றையும் அல்லாஹ் நிலைநிறுத்திப் பார்ப்பானே ? என்ற ஐயம் இருந்தால் இப்படியெல்லாம் செய்ய துணிவு வருமா ?
ஆக ! இறுதியில் நமக்கு, நாம் சம்பாதித்த எதை கொண்டு போகப் போகிறோம். குர்ஆன்-ஹதீஸ் எச்சரிக்கைகளைப் பாருங்கள் !
இன்ஷா அல்லாஹ் தொடரும்
இப்னு அப்துல் ரஜாக்