உமர்கயாம் என்றால் ‘’ரூபியாத்’’ நினைவு வரும். ருபியாத் என்றால் உமர்கயாம் வந்து நிற்பார்.
[11] உமர்கயாம் 11ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த பாரசீக கவிஞர், காதல் ரசமும் வாழ்கை தத்துவங்களும் நிறம்பிய ‘’ரூபியாத்’’ என்னும் இவருடைய கவிதைகள் உலகப் புகழ் பெற்றவை. இவர் கணக்கு, வானசாஸ்திரம் இரண்டிலும் கைதேர்ந்த மேதை. அல்ஜிப்ரா பற்றி இவர் எழுதிய ஆய்வு கட்டுரை அறிஞர்களின் பாராட்டை பெற்றது. இஸ்லாமிய காலண்டரை மாற்றி அமைத்தவரும் இவரே.
உமர்கயாமின் ரூபியாட் கவிதைகளை Edward Fitzgerald என்பவர் 1859 ஆண்டில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து மேலை நாடுகளில் அறிமுகம் செய்தார். அதுவரை உமர்கயாம் "யாரோ! எவரோ!" என்று பாராமுகமாகயிருந்த மேலை நாட்டினர் இப்போது பாரசீகத்தின் திசை நோக்கி திரும்பி பார்த்தார்கள். உமர்கயாம்க விதை வீச்சு அவர்களை திகைக்க வைத்தது. மேலைநாட்டு கவிதை பாணி "மதம்"மாறி உமர்காயம் கவிதை காட்டிய வழியில் பயணம் தொடங்கியது. உமர்காயம் கைப்பட எழுதிய ரூபியாட் கையெழுத்துப் பிரதி ஆக்ஸ்போர்ட் Bodelean நூலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இதை இன்றும் அங்கே காணலாம்.
[12] 1469-1527 ஆண்டில் இத்தாலியில் பிறந்த மாக்கியவெல்லி [Machiavelli] பிரின்ஸ் [prince] என்ற புத்தகம் எழுதினார். அரசன் நாட்டை ஆட்சி செய்வதற்கு வேண்டிய தகுதிகள் தந்திரங்கள் எவை எவை என்று இந்த புத்தகத்தில் விளக்கிச் சொன்னார் இந்த புத்தகம் மாக்கிய வெல்லிக்கு பெரும் புகழ் தேடி தந்தது.
கி.மு 2400 ஆண்டுகளுக்கு முன் மாக்கிய வெல்லிக்கு பாட்டனுக்கு பாட்டனாக இந்தியாவில் ஒருவன் பிறந்து விட்டான். அவர்தான் "'அர்த்தசாஸ்திரா" என்ற ஆட்சியியல் நூலை சமஸ்கிருதத்தில் எழுதிய கௌடில்யா என்ற பெயர் கொண்ட ஆசாமி. இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு. ‘சாணக்கியன்’ என்பது தான் அந்தப் பெயர். பெயரைக் கேட்டாலே பயமா இருக்கா?
[13] உலகில் அச்சிடப்பட்ட முதல் புத்தகம் கிரேக்க மொழி பைபிள். ஹுட்டன்பெர்க் என்பவர் [1454-1455] ஜெர்மனியில் கண்டுபிடித்த அச்சு இயந்திரத்தில் அச்சிட்ட முதல் புத்தகமும் இதுவே.
[14] உலகில் அதிகம் விற்பனையாகும்(!!) புத்தகங்களில் பைபிள் முதல் இடம் பெறுகிறது.
[15] உலகில் அதிக மொழிகளில் வெளிவரும் புத்தகமமும் பைபிளே.
[16] உலகில் மொத்த புத்தக உற்பத்தியில் ஐரோப்பிய நாடுகள் 65% புத்தகங்களை தயாரிக்கிறது
[17] ஆர்தார் கோனண்டோய்ல் [Sir-Arthur conandoyle] என்பவர் 125ஆண்டுகளுக்கு முன் எழுதிய துப்பறியும் கதைகளில் ’ஷெர்லோக் ஹோல்ம்ஸ் [Sherlock holms]’ என்ற பெயரில் ஒரு கற்பனை கதாநாயகனை உருவாக்கினார். அவர் எழுதிய கதைகளில் இந்த கதாநாயகன் சாகசம் புரிந்து பலகோடி வாசகர்கள் நெஞ்சங்களில் அழியா இடம் பெற்றார். இந்த புத்தகங்கள் வெளியாகி ஒரு நூற்றாண்டுக்கு மேலாகியும் கதாநாயகன் ‘செர்லோக் ஹோல்ம்ஸ்’ பல லட்சம் வாசகர் நெஞ்சங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!
[18] 1934-ஆம் ஆண்டில்நியூயார்க் நகரில் கிரிஸ்டோபர் மார்லே என்பவர் "செர்லாக் ஹோல்ம்ஸ் வாசகர் மன்றம்“ஆரம்பித்தார். அந்த பிரதிபலிப்பே நம் செந்தமிழ் நாட்டில் நடிகர் மன்றங்களாக பரிணாம வளர்ச்சி கண்டது போலும்.
[19] 1951-ஆம் ஆண்டில் பிரிட்டனில் அருங்காட்சியகம் ஒன்று நிறுவப்பட்டது. செர்லாக் ஹோல்ம்ஸ் கதைகளில் உபயோகித்த பொருள்கள் Smoking pipe உள்பட எல்லாமே காட்சிக்கு வைக்க பட்டிருந்தது. இது பொதுமக்கள் பார்வைக்கு இன்றும் திறந்து இருக்கிறது. நீங்களும் ஒரு தடவை போய் பார்த்துட்டு வாங்களேன்!? அது மட்டுமல்ல, ஐரோப்பா முழுதும் ஹோல்ம்ஸ்சுக்கு சிலைகளும் எழுப்பி இருக்கிறார்களாம் ‘கோயில் கட்டி கும்பாவிஷேகம்’ செய்தார்களா? என்ற தகவல் கிடைக்கவில்லை.யோசனைசெஞ்சுபாத்தா நம் ஊர் ரசிகர் மன்றங்கள் தேவலாம் போலே. ‘ரசிகர் மன்ற’ சாதனையில் ‘தமிழனை மிஞ்சிய ஆள் எவனும் இல்லை’! என்று மார் தட்டி நின்றோம். இதற்கும் வெள்ளைக்காரன் நமக்கு முந்திகிட்டு நமக்கே ஆப்பு வச்சுட்டானே? இது நமக்கு ஒரு பெரிய அடிதான். இதில்கூட நாம் முந்திக் கொள்ள மேலை நாட்டார் நமக்கு சான்ஸ் கொடுக்கவில்லை.
ஆர்தர் கொநோண்டோயல் Sherlock Holmes துப்பறியும் கதை புத்தகங்கள் வெளிவந்து 125 ஆண்டுகள் ஆகிவிட்டது, பல தலைமுறை கடந்தும்கூட அது சாகவரம் பெற்று இன்றும் எல்லோராலும் விரும்பி படிக்கும் புத்தகமாக இருப்பதில் என்னதான் மாயம் உள்ளதோ? அவர் ’’மை’’யில் கலந்து எழுதிய மந்திரம்தான் என்ன? அதிக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகங்களில் இவருடையதும் அடங்கும்.
அடுத்து..
# ஐரோப்பா கண்டத்திலும் அமெரிக்காவிலும். ஆண்டுக்கு 10 கோடி புத்தகங்களுக்கு மேல் விற்பனையாகிறது.
# அமெரிக்கன் காங்கிரஸ் நூலகத்தில் மூனுகோடியே முப்பது லட்சம் புத்தகங்களுக்கு மேல் இருக்கிறது.
# சர் ஆர்தர் கோனோண்டோயல் எழுதிய துப்பறியம் கதைகள் ஆண்டுக்கு 50 இலட்சம் பிரதிகள் விற்பனையாகிறது.!
# கற்பனைக் கதைகள் தொடர்ந்து படிக்கும் ஒருவருக்கு 70வயதுக்கு மேல் ஆன போதிலும் மனநோய் பாதிப்பு [Dementation] உண்டாவது மிக குறைவே என்று ஆய்வுகள் சொல்கிறது.
# புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர்கள் கதைகளில் வரும் கதாநாயகன் போல தங்களையும் கருதுகிறார்கள்.
# கற்பனைக் கதைகள் படிப்பவர்கள் மற்றவர்களின் கண்களை பார்த்தே அவர்கள் நினைப்பதை சொல்ல முடியுமாம்!? (தம்பி மன்சூர் நோட் தெ பாயிண்ட்)
# 1977லிருந்து 2007வரை வெளியான Harry potter என்ற ஐந்து தொகுதிகள் கொண்ட மாயஜால சிறுவர் கதை புத்தகங்கள் மொத்தம் நாற்பத்து ஐந்து கோடி பிரதிகள் விற்றது. கதை எழுதிய G.K.Rowling என்ற பெண் உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்துக்கு வந்தார்.
எழுத்தாளர் ஒருவர் உலக பணக்காரர் வரிசையில் இடம் பிடித்தது மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்பட வேண்டிய செய்தி அல்லவா? இது ஒரு உலக சாதனையாகக் கூட இருக்கலாம்.
# தமஸ்மூர் [Thamas Moor] என்பவர் 1516-ம் ஆண்டில் Utopia என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதினார். Utopia என்ற கிரேக்க மொழி சொல்லுக்கு கற்பனை தேசம் அல்லது கனவு தேசம் என்று பொருள். அகடம், பகடம் களவு கொலை காமம் திருட்டு லஞ்சம் ஊழல் இல்லாத ஒரு தூய்மையான நாட்டை கற்பனை செய்து தன் புத்தகத்தில் எழுதினார். அது நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. காணாததைக் கண்டால் பாராட்டாமல் இருப்பார்களா?
# 1564ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் Avon என்னும் நகரில் பிறந்த சேக்ஸ்பியர் பல ஆங்கில நாடகங்கள் எழுதி ஆங்கில இலக்கிய வரலாற்றில் அழியா இடமும் உலகப் புகழும் பெற்றார்.
# ஆங்கில நாடக சிற்ப்பிகளில் ஷேக்ஸ்பியரை அடுத்து மற்றொரு நாடக எழுத்தாளரான மில்டன் [Milton 1663] Paradise lost- இழந்த சுவர்க்கம் Paradise Regained மீண்ட சுவர்க்கம் ஆகிய இரண்டு புகழ்பெற்ற நாடகங்கள் எழுதி ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இடத்தை பிடித்தார்.
# 1710-ம் ஆண்டில் Daniel Defoe டேனியல் டேபோ என்பவர் எழுதிய Robinson Crusoe ‘ராபின்சன் குருசோ’ என்ற புகழ்பெற்ற புத்தகம் வெளியானது!
# 1726-ம் ஆண்டில் Jonathan Swift என்பவர் GULLIVER’S TRAVELL’S என்ற சிறுவர்களுக்கான கற்பனைக் கதை எழுதினார். இந்த கதையை பெரியவர்களும் படித்தால் இலைமறை காய் போல ஒரு தத்துவம் மறைந்து நிற்பதை உணரலாம். [‘’தத்துவம்’’ என்றதும் இந்துக்களின் வேதம் என்று நினைத்து வீடாதீர்கள் ’தத்’ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு ’’உண்மை அல்லது Existence-உளதாய் இருத்தல்" என்பதே. [சிலர் மொழிகளை ‘மத கண்’கொண்டு பார்க்கிறார்கள்] எல்லா மொழிகளையும் அல்லாஹ்வே படைத்தான்.
# 1728-டில் Chambers Encyclopedia. ஆங்கில மொழியில் வெளியான கலைக் களஞ்சியம்.
# 1750ஆம் ஆண்டு Leencyclopedia என்ற கலைக் களஞ்சியம் பிரெஞ்சு மொழியில் வெளியானது. பிரெஞ்சு மொழியில் வெளியான முதல் கலைக் களஞ்சியம் இதுவே.
# 1789ஆம் ஆண்டு கலை க்களஞ்சியங்களில் பல அறிஞர்கள் எழுதிய எழுச்சியூட்டும் எழுத்துக்களும் பிரெஞ்சு புரட்சி உருவாக ஒரு காரணமாக அமைந்தது. அரசு தடை செய்ததும்புரட்சியாளர்கள் பொங்கி எழுந்தார்கள். ஆட்சியாளர்கள் தங்கள் உயிரைகாக்க கால் பிடரியில் அடிபட’ ஓட்டமோ ஓட்டம்’ என்று ஓடினார்கள்
# 1755ஆம் ஆண்டு சாமுவேல் ஜோன்சன் [Samuel Johnson] தொகுத்த ஆங்கில மொழி அகராதி Dictionary of the English language வெளியானது. இதுவே ஆங்கில மொழியில் தொகுக்கப்பட்ட முதல் அகராதி.
# 1805ஆம் ஆண்டு [Hans Christian Andersen] ஹான்ஸ் கிறிஸ்டியன் அண்டர்சென் என்பவர் டென்மார்க் ஓடேன்சே நகரில் பிறந்தார். இவருடைய தந்தை செருப்பு தைத்து வயிறு வளர்க்கும் ஏழைத் தொழிலாளி. அண்டர்சென் சிறுவர்களுக்கான [fairy Tales] வானதேவதை கதைகள் எழுதினார். இவருடைய கதைகள் நூற்று நாற்பதுக்கும் அதிகமானஉலகமொழிகளில் வெளியானது. சிறார்கதைகள் எழுதிப் புகழ்பெற்ற அண்டர்சென் 1875-ம் ஆண்டு தனது 75–ம் வயதில் காலமானார். அவரின் மரண ஊர்வலத்தில் கோபென் ஹேகன் நகர மக்களும் சிறுவர் சிறுமியர்களும் ஒன்று திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்கள்.
# 1812ஆம் ஆண்டில் Grimm’s Fairy Tales என்னும் சிறு பிள்ளைகளுக்கான கதைகளை Grimm என்னும் பெயருடைய இரு சகோதரர்கள் எழுதினார்கள், மேலை நாட்டில் இந்த கதைகள் படிக்காத பிள்ளைகளே இல்லை என்றே கூறலாம். இக் கதைகளின் வயது இறுநூறு ஆண்டுகள். இன்னும் அவையெல்லாம் "சாகாவரம் பெற்று என்றும் பதினாறாய்" வாழ்கிறது. இன்னும் இந்த கதைகள் சிறுவர் சிறுமீயர்களால் படிக்கபடுகிறது கால வெள்ளம் இந்த கதைகளின் மேல் கைவைக்க நடுங்குகிறாதோ?
சிறுசுகளின் வயதுக்கு ஏற்ப எளிய மொழியில் பக்கத்துக்கு பக்கம் கண் கவரும் வண்ண வண்ண ஓவியங்களுடன் சிறுவர் சிறுமியர்களுக்கான புத்தகம் வெளியிடும் நிறுவனங்கள் அமெரிக்கா ஐரோப்பா கண்டங்களில் அதிகம்.
அடுத்து வரும் அத்தியாயத்தில் அதிரையை தொட்டுச் செல்லலாம்...
தொடரும்...
S.முஹம்மது ஃபாரூக்


