அதிரை மட்டுமின்றி அக்கம்பக்க, சுற்றுவட்டார ஊரிலுள்ள மக்களும் பயனடையும்படியான கல்வி நிலையங்களை MKN மதரஸா டிரஸ்ட் பெயரால் 'கொடைவள்ளல்' காதர் முகைதீன் அப்பா அவர்கள் அர்ப்பணித்துச் சென்றார்கள்.
Pre-KG முதல் முனைவர் பட்டம்வரை படிக்கும் வாய்ப்புகள் உள்ளூரிலிருந்தும், மாவட்ட/மாநில அளவில் சாதனை படைத்த அதிரை மாணாக்கர்கள் ஓரிருவரே.
பலதலைமுறைகளாக நம்மை ஏங்க வைத்துக்கொண்டிருக்கும் இந்த நியாயமான எதிர்பார்ப்பை அடையும் நோக்கில், 2014-15 ஆம் கல்வி ஆண்டுகளுக்குள் மாவட்ட/மாநில அளவில் பொதுத்தேர்வுகளில் சாதனை படைக்கும் அதிரை கல்வி நிலையங்களில் பயின்ற மாணாக்கர்களுக்கு 'அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி விருதுகள்' என்ற பெயரால் கடந்த வருடம் முதல் ஊக்கப்பரிசுகள் வழங்கி வருகிறோம்.
இந்த நோக்கத்தைச் செயல்படுத்த நமதூர் கல்வி ஆர்வர்களும், ஊர்நலன் விரும்பும் தன்னார்வலர்களும் மனமுவந்து வழங்கிய தொகையை 2011-12 ஆம் கல்வியாண்டுகளில் சாதனை படைத்த மாணாக்கர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் வழங்கினோம்
இத்தகைய விருதுகள் மூலம் நமதூரில் பயிலும் மாணாக்கர்களும்,பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் கல்வி நிலையங்களை ஊக்குவிக்கவும், கல்வியில்சிறந்த சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிரை கல்வி நிலையங்களில் கல்வி பயின்று முதல் மூன்று இடங்களைப்பெறும் மாணாக்கர்களுக்கு ADIRAIXPRESS SCHOLAR AWARD 2012-13 என்ற பெயரில் இந்த கல்வியாண்டில் SSLC, +2 பொதுத்தேர்வுகளில் அதிகபட்ச மதிப்பெண்கள்பெற்று முதல் மூன்று இடங்களைப்பெறும் மாணாக்கர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நமதூர் மக்களின் கல்வி வளர்ச்சியில் ஆர்வமுள்ள வாசகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முன்வரும் பட்சத்தில் விருது தொகை சென்ற ஆண்டைவிட அதிகமாகவும், முதல் மூன்று இடங்கள் மட்டுமின்றி சிறப்பு ஊக்கப் பரிசுகளும் வழங்கலாம்.விருதுகளுக்கு நன்கொடை (ஸ்பான்சர்ஷிப்) வழங்க விரும்புபவர்கள் adiraixpress@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்.
இப்படிக்கு
அதிரை எக்ஸ்பிரஸ் குழு
10 Responses So Far:
அதிரை நிருபரில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடாத்தும் திட்டம் உண்டா என்றறிய அவா.
அதிரை எக்ஸ்பிரெஸ்ஸின் இந்தத் தொண்டு சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
கவியன்பன், ஒரே மாதிரி சேவைகளை இரு வேறு அமைப்புகள் செய்வதால் குழப்பமே மிஞ்சும் என்பதற்கு நம்மூரில் பல உதாரணங்கள் இருப்பதால்
அ.இ. இதுபோன்ற சேவைகள் செய்கையில் அ.நி. கல்வி மாநாட்டைத் தொடர்ந்து நடத்தும்.
//அ.எ. இதுபோன்ற சேவைகள் செய்கையில் அ.நி. கல்வி மாநாட்டைத் தொடர்ந்து நடத்தும்.//
மிகச் சரியே !
மிக்க நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன். எப்படியோ கல்விக்கான ஊக்கமளிப்பதில் அ.நி. பங்கு மிகவும் மகத்தானதே
1) கல்வி விழிப்புணர்வு மாநாடு
2) வினாடி வினா
இவைகள் சாலச் சிறந்த சான்றுகளாய் மிளிரும்; இதன் மூலம் மாணாக்கர் வாழ்வில் அறிவொளி ஒளிரும்!
கல்விக்கான பங்களிப்பில் அ. நி வும் அ எ வும் வாகனத்தின் இரு சக்கரங்கள் போல் இருந்தால் பயனிக்கக்கூடிய பயனிகளான மாணாக்கர்கள் தங்கள் பாதையில் முன்னெறிச் செல்வது உறுதி.
அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக வழங்கப் பட இருக்கும் கல்வி விருதுகள் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற அதிரை நிருபர் அனைத்து ஒத்துழைப்பையும் நல்குமென எதிர்பார்க்கலாம். அதேபோல் அதிரை நிருபர் நடத்தும் கல்வி விழிப்புணர்வு மாநாடு, வினாடி வினா நிகழ்ச்சிகளில் அ.எ. ஒத்துழைக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.
கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பங்கேற்கும் பொது நிகழ்ச்சியாக நடத்த வேண்டுமென்று சென்ற ஆண்டு ஆசைப் பட்டது போல் ஆசைப் படுகிறேன். இது சொந்தக் கருத்து.
அதிரை எக்ஸ்பிரெஸ்ஸின் இந்தத் தொண்டு சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
அதிரை எக்ஸ்பிரெஸ்ஸின் இந்தத் தொண்டு சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
\\கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பங்கேற்கும் பொது நிகழ்ச்சியாக நடத்த வேண்டுமென்று சென்ற ஆண்டு ஆசைப் பட்டது போல் ஆசைப் படுகிறேன். இது சொந்தக் கருத்து.//
சரியான நேரத்தில் சரியாக நினைவூட்டினீர்கள்!
அதிரை எக்ஸ்பிரெஸ்ஸின் இந்தத் தொண்டு சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
Post a Comment