அண்ணன் தம்பி உறவு…
தாய்-தந்தை உறவு போல ஒரே கண்ணோட்டத்துடன் அண்ணன் தம்பி உறவை ஒப்பிட முடியாது. ஐந்து வயதிலிருந்து பதினைந்து வயது வரை, உரிமைப் போராட்டம்..! எனக்கு வேண்டும்..! என்ற பிடிவாதம் பிடிக்கும் தம்பி. தன் சொல் கேட்க வேண்டும் என்று அண்ணனும் அவ்வப்போது போடும் சிறு-சிறு சண்டைகள் நிகழ்ந்தாலும், வீட்டிற்கு வெளியே வந்து விட்டால் தம்பியின் பாதுகாவலனாக மாறுவதுதான் வினோதம்.
செல்வசெழிப்புடன் வாழும் குடும்பத்தில் பிறந்த சகோதரர்களுக்குள் இளம் வயதில் அவ்வளவாக பிணக்குகள் வருவதில்லை ஏனெனில், இருவரின் தேவைகளும் தனி தனியே நிறைவேற்றப் படுவதால் என்றுமே சமாதானம்தான். ஆனால், அங்கே பாசப் பினைப்புகளில் குறைகள் ததும்பும். வசதிகள் குறைவான குடும்பத்தில் பிறந்து வளரும் அண்ணன் தம்பிகள் மத்தியில் பாசங்கள் என்றுமே கூடுதலாக இருக்கும்.
இவர்களில் மூத்த அண்ணன் வளர்ந்து ஆளாகி உழைத்து பொருளீட்ட ஆரம்பித்து விட்டால் அண்ணன் தான் ஹீரோ. அண்ணணின் சொல் அரசு உத்தரவு போல் உடனே அமுலாக்கும் தம்பிகள் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் அண்ணன்மார்கள் தம்பிகளின் உரிமைகளின் நாயகன். தனக்கு தேவையானதை பெற துடிக்கும் துடிப்பு தம்பிகளின் ஆர்வத் துடிப்பு அது உரிமைகளின் உயிர் துடிப்பு.
என் அண்ணன் என்று சொல்லி பெருமிதம்படும் தம்பிகளின் சந்தோசத்திற்கு அளவே கிடையாது. தம்பிகளின் அந்த உரிமையை தம்பிகளிடமிருந்து பிரிப்பது என்பது இயலாத காரியம். தம்பிகளின் மனதில் ஆழ பதிந்திருக்கும் அந்த உயிர் மூச்சு போன்ற உரிமையை பிரிக்க அண்ணனுக்கு திருமணம் என்ற பந்தத்தின் மூலம் ஏற்ப்படும் உறவு அண்ணனின் மனைவி அண்ணியால் மட்டுமே முடியும்.
உறவின் வலிமை யாருக்கு அதிகம் யார் உரிமை அதிகம் பங்கு உள்ளவர் என்று பார்க்கும்போது அண்ணனின் மனைவிக்குத்தான். என்றாலும், உயிரோடு ஒட்டிய உறவான தம்பிகளை பிரிக்க நினைக்கும் அண்ணி கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்யில் மயிலிறகை போல மிக நளினமாக தன் வயப்படுத்திக்கொள்ளல் வேண்டும். இதன் கால அளவு குறைந்தது பத்து வருடங்கள் எனலாம். ஆனால், மணந்த மறு நிமிடமே தன வசம் வரவேண்டும் என்பதன் விளைவுதான் குடும்பத்தில் தேவையில்லாத சச்சரவுகள்.
ஒரு தாய் மக்கள், என் அண்ணன் எனக்கு சொந்தம் என்ற உணர்வு பதினைந்து வயது பாலகனிடம் இருக்கும். தம்பியும் பாச உணர்வை அறுத்தெறிய வேண்டும் என்று முனையும் புது உறவான அண்ணனின் மனைவியின் முயற்சி சில சமயங்களில் மிகவும் மோசமாக செயல்பட்டு தம்பியின் உணர்வின் உயிரை பிரிக்க காரணமாக இருப்பார். தந்தை காட்டும் பாசத்தின் இரண்டாம் பகுதியாக அண்ணன் காட்டும் பாசம் அமைந்திருக்கும்.
கல்யாணமாகி சில வருடங்களில் திசை திரும்பிய ஏவுகணைபோல் அதி வேகமாக தம்பி மீது கொண்ட பாசம் மறைந்து போகும். இது ஒரு வகையில் அண்ணனுக்கு பாதகமாக கூட அமையும் கல்யாணமாகி மனைவி வகையில் கிடைத்த உறவு பலமாக இருக்கும்பச்சத்தில் தம்பியின் உறவு இல்லை என்று போகும். அண்ணன் மனைவி பாதகியாய் அமைந்து அண்ணனுக்கு துர்சம்பவங்கள் நிகழ நேரிட்டால் தம்பியின் உறவு கைகொடுக்கும் அண்ணன் தம்பி உறவு நீடிப்பது பெற்றோர்களுக்கு கடைசி காலத்தில் மன நிறைவை கொடுக்கும்.
தாய் தந்தையர் தமது தாம்பத்யம் வெற்றி பெற்றதாக எண்ணுவர். தாய் தந்தையரின் தாம்பத்யத்தை புனிதமாக கருதும் ஒவொருவரும் தன் உடன் பிறந்தோரை அன்புடன் பேணுவர். நூற்றாண்டு காலம் கடந்து வெற்றி நடை போடும் நிறுவனகளின் பின்னணி அண்ணன் தம்பி உறவின் வலிமையே பாராம்பர்யமாக பேசப்படும் பல குடும்பங்களின் பின்னணியும் உடன்பிறப்புக்களின் ஒற்றுமையின் பின்னணிதான்.
தொடரும்...
அதிரை சித்தீக்
PLEASE VISIT OUR NEW WEBSITE https://adirainirubar.in/


