அரசியல் களம்
இரு'கை' கூப்பி வருவான்.
இருக்கையை பிடிக்க!
மாமன் என்பான்.
மச்சான் என்பான்.
பங்காளி என்பான்.
அம்மா, தாயே என்பான்.
தாய்குலம் என்பான்.
எல்லாரும் ஓர்குலம் என்பான்.
கூப்பிட்ட குரலுக்கு
எல்லாம் தேர்தல் வரைதான்.
இருக்கையை பிடித்தபின்
ஒருகையை மட்டும் காட்டிடுவான்(டாட்டா).ஒருவாய் சோற்று பருக்கைக்கு கூட உதவமாட்டான்.
காரியம் ஆக காலைபிடித்தவன்.ஒவ்வொரு காரியம் செய்யவும் காசு கேட்பான்.
தொகுதிக்கு என்றும் வரமாட்டான்.
தன் தகுதிக்கு மீறி சொத்து சேர்ப்பான்.
நம்மையும் நம் சுற்றத்துடன் சேராமல் பிரிக்க பார்ப்பான்.
கலவரம் உண்டுபன்னுவான்.
இருபக்கமும் கோல்சொல்லி கோலடிப்பான்.
இன்பமாய் பேசி மவுனமாய் வென்றிடுவான்,
மாங்கா மடையர் நாம் தான்,
எப்பொதுமே தோத்து நிற்போம்.
இது வேதனையான வாடிக்கை
இளிச்சவாயர் நம் பேர் ''வாக்காளர்''.
-- CROWN
23 Responses So Far:
இவய்ங்களுக்கா உங்கள் ஓட்டு !
இல்லவேயில்லை(ன்னு) தான் சொல்லிடுங்களேன் !
ஆட்சி அதிகாரம் வேண்டும்
ஆளும்வரை மனிதாக இருந்திட வேண்டும்
இடமறிந்து ஓட்டிட வேண்டும்
உரிமைக்கு குரல் அங்கே ஓங்கிட வேண்டும்...
சிந்திக்க வேண்டிய தருமிது - ஆதலால்
வரிகளுக்கு ஜரிகை கட்டி கவிதை காட்டி கொடுக்கிறது யார் இந்த அரசியல் வாதிகள் என்றும்
கிரவுன்,
நல்ல சாட்டை, கூரான சொடுக்கல், வரி வரியாய் ரணங்கள்: புரிந்தவர் பிழைத்துக் கொள்வர்!
இரு கை கூப்பி
இருக்கை கிடைத்த பின்
பருக்கை உணவுகூட
நம் பசிக்குக் கிடைக்காது.
”ன்”னு “ன்”னு ஒவ்வொரு வரியையும் முடித்து அவன் (வேட்பாளர்)ஒரு “மண்”னுக்கும் உதவாதவன் என்பதை நச்,நச் என்று சொல்லி இருக்கிறீர்கள்...பல்மொழி வித்தகரின் வித்தையில் விளையாடுகிறது தமிழ்...
எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும் “ மாங்கா மடையன் “ என்றால் என்ன ?..மாங்காவிற்க்கும் மடையனுக்கும் என்ன சம்பந்தம்....இது ஒரு 10 மார்க் கேள்வி..எனக்கு திருப்தி அளிக்கும் விளக்கதிற்க்கு ஒரு மாங்கா வழங்கப்படும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாங்கா மடையன் என்ற சொற்றொடருக்கு மாங்காயை "மா" என்றும் அழைப்போம் அல்லவா, அதனால் மாங்காய் மடையன் என்றால் மாமடையன் என்று பொருள்.
To Bro Crown,
//உங்கள் வீட்டு பிள்ளை என்பான்.
கூப்பிட்ட குரலுக்கு.....//
இதே வசனத்தை வைத்து இத்தனை வருடம் ஏமாற்றிய அரசியல்வாதிகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
நல்லது செய்யனும்னு நினைக்கிறவங்க அரசியல்ல இருக்கிறது இல்லே,....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இது நாள்வரையில் நாம் கண்ட அரசியல்வா(வியா)திகளைப் பற்றி சகோதரர் மிகத் தெளிவாகவே பட்டியலிட்டுள்ளார். அல்லாஹ் அருள் புறிவானாக!
ஆனால் இன்று முஸ்லிம்கள் தனித்துவத்தோடு அரசியலில் அடி எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களின் வரவு அரசியல் அத்தியாயத்தை மற்றி எழுதட்டும்! இறையச்சமுடைய அரசியல்வாதிகளை இவ் உலகிற்குத் தரட்டும்! இம்முஸ்லிம்களின் அரசியல் பிரவேசம் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் அனத்து மனித சமுதாயத்தின் மேன்மைக்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும் வாசற் படியாகட்டும்! என்று இறை நம்பிக்கையாளர்களே! இரு கரம் ஏந்தி அனைத்தின் மீதும் ஆற்றலுடையோனாகிய அந்த ஏக இறைவனிடம் பிராத்திப்பீர்களாக!
என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத் தாமே தீங்கிழைத்துக்கொன்ட போதிலும் அல்லாஹ்வுடைய அருளிலே நிராசையடைய வேண்டாம், நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பவன், நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கருனையுடையவன் (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. அல் குர்ஆன் 39:53
மஅஸ்ஸலாம்
அபு ஈசா
Yasir சொன்னது…
எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும் “மாங்கா மடையன்“ என்றால் என்ன ?.
crown (கோனார் தமிழ் உரை) சொன்னது…
மாங்கா மடையன் என்ற சொற்றொடருக்கு மாங்காயை "மா" என்றும் அழைப்போம் அல்லவா, அதனால் மாங்காய் மடையன் என்றால் மாமடையன் என்று பொருள்.
மாங்கா மடையன், பலா மடையன் , வாழை மடையன் என்று மா,பலா,வாழை என்று முக்கணியையும், அதில் மடையன் (கொக்கு)போன்ற வற்றையும் தவறாக அர்த்தம் கொள்ளக்கூடாது!.
மாறாக இப்படி படியுங்கள்!.
அது "மா" கிடையாது!. "மா" வில் உள்ள காலை உடைத்தீர்களேயானால்(?) "ம" என்று வரும்!. இப்போ சொல்லிப்பாருங்கள்!. "மங்கா மடையர்கள்" என்று வரும்!. அப்படித்தான் நம் அரசியல் (பெரும்) வா(வி)யாதிகள் நம்மை எண்ணிக்கொண்டுள்ளனர்.
//எப்பொதுமே தோத்து நிற்போம்.
இது வேதனையான வாடிக்கை
இளிச்சவாயர் நம் பேர் //
இதுதான் 100% உண்மை, காசும், இலவசமும் இதையெல்லம் மறைத்துவிடும் என்று தெரியாதா கிரவுன்
தேர்தல் களத்தையும் அதன் அகங்காரத்தையும் அரைகூவலுடன் சொன்ன விதம் அருமை.
அதிரை முஜீப் சொன்னது… அது "மா" கிடையாது!. "மா" வில் உள்ள காலை உடைத்தீர்களேயானால்(?) "ம" என்று வரும்!. இப்போ சொல்லிப்பாருங்கள்!. "மங்கா மடையர்கள்" என்று வரும்!. அப்படித்தான் நம் அரசியல் (பெரும்) வா(வி)யாதிகள் நம்மை எண்ணிக்கொண்டுள்ளனர்.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.இது போலவும் நானும் யோசித்து பார்தேன்.
ஒரே அலைக்கோட்டில் நம் சிந்தனை உள்ளது. அதுபோல் சகோ. சபீர்காக்காவிடம்
நான் நினைத்த பல அவரும் நினைக்க அசந்து போனதுண்டு.
அஸ்ஸலாமு அலைக்கும்,
5 வருடத்திற்கு பல முறை இது போல் நாமும் வார்தைகளால் கொட்டித்தீர்ப்போம்... பலன் என்ன?
சகோதரர் அபூஈசா சொன்னது போல்,"முஸ்லிம்கள் தனித்துவத்தோடு அரசியலில் அடி எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களின் வரவு அரசியல் அத்தியாயத்தை மாற்றி எழுதட்டும்! இறையச்சமுடைய அரசியல்வாதிகளை இவ்வுலகிற்குத் தரட்டும்! இம்முஸ்லிம்களின் அரசியல் பிரவேசம் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் அனத்து மனித சமுதாயத்தின் மேன்மைக்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும் வாசற்படியாகட்டும்! என்று இறை நம்பிக்கையாளர்களே! இரு கரம் ஏந்தி அனைத்தின் மீதும் ஆற்றலுடையோனாகிய அந்த ஏக இறைவனிடம் பிராத்திப்பீர்களாக!" என்று துஆ செய்வோமாக.
எம் சமுதாயமே உலகையாள தகுதி படைத்தது என்பதை 1400 முன்பே நிரூபனமாகிவிட்டது. இதை அறிந்த மக்கள், சரிவர இன்னும் உணராமல் இருப்பது தான் வேதனை. ஆட்சி அதிகாரம் வேண்டும், அதை வென்றாள இறையச்சமுடைய இளைய படித்தவர்கள் முன்வரவேண்டும்..
முஸ்லிம் லீக் உடைந்தது
சென்னை: 3 தொகுதிகளைக் கொடுத்து பின்னர் அதிலும் ஒன்றை பிடுங்கிக் கொண்டதால் அதிருப்தி அடைந்துள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ஒருபிரிவினர் காயிதே மில்லத் பேரனான தாவூத் மியா கான் தலைமையில் தனி அணியாகப் பிரிந்துள்ளனர். இவர்கள் அதிமுகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர்.
http://thatstamil.oneindia.in/news/2011/03/15/iuml-lead-mia-khan-support-admk-alliance-aid0091.html
//ச்ரொந்ன் (கோனார் தமிழ் உரை//
ஹாஹாஹா... whattttaaa quote!!!. நன்றி முஜீப், சொல்லித்தந்ததற்கு
அஸ்ஸலாமு அலைக்கும்,நண்பா உடல் நலம் உன்னை உலுப்பி இருக்கிறது இங்கே, உதிர்ந்த வார்த்தைகள் அரசியல் வாதிகளின் கள்ள தன்மையை களை எடுத்திருக்கிறது. தொடரட்டும் உன் அரசியல் வாதிகளை அடையாளம் காட்டும் அருமை வரிகள்.
முஜீப்,
கவிதையில் நெறய கை வருதே ஏதும் அரசியல் முஸ்தீபா? நம்ம கோனார்ட்டக் கொஞ்சம் கேட்டுச்சொல்லுங்க.
சகோ. தஸ்தகீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அரசியல் வியாதிகளின் குண நலன்களை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தங்களின் வரிகள் அனைத்தும் உண்மையே.
*****************************************************************
//// தாஜுதீன் சொன்னது… ::: எம் சமுதாயமே உலகையாள தகுதி படைத்தது என்பதை 1400 முன்பே நிரூபனமாகிவிட்டது. இதை அறிந்த மக்கள், சரிவர இன்னும் உணராமல் இருப்பது தான் வேதனை. ஆட்சி அதிகாரம் வேண்டும், அதை வென்றாள இறையச்சமுடைய இளைய படித்தவர்கள் முன்வரவேண்டும்..////
வழிமொழிகிறேன்.
//இரு'கை' கூப்பி வருவான்.
இருக் 'கை' யை பிடிக்க!
இருக்'கை'யை பிடித்தபின்
ஒரு'கை'யை மட்டும் காட்டிடுவான்(டாட்டா).
ஒருவாய் சோற்று பருக்'கை'க்கு கூட உதவமாட்டான்.//
sabeer.abushahruk சொன்னது…
முஜீப்,
கவிதையில் நெறய 'கை' வருதே ஏதும் அரசியல் முஸ்தீபா?
என்மேல் யானையின் தும்பிக்”கை”யைப் போல்
இத்த”கை”ய நம்பிக்”கை” வைத்து,
ஏன் கிரவுனின் சக்”கை”ப் போடு போடும் கவிதையில்
இத்தனைக்”கை” என்று வேட்”கை”யுடன்,
அத்த”கை”ய கேள்வியினை எழுப்பியதும்,
என் இருக்”கை”யில் அமர்ந்து யோசிக்”கை”யில்,
சட்டமன்ற இருக்’கை”யில் அமர
யாசிக்கும் அரசியல்வாதிகளுக்கு,
மக்கள் எல்லாம் ஓரு நம்பிக்”கை”யுடன்
வாக்”கை” அளிக்க இருக்”கை”யில்,
இப்படி ஓரு கேள்வியை மக்களிடம் கேட்டு,
ஓருக்”கை” பார்க்கலாம் என்று
கிரவுனின் “கை” கவிதையை எழுதியதை
நானும் படிக்”கை”யில் எனக்கும்
அப்படித்தான் தோன்றியது, இக்கவிதையில்
ஏன் இத்தனைக் "கை"ககள் என்று!.
எல்லாவற்றிற்கும் என்னிடம் புன்ன"கை"யே இப்போதைக்கு !
கை கொடுங்க முஜீப்,
ச்சும்மா மொக்'கை'யாய் கேட்ட கேள்விக்கு சக்'கை'ப் போடு போட்டுட்டீஙக். 'கை' கொடுங்க. இனி ,'அவரும் இவரும்' ஒரு 'கை' பார்க்காமல் விடமாட்டார்கள்.
அட்ரா சக்'கை'ன்னானாம்.
அஸ்ஸலாமுஅலைக்கும்.மனதில் 'உதய'மானதைத்தான் எழுதினேன்.இதில் எந்த வித 'கை'ங்கார்யமும். இல்லை.முளைத்து இரண்டு 'இலை'கூட ஆகாவில்லை. நான் முஸ்திப்புக்கு தாயார் என்ற முரசும் அடிக்கவில்லை. வெற்றி"மாங்கனி"பறிக்கும் நிலையிலும் நம் சமுதாயம் இல்லை.ஏணியையும் பிடிங்கிவிட்டனர் இதில் எப்படி முன்னேறி நம் சமூகம் எப்படித்தான்
காலம் தள்ளபோகுதோ இந்த தேர்தல் விளையாட்டில்? சின்னமாவது நமக்கு மிஞ்சியதா?சின்னமாவும்.பெரியம்மாவும் இந்த தேர்தலில் பெரிய "கை" இதில் வெளினாட்டில் வந்தம்மாவும் பெரும்தலைகள்.
-------------------------
சகோ.முஜிப் சொன்னதை பார்க்'கை'யில் நம் சமூகம் ஏன் பிறரின் 'கை'த்தடியாக இருக்கனும்? உடனடியாக இதில் ஏதும் நடவடிக்'கை' எடுக்க இயலாதா?இப்படி யோசிக்'கை'யில் 'கை'மேல் பலனாய் இன்சாஅல்லாஹ் நமக்கும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்'கை'யை நீட்டினர் சகோ.அபு ஈசாவும்,சகோதாஜுதீனும்.இப்பத்தான் சமுதாயம் மெல்ல 'கை'த்தாங்கலாக எழுதுபோல் தெரிகிறது இதை நினைக்'கை'யில் சந்தோசம் எட்டி பார்க்கிறது. ஒருனாள் இது நடக்'கை'யில் நம் சமூகம் அடையும் பெரும் நன்மை இன்சா அல்லாஹ்.
/// அஸ்ஸலாமுஅலைக்கும்.
மனதில் 'உதய'மானதைத்தான் எழுதினேன்.
இதில் எந்த வித 'கை'ங்கார்யமும் இல்லை.
முளைத்து இரண்டு 'இலை'கூட ஆகாவில்லை.
நான் முஸ்திப்புக்கு தாயார் என்ற முரசும் அடிக்கவில்லை. வெற்றி"மாங்கனி"பறிக்கும் நிலையிலும் நம் சமுதாயம் இல்லை. ஏணியையும் பிடிங்கிவிட்டனர் இதில் எப்படி முன்னேறி நம் சமூகம் எப்படித்தான் காலம் தள்ளபோகுதோ இந்த தேர்தல் விளையாட்டில்? சின்னமாவது நமக்கு மிஞ்சியதா? சின்னம்மாவும். பெரியம்மாவும் இந்த தேர்தலில் பெரிய "கை" இதில் வெளிநாட்டிலிருந்து வந்தம்மாவும் பெரும் தலைகள்.////
கிரவ்ன்(னு) சூப்பரு(டா)ப்பா அருமையான வார்த்தகளின் ஜல்லிக் கட்டு விளையாட்டு(டா)ப்பா ! ரொம்ப நாளைக்கு அப்புறம் உன்னோடு பக்கத்திலிருந்து பேசியதுபோல் இருந்தது !
நீங்கள் சொல்ல மறந்த மற்ற சின்னத்தை என் இணைய தளத்தில் சென்று காணுங்கள்!
http://adiraimujeeb.blogspot.com/2011/03/blog-post_15.html#more
//கிரவ்ன்(னு) சூப்பரு(டா)ப்பா அருமையான வார்த்தகளின் ஜல்லிக் கட்டு விளையாட்டு(டா)ப்பா ! ரொம்ப நாளைக்கு அப்புறம் உன்னோடு பக்கத்திலிருந்து பேசியதுபோல் இருந்தது !//
எங்களுக்கும் (அ.நி.யின் வாசக வட்டம்) ஒட்டுக் கேட்டதுபோலிருந்தது!
where is hameed?
Post a Comment