Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வினாடி வினா போட்டி முடிவுகள் - மாணவிகள் பிரிவு : காணொளி இணைப்பு 20

அதிரைநிருபர் பதிப்பகம் | November 26, 2012 | , , , , , ,


இன்று 26-11-2012 அதிரை பள்ளிகளுக்கிடையே மாணவிகள் பிரிவுக்கான வினாடி வினா போட்டி மிகச் சிறப்பாக இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளியில் நடந்தது.

மாணவிகள் ஆர்வமுடனும் துடிப்புடனும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.

நிகழ்வின் தலைமை மற்றும் அறிமுக உரையை காதிர் முகைதீன் கல்லூரி முன்னால் முதல்வர் பேராசிரியர் அப்துல் காதர் M.A. Mphil. அவர்கள், அவர்களுக்கே உரிய பாணியில் கம்பீரமாகவும் உணர்வுபூர்மாகவும் ஆற்றினார்கள்.

மாணவிகளுக்கான வினாடி வினா போட்டியை திறம்பட நடத்தியவர்கள் பேராசிரியை தஸ்லீமா M.A. Mphil., பேராசிரியை ஆயிஷா மரியம் MSc., Mphil., BEd.

போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகள் விபரம்

முதல் பரிசு : ஆக்ஸ்ஃபோர்ட் மெட்ரிக் பள்ளி
பரிசு தொகை: ரூ.5,000/-
வழங்கியவர்கள்: அல்நூர் ஹஜ் சர்வீஸ்

இரண்டாம் பரிசு: இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி
பரிசு தொகை: ரூ 3,000/-
வழங்கியவர்கள்: ஷப்னம் மினி டவர்ஸ்

மூன்றாம் பரிசு: அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளி
பரிசு தொகை: ரூ 2,000/-
வழங்கியவர்கள்: ஃபேமிலி மார்ட் மற்றும் ஃபேமிலி ரெஸ்டரண்ட்

மேலும் வினாடி வினா நிழ்வை சிறப்பித்தவர்கள் : மூத்த சகோதரர்கள் முஹம்மது ஃபாரூக், S.K.M.ஹாஜா முகைதீன், இபுராஹீம் அன்சாரி, நூர் முஹம்மது மற்றும் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர் ஆஃப்தா பேகம், கலந்து கொண்ட பள்ளி ஆசிரியர்கள்.

நிறைவாக நன்றியுரை: M.தாஜுதீன்,  அதிரைநிருபர் அமீர்.

நிகழ்சிக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்து, நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற பேருதவியாக இருந்த சகோதரர் ஹசன் (அபு இஸ்மாயில்) மற்றும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளுக்கு உதவி செய்த சகோதரிகள் Y. சபீரா ,  M.S. ராபியா ஆகியோருக்கும், இமாம் ஷாஃபி (ரஹ்) நிர்வாகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அற்புதமான இந்த நிகழ்வின் காணொளி இதோ உங்கள் பார்வைக்கு



முதல் பரிசு : ஆக்ஸ்ஃபோர்ட் மெட்ரிக் பள்ளி


இரண்டாம் பரிசு: இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி


மூன்றாம் பரிசு: அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளி




அடுத்த போட்டி நாளை (27-11-2012) மாணவர்களுக்கிடையே நடைபெற இருக்கிறது இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் குழு

20 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நிகழ்வை ஏற்படுத்திய, பங்களித்த,பரிசளித்த, பரிசு பெற்ற யாவருக்கும் வாழ்த்துக்கள், அடுத்த பகுதியும் இன்சா அல்லாஹ் சிறப்பாய் நடைபெறட்டும்.

காணொளியை காண ஆவலாய்...

இப்னு அப்துல் ரஜாக் said...

அதிரை நிருபரின்
வினாடி வினா
வென்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள்
தோற்றவர்கள் முயற்சிக்குரியவர்கள்
மீண்டும் முயலுங்கள்
அல்லாஹ்வின் மேல்
நம்பிக்கையும்
முயற்சியில் உறுதியும்
இருந்தால்
அடுத்த வெற்றி
இறைவன் நாடினால்
உங்களுக்கே

Unknown said...

Assalamu Alaikkum,
Thanks a lot to Adirai Nirubar to publish the video and pictures on time. Congratulations for the students whoever participated and the students who won prizes. May Allah accept the sponsors' good intentions towards Adirampattinam students' education and developments.

Abdul Razik said...

This is my longtime dream, which realized by AN masha allah, this event should be continual, I hope AN will conduct this program as interminable. , our students step out from their graduation, they are having field knowledge only, they don’t have any communication or General knowledge power. This reasons are weakening them to achieve healthier profession in future. I hope AN will conduct Verbal and GK programs more in future. We must support always this type of valued programs.

Abdul Razik
Dubai

sabeer.abushahruk said...

காணொளி மற்றும் புகைப்படங்களைப் பதிந்தமைக்கு மிகவும் நன்றி.

நடத்தித்தந்தவர்களுக்கும் கலந்துகொண்டவர்களுக்கும் நன்றியும் துஆவும்.

Yasir said...

காணொளி மற்றும் புகைப்படங்களைப் பதிந்தமைக்கு மிகவும் நன்றி.
நடத்தித்தந்தவர்களுக்கும் கலந்துகொண்டவர்களுக்கும் நன்றியும் துஆவும்

அப்துல்மாலிக் said...

பள்ளிகளிடையே அறிவுத்திறமையை வெளிக்கொணர அ.நி எடுத்த முடிவுகள் பாராட்டுக்குரியது, வாழ்த்துக்கள்.. காணொளியில் ஆடியோ பதிவு தெளிவா இல்லை அடுத்த முறை இதில் கவனம் செலுத்தினால் நலம்

வெற்றிப்பெற்ற பள்ளிகளுக்கும் அதன் மாணவிகளுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்....!

Anonymous said...

நடத்தித்தந்தவர்களுக்கும் கலந்துகொண்டவர்களுக்கும் நன்றியும் துஆவும்,உலக கல்வியும் நன்மையானா காரியம்மே,அல்லாஹு எல்லா சமூகத்திலும் நிம்மதியையும்,நேர்வழியும் கொடுபனாக ஆமீன்.

Shameed said...

மாணவ மாணவியரின் அறிவை வளர்க்க அதிரை நிருபர் எடுத்த அருமையான முடிவு இதில் ஈடு பட்ட அனைத்துள்ளங்களுக்கும் நன்றியும் துவாவும்

Unknown said...

பங்களித்த,பரிசளித்த, பரிசு பெற்ற யாவருக்கும் வாழ்த்துக்கள், அடுத்த பகுதியும் இன்சா அல்லாஹ் சிறப்பாய் நடைபெறட்டும்.

Iqbal M. Salih said...

மாஷா அல்லாஹ். மிகவும் சந்தோஷமான விஷயம்.

கா.மு.உயர்நிலைப்பள்ளி மாணவனாக நான், இதோ அமர்ந்திருக்கும் என் பிரியத்திற்குரிய ஹாஜா முகைதீன் சார் அவர்களிடம், பொதுஅறிவுப்போட்டியில் முதலாவதாக வந்து, அவர்கள் கையாலே புத்தகம் பரிசு பெற்றதும் என் நினைவில் வருகின்றது! அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளை அளிப்பானாக!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவிகளுக்கும், அவர்களை ஊக்கப்படுத்திய அனைத்து ஆசிரியர்களுக்கும், மிகச் சிறப்பாக நடத்திய பேராசியைகள், பேராசிரியர் மற்றும் அனைத்து பெரியோர்களுக்கும் உளம் கனிந்த நன்றிகள் !

மிகச் சிறப்பான முறையில் முதல் போட்டியை நடத்தவும் அதற்கு பெரும் உதவியாக இருந்த ஸ்பான்சர்ஸ் மற்றும் களப்பணிகளில் ஈடுபட்ட சகோதர சகோதரிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !

இது தொடரும் இன்ஷா அல்லாஹ் ! இன்னும் சிறப்பாக !

ZAKIR HUSSAIN said...

பார்ப்பதற்கு எளிதாக தெரிந்தாலும் ஒரு கல்யாணத்தின் வேலையை விட அதிகம் பெண்டு கழட்டும் விசயம் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது. பொறுமையுடன் வேலைகளை செய்த சகோதரர்கள் தாஜுதீன் / இப்ராகிம் அன்சாரி அண்ணன் இருவரும் ஒரு வாரம் மலையடிவாரத்துக்கு சுற்றுலா செல்வது நல்லது.

"அப்புறம் போகனும்' என தள்ளிப்போட்டால்.....ரெடி ஃபார் ஒன் மோர் காது குத்து / சுன்னத் / கல்யாணம்.


All the best for the students and moderators. You have done a wonderful Job and not forgetting the sponsors.



Anonymous said...

best wish all paricipates schools, particularily oxforts sir udayakumar
weldone

KALAM SHAICK ABDUL KADER said...

Thanks a lot to Adirai Nirubar to publish the video and pictures on time. Congratulations for the students whoever participated and the students who won prizes. May Allah accept the sponsors' good intentions towards Adirampattinam students' education and developments.

Thanks for accepting my opinion to include Mr.Noor Muhammad (navalar)in the team. Jazakkallah khairan for AN, organizers and sponsors,

Students will now realize the importance of learning GK.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புத் தம்பி தாஜூதீன் (அ.நி.அமீர்) அவர்களின் நன்றியுரையில் மிகவும் கம்பீரமாகவும், தெளிவாகவும் பேசியதைக் கேட்டேன்; இன்ஷா அல்லாஹ் நல்ல பேச்சாளராக வருவார்; தாஜுதீன் இடம் எந்தப் பணியைக் கொடுத்தாலும் திறம்படச் செய்வார்; தான் எடுத்த முடிவிலிருந்து சிறிதும் பின்வாங்காதவர். முதன்முதலாக அதிரை அனைத்து மஹல்லா பெருநாள் சந்திப்பில் என்னைப் பேட்டி எடுத்த பொழுதிலிருந்து அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் அடியேன் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றேன். காணொளிப் பதிவில் அவரின் திறமைப் போற்றத் தகுந்து. அன்புத் தம்பி தாஜூதீன் அவர்கட்கு அல்லாஹ்வின் பேரருள் கிடைக்க துஆ செய்கிறேன்.

Unknown said...

Assalamu Alaikkum

I would like to suggest the following.

The improvements in the next events can be well suggested
as
$ Since the media(pictures and video) published world wide media (like blogs, FaceBook etc.) of conducting the event can be English only. (If the habit of our schools medium of instruction have been English only, then it could have been possible).

$ As I am born and brought up in Adirampattinam I believe its possible to develop English communication a central theme of education in English medium schools. Really it gives edge and confident in our community world wide spreading.

$ It can be suggested that dress code for educational institute should be pant shirts without any hesitation. It can show our commitment and respect to the educational environment.(Why should we stress the students to wear uniform?)

$ In general our schools of muslim community should extend and share islamic ideals and knowledge with non-muslim students. There should be islamic missionary should think and plan about how we can make inter-religious understanding from Islamic point of view in our schools.(I mean there are possibilities of non-muslim students of our schools even after studying at Islamic schools, they would go to join in non-muslim extremist groups and would act against muslims because of lack of understanding).

$ There can be quiz competition in basics of Islam exclusively for non-muslim students. InshaAllah it will be more effective in our Adirampattinam community.

May Almighty Allah accept our well wishes and give us courage to achieve our wishes and to become ideal community.

Thanks and regards

B. Ahamed Ameen
Dubai.

Ebrahim Ansari said...

பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி. இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்திட வல்லோன் வல்லமை தருவானாக.

அல நூர் ஹஜ் சர்வீசஸ் அதிபர் முகமது அலி, கவிஞர் சபீர் அவர்களின் ஷப்னம் மினி டவர்ஸ், மருமகன் சாகுல் பங்களிப்பில் சுப்ரீம் கார்கோ, மருமகனார் யாசிர் அவர்கள் மற்றும் உள்ளூரில் ஒத்துழைத்த பேமிலி ரெஸ்டாரன்ட், ஸ்ட்ரைட் லைன் ஸ்டேஷனரி, முதலிய அனைவரின் சுபிட்சத்துக்கும், வியாபார வளர்ச்சிக்கும் து ஆச செய்வோம். நல்ல மனங்கள் வாழ்க!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி..

இந்த வினாடி வினா போட்டி முழுக்க முழுக்க ஒரு team effort என்று தான் சொல்ல வேண்டும்.

அல்லாஹ் போதுமானவன்.

வினாடிவினா 2012, போட்டி ஆரம்பம் முதல் முடிவு வரை தொடர்பாக விரிவான செய்தியை தனி பதிவாக வெளியிடலாம் என்று எண்ணுகிறேன். பள்ளிகளை வைத்து போட்டிகள் நடத்துவது நல்ல அனுபவம், வினாடிவினா போன்று இன்னும் பிற அறிவுத்திறன் சார்ந்த போட்டிகளை பள்ளிக்களை வைத்து நடத்த எண்ணமிருக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...


மாணவிகளின் அறிவுத் திறன் இன்று உலகில் எவ்வாறு போற்றப்படுகின்றது எனபதற்குக் கீழ்க்காணும் நிகழ்வு ஒரு சான்று:



அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்துப் பாலஸ்தீனத்தின் மீது இராணுவ நடவடிக்கைகளை எடுப்பதும், இராணுவத் தாக்குதல் நடத்துவது தான் இன்றைய அன்றாட நிகழ்வுகளாக இருக்கின்றன. பாலஸ்தீனத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகள் அந்தத் தேசத்தை மேலும் மோசமாக்கியிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் தான் மேற்குக் கரைப் பகுதியில் உள்ள அல்லார் என்ற 9000 பேர்கள் மக்கள் தொகைக் கொண்ட சிறு நகரத்தின் நகராட்சி மேயராகப் பதினைந்தே வயதானப் பள்ளிக்கூடம் செல்லும் இளம் பெண் பஷீர் ஒத்மான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என்பது பாராட்டுதற்குரியது - போற்றுதற்குரியது. ஓர் இளம் பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என்பது, இளைஞர்கள் மத்தியில் ஆளுமைக் குணத்தையும், தலைமைப் பண்பையும் வளர்க்கும் கூடிய முற்போக்கானச் சிந்தனையாகும்.
மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பஷீர் என்ற அந்தப் பெண்ணை வெறும் சம்பிரதாயமாகவோ பெயரளவிலோ மேயராக அலங்கரித்து அழகு பார்க்காமல், நகராட்சி அதிகாரங்களை அந்தப்பெண்ணின் கையில் கொடுத்திருப்பது என்பது பாராட்டுதற்குரியது. அந்தப் பெண்ணே தன்னிச்சையாக நகராட்சி அலுவல்களைக் கவனிக்கிறார். கோப்புகளில் கையெழுத்திடுகிறார். நகராட்சிக் கூட்டங்களைத் தலைமைத் தாங்கி நடத்துகிறார். மக்களைச் சந்தித்துக் குறைகளைஜ் கேட்கிறார். மக்கள் கூட்டங்களில் சுதந்திரமாகப் பேசுகிறார். பொது விழாக்களில் கலந்துகொள்கிறார். இவைகளுக்கு நடுவில் இந்தப் பெண் படிப்பதற்குப் பள்ளிக்கும் சென்று வருகிறார்.
மிகப்பெரிய மக்கள் பணியைச் செய்யும் பஷீர், மக்களைக் கவர்ந்திழுக்கும் பலம் வாய்ந்தத் தலைவராகத் திகழ்கிறார் என்று மேற்குக் கரைப் பகுதி மக்கள் சொல்கிறார்கள். அந்த மக்கள் இவரைப் பெரிதும் விரும்புகிறார்கள். எதிர்காலத்தில் தன் நாட்டை ஆளக்கூடிய பெரிய தலைவராக வரவேண்டும் என்பதே பஷீரின் ஆவலும், கனவும், இலட்சியமும் ஆகும். உலகத்திலேயே சிறு வயது மேயரான பஷீர் ஒத்மான் தனது இலட்சியத்தில் வெற்றிபெற நாமும் வாழ்த்துவோம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு