[பேரன் வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழைய எதிர்படும் அப்பாவிடம்..]
பேரன் : அஸ்ஸலாமு அலைக்கும் அப்பா..
அப்பா : வ அலைக்குமுஸ்ஸலாம். என்ன இந்நேரத்திலே எங்கிருந்து வர்றிய...
பேரன் : இன்னைக்கு ஸ்கூல் லீவு அதான் முடி வெட்டிகிட்டு குளிக்கப் போறேன்..
அப்பா : எங்க நீங்க குளிக்க... அதான் கெரண்டுமில்ல.. தண்ணியுமில்லண்டு உங்கம்மா கத்திக்கிட்டு கெடக்குது.... இதென்ன தல நடுவுல நாள்பட்ட கபுராட்டம் ஒரு குமியலா....!?
பேரன் : போங்கப்பா.. இதுக்குப் பேர்தான் ஃபோஹாக் கட்டுன்னு பேரு. பெக்காம் கட்டுன்னும் சொல்லுவாங்க.
அப்பா : அப்படியா.. நல்லாத்தான் ஈக்கீது கொளத்துல போய் குளிங்க..
பேரன் : ச்சீ… உவ்வே.. என்னப்பா.. கொளத்துல போய் குளிக்கச் சொல்றிய..நஜீசுல..
அப்பா : அடங்கப்பா... எதெ நஜுசுன்னு சொல்றிய.. புதுசா பீடி குடிச்சாப்ல தூரமா நிக்காம கிட்டவாங்க சொல்றேன்... நாங்கெளெல்லாம் கொளத்துக்கு கெளம்புனம்னா திரும்பி வர மூணு நாலு மணியாவும்.அவ்வளவு நேரம் குளிச்சு வெளயாண்டுட்டு வருவோம், தெரியும்ல...?
பேரன் : மூணு நாலுமணி நேரமா… அப்படின்னா ஒன்னுக்கு, ரெண்டுக்கெல்லாம் கரையேர மாட்டியலா..?
அப்பா : ஹெ...ஹெ....! அதுக்கெல்லாம் கரையேற மாச்சப்பட்டு கொளத்துக்குள்ளெயெ.....!!
பேரன் : ச்சீ ..அதெல்லாம் கொளத்துல்க்குள்ளெவா...!?
அப்பா : ஆமா...செல சமயம் தண்ணியால தள்ளிவுட்டா பின்னே அதை மீன் திண்டுடும்.தெரிஞ்சுக்கிடுங்க..
பேரன் : அப்படின்னா… உங்களுக்கு காச்ச கீச்ச வராதா...?
அப்பா : அதெல்லாம் வராது… அப்படி காச்ச வந்தா வாயில மட்டும்தான் வரும்…!
பேரன் : அதென்ன வாயில மட்டும் காச்சல்...?
அப்பா : ஆமா. எங்கசாரு நோட்டு கேட்கிற அன்னைக்கி மாத்திர மட்டும் பள்ளி கொடம் போக கொஞ்சம் செரவடியாயிரிக்கும் அப்ப எவன் பள்ளிகொடம் பொறவன்ர வூட்டுல போய் லீவுலெட்டெர குடுத்து வுடுவோம். கொளத்துலே குளிக்கிற நாள்ல சீக்கும் கம்மி டாக்டர்மார்வளும் கம்மி. இப்ப நீங்களுவ கொளத்துல குளிக்காமயிருந்துதான் சீக்கும் புதுசு புதுசா பெருவிப் போச்சு. ஆஸ்பத்திரியும் பெருவிடுச்சு. டோக்கன்னு நான் பாத்தது அப்ப வெளியூர் முஸாபர்களுக்கு சாப்பாட்டுக்காக பள்ளியாசல்ல குடுப்பாக அதான். இப்ப என்னடான்னா டாக்ட்டர்க்கிட்ட காமிக்கிறதுக்கு டோக்கன் வாங்கனும்னு சொல்றானுவ உங்க காலமெல்லாம் ரொம்ப பாவப்பட்ட காலமப்பா..
பேரன் : சரிப்பா… இப்ப கொளத்துல தண்ணியில்லாம பயனுவ கிரிகெட்டுல்ல வெளயாடுறானுவ.
அப்பா : எப்படிப்பா தண்ணியிருக்கும்...? வருசத்துல 2,3 தடவை c m p வாய்க்கலெ தண்ணிவரும் நாங்கெல்லாம் போய் குளிப்போம். மீனல்லாம் வரும், வேட்டி வச்சு புடிப்போம்.
பேரன் : வேட்டி வுடுத்திக்கிட்டு ஆத்துல குளிக்கிறதே கஷ்டம், அதெப்பெடி வேட்டிய வச்சு மீன் புடிக்க முடியும்..? பொய் சொல்லாதிய...
அப்பா : நான் பொய் சொல்வேனா, எப்ப சொன்னேன் வேட்டி வுடுத்திக்கிட்டு குளிச்சேன்னு...? மேலே கேளு. சொல்றேன் கடமட தண்ணி வேஸ்டா ஏன் கடலுக்கு போவனும் ஜனங்களுக்கு போவட்டுமே என்றுதான் அந்த காலத்து லேந்து வெட்டி வுட்டாங்க. அதுனால எல்லா வூட்டுக் கெணத்துலயும் தண்ணி கெடந்துச்சு, அதனால வூருல உள்ள கொளமும் கெண்ட பாஞ்சு கெடந்துச்சு.மழை பெய்ஞ்சா எல்லா கொளமும் ஒடச்சுக்கிட்டு ஊரெல்லாம் தண்ணி பெருவி,அங்கெங்கே கெடக்குற குப்பைகூளங்கள், செத்தகோழி, தெருவுல ஓடுற சாக்கட தண்ணியெல்லாம் அடிச்சிக்கிட்டு போய் கடல்ல கலந்திடும்.மொத்தத்தில ஊரையே கழுவிவுட்டடும்.
கொசுத்தொல்லையும் இல்ல,பத்தாதத்துக்கு இப்ப அடிச்சுக்கிறியல நெலத்தடி நெலதடி நீர்னு… அதுக்கும் பஞ்சமில்லாம இருந்துச்சு. ஏன்னா, எல்லா ஊடும் முத்தம் வச்சு கட்டி இருக்கும் மழை பேஞ்சா முத்த நெறஞ்சு சாராக்குழி வழியா தெருவுக்கு ஓடி தெருவும் குளிர்ந்திருக்கும்.
பேரன் : அதென்ன சாராகுழி...?
அப்பா : அதா ஒவ்வொரு ஊட்லயும் ஊட்டுத் தண்ணி தெருவுக்கு ஓட கட்டியிருப்பாங்க. மழை நாள்ல தண்ணி ஓடும், மத்தநாள்ல பெருச்சாளி ஓடும்.
பேரன் : ஹா… ஹா… சரிப்பா… c m p வாய்க்கா தண்ணி வரத்துயில்லையே..ஏன்..?
அப்பா : அப்புடிகேளு எம்பேரா… இப்ப சொல்றேன் ஊருல உள்ள கொளமெல்லம் அந்தந்த எடத்துல உள்ள பள்ளியாசலுக்கு சொந்தம், அதுல வர்ற வருமானமும் சொந்தமுன்னு ஆயிடுச்சு, இது பொறுக்காத அவிய்ங்க... நம்மூருக்கு வர்ற தண்ணியை மறுச்சு இவனுவளுக்கு ஏன் போவணும்னு ஐடியா பண்ணி தடுத்துட்டாணுவ...இத கேட்க நாதியில்லாம போச்சு.
பேரன் : அவ்யிங்கன்னா யாருப்பா...?
அப்பா : அதா.....சுன்னத்து பன்னாதனுவோ.....!
பேரன் : நீங்கதான் ஒட்டு போட்டு ஜெயிச்சவங்கள்ட்ட போய் சொல்ல வேண்டியதுதானே..?
அப்பா : அட நீ ஒன்னு… அவங்களுக்கு பொறம்போக்கு நெலத்தையே பாக்க நேரமில்லாம போச்சு.... இதப்போய் பாக்கவா போறாங்க... இப்ப ஒன்னும் கெட்டுபோகல. நம்ம்மூரு சேர்மனாமே.. அந்த புள்ளையும் சுகாதாரம் வேணும்னு படிச்சு படிச்சு சொல்லுதாமே நீ கொஞ்சம் சொல்லி அதுக்குள்ள ஏற்பாட்டை பண்ணச் சொல்லு MLA, MP ன்னு பாத்து பேசச் சொல்லு... அப்படியுமில்லையா இந்த தெருமுனை பிரச்சாரம்னும், பள்ளியாசலை, மதுர்ஸாவை கழுவிவுட்டுட்டு போட்டாவெல்லாம் போடுதுல அந்த புள்ளகள்ட்டெயும் சொல்லி இந்த அவந்தரைக்கு ஒதவச் சொல்லு செய்வாங்க. அல்லாஹ் பரக்கத்து செய்வான்னு சொல்லு. மேலும், ஊருக்கு ஓதவனும்னு நெனக்கிற வலப்பூ கட்டி தெனமும் ஃபோட்டோவெல்லாம் போட்டு செய்தி போடுதுவொல அவங்க கிட்டே சொல்லு, ஊர் தேவைக்கெல்லாம் எழுதிப் போட்டு சரி செய்யுதாமுள்ள அந்தப் புள்ளையோ இன்னும் யாரு இதற்கு முயற்சி செய்றாங்களோ..... அல்லாஹ் நற்கூலி கொடுக்கப் போதுமானவன்...........
வந்துடுச்சு...... வந்துடுச்சு.....
பேரன் : சீக்கிரம் போங்கப்பா...
அப்பா : அட நீ ஓடு கெரண்டு வந்துடுச்சுன்னு சொன்னேன் போய் நல்லா குளிங்க.
ZAEISA