ஊடகங்களின் தாக்கம் இல்லாத ஊரே இல்லை, ஒவ்வொரு வீட்டிலும் அதன் தாக்கம் ஏதாவது ஒரு வகையில் சீண்டிக் கொண்டுதான் இருக்கிறது. அவைகள் செய்தித் தாள்களாக இருந்தாலும், தொலைக்காட்சிகளாகவும், இணைய வழி தேடலாகவும் தொடர்கின்றன.
இந்திய நீதித்துறையும் சாட்சியங்களை அளிப்பவர்களிடமிருந்து நேரடி வாக்குமூலம், அதோடு மற்ற ஆதாரங்களாக எழுத்து வடிவிலான, அச்சு வடிவிலான, ஏன் நிழற்பட வடிவிலான ஆதாரங்களைத்தான் நம்புகின்றன.
நம்முடைய வாழ்வில் நிகழ்ந்த, அன்றாடம் எதிர்கொண்ட நினைவுகளை உடனுக்குடன் மனதில் பதிந்தால் நீண்ட நாட்களுக்கு அவைகள் தொடர்வதில் மனிதனுக்கே உரிய மறதியால் சிக்கலே. ஆனால் அப்படியான வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் மூன்றாம் கண் கொண்டு (Cameraவை இப்படித்தான் அழைக்கனும்னு சொல்லிட்டாங்க) சேகரித்ததை சும்மா பூட்டி வைத்திருந்தால் பலன் என்ன ஆகவே, உங்களின் பார்வைக்கும் அதன் நினைவோட்டங்களாகப் பகிர்வதில் எனக்கு என்றுமே மகிழ்வே.
1. படித்துறைகளுக்கு வெள்ளை அடித்ததால் வெள்ளை வேட்டி துறைகளுக்கெல்லாம் விடுப்பா ?
2. டவலும் வேட்டியும் சுருட்டி வைக்கும் இந்த மரத்தடி செடியன்குளத்து மேடு நினைவில் நிற்கும் இடங்களில் இதுவும் ஒன்று
3. செடியன் குளம் குளிர் நாட்களிலும் சூடாக இருக்கும் குளித்தால் கரை ஏற மனசு வராது ஆனா இப்போ குளத்தில் இறங்கவே மனசு வரலே!
4 ஹனீஃப் பள்ளிவாசல் அருகில் C.M.P.வாய்க்கால் அந்த காலத்தில் பளபளன்னு நீரும் அதன் கூட மீன் குஞ்சுகளும் ஓடிய நாட்களை நினைத்து மணம் மீன் குஞ்சைப்போல் துள்ளி குதித்தது, அது ஒரு பொற்காலம். இப்போ சர்வசாதரனமாக ஓடும் சாக்கடைகளின் கலப்பு நாற்றம் மனதை உறுத்துகிறது.
5. விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டு மழைக்கும் கருவாட்டு ஆனத்திற்க்கும் ஏதும் சம்பந்தம் உண்டா ?
6. எங்களை கூண்டுக்கு உள்ளேயே அடைத்து வச்சிருங்கோ, வெளியே வந்தால் மசாலா குளியல்தான் என்பது எங்களுக்குத் தெரியும்.
7. ஊரில் என்ன விஷேசம் என்றாலும் நாங்கள் இங்கேதான் பொழுதையும் விடுமுறையையும் போக்கிட நிற்போம் (வேறு வழி?).
8. இந்த ஹோட்டல் அப்போ ரொம்ப பாப்புலருங்க ஆனாலும் பாருங்க ஊரில் இன்னும் இதுக்குன்னு ஒரு கூட்டம் இருக்குதுங்க! இந்த உணவகத்தை கண்டாலோ அல்லது அதன் பெயரைக் கேட்டாலோ பெரிசுலிருந்து சிறுசு வரை நாக்கில் சொட்டும் ஊற்றை உறிஞ்சுக் கொள்வர் (இது விளம்பரமல்ல அனால் அங்கிருக்கும் ருசிக்கு ரசிகனாக).
9. அந்த பூ தாங்க இந்த பூ அது கூட்டமா இருந்தது இது சிங்கம்போல சிங்கிலா இருக்கு.
10. இந்த புளியமரம் அதன் சுற்று வட்டாரம் பற்றி நான் எழுதுவதை விட சகோ ஜாகிர் எழுதுவதுதான் மிக பொருத்தமா இருக்கும். .
11. ஆக்ராவில் வீற்றிருக்கும் உலக அதிசியங்களில் ஒன்றான தாஜ் மஹால் அருகில் இருக்கும் கல்வெட்டினை வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது அதனை அப்படியே கொட்ட கொட்ட பார்த்துக் கொண்டிருந்த நம் மூன்றாம் கண் சிமிட்டியதால் இங்கே உங்களின் பார்வைக்கு.
12. தாஜ் மஹாலில் மற்றுமொரு கோணம், சுற்றி சுற்றி வந்தாலும் எந்தப் பக்கம் பார்த்தாலும் ஒரே மாதிரியான தோற்றம். முகலாயர்களின் கட்டிடக் கலையின் திறன் வியக்க வைக்கும் அதிசியமே !
13. இதுநாள் வரை அதிகமதிகம் தாஜ் மஹாலின் நேரடியான வண்ணப்படங்களைத்தான் பெரும்பாலும் பத்திரிக்கைகளிலும், மற்ற ஊடகங்களிலிலும் கண்டு வந்திருக்கிறோம். தாஜ் மஹாலே தன் கண்களால் சுற்றியிருப்பதை கண்டால் எப்படி இருக்கும் ?
14. தாஜ் மஹாலில் நுழைவாயிலும் கோட்டையின் முகப்பும் அதன் கம்பீரம் காண்பவர்கள் அனைவருக்கும் கைபிடித்த மனைவியைத் தேடும் காதலிக்க... !
15. அட இதென்ன இவ்வளவு சீக்கிரமா ஊருக்கு வந்துட்டோம்னு நினைக்கத் தூண்டும் ஒவ்வொரு இந்திய கிராமங்களின் நீர் நிலைகளை நினைவோட்டமாக கொண்டுவரும் அற்புதமான தாஜ் மஹாலின் மறுபக்கம் இது. அணைகளையும் தாண்டி அனைவரையும் கவரும் இதன் அழகு ரசிக்கத்தான், ஆனால் இங்கே ஓடும் நீரை ருசிக்க அல்ல !
சரிங்க, மடக்கி எழுதினா கவிதை, மடக்காம எழுதினா உரை நடைன்னு தெரிஞ்சு போச்சு. இப்படி படம் பார்த்து கண்டதை(யும்) சொல்லும் வழக்கத்திற்கு ஏதாவது வாதம் உண்டா ? நீங்களே தீர்மாணிச்சுடுங்க மக்களே...
இருந்தாலும் இது தொடரும் ....
- Sஹமீது