"பல் போனால் சொல் போச்சு", "ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி..." என்பது அனைவருக்கும் தெரிந்ததே.. ! சிலருக்கு கோபம் வந்தாலும் "பல்லை" உடைப்பேன் என்று எச்சரிப்பதும் நம்மிடையே அன்றாட நிகழ்வுகளில் நடப்பதே.
அகத்தின் அழகு முகத்திலே தெரியும், அதற்கும் அழகு சேர்ப்பதும் பற்களே, அழகான உச்சரிப்பு, இனிக்கும் சிரிப்பு அதுமட்டுமா உண்ணும் உணவை மென்று அறைத்து குடலுக்குள் அனுப்பும் அற்புத பணிகள்.
பற்களின் எண்ணிக்கை 32, அதில் இன்றைக்கு எத்தனை நம் வசம் இன்னும் இருக்குன்னு எண்ணி(!!)ப் பார்த்திருக்கிறீர்களா ?
என்ன இது கேள்வி என்று புருவம் உயர்த்த வேண்டாம், ஆம் நம் பற்களை பராமரிப்பதில் எந்த அளவுக்கு கவனமாக இருக்கிறோம் என்பதே என்னுள் எழும் வினாவும்.
காலம் காலமாக நாமதூர்காரர்கள் மருத்துவம் என்றால் தாண்டிச் செல்வது குறைந்தது 12 கிலோமீட்டர் தூரம் அங்கே சென்று வந்தால்தான் அதற்கான பலன் இருப்பதாக உளவியல்ரீதியாகவே தயாரகிவிட்டார்கள்.
இப்படியிருக்க, நமதூர் மண்ணின் மைந்தர்கள் மருத்துவர்களாக சேவைக்கு வருவதும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது அவ்வகையில், சத்தமே இல்லாமல் கடந்த இரண்டரை வருடங்களாக பட்டுக்கோட்டை சின்னையா தெருவில் "ஆயிஷா பல் மருத்துவமனை" என்று இயங்கி வருவது அதிரைவாசிகள் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும்.
அதிரையைச் சார்ந்த பல்மருத்துவர் Dr.M.H.பஜ்லுர் ரஹ்மான் B.D.S.M.C.I.P., தனது சேவைக்கே உரிய புன்னகையும், இனிமையான பேச்சும், அதிரையர்கள் மட்டுமல்ல சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனைவரின் முகத்திலும் புன்னகையை சூட்டுவதில் திறமையானவர்.
பல்மருத்துவர் பஜ்லுர் ரஹ்மான் அவர்களைப் பற்றி சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் பெருமையாக சொல்லும்போது சந்தோஷமாக இருக்கிறது, நேர்மையான மருத்துவம், கச்சிதமான சிகிச்சை, தெளிவான ஆலோசனைகள் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
இத்தகைய நற்குணங்கள் கொண்ட மருத்துவர் நமதூரிலும் "ஆயிஷா பல் மருத்துவமனை"யை கடந்த 13-மே-2012 அன்று 28-G, ஆஸ்பத்திரி தெரு ரோடு, ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகில் என்ற முகவரியில் துவங்கி வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நல்ல சுகாதரமான மருத்துவம், கனிவான பேச்சு, பல்லுக்கு உறுதி(யளிப்பது) ஆக அவரிடம் மருத்துவம் பார்க்க செல்பவர்களின் சொல்லுக்கும் நிலையான உறுதி !
அனைத்து வகையான பல்மருத்துவ சிகிச்சைகளை, உயர்தரமாக வழங்கி வரும் 'ஆயிஷா பல் மருத்துவமனை' தற்போது அதிரையிலும் இருப்பதனால், அதிரை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களும் சிகிச்சைக்கு என்று அதிக செலவுகள் செய்து வெளியூர் செல்ல வேண்டியதில்லை. ஊரில் அமையப் பெற்றிருக்கும் மருத்துவமனையை பொதுமக்களின் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
*பல் சுத்தம் செய்தல்
*பல் கறை நீக்குதல்
*பல் சொத்தை அடைத்தல்
*பல் கட்டுதல் (பல்செட், செராமிக் பல்)
*பல்வேர் சிகிச்சை (root canal treatment)
*பல் அறுவை சிகிச்சை
*பல் கிளிப் போடுதல்
*ஈறு நோய் சிகிச்சை
என்று 'பல்'வேறான சிகிச்சை வசதிகள் சகலமும் இங்கே கிடைக்கிறது. மருத்துவரின் அலைபேசி எண்: +91 96007 14614
'பல்'வேறு வேலைகளுக்கிடையே 'பல்' வேர்கள் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும்போது நமதூரில் இல்லையே என்று ஏங்கிய தருணமும் எனக்கு உண்டு.
ஆயிஷா பல் மருத்துமனையின் சேவை அதிரை பொதுமக்களுக்கு ஒரு பயனுள்ள மருத்துவ சேவையாக இருக்கும் என்று நம்பிக்கை வைப்போம் இன்ஷா அல்லாஹ்.
-அபுஇபுறாஹிம்



