அதிரைநிருபரில் வெளிவந்து, அதிரை கல்வி மாநாட்டில் வாசிக்கப்பட்ட "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற உத்வேக கவிதையை தனது இயல்பான இனிய குரலில் கவிபாடியிருக்கும் அன்புச் சகோதரர் ஜாஃபருல்லாஹ் அவர்கள் இதனை கேட்போரை குரலால் கட்டிப் போட்டு மனதினில் கனிவை ஏற்படுத்தியிருக்கிறார்.
நீண்ட நாட்களாக இதனை தொடராக வெளியிட காத்திருந்த தருனத்தில் ஆங்காங்கே அதிரை வலைப்பூக்களில் இவ்வாறான முயற்சிகளோடு கவிதை காணொளிகள் பதிக்கப்பட்டதால் சற்றே அமைதியுடன் நிதானிக்க வேண்டியிருந்தது, இனி இன்ஷா அல்லாஹ் இவ்வாறான முயற்சிகளும் தொடரும்...
அதிரைநிருபர் பதிப்பகம்

