இன்று 27-11-2012 அதிரை பள்ளிகளுக்கிடையே மாணவர்கள் பிரிவுக்கான வினாடி வினா போட்டி மிகச் சிறப்பாக இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
மாணவர்கள் ஆர்வமுடனும் துடிப்புடனும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.
நிகழ்வின் தலைமை மற்றும் அறிமுக உரையை அதிரை தாரூத் தவ்ஹீத் அமீர், தமிழ் அறிஞர் அதிரை அஹ்மது B.A., அவர்கள் அற்புதமான உரையை ஆற்றினார்கள்.
மாணவர்களுக்கான வினாடி வினா போட்டியை, ஆரம்ப காலங்களில் வினாடி வினா போட்டி என்றால் அங்கே அதிரை மாணாக்களின் மனம் வென்ற ஆசான் ஒருவரின் நினைவு வரும் அவர்கள்தான் S.K.M.ஹாஜா முகைதீன் M.A. BSc., B.T., அவர்கள் மிகச் சிறப்புடன் நடத்தினார்கள்.
போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகள் விபரம்
முதல் பரிசு : இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி
பரிசு தொகை: ரூ.5,000/-
வழங்கியவர்கள்: அல்நூர் ஹஜ் சர்வீஸ்
இரண்டாம் பரிசு: காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள்)
பரிசு தொகை: ரூ 3,000/-
வழங்கியவர்கள்: சுப்ரீம் கார்கோ, தமாம்
மூன்றாம் பரிசு: காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள்)
பரிசு தொகை: ரூ 2,000/-
வழங்கியவர்கள்: அதிரை எஜுகேஷனல் மிஷன்
மேலும் வினாடி வினா நிழ்வை சிறப்பித்தவர்கள் : மூத்த சகோதரர்கள் முஹம்மது ஃபாரூக், M.A.அப்துல் காதர், இபுறாஹீம் அன்சாரி, நூர் முஹம்மது, பேராசிரியை தஸ்லீமா, மற்றும் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர் ஆஃப்தா பேகம், கலந்து கொண்ட பள்ளி ஆசிரியர்கள்.
நிறைவாக நன்றியுரை: மூத்த சகோதரர் இப்றாஹீம் அன்சாரி, அதிரைநிருபர் குழு சார்பாக.
நிகழ்சிக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்து, நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற பேருதவியாக இருந்த சகோதரர் ஹசன் (அபு இஸ்மாயில்) மற்றும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளுக்கு உதவி செய்த இமாம் ஷாஃபி (ரஹ்) பள்ளி ஆசிரியர்கள், மற்றும் இமாம் ஷாஃபி (ரஹ்) நிர்வாகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அற்புதமான இந்த நிகழ்வின் காணொளி இதோ உங்கள் பார்வைக்கு இன்ஷா அல்லாஹ்....
முதல் பரிசு : இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி
இரண்டாம் பரிசு: காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள்)
மூன்றாம் பரிசு: காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள்)
அதிரைநிருபர் குழு















