Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அசத்தல் மொழிகள். Show all posts
Showing posts with label அசத்தல் மொழிகள். Show all posts

அசத்தும் அதிரை மொழிகள் ஆராய்ச்சி தொடர்கிறது ! 67

அதிரைநிருபர் பதிப்பகம் | May 26, 2013 | , , , ,



அதிரை மொழிக்கே ஆங்கிலத்தில் அகராதி போட்டவர்கள் (MSMn) நம்மவர்கள், ஆங்கிலமே எழுதுபவர்களோடும் அகராதி(யில்) பேசுபவர்களும் நாம்மவர்கள்தான்.

எந்த ஒரு மனிதனுக்கும் தனது மண்ணின் மொழி மீது ஒரு மயக்கம் உண்டு. காதல் உண்டு. பசுமரத்து ஆணி பதிவது போல் மனத்தின் அடித்தளத்தில் பதிவதே மண்ணின் மொழி. உலகம் சுற்றி வந்தவர்கலானாலும் தனது சொந்த ஊருக்கு வந்து தன் மக்களோடு தன் இயல் மொழியில் பேசும் மொழியில் கிடைக்கும் ஒரு அன்னோனியம் சுகம் இதை  உணர்ந்தவர்களால் மட்டுமே உணர்த்தபபடக்கூடியது.

சமுதாய அமைப்பில் சபை நாகரீகம் என்ற பெயரில் இயல்பாகப் பழகிய மொழியின் வார்த்தைகளை மறைத்துப் பேசும் அனைத்து மொழிகளுமே தாய் மொழியில் பேசினாலும் அவை அந்நிய மொழியே. "உம்மாடி ஏல்லே" என்கிற வார்த்தையில் உள்ள ஹோம்லி உணர்வு அம்மா முடியவில்லை என்று சொல்வதில் கிடையாது. 

"அல்லாட காவ" என்று சொல்வதில் உள்ள இயல்பு அல்லாஹ் மாக் என்று சொல்வதில் உணர முடியாது.

பூக்கமலையை எடுத்து சோப்பிவிடுவேன் என்று கோபமாக சொல்லும் வார்த்தை கூட   உன்னை தொலைத்துவிடுவேன்  என்கிற கோபத்தில் உணர முடியாது. கோபமா இருந்தாலும் பாசமா இருந்தாலும் அதை நாம்மூர் பாசையில் வெளிக்கொட்டுவது என்பது ஒரு அலாதிதான் 

காரணம் மண்ணின் மனம், மண் வாசனை, என்பது கரிசல் காட்டிலே கூட ஒருவனை கடுதாசி போடவைத்ததாகும் . கடித்துப் பேசும் நெல்லைத்      தமிழையும் கனிவுடன் பேசும் கொங்கு தேச தமிழையும் வய வய கொய கொய என்று பேசும் சென்னைத்தமிழையும் அந்தந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் தங்களின் மனதில் மாளிகை கட்டி வைத்திருக்கிறார்கள்.

அதுபோல் நம்ம ஊர் பாசையில் பேச்சு வழக்கில் இருந்து நினைவுக்கு வந்தவைகள் இங்கே பட்டியலாக விரிகிறது.

ஒரு 'அவயாசமயத்துக்கு' இவன் ஒதவமட்டேன்கிறான் 

இவனோட இம்முசு தாங்க முடியலமா 

மல பேஞ்சி 'தாவாரம்' வழியா தண்ணி ஊத்துது 

கலரி சோறு திண்டது ஒத்துகிடாமே ஒரே கொட பெறட்டா இருக்கு 

'சப்பாத்தை' மாட்டிக்கிட்டு பள்ளிகொடம் போடா 

இது எங்க வாப்புச்சா காலத்திலே இருந்து  எங்க ஊட்டுலே உள்ள 'சப்பரம்பெஞ்ச் கட்டுலு' 

என்ன சொன்னாலும் இவன் 'ஈட்டிக்கி மூட்டி' யா தான் செய்வான் 

பினாங்குலய்ருந்து 'பொட்டிபிசு மேத்துண்டு'  வரும் பாருங்க கமகன்னு மனத்துக்கிட்டு 

அப்போவுல்லாம் வெட்டிக்கொலத்து தண்ணி பளிங்கி மாதிரி கெடக்கும் இப்போவெல்லாம் எல்ல கொலத்து தண்ணியும் 'பிளாய்யா' கெடக்கு 

ரெங்கு பொட்டிலே பத்தாய் கைலி வச்சது வச்ச மாதிரியோ இருக்கு  

அப்போவெல்லாம் ஊட்டுக்கு ஊடு பத்தாயமும் ரெங்கு பெட்டியும் இருக்கும் 

இவன்டே அசந்து மசந்து கடன் வாங்கிறது  கூடாது கொதவலை சுருக்கு வஞ்சி திருப்பி கேப்பன் 

என்னதான் திட்டுனாலும் பேசுனாலும் சூடுசொரணை கெடையாது 

குதுராளி நெறையா நெல்லு கொட்டி வைக்க ஆசை 

ஒரு எடத்துலே இருக்காமே மக்க சக்கரத்துலே வர்றான் 

என்னா பசப்பு பசப்புறான் 

'ஆறு' வருசத்துக்கு அப்புறம் இப்பதாம்மா மசக்கையா இருக்கா 

வால்வாட்டி [                                               ]

ஆம்புலப்புள்ள குப்பற படுக்க கூடாது 

பொம்புலப்புல்ல மல்லாக்க படுக்க கூடாது 

என்ன கை மருந்து கொடுத்தாலும் ஒத்துக்க மாட்டேங்குது 

இவன் வூட்டுக்குள்ள நொழஞ்சா  வூட்டை அலங்கமலங்கா அடிப்பான்மா 

வூட்டுக்குல நொலைரப்பவே மொவரக்கட்டை சரி இல்லாம இருந்துச்சி 

ரூமுகுள்ள வச்ச சொவ்க்காரப்பொட்டி எங்க போனிசுன்னு தெரியலே 

பாசை படிக்கிறான்  [                                     ]

ஒன்னோட சங்கனாத்தமே வாணாம் 

பொரிக்கன்சட்டி  [                                     ]

காமாடு தலமாடு தெரியாம தூங்குறான் 

நேத்தையானம்னதும் அப்பம் தான் நினைவுக்கு வரும் 

பாலுஞ்சோறு காமாடு

ஒலமூடிய காணோம் 

காலுக்கு மோஜா போடாமே சப்பாத்து போடதே 

எங்கே போனாலும் பொறத்தாலே வந்துகிட்டே இருப்பா 

பிருமனை [                                              ]

முட்டாசு [                                               ]

குட்டிப் பாளையம் ஒரு எடத்துலே இருக்க மாட்டேங்குது பாளையம் 

என்ன வேலை சொன்னாலும் 'மாய்ச்ச' இல்லாமே பாப்பான் 

சாமத்துலே [                               ]

உப்புத் தக்கரு [                            ]

சீவன் செத்தவன் [                          ]

பின் குறிப்பு : கடைசியா அண்ணன் NAS அவர்கள் எங்களை அடிக்கடி திட்டும் அந்த ஸ்லோகனுடன் இன்னும் சில வார்த்தைகள் கிடைக்கும் போது தொகுத்துக் கொண்டு வருகின்றேன் 

ஹேர்பின் குறிப்பு : [              ] இப்படியிட்ட இடங்களில் என்ன பொருள் போடலாம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் அல்லது கருத்துப் பெட்டியில் போட்டுவிடுங்கள் !

Sஹமீது

ஆத்திச்சூடி - அறிவுரையாகவும் இருக்கனும் ! 27

அதிரைநிருபர் பதிப்பகம் | July 07, 2011 | , ,



ஆப்பிளை ரசித்தேன்!(ருசிக்கவில்லை-ரசாயனம்)


ஆத்திச்சூடி-என்றால் அறிவுரையாகவும் இருக்கணும்,அதிரை வட்டாரத் தமிழாகவும் இருக்கணும் என்று மனதில் கவ்விக் கொண்டு  என்னால் இயன்றதை தொடர்ந்தேன்.


கிலமெங்கும் ஒலிக்கணும் அதிரைப்புகழ்! மரிக்காவாலும்-ஆஸ்திரேளியாவானாலும் ரிஜிக் மின் அல்லாஹ்!

ண்டவனே எல்லாம் ஏன்டவன்(இயன்றவன்)!

ல்லாத ஊருக்கு வழி தேடாதே !

க்கிரத்தை உட்டுட்டு பறக்கிரத்த ஆசைப்படாதே!

ள்ளதைக் கொண்டு ஒப்பேத்து!

ரார் மெச்ச நடந்து கொள்!

ங்க வேலைசெஞ்சா என்ன..எமிகிரேஷன் கிடைக்குமா?

லும்போதே சம்பாதிக்கணும் !

சு வச்சாவது முதலாளியிடம் நல்ல பேரு வாங்கிக்கோ.....

த்தும சத்துமையா ஈந்துக்கணும் !

வர்டைம் பார்த்தாவது ஊட்டுக்கு காசுவரனும்.!

வை பாட்டி இப்பயிருந்தால் இதைத்தான் சொல்லிக்குடுப்போம்!

தன்றி வேரன்றியோம் சகோதரா!


வாழ்க வளமுடன்.

ராஃபியா


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு