நீஙகள் அதிரைக்காரவுகளா? உங்களுக்கு மச்சான்ஸ் இருக்கிறாங்களா !? ஆம் என்றால் உங்களுக்காகத்தான் இந்தப் பிரத்யேகப் பதிவு. நம்மூர்க்காரவர்கள் நார்மலாகவே நக்கல்ஸ் பார்ட்டிங்க. அதுவும் இரண்டு மச்சான்களோ, மச்சான் மச்சினன்களோ சந்தித்து விட்டால் போதும் கிண்டலும் நக்கலும் கவுன்ட்டர் அட்டாக்களும் கலை கட்டிவிடும்.
அதுவும் மனைவி பக்கத்தில் இருக்கும்போது மச்சினனைக் கிண்டல் செய்யும் மச்சான்களுக்கு அசுர பலம் வந்துவிடுகிறது. ச்சும்மா பூந்து விளையாடுவார். எம்மாம் பெரிய படிப்புப் படிச்சிருந்தாலும் மச்சினன் மச்சானுக்கும் எளக்காரம்தான். (அதானே ஏன் அப்படி ?) அவரும் அப்படித்தான் போங்க / டா மச்சான் என்றும் பெரிசாக அலட்டிக் கொள்ள மாட்டார் !*
அந்தக் காலத்தில் துக்கடா துணுக்குகள், இந்த காலத்திலே ட்விட்டர். ஆனால், எந்த காலத்திலும் அழியாத நகைச்சுவை மச்சான்ஸ் பரிமாறிக் கொள்வதுதான். அப்படிப் பரிமாறிக்கொண்ட சுவாரஸ்யமான உரையாடல்களை இங்கே பகிர்ந்தீர்களேயானால் வரும்கால மச்சான்ஸ் பரம்பரை உங்களை வாழ்த்தும்.
முக்கியமாக அந்த மாச்சான்ஸிடம் மாப்பிள்ளை மட்டும் இருந்தால், முறுக்கு கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கும் அப்புடி இருந்த சூழலையும் பகிரலாம். எல்லா வற்றையும் விட அந்த மச்சான் மாப்பிள்ளையாக இருந்தபோது திரித்த கயிறு இருந்தாலும் பிரிச்சுப் போடலாம் !
தூள் கிளப்புங்கள் அதிரை மச்சான்ஸ்.
அதிரைநிருபர் பதிப்பகம்

