உயிரைக் குடிக்கும் உயர்சாதிப் பொய்யைப்
பயிராய் விளையப் படிக்கின்ற பாடம்
திரித்து வழங்கும் திருட்டைத்தான் இங்கே
உரித்து விளக்கும் உரை
எல்லையைத் தாண்டிக் கணவாய் வழியில் இடம்பிடித்தோர்த்
தொல்லையைத் தந்துப் பழங்குடி மக்கட் தொலையவேண்டி
சொல்லொணாச் சாத்திரச் சட்டம் கொடுத்த துயரினால்தான்
இல்லையே சாதிகள் என்பதால் இஸ்லாம் இனித்ததுவே!
ஆரியர் வருகை என்று
....ஆணவம் மிக்கோர்க் கூற்று
நேரிய வழியைக் காட்டி
....நெஞ்சினில் நீதி சொல்ல
வாரியே அணைத்து மார்க்கம்
...வழங்கிய நன்மை ஏற்றால்
போரினால் வென்று மாற்றிப்
...போட்டனர் என்ற பொய்யே!
பிஞ்சு நெஞ்சில் நஞ்சினை விதைத்துக்
கொஞ்சிப் பேசும் வாஞ்சை நட்பினில்
பிளவைக் கூட்டிப் பிள்ளைகள் கொலைசெயும்
களத்தை நாடக் கண்ட வித்தை
பாரினில் பலருமே படையால் வந்தவர்
ஊரினில் இளைத்தவன் உண்மை சொல்லும்
முஸ்லிம் என்பதால் முடிவில்
இஸ்லாம் என்றதும் இழிவாய்ப் போனதே!
”கவியன்பன்” கலாம்
பயிராய் விளையப் படிக்கின்ற பாடம்
திரித்து வழங்கும் திருட்டைத்தான் இங்கே
உரித்து விளக்கும் உரை
எல்லையைத் தாண்டிக் கணவாய் வழியில் இடம்பிடித்தோர்த்
தொல்லையைத் தந்துப் பழங்குடி மக்கட் தொலையவேண்டி
சொல்லொணாச் சாத்திரச் சட்டம் கொடுத்த துயரினால்தான்
இல்லையே சாதிகள் என்பதால் இஸ்லாம் இனித்ததுவே!
ஆரியர் வருகை என்று
....ஆணவம் மிக்கோர்க் கூற்று
நேரிய வழியைக் காட்டி
....நெஞ்சினில் நீதி சொல்ல
வாரியே அணைத்து மார்க்கம்
...வழங்கிய நன்மை ஏற்றால்
போரினால் வென்று மாற்றிப்
...போட்டனர் என்ற பொய்யே!
பிஞ்சு நெஞ்சில் நஞ்சினை விதைத்துக்
கொஞ்சிப் பேசும் வாஞ்சை நட்பினில்
பிளவைக் கூட்டிப் பிள்ளைகள் கொலைசெயும்
களத்தை நாடக் கண்ட வித்தை
பாரினில் பலருமே படையால் வந்தவர்
ஊரினில் இளைத்தவன் உண்மை சொல்லும்
முஸ்லிம் என்பதால் முடிவில்
இஸ்லாம் என்றதும் இழிவாய்ப் போனதே!
”கவியன்பன்” கலாம்


