Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label காட்சி. Show all posts
Showing posts with label காட்சி. Show all posts

சென்னை புத்தக கண்காட்சியில் "மனம் மகிழுங்கள்" 1

அதிரைநிருபர் பதிப்பகம் | January 15, 2014 | , , , ,

"ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம்" என்றார் புத்தர். துன்பங்கள் மட்டடுமின்றி இன்பங்களுக்கும் காரணம் "மனமே" என்கிறார் எழுத்தாளர் நூருத்தீன்!

பிரபல தமிழ் இணைய தளம் www.inneram.com இல் 46 வாரங்கள் தொடராக வந்த "மனம் மகிழுங்கள்" தற்போது நூல் வடிவில் சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் 'பழனியப்பா பிரதர்ஸ், ஸ்டால் எண்கள் 418, 419 இல் கிடைக்கிறது.

இதுமட்டுமின்றி NEWSHUNT செல்பேசி தளத்தில் மின்நூலாகவும் தரவிறக்கம் செய்து ஆன்ராய்ட் மொபைல்/டேப்லெட்  சாதனங்களிலும் வாசிக்கலாம்.

பரபரப்பான் இயந்திர வாழ்க்கையில் இழந்துவிட்ட மகிழ்ச்சியைத் தேடிக்கொண்டு இருப்பவர்கள் மட்டுமின்றி, நண்பர்களுக்கும், திருமணம், புதுவீடு குடிபுகழ் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளின்போது பரிசளிக்க உகந்த நூல் என்று உறுதியாகச் சொல்லலாம்.

சென்னை புத்தக கண்காட்சியில் அவசியம் வாங்க வேண்டிய நூல்கள் பட்டியலில் மறக்காமல் இதையும் குறித்துக் கொள்ளுங்கள். மனம் மகிழுங்கள்.

பரிந்துரை : அதிரைக்காரன்

தொடரும் ஊடக தீவிரவாதம் - இந்திய ஊடகங்கள் ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | June 11, 2013 | , , , , , ,

இந்திய ஊடகங்கள் எப்படியெல்லாம் காற்றைக் கல்லாக்கி, அதற்கு மாலை போட்டு திருவிழா கொண்டாடுவதில் வல்லவர்கள் என்பது உலகறிந்த உண்மை, ஊழல், லஞ்சம் இவைகளை எதிர்த்து குரல் கொடுக்கிறோம் என்று சொல்லும் இந்திய ஊடகங்கள், போலீஸ் விசாரனை நடந்து வரும் சில நிமிடங்களில் கிடைக்கும் செய்திகள் (according to our police sources என்று சொல்லும் செய்திகள்) எப்படி அவர்களுக்கு கிடைக்கிறது? என்பதில் நிச்சயம் நமக்கு சந்தேகம் இருக்கிறது என்பதைச் சென்ற பதிவில் கூறிப்பிட்டிருந்தோம். இலவசமாக இந்த மீடியாக்களில் sourceகளாக இருக்க நம்ம நாட்டு போலீஸ்காரர்கள் ஒன்னும் முட்டாள்கள் அல்ல என்பதை எடுத்துச் சொன்னோம் http://adirainirubar.blogspot.ae/2013/05/blog-post_3762.html.

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக இந்திய செய்தி ஊடகங்கள் வேறு செய்திகளை பற்றி அக்கரை கொள்ளாமல், பொய்களையும், யூகங்களையும் மூலதனமாகக் கொண்டு செயல்படும் 24 மணிநேர வடநாட்டு ஆங்கில செய்தி ஊடகங்கள் நக்டைல் கொடிகட்டி பறக்கின்றன. தமிழ்நாட்டச் சேர்ந்த சீனிவாசனின் மருமகன் என்ற ஒரே காரணத்திற்காக மெய்யப்பனையும், மாமனார் சீனிவாசனையும் பற்றிய பரபரப்பு செய்திகள் நம்முடைய காதுகளைக் கிழிக்கிறது.

கடந்த இரண்டு வாரமாக இந்திய நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் நடந்து வருகிறது, இதில் அக்கரை செலுத்த வக்கில்லாத இந்திய ஊடகங்கள், கிரிக்கெட் வியாபாரிகளின் பிரச்சினை பற்றியே கடந்த இரு வாரமாக பேசிக் கொண்டிருப்பதன் மூலம் அத்துணை முன்னணி(!!!?) இந்திய ஊடகக்காரர்களுக்கும் ஆறாவது அறிவு என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

இங்கே பதிக்கப்பட்டிருக்கும் காணொளியைப் பாருங்கள், TIMES NOW என்ற ஆங்கிலச் சேனலில் நடக்கும் விவாதங்களைப் பாருங்கள். நாயை வைத்து விபச்சாரச் செய்தி சொல்லும் இந்திய ஊடகக்காரர்களின் வழியை பின்பற்றுபவர், நாயைப் போன்று குரைக்கும் ஒருவன் இருக்கிறான் என்றால் அவன் தான் Arnaub goswaami. தயைகூர்ந்து 1:25 மணித்துளியை பாருங்கள் இவன் எப்படி why why why என்று நாயை மிஞ்சும் விதமாக கத்துகிறான் என்று பாருங்கள்.



பொய் வழக்கில் ஜோடிக்கப்பட்டு ஒரு முஸ்லீமை போலீஸ் கைது செய்தால் அதை உலக அளவிலான தீவிரவாத செயல் புரிவோருடன் ஒப்பிட்டு வசைபாடுவார்கள் இந்த இந்திய ஊடக விபச்சார தீவிரவாதிகள். இது போன்ற சந்தர்பங்களின் இந்த அர்னாப் கோஸ்வாமியின் ஆட்டமிருக்கே, அது நடுநிலையனவர்களையும் கோபமடையச் செய்யும்.

கிரிக்கெட் ஊழல் பற்றி பரபரப்புடன் பேசும் செய்தி ஊடகங்கள், மினி உலகக் கோப்பை போட்டிகளை நேரலை செய்யும் ஸ்டார் ஸ்போட்ஸ் விளம்பரத்தை தங்களின் சேனல்களில் போடுவது இவர்கள் காசுக்காக மலம் தின்னும் இரட்டை நாக்குடையவர்கள் என்பது தெளிவாகிறது.


காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நடந்து வரும் இமாலய ஊழல்களைப் பற்றி பேசிய இந்திய ஊடகங்கள், கங்கிரஸின் தற்போதைய மீடியா விளம்பரங்களைத் தங்களின் செய்தி ஊடகங்களில் விளம்பரமாக போட்டு, காசு கிடைக்கிறது என்பதற்காக அரசியல்வாதிகளுக்கு ஊடக விபச்சாரம் செய்வோம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்கள்.


மாதுபானங்களின் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் வெளியிடுவதற்கு இந்தியாவில் தடையுள்ளது, ஆனால் Royal stag, kingfisher போன்றவைகள் மாதுபானங்களின் விளம்பரங்கள் அவைகளின் பினாமி பிராண்டுகளை வைத்து (kingfisher water, royal stag cassette, CD bag) ஊடகங்கள் விளம்பரப்படுத்தப்படுகிறதே. காசுக்காக குடிகாரர்களை குளிர வைத்து ஊடக விபச்சாரம் செய்வோம் என்பதை ஒவ்வொரு நாளும் நிருபித்து வருகிறார்கள்.


பெண்களுக்கு பாதுகாப்பில்லை, இரவு நேரங்களில் பெண்கள் தனியாக சொல்ல முடியவில்லை, ஒரே கற்பழிப்பு என்று ஒப்பாரி ஒரு பக்கம். இரவு 12 மணிக்கெல்லாம் night out என்ற பெயரில் போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு செய்தி ஊடகமும், பெண்களில் ஆபாச நடனங்களையும், இரவு விடுதிகளில் நடக்கும் அனாச்சாரங்களையும் காட்டி ஆண்களைத் தவறு செய்ய தூண்டுவது மற்றொரு பக்கம் என்று தங்களுடய ஊடக விபச்சார தீவிரவாதத்தைச் செய்து வருபவர்களை எவ்வளவு அசிங்கமாக திட்ட வேண்டும் என்று நடுநிலையானவர்களுக்கு தோன்றும் என்பதை மட்டும் யாரும் மறுக்க முடியாது.


சமூகப் பொறுபில்லாத இந்த ஊடக தீவிரவாதிகளுக்கு எதிரான போர் தொடரும்...

அதிரைநிருபர் பதிப்பகம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு