அஸ்ஸலாமு அலைக்கும்..
தாய் நாடா தவழ்ந்த நாடா என்ற தலைப்பில் ஷரீஅத்திற்க்கு முரன்பட்டு நடைமுறை படுத்தும் நமது சகோதரர்களின் அலட்ச்சியப் போக்கை களைஎடுக்க எழுத நினைத்த போது அதிரவைக்கும் இந்த அவலச் செய்தி என்னை சற்று நிலை குலையச் செய்தது. இதை படிக்கும் அதிரைநிருபர் வாசகர்கள் இருகரமேந்தி இவர்களின் ஹிதாயத்திற்கு துஆ செய்வதோடு மக்கா மஸ்ஜித் இமாம் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கொடுத்து இனிமேலும் இது போன்று தவறுகள் தொடராமலிருக்க நினைவு படுத்தவும்.
இன்ஷா அல்லாஹ் விரைவில் ஷரீ அத் விஷயத்தில் தாய் நாடா, தவழ்ந்த நாடா சிறந்தது என்ற உண்மை சம்பவம் பெயர் குறிப்பிடாது இங்கு எழுத அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்!
யா அல்லாஹ் என்னுடைய பலஹீனமான ஈமான் தான் இன்னும் இத்தகைய இணைவைக்கும் இடங்களை இடித்து தரை மட்ட மாக்க முடியாமல் தடுக்கிறது யா அல்லாஹ் இனிமேலும் ஈமானை பறிகொடுக்கும் இத்தகைய அவல நிலையை அரங்கேற விடாமல் தடுத்து நிறுத்தும் மனோ வலிமையை தந்தருள்வாயாக.
அண்ணாசாலை தர்காவில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை!
இதோ தினமனி செய்தி புகைப்படத்துடன்:-
சென்னை, ஜூன்.7: நடிகர் ரஜினி விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் வெள்ளிக்கிழமையன்று சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.

ரஜினி ரசிகர்கள் இணையதளம் சார்பில் வெள்ளிக்கிழமை மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்கா ஹஸ்ரத் சையத் மூஸா ஷா காதிரியில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ரஜினி ரசிகர்கள் திரளாக பிரார்த்தனையில் கலந்துகொண்டனர். சுமார் அரை மணிநேரம் தர்காவினுள் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.
-அப்துர் ரஷீத் ரஹ்மானி
தமாம், K.S.A.