Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் திடீர் கல்லறை ! - விவாதக்களம்... 31

அதிரைநிருபர் பதிப்பகம் | February 07, 2013 | , , ,


அதிரை மக்களுக்கு தங்களது வருமானத்தில் ஒரு பெரும் பங்கை வீடு கட்டுவதில் செலவழித்து விட்டு அதன் பின்னர் காலம் முழுவதும் சம்பாதித்தேன் அது எங்கே சென்றது என்று தேடுவதிலேயே மீதமிருக்கும் காலத்தை கழிக்க வேண்டிய நிலை என்பது நிதர்சனமான உண்மை !

அதிருக்கட்டும் ஒரு பக்கம், நேற்று ஒரு மையத் இன்று ஒரு மையத் நாளை ஒரு மையத் என்று பழகிய நமக்கு எவ்வளவுதான் பாசமிக்கவர்களாக இருந்தாலும் அவர்களின் இறப்புக்கு பின்னர் அவர்களை ஜனாஸா என்றுதான் அழைக்கிறோம் அப்பேர்பட்டவர்களையே, சிறிது நேரத்தில் அடக்கம் செய்துவிட்டு வந்து நமது மற்ற வேலைகளை செய்யத் தொடங்கி விடுகிறோம்.

ஆனால் ! ஏனோ !?

கல்லறை கட்ட எங்கிருந்துதான் புனிதமானவர்கள் என்ற பெயரை தேர்ந்தெடுக்கிறார்களோ தெரியவில்லை, இருக்கும் இரண்டு சிமின்ட் கல்லறைகளுக்கும் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் கட்டிடம் ஊருக்கே ஒரு சாபக் கேடு என்று காலம் காலமாக நாம் புலம்பி வந்தாலும். சமீபத்தில் வெட்கக் கேடான கேவலமான காரியத்தை நம் கண்முன்னாலே நடத்தியிருக்கிறது ஒரு கூட்டம்.

மக்களின் மடமையை பயன்படுத்தி அவர்களின் மூட நம்பிக்கைக்கு புகைமூட்டி அதில் குளிர்காய எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் இந்த புதிய கல்லறை, அதுவும் ஏற்கனவே இருக்கும் கல்லறைக் கட்டிடத்திற்கு அருகிலேயே புதியதொரு கல்லறை...!!!

அந்தோ!! என்ன கேடு இந்த கல்லறை வணங்கிகளுக்கு !? எப்படி வந்தது இந்த துணிவு !? ஏன் இன்னும் இதனை விட்டு வைத்திருக்கிறார்கள் நமதூர் சகோதரர்கள்...!?

இதற்கு என்னதான் காரணம் !? தீர்வுதான் என்ன ?

வாருங்கள் விவாதிக்கலாம், தனிமனித சாடல் இன்றி... நேர்மையாகவும், இறையச்சத்துடனும் கருத்துக்களை எடுத்து வையுங்கள் இன்ஷா அல்லாஹ் !

வரம்பு மீறும் கருத்தாடல்கள் நெறியாளரின் பார்வைக்கு வரும்பட்சத்தில் உடணடியாக நீக்கம் செய்யப்படும் !

அதிரைநிருபர் பதிப்பகம்

31 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

யாருங்க அந்த 'ஜொஹரா அம்மாள்' !? கழிப்பிடத்தில் பெயர் பொறிக்க கல்லறை எழுப்பி பச்சைப் போர்வை போர்த்தி குளிர் காய்வது !?

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

அவரை போட்டா துவரையா முலைக்கும்
என்பார்கள் நம்முன்னோர்கள்
ஆனால் மனிதனை புதைத்தால்
கல்லறை முலைக்கின்றதே எப்படி?

சமீபகாலமாக அதிரையில் தர்கா வசூல் நன்றாக நடைபெருகிறது காரனம் ECR ROAD வந்த பின் மலையாளிகளின் வருகை அதிகமாகி இருக்கிறது! வியாபாரத்தை பெருக்க கடைகளுக்கு பதில் கல்லரைகளை அதிகப்படுத்துகிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக

sabeer.abushahruk said...

யார்தான் தவறு செய்யவில்லை. நான்கூடத்தான் அறியாமைக் காலத்தில் தர்ஹாக்களுக்குச் சென்று உண்டியலில் காசு போட்டிருக்கேன். ஆனால் இது தவறு என்று தெரிந்தபிறகு விலகிக்கொண்டேன்.

இது தவறு என்று உணர மார்க்க அறிவுகூட அவசியமில்லை. அறிவு இருந்தாலே போதும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் நான் பேசிய யாவரும் இது தவறு என்கின்றனர். ஆனால், யாரும் உடைத்தெரிய தயாரில்லை.

அல்லது, இதைக் கட்டியவர்களுக்கெதிராக தலை நிமிர முதுகெலும்பில்லை.

வேறென்னத்தச் சொல்ல.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அல்லது, இதைக் கட்டியவர்களுக்கெதிராக தலை நிமிர முதுகெலும்பில்லை.//

யர் அவர்கள் !?

sabeer.abushahruk said...

எங்கும்மா எனக்கு 5 வயசு இருக்கும்போது என்னை மொட்டையடிச்சு, தோளில் பச்சை நிற பக்கிர்சா பையை மாட்டி சொந்தக்கார வீட்டிலெல்லாம் போய் அரிசி அல்லது காசு பிச்சை எடுத்து வரச் செய்து தைக்காலுக்குச் செலுத்தச் சொல்லும்.

மூன்று பிள்ளைகளில் நான்மட்டும்தான் தங்கினேனாம். என்னைய தக்க வைத்துக்கொள்ள வேண்டுதலாம். அதே என் உம்மா, ஹஜ் செய்த பிறகு இந்த வயதிலும் தர்ஹா தவறு என்று உணர்ந்து தவ்ஹீது வழியில் வாழ்ந்து வரும்போது, விவரமானவரக்ளான தெருவாசிகள் திருந்தக் கூடாதா.

sabeer.abushahruk said...

/யார் அவர்கள் !?//

யாருக்குத் தெரியும். நிச்சயமாக நீங்களும் நானும் அல்ல. எப்படியோ, செய்தவர்மீது தவறு என்றாலும் கண்டும் காணாமல் அல்லது கண்டு ஆதரித்து இருப்போர் மீதும் தவறு இல்லையா.

பஞ்சாயத்து என்ன செய்யுது.?

எனக்கு முன்பு நான் எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. அதுக்கு மட்டும்தான் பஞ்சாயத்தா?

மீண்டும் மீண்டும் நசுங்குது செம்பு:

ஊரைவிட்டு
விலக்கி வைத்தனர் என்னை
நீரைவிட்டு
நிலத்தி லிட்டனர் மீனை

ஊரினம் யாவரும்
ஓரின மாயினர்
எனக் கெதிராய்
காரண மாயிரம்
தோரண மாயின

சீர்திருத்தம் சொன்னவரை
பெரியார் என்றனர்
சிறுதிருத்தம் சொன்ன எனை
பிரிந்துபோ என்றனர்

பஞ்சாயத்தில்
புலிவேஷத்துடன்
பத்தாயத்து
எலிகள்…
படிப்பறிவு இன்றியே
ஒரு
பிடி பிடித்தன

பிஞ்சுகள் இருவர்
பிழை செய்தனர்
விடியோ விளையாட்டென
வாழ்க்கயை எண்ணினர்
வாழத் தலைப்பட்டு
வீடுகள் துறந்தனர்

ஓடிப் போனவரைத்
தேடிப் பிடித்தனர்
ஊர்கூடி யமர்ந்து
ஓயாது பேசினர்



சட்டமோ
சுய அறிவோ
இன்றி
தீவட்டித் தீர்ப்பு ஒன்றை
சொல்லிவைத்தனர்

பஞ்சாயத்துக்குப்
பணம் கட்டி
பாவம் தீர்க்கச் சொன்னனர்

பிள்ளைகள் தவறுக்கு
பெற்றோருக்குத் தணடனை

ஒழுக்கக் கோட்பாடுகளில்
ஊருக்குப் பொருப்பில்லையா
ஓடிப்போகாமல் தடுக்க
ஊர் என்ன செய்தது

தவற்றை
நிகழாமல்
திருத்தி
தடுக்கத்
தவறிய
பஞ்சாயத்துக்கு
என்ன தண்டனை

சொல்லி முடித்ததும்
என்னை
தள்ளி வைத்தனர்

மசால் வடையும்
மலாய் சாயாவும்
மினெரல் வாட்டரைக்
குடித்தும் கொப்பளித்தும்
கலைந்துச் சென்றது பஞ்சாயத்து!


KALAM SHAICK ABDUL KADER said...

\\தவற்றை
நிகழாமல்
திருத்தி
தடுக்கத்
தவறிய
பஞ்சாயத்துக்கு
என்ன தண்டனை\\

நாட்டாமைத் தீர்ப்பை மாற்று என்று காட்டுக் கத்துக் கத்தினாலும், காதில் ஈயம் பாய்ச்சியிருக்கும் போதில் செவிக்கெட்டாதே!


sabeer.abushahruk said...

ஜொஹரா அம்மாள் ஜோரா எழுந்தருளியிருக்கும் என் பாரம்பரிய மிக்க கடற்கரைத்தெருவில் இனி சீக்குப்பிணி நீங்கி, பசி பட்டினியின்றி தெருவாசிகளும் ஊர்க்காரர்களும் பாதசாரி மலையாளிகளும் நீடூழி வாழப்போகிறார்கள்.

ஏனையோரே, சீக்கிரம் ஆளாளுக்கு ஒரு அவுலியாவை உருவாக்கி உருப்படப் பாருங்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பஞ்சாயத்தில்
புலிவேஷத்துடன்
பத்தாயத்து
எலிகள்…
படிப்பறிவு இன்றியே
ஒரு
பிடி பிடித்தன//

பஞ்ச் !

எபோதான் தரை மட்டமாகும் ? இதோ அதோ என்று இருந்ததே !?

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்

கழிவறை
அதுவோ
கல்லறையானது
காரமாணோர்
எண்ணமோ
சில்லறையானது
கண்டோர்
மனமோ
கல்லாகிப்போனது
இல்லாமலில்லை
இறைவா நீ
எங்களைக்
காப்பாயாக!

அதிரை சித்திக் said...

கல்லறைக்கான காரணங்கள் எதுவும் சொல்கிறார்களா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//கல்லறைக்கான காரணங்கள் எதுவும் சொல்கிறார்களா?//

#//கல்லறைக்கான காரணங்கள் எதுவும் சொல்கிறார்களா?
கேட்டதற்கு அவர்கள் சொன்ன கதை என்ன தெரியுமா?இவர்களுடைய கனவில் போய் அந்த அம்மா சொன்னிச்சாம் விலை வாசி எல்லாம் நன்றாக ஏறி கொண்டு இருக்கிறதே இந்த காலத்தில் 2 உண்டியல் எப்படி பத்தும்? ஆக நான் வெயிலிலும் மழையிலும் கிடப்பது உங்களுக்கு தெரிய வில்லையா?எனக்கு ஒரு உண்டியல் வைத்தால் நல்லா கல்லா கட்டலாமே என்ற அறிவு கூட உங்களுக்கு இல்லையா என்று கேட்டுச்சாம்.உடனே இவர்கள் அதிரடியாக கட்டடம் கட்டி அதற்கு ஜொகரா அம்மாள் பீவி கப்ர் என்று பெயரும் வைத்து விட்டார்கள்
கனவில் வந்து சொன்னார் என்றால் யாரும் ஆதாரம் கேட்க முடியாது அல்லவா? அதற்கு தான் கனவு என்ற ஆயுதம்.#//
மேலும் பார்க்க http://www.adiraitntj.com/2013/01/blog-post_27.html

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மற்றது இருக்கட்டும். இப்போதைக்கு தப்லீக்கும், தவ்ஹீதும் இணைந்து கனவு கண்ட வள்ளலை அழகாக சந்தித்து பக்குவப்படுத்தி அதிரடியாக இடித்து விட வேண்டும். அந்த நாள் வெள்ளியாக இருக்கனும். அது இன்றே நடக்கனும். இன்சா அல்லாஹ்!
----------------------------------------------------------------------------------------------------

இன்று. ரபியுள் அவ்வல் 26, யவ்முல் ஜூம்'ஆ

Ebrahim Ansari said...

துணிச்சலுக்குப் பெயர் போன கடல்கரைத்தெரு இளைஞர்கள் திரண்டு இதை இடிக்க வேண்டும். இதைக் கட்டிய கசடர்கள் மீது காவல் துறையில் போது அமைதிக்கு பங்கமாகவும் மார்க்க நெறி முறைகளுக்கு எதிராகவும் இது கட்டப் பட்டு இருப்பதாக ஊரின் மார்க்க அறிஞர்கள் புகார் அல்லது வழக்கு மன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இப்னு அப்துல் ரஜாக் said...


துணிச்சலுக்குப் பெயர் போன கடல்கரைத்தெரு இளைஞர்கள் திரண்டு இதை இடிக்க வேண்டும். இதைக் கட்டிய கசடர்கள் மீது காவல் துறையில் போது அமைதிக்கு பங்கமாகவும் மார்க்க நெறி முறைகளுக்கு எதிராகவும் இது கட்டப் பட்டு இருப்பதாக ஊரின் மார்க்க அறிஞர்கள் புகார் அல்லது வழக்கு மன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Ebrahim Ansari சொன்னது…
துணிச்சலுக்குப் பெயர் போன கடல்கரைத்தெரு இளைஞர்கள் திரண்டு இதை இடிக்க வேண்டும். //

காக்கா:

அதிரை தாருத் தவ்ஹீத் பொதுவில் விழிப்புணர்வு பிரசுரம் வெளியிட்டும் இன்னும் இடிக்கப்பட வில்லையே ஏன் !?

sabeer.abushahruk said...

தர்கா களியாட்டங்களில் உள்ளார்ந்த விருப்பம் உள்ளவர்களால் எதிர்த்து கோஷம்கூட போட முடியாது.

அங்கே முச்சந்தியில் வைத்து சாராயம் விற்றால்கூட கூடிப்பேசி முடிவெடுப்பார்களே தவிர, அடித்து உடைத்து விரட்டும் எங்கள் காலம் வராது.

யார் அனுமதியும் பெறாமலா கபுர் கட்டியிருப்பார்கள்? சட்டப்படி நடவடிக்கை எடுப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு மொத்தத் தெருவுக்கும் எதிராக ஒரு நபரின் வேலையாக இது தெரியவில்லை. ஒரு கூட்டுச் சதிபோல் தெரிகிறது.

sabeer.abushahruk said...

::துணிச்சலுக்குப் பெயர் போன கடல்கரைத்தெரு இளைஞர்கள் ::

ஹி ஹி

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

அஸ்ஸாலமு அலைக்கும் வரஹ்...


அலி (ரழி) அவர்கள் அபுல் ஹய்யாஜ் அல் அஸதியை நோக்கி ‘அறிந்து கொள்! நபிகள் நாயகம் என்னை எதற்காக அனுப்பினார்களோ அதற்காக நானும் உன்னை அனுப்புகின்றேன். (அதாவது) எந்த ஒரு சிலுவையையும் தரைமட்டமாக்காமல் விட்டுவிடாதே, மற்றும் பூமியின் மட்டத்தை விட்டும் உயர்ந்திருக்கின்ற எந்த ஒரு கப்ரையும் சமப்படுத்தாமல் விட்டு விடாதே எனப்பணித்து அனுப்பினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்:1662)

மேற்குறித்த செய்திலிருந்து கப்ருகளை உயர்த்திக் கட்டுவது எவ்வளவு படுபயங்கரமான பாவம் என்பதை உணர முடிகின்றதல்லவா?

இதை உடைத்து எறிவதர்க்கு எம்மாளான முயற்ச்சி செய்து அதர்க்காக ஒரு மசூரா செய்து கப்ர் வணக்கத்தை விட்டு எமது சமுகத்தை காப்பாற்ற வேண்டும்...

தங்கள் நபிமார்களின் அடக்கஸ்த்தலங்களை வணக்கஸ்த்தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறிஸ்த்தவர்களையும் அழ்ழாஹ் சபிக்கிறான் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரிரி 436, 437)

நபிமார்களின் கப்ர்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டவர்களையே அழ்ழாஹ் சபிக்கின்றான் என்றால் முகவரியற்ற இவ் அவ்லியாக்கள் எம்மாத்திரம்?

படைப்பினங்களிலேயே மோசமானவர்கள் ஒன்று கூடும் தளமே தர்ஹா

“அறிந்து கொள்ளுங்கள்! மக்களிலேயே மோசமானவர்கள் தங்களின் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிக் கொண்டவர்கள் தான்’ என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “ (அறிவிப்பவர் : அபூ உபைதா (ரலி), நூல் : அஹ்மத் -16781)

நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிக் கொண்டவர்களே படைப்பினங்களிலேயே மோசமானவர்கள் என்றால் முகவரியற்ற அவ்லியாக்களுக்குப் பின்னால் செல்பவர்கள்?

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘உங்களுடைய கப்ருகளை தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.’ (அறிவிப்பவர்: ஃபழாலா பின் உபைத் (ரலி), நூல்: அஹ்மத் -22834)

“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.” (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்-1610)
‘இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: முஸ்னத் அல் ஹுமைதி)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையால் அவர்களது கப்ர் பாதுகாக்கப்படுகின்றது. இல்லையென்றிருந்தால் நமது தர்ஹா பக்தர்கள் அன்னாரது கப்ரடியிலும் 12 நாட்கள் மௌலீது வைபவம் நடாத்தி ஊதுபத்தி, பழம், தேங்காய் சகிதம் அபிசேகம் செய்திருப்பார்கள். அழ்ழாஹ் காப்பாற்றிவிட்டான்.


அல்லாஹ் அஃலம்..

Adirai pasanga😎 said...


//Ebrahim Ansari சொன்னது…
துணிச்சலுக்குப் பெயர் போன கடல்கரைத்தெரு இளைஞர்கள் திரண்டு இதை இடிக்க வேண்டும். //

காக்கா துணிச்சலுக்கு பெயர்போனவர்களில் யாரும் அம்மா பக்கமும் இருப்பார்களோ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நேற்று முன் தினம் மின்னஞ்சல் உரையாடலில் நிறைவில் நின்ற பஞ்ச்(சாக) இருந்த சிமிண்டு கல்லறைக்குள் இருப்பவர் கணவில் சொன்னதாக ஜோக்

//எனக்கு என்னவோ கனவில வந்து சொன்னது [வேறு யாரு லீவில் போன அவுலியாதான்] "போட்டோ ஆர்டிக்கிள்" இருக்கிறது (என்று).

எப்படி அவ்வளவு கரக்டா சொல்ரீங்கனு நீங்க கேட்களாம். "எதற்கும் ஒரு வெடக்கோழியும், 1 படி அரிசியும் எட்டு மொழ வேட்டியும் [கோடித்துணி], வாங்கி வரவும்... கெழமெ ராத்திரியில் சொல்ரேன்."

sabeer.abushahruk said...

இந்த ஏழை கண்ட கனவும் பளிக்காதா?

கடற்கரைத்தெருவில் புதிதாக ஒரு கபுரு கட்டப்படவேண்டும் என்று ஒருவர் கனவு காண்பதாகவும் அது பளித்து கபுர் கட்டப்படுவதாகவும் நானும் கனவு கண்டேன் ஆனால் அதே கனவில் அந்தக் கபுரு மூன்று வாரங்களுக்குள் சுக்கு நூறாக உடைக்கப் படுவதாகவும் கனவு கண்டேன். பாதி கனவு பளித்து பாதி பளிக்காததற்கு ஏதாவது பரிகாரம் செய்யனுமா அல்லது கட்டணம் உண்டா?

எண்ணூறு பேருக்குமேல் வந்து வாசித்தும் 10 பேர் மட்டும் எதிர்த்து சொல்லியிருப்பதால் மீதி 790 பேருக்கும் இதில் உடன்பாடு உண்டு என்று கொள்ள்லாமா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எண்ணூறு பேருக்குமேல் வந்து வாசித்தும் 10 பேர் மட்டும் எதிர்த்து சொல்லியிருப்பதால் மீதி 790 பேருக்கும் இதில் உடன்பாடு உண்டு என்று கொள்ள்லாமா?//

ஒருவேளை கப்ரு வணங்கிகளோட பெயர் பட்டியலையும் அந்த கல்லறை கட்ட பாடுபட்டவர்களின் பெயர்களையும் தெரிந்து பதிந்திருக்கனுமோ !?

U.ABOOBACKER (MK) said...

//எண்ணூறு பேருக்குமேல் வந்து வாசித்தும் 10 பேர் மட்டும் எதிர்த்து சொல்லியிருப்பதால் மீதி 790 பேருக்கும் இதில் உடன்பாடு உண்டு என்று கொள்ள்லாமா?//

790 பேரும் வெட்டியா கருத்திடாமல் எப்படி இடிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கலாம் அல்லவா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//வெட்டியா கருத்திடாமல் எப்படி இடிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கலாம் அல்லவா? //

நல்லா யோசிங்க ! சீக்கிரமா ! ஒன்னும் கொறைச்சல் இல்லே... ECR ரோட்டில் வரத்து ஜாஸ்தியாகுவரை....

அப்போது பள்ளிவாசல் நிலம் அபகரிப்பு "அது அல்லாஹ்வின் சொத்து" வெகுண்டெழுந்தாச்சு... (ஏன் அப்போ ஓர் ஆலிம் அங்கே இருந்ததாலா ?)

இப்போ.. (இங்கே ஆலீம் இல்லை என்பதலா ?) கல்லறை கட்டும் வரை ஒவ்வொரு அசைவாக பார்த்தாச்சு... போர்வையும் போர்த்தியாச்சு !! இன்னுமா யோசனை !?

sabeer.abushahruk said...

//790 பேரும் வெட்டியா கருத்திடாமல் எப்படி இடிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கலாம் அல்லவா?//

யோசித்துக் கொண்டிருத்தல் வெட்டியானதா கருத்திட்டுத் தத்தம் எதிர்ப்பைப் பதிவு செய்து பேசுபொருளுக்கு வலு சேர்ப்பது வெட்டியானதா என்பதைச் சகோதரர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

//எப்படி இடிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கலாம்//
சந்தோஷம். மிக்க சந்தோஷம்.

U.ABOOBACKER (MK) said...

இந்தியாவில் ஒன்று உருவாகி விட்டால் அதனை அகற்றுவது மிகவும் கடினம்.இடிக்க முயற்சித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைதான் ஏற்படும்.கப்ர் கட்ட தொடங்கும் போதே கடற்கரை தெரு இளைஞர்கள் அனைத்து ஏகத்துவாதிகளை ஒன்று திரட்டி சட்டரீதியாக தடுத்து இருக்கவேண்டும்.
அந்த அம்மாள் யாரின் கனவில் வந்து சொன்னார்களோ அவரின் கனவில் வந்து கப்ரை இடித்துவிடு என்று சொன்னாலும் இடிக்கமாட்டார்கள். ஏனென்றால் உண்டியலில் காசு பார்த்துவிட்டார்கள்.

இஸ்லாமிய ஆட்சி வந்தால்தான் தர்காக்கள் இடிப்பது சாத்தியமாகும்.கப்ர் வணங்கிகள் திருந்துவதற்கு ஏகத்துவ பிரச்சாரத்தை பல வழிகளிலும் தீவிரப்படுத்த வேண்டும்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

இந்த கப்ரை கட்டியவர்கள் - ஆதரிப்பவர்கள் நரகத்திற்கு செல்வதற்கு டிக்கெட் ரிசர்வ் செய்து விட்டார்கள் என்பதை வல்ல அல்லாஹ்வின் குர்ஆன் வசனம் தெளிவாக விளக்குகிறது.

எந்தப் பாவத்தையும் வல்ல அல்லாஹ் மன்னித்து விடுவான். தனக்கு இணை வைக்கும் பாவத்தை மன்னிக்கவே மாட்டான் - இதற்கு கூலி நரகமே!

புதிய -- பழைய கப்ர்கள் அனைத்தையும் அகற்றுவதற்கு வல்ல அல்லாஹ் அருள் புரியவேண்டும்.


வல்ல அல்லாஹ்வின் பிடி கடினமானது – அதனால் வல்ல அல்லாஹ்வின் அச்சம் துளி அளவாவது இருப்பவர்கள், இந்த புதிய கப்ரையும் - பழைய கப்ரையும் அகற்றுவதற்கு (((அல்லாஹ்வின் சோதனை வருவதற்குள்))) ஏற்பாடு செய்ய வேண்டும்.

அபு இஸ்மாயில் said...

அஸ்ஸலாமு அழைக்கும்
இபுறாஹீம் நபி காலத்தில் பெரிய சிலை சின்ன சிலையை உடைத்தது மாதிரி இப்ப புது கபுறு பழைய கபுரையும் பழைய கபுறு புதிய கபுரையும் உடைக்க போவுது பாருங்க

KALAM SHAICK ABDUL KADER said...

Assalaamu alaikkum

Please watch this video

http://vimeo.com/46936947

Yasir said...

கப்ருவையும் உடைத்தெறிய வேண்டும் அதனை கட்ட உதவிய உதவாக்கரைகளையும் ஒதுக்கி தள்ள வேண்டும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு