நம்முடைய அதிரை நிருபர் வலைப்பூ போட்டிக்காக உருவாக்கப்பட்ட அதிரை செய்தி ஊடகம் என்ற குற்றச்சாட்டு எம்முடைய நட்பு வட்டாரத்திலிருந்து வந்துள்ளது.
அதிரை நிருபர் வலைப்பூ அதிரையில் உள்ள மற்ற வலைப்பூக்களைப் போன்று ஒரு சாதாரண வலைப்பூ தான். சில அதிரை வலைப்பூக்கள் பரப்பரப்பு நிறைந்த செய்திகளையும், வேறு செய்தி ஊடங்களின் செய்திகளையும், கல்வி செய்திகளையும், மருத்துவ செய்திகளையும், பல்சுவை செய்திகளை, சமையல் செய்திகளை, மார்க்க செய்திகளையும், இயக்க செய்திகளையும், மற்ற செய்திகளையும் தனித்தனியாக வெளியிட்டு வருகிறது அதனுடன் சேர்ந்து தான் நம்முடைய அதிரை நிருபரும் அதிரை நல்ல செய்திகளுடன் மற்ற நல்ல செய்திகளை வெளியிட்டு வருகிறோம்.
எம்முடைய முதல் நோக்கம், இணையத்தின் மூலம் பிரிவினை ஏற்படுத்தாமல் ஒற்றுமையை நம் அதிரைவாசிகளிடம் ஏற்படுத்துவது மட்டும் தான் நோக்கம். வேறு எந்த புரட்சி வசனங்களும், எந்த புலம்பல்களும் நம்மிடம் இல்லை.
அதிரை நிருபரில் வரும் செய்திகளும், கட்டுரைகளும் எந்த தனி நபரையோ, எந்த சமுதாயத்தையோ தாக்காமல் இருக்கும் என்ற நம்பிக்கை எம்மிடம் பலமாக உள்ளது. இன்ஷா அல்லாஹ்.
அதிரை நிருபரின் தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இனியும் அதிகரிக்கப்படும், உங்களின் மேலான கருத்துக்களை எமக்கு தெரிவிக்கலாம், இதோ ஈ-மடல் முகவரி tjdn77@gmail.com , அதிரை நல்ல செய்திகள், கட்டுரைகள் எம்முடைய முகவரிக்கு அனுப்பிவையுங்கள், இவைகள் நல்ல செய்தியாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக பதியப்படும். பின்னூட்ட கருத்துக்கள் யாருடைய மனதை பாதிக்கும் பட்சத்தில் நிச்சயமாக நீக்கப்படும் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டால் உடனே நீக்கப்படும், எவ்விதத்திலும் சப்பை கட்டுகள் கட்டி சமாளிக்கப்படமாட்டாது என்பதையும் இங்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.
அதிரைக்காக நடுநிலையான அனைத்து தெருவாசிகளை உள்ளடக்கிய ஒரு பொது இணையத்தளம் நிச்சயம் தேவை, இதற்காக ஒழிந்துக்கொண்டு இணையத்தளம் வைப்பதில் எந்த நண்மையும் இல்லை, குழப்பங்களும் பிரிவினைகளும் தான் வரும், இதற்காக நேரத்தை வீணடித்து பதில் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். சமூக அக்கறையுடன் எழுதுபவர்கள் ஒழிந்துக் கொண்டு எழுத வேண்டி அவசியமில்லை என்பது என்னுடைய நம்பிக்கை, சொல்லும் செய்தியின் நம்பகத்தன்மையும் பலப்படும்.
அதிரை பெயருடன் இணைந்து வரும் அத்துனை வலைப்பூக்களும் (சகோதரர்களும்) சமூக அக்கரையுடன் செய்திகள் வெளியிடுகிறார்கள் என்று நம்புகிறவன் நான். இங்கு அதிரை நிருபர் யாருடன் போட்டி போடவில்லை, போட்டி போட வேண்டிய அவசியமும் இல்லை, அதிரை நிருபரில் அதிரையின் நல்ல செய்திகளுடன் மற்ற நல்ல செய்திகள் மட்டும் வெளிவரும்.
விரைவில் அதிரை நிருபர் வலைப்பூக்கான விதிமுறைகள் வெளியிடப்படும்.
அதிரைக்கு என்று ஒரு நல்ல பொது இணையத்தளத்தை யாராவது உருவாக்கினால், நிச்சயம் அதிரை நிருபர் மூடப்படும். நீண்ட காலமாக இருக்கும் வலைப்பூக்களில் ஏதாவது ஒன்று பொதுவான விதி முறைகளுடன், நல்ல மனப்பக்குவபட்ட பதிவாளர்களை தேர்வு செய்து, சர்ச்சைகள் இல்லாத தினசரி செய்திகளை வெளியிட்டு நடத்துபவர்கள் இன்னார் தான் என்று வெளியிட்டால் எல்லா கருத்து வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு ஒற்றுமையை நிலை நிறுத்த என்னைப்போன்றவர்கள் நிச்சயம் தயாராகி உள்ளோம் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும். யாராவது முன்வர மாட்டார்களா?
ஏன் நல்ல செய்திகளால் நம்முடைய ஊர்மக்களின் இதயங்களை இந்த இணையத்தின் மூலம் இணைக்க முடியாதா என்ன?
முடியும் என்பது என்னுடை பலமான நம்பிக்கை. அல்லாஹ் நாடினால் முடியும்.
அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழி படுத்துவானாக.
அன்புடன்
தாஜுதீன்
ஜூலை 08.07.2010


