சிட்னியில் வசிக்கும் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவை சார்ந்த சஹோதரர்கள் சஹோதரர் பஷீர் வீட்டில் சஹோதரர் மீராசாஹிப் தலைமையில் கூடி உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.அந்த கூட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்து உயர் கல்வியை தொடர வசதியில்லாத இஸ்லாமிய மாணவ மாணவியர்க்கு உதவித்தொகை வரும் கல்வியாண்டில் இருந்து வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.
உயர் கல்விக்கான உதவித் தொகையினை எவ்வாறு, யாருக்கு, எந்த அடிப்படையில் வழங்குவதென்ற ஆலோசனைகளையும் உங்கள் அனைவரிடமிருந்தும் வரவேற்கிறோம். குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மற்றும் சமுதாய தொண்டில் உள்ளவர்களிடம் இருந்தும் எதிர்பார்க்கிறோம். உங்கள் மேலான ஆலோசனைகளை எங்களுக்கு கீழ்கண்ட ஈமெயிலுக்கு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள். நாங்கள் எடுக்கும் முடிவை ஆலோசனை வழங்கிய அனைவருக்கும் முன்கூட்டியே ஈமெயில் மூலமாக தெரியப்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்.
இந்த அறிவிப்பை வலைத்தளங்களில் பார்க்கும் சகோதரர்கள் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த முயற்சியில் வெளிநாட்டில் வாழும் ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள் பங்கேற்க விரும்பினால் எங்களை இமெயிலில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள்,
சிட்னி, ஆஸ்திரேலியா
Email: sismaadirai@gmail.com
தகவல் : மீராசாஹிப், சிட்னி, ஆஸ்திரேலியா.