பிரிட்டனில் வருடத்திற்கு 50,000 பேர் இஸ்லாத்தை ஏற்கின்றனர் அதில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் ! ஓர் ஆய்வு சொல்லும் உண்மை ! - இது டிவீட் அல்ல ! நான்கு நாட்களுக்கு (24-மே-2013) முன்னர் தி-ஹிண்டு ஆங்கில தினசரிப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரை !
இஸ்லாத்தை உளப்பூர்வமாக உணர்ந்து வெள்ளைக்கார பிரிட்டானிய பெண்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் தொடர்ந்து வாழ்வியலாகவும் ஈருல வெற்றிக்காகவும் ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் தங்களது துறையில் தனித் தன்மையுடன் விளங்குபவர்கள், படித்தவர்கள், பன்முகம் கொண்ட அறிவில் சிறந்தவர்களும் உண்டு.
இந்த வெற்றியாளர்கள் அனைவருக்குமே நன்கு தெரியும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் மார்க்கத்திற்கு எதிராக குடும்பத்தினர் வலுவான குரல் கொடுப்பார்கள் என்றும், இருந்தாலும் அவர்களில் உயர்தட்டு மக்களில் இதுவரை பேறு பெற்றவர்கள் லரென் பூத் (முன்னாள் பிரிட்டீஸ் பிரதம மந்திரி டோனி பிளேர் அவர்களின் மனைவியின் சகோதரி) பிரபல பத்திரிகையாளார் யோன்னி ரெட்லி, எம்.டிவி வர்ணனையாளார் கிரிஸ்டெய்ன் பெக்கர் ஆகியோர் உள்ளடக்கம்.
கடந்த 9/11க்கு பின்னர் அதிகரித்து வரும் இஸ்லாம் அதிலும் குறிப்பாக பெண்மணிகளின் உள்ளங்களை ஆழமாகத் தொட்டு அவர்களை ஏற்கவைத்து இருக்கிறது.
தங்களது துறைகளில் தனித் தன்மையுடன வெற்றியடைந்த, சுதந்திரமான மேற்கத்திய பெண்களே இஸ்லாத்தை விரும்பி ஏற்று வருகின்றனர்.
இணைக்கப்பட்டுள்ள ஆங்கில பத்திரிகையின் மொழியாக்கத்தை விரைவில் பதிவுக்குள் கொண்டு வருகிறோம் இன்ஷா அல்லாஹ் !
இனிய மார்க்கம்
ஏனைய வர்க்கும்
ஏற்ற மார்க்கம் !
அபூஇப்ராஹீம்