அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதிரைநிருபர் வலைத்தளம் வெற்றிகரமாக கடந்த மாதம் நடத்திய வினாடி வினா நிகழ்வினை அனைவரும் அறிந்திருக்கலாம் !
மாணவர்கள் பிரிவில் கலந்து கொண்ட காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாவது மூன்றாவது இடங்களை வென்று தங்களது பள்ளிக்கு பெருமை சேர்த்தார்கள் !
வினாடி வினா நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களில் இரண்டு நட்சத்திர மாணவர்களை பற்றிய தகவல் போட்டி நடந்து முடிந்ததும் நம்மால் அறிய முடிந்தது....
கா.மு.மே. பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் இருவரும் தங்களது பிரிவில் முதல் மதிப்பெண்கள் மட்டுமல்ல, ஒழுக்க நெறிகளிலும், நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் பணிகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். அவர்களை நாம் மின்னும் நட்சத்திரங்களாகவே இங்கு காண்கிறோம்.
நமதூர் பாரம்பரியமிக்க எத்தீம்கானா இல்லம் உருவாக்கிய இந்த மாணவர்களோடு கலந்துரையாடும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது, மாஷா அல்லாஹ் ! தெளிவான பேச்சு, நேர்மையான செயல்கள், கேட்பவர்களைக் கவரும் கருத்தாடல்கள், நல்ல அறிவுரைகள் என்று மிளிர்கிறார்கள்.
காணொளியில் உரையாடும் அதிரை எத்தீம்கானாவைச் சார்ந்த மாணவர்களான இவர்கள் வாழ்வில் அனைத்து சிறப்புகளையும் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்வோம் இன்ஷா அல்லாஹ்...
அதிரைநிருபர் குழு