Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

யா அல்லாஹ்! இவர்களை மன்னிப்பாயா, தண்டிப்பாயா? உன்னிடமே விடை தேடுகிறோம். 6

அதிரைநிருபர் பதிப்பகம் | June 08, 2011 | ,

அஸ்ஸலாமு அலைக்கும்..

தாய் நாடா தவழ்ந்த நாடா என்ற தலைப்பில் ஷரீஅத்திற்க்கு முரன்பட்டு நடைமுறை படுத்தும் நமது சகோதரர்களின் அலட்ச்சியப் போக்கை களைஎடுக்க எழுத நினைத்த போது அதிரவைக்கும் இந்த அவலச் செய்தி என்னை சற்று நிலை குலையச் செய்தது. இதை படிக்கும் அதிரைநிருபர் வாசகர்கள் இருகரமேந்தி இவர்களின் ஹிதாயத்திற்கு துஆ செய்வதோடு மக்கா மஸ்ஜித் இமாம் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கொடுத்து இனிமேலும் இது போன்று தவறுகள் தொடராமலிருக்க நினைவு படுத்தவும்.

இன்ஷா அல்லாஹ் விரைவில் ஷரீ அத் விஷயத்தில் தாய் நாடா, தவழ்ந்த நாடா சிறந்தது என்ற உண்மை சம்பவம் பெயர் குறிப்பிடாது இங்கு எழுத அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்!

யா அல்லாஹ் என்னுடைய பலஹீனமான ஈமான் தான் இன்னும் இத்தகைய இணைவைக்கும் இடங்களை இடித்து தரை மட்ட மாக்க முடியாமல் தடுக்கிறது யா அல்லாஹ் இனிமேலும் ஈமானை பறிகொடுக்கும் இத்தகைய அவல நிலையை அரங்கேற விடாமல் தடுத்து நிறுத்தும் மனோ வலிமையை தந்தருள்வாயாக.

அண்ணாசாலை தர்காவில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை!

இதோ தினமனி செய்தி புகைப்படத்துடன்:-

சென்னை, ஜூன்.7: நடிகர் ரஜினி விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் வெள்ளிக்கிழமையன்று சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.
ரஜினி ரசிகர்கள் இணையதளம் சார்பில் வெள்ளிக்கிழமை மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்கா ஹஸ்ரத் சையத் மூஸா ஷா காதிரியில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ரஜினி ரசிகர்கள் திரளாக பிரார்த்தனையில் கலந்துகொண்டனர். சுமார் அரை மணிநேரம் தர்காவினுள் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

-அப்துர் ரஷீத் ரஹ்மானி
தமாம், K.S.A.

6 Responses So Far:

Yasir said...

படிக்குபோதே அருவருப்பாக இருக்கிறது....என்று இந்த மாக்கள் நல்லவழி பெறப்போகிறார்களோ....துவா செய்கிறோம்..

சகோ.அப்துர் ரஷீத் ரஹ்மானி அவர்களே மார்க்க சம்பந்தமான ஆக்கங்கள் என்றுமே தேவை...”தாய் நாடா, தவழ்ந்த நாடா சிறந்ததா” விரைவில் வெளிவர பிரார்த்திக்கிறோம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

யா அல்லாஹ் என்னுடைய பலஹீனமான ஈமான் தான் இன்னும் இத்தகைய இணைவைக்கும் இடங்களை இடித்து தரை மட்ட மாக்க முடியாமல் தடுக்கிறது யா அல்லாஹ் இனிமேலும் ஈமானை பறிகொடுக்கும் இத்தகைய அவல நிலையை அரங்கேற விடாமல் தடுத்து நிறுத்தும் மனோ வலிமையை தந்தருள்வாயாக. !

”தாய் நாடா, தவழ்ந்த நாடா சிறந்தது” வெகு சீக்கிரத்தில் எதிர்பார்க்கிறோம் இன்ஷா அல்லாஹ்...

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

"ஒரு தீமையைக் கண்டால் அதைக் கையால் தடுங்கள்! அதற்கு நீங்கள் சக்தி பெறாவிட்டால் நாவினால் தடுங்கள்! அதற்கும் நீங்கள் சக்தி பெறாவிட்டால் மனதால் வெறுத்து ஒதுங்கி விடுங்கள்! - அல் ஹதீஸ்"

இறை நம்பிக்கையாளர் ஒரு தீமையைக் கண்டால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையே மேலே குறிப்பிடப்பட்ட ஹதீஸ் விளக்குகிறது.

நம்முடைய ஈமானின் பல்கீனம் உயர்த்தப்பட்ட கபுர்களை இடித்து தரை மட்டமாக ஆக்குவதை விட்டும் நம்மை தடுக்கிறது எனும் சகோதரரின் கருத்தில் என்னையும் சேர்த்துக் கொள்கிறேன்.

இடித்து தரை மட்டமாக்குவது ஈமானின் உயர்ந்த நிலை! அதற்கு அடுத்த நிலையில் இருக்கின்ற "வாயால் தடுப்பது" என்பது நமது ஆலிம்கள் அநேகருக்கு சாத்தியமே! ஆனால் நமது ஆலிம்கள் பெரும்பாலோர் இதைச் சுட்டிக் காட்டுவதில்லை. மேலும் சுட்டிக் காட்டியவர்களுக்கும் வழிகேடர்கள் என்ற முத்திரையை குத்தி விட்டார்!?

என் கட்டுரையில் சுட்டிக்காட்டியதைப் போல அறிஞர்களின் மௌனமே அநேக தீமைகளுக்கும் அஸ்திவாரம்! நன்மையை ஏவினால் தீமை தானே அகன்று விடும் என்பது வெறும் வரட்டு வாதம்! நன்மை என எண்ணி சமூக அங்கீரத்தோடு ஒய்யாரமாய் நடந்து கொன்டிருக்கிற தீமைகள் சுட்டிக் காட்டப்படாமல் எவ்வாறு நீங்கும்?

இங்கே புகைப் படத்தில் இருப்பவர்கள் இறை நம்பிக்கையாளர்களா அல்லது நிராகரிப்பாளர்களா என்பது நமக்குத் தெறியாது, ஆனால் நம்மில் ஒருவராக, நம் உடன் பிறந்தவர்களாக, உறவினர்களாக, அண்டை வீட்டினராக, ஊர் வாசிகளாக இருக்கின்ற எத்தனை பேர் இது போன்று தர்காக்களிலே மன்டியிட்டுக் கிடக்கிறார்கள்?! எத்தனை பேர் ஜமாஅத்தோடு தொழுகையை நிறைவேற்றிவிட்டு அப்படியே தர்காவுக்கும் சென்று கையேந்தி நிற்கிறார்கள்?! இதற்கெல்லாம் யார் காரனம்? மௌனிகளாக இருக்கின்ற நம் அறிஞர்களில்லையா?

மேலும், இவர்களை அல்லாஹ் மன்னிப்பானா / தன்டிப்பானா என்ற ஐயம் தேவை இல்லை. அல்லாஹ் இணை வைப்பாளர்களையும், இறை மறுப்பாளர்களையும் மன்னிக்க் மாட்டான் என்பதை தனது அருள் மறையாம் திருமறைக் குர்'ஆனில் நேரடியாகவே பல இடங்களில் சொல்லிக் காட்டுகின்றான்.

எனவே, செய்த தவறுக்கு பாவ மீட்சி பெறாமல் இணை வைப்பாளர்களாக, இறை மறுப்பாளர்களாக மரனிப்பார்களாயின் நிரந்தர நரகவாசிகளே!

அல்லாஹ் நரகத்தின் தீங்களைவிட்டும் நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் பாதுகாத்து ஜன்னத்துல் பிர்தௌசில் நுழையச் செய்வானாக!

ம'அஸ்ஸலாம்
அபு ஈசா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// Abu Easa சொன்னது… மேலும், இவர்களை அல்லாஹ் மன்னிப்பானா / தன்டிப்பானா என்ற ஐயம் தேவை இல்லை. அல்லாஹ் இணை வைப்பாளர்களையும், இறை மறுப்பாளர்களையும் மன்னிக்க் மாட்டான் என்பதை தனது அருள் மறையாம் திருமறைக் குர்ஆனில் நேரடியாகவே பல இடங்களில் சொல்லிக் காட்டுகின்றான்.//

சகோதரர் அபு ஈசா அவர்களின் கருத்துடன் நானும் உடன்படுகிறேன்.

அல்லாஹ் நரகத்தின் தீங்களைவிட்டும் நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் பாதுகாத்து ஜன்னத்துல் பிர்தௌசில் நுழையச் செய்வானாக!

rasheed3m said...

அஸ்ஸலாமு அலைக்கும், அபூ ஈஸா எனக்குள் சந்தேகம் (மன்னிப்பானா/தன்டிப்பானா?) வந்ததை புரிவதில் அவசரப்பட்டு விட்டீர் என்று எண்ணுகிறேன். இந்த இறை நிராகரிப்பு செய்த நிலையிலையே இவர்கள் இறந்து தன்டிக்கப்படுவார்களா/மரணத்திற்க்க்கு முன்னே தாம் செய்வது தவறு என்று உணர்ந்து தவ்பா செய்து மன்னிப்பு பெறுவார்களா என்பதை அடிப்படையாக கொண்டுதான் தலைப்பிட்டுள்ளேன்.

Meerashah Rafia said...

நடுநிலை தராசு தட்டில் கிடக்கும் ஆப்பிள் பழத்தை சாக்கடையில் கழுவி சாப்பிடுவது போல் இருக்கிறது இவர்களது செயல்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு