இக்கணம் முதல்
இத் தளத்தில்
இளைமை மிளிர
இலங்கு மிந்த
இலச்சினை
இலக்கியத் தாகம்
இதயத்தில் தேக்கி
இலக்கு நோக்கிய
இலட்சியப் பயணத்திலும்
இருக்கும் இந்த
இலச்சினை
இன்னும் வர இருக்கும்
இலட்சோப லட்சம்
இடுகைகளையும்
இதுவரை இயற்றிய
இனிமையானவர்களோடும்
இணைந்துத் தொடரும்
இப் பயணம்
இவ்வுலகமெங்கும்
இன்று ஈத் அல்அதா
இனிப்பான உணவோடு
இல்லங்ககளிலெல்லாம்
கொண்டாட்டம்
மழை கழுவிய
அதிரையைப் போல
மனம் தெளிந்த
சகோதரர்களைப்போல
புத்தாடைபோல
புதியகாலையைப் போல
புதுமணத் தம்பதியரின்
புன்னகைகளைப் போல
புத்துணர்வு பெற்ற
வலைப்பூக்கள் போல
புலரும் புது நாளைப்போல
புது இலச்சினை அறிமுகம்
பளபள வென கட்டிடங்களையோ
பாரினிற் சிறந்த ஆசிரியர்களையோ
கொண்டதல்ல இப்பள்ளிக்கூடம்
படைக்கும் ஆசையில்
வகுப்புகள் நிறைத்த
மாணவர்களை
மட்டும் கொண்டது.
கருத்து ஓடையே
சிலிர்த்து ஓடுமிங்கு
எழுத்து நடையில்
வெளுத்து வாங்கும்
கட்டுரை எழுதுவர்
காட்டு காட்டெனக் காட்ட
கவிதை எழுதுவர்
கருக்களும் உயிர்பெற
அருவா கத்தியாலோ
அவதூறு கத்தினாலோ
அடக்க வியலா திந்த
ஆத்மார்த்தப் பயணத்தை
அதிரை நிருபர்
அமைதியின் ஆளுமை
அதிரையின் அழகு !
- சபீர்
இத் தளத்தில்
இளைமை மிளிர
இலங்கு மிந்த
இலச்சினை
இலக்கியத் தாகம்
இதயத்தில் தேக்கி
இலக்கு நோக்கிய
இலட்சியப் பயணத்திலும்
இருக்கும் இந்த
இலச்சினை
இன்னும் வர இருக்கும்
இலட்சோப லட்சம்
இடுகைகளையும்
இதுவரை இயற்றிய
இனிமையானவர்களோடும்
இணைந்துத் தொடரும்
இப் பயணம்
இவ்வுலகமெங்கும்
இன்று ஈத் அல்அதா
இனிப்பான உணவோடு
இல்லங்ககளிலெல்லாம்
கொண்டாட்டம்
மழை கழுவிய
அதிரையைப் போல
மனம் தெளிந்த
சகோதரர்களைப்போல
புத்தாடைபோல
புதியகாலையைப் போல
புதுமணத் தம்பதியரின்
புன்னகைகளைப் போல
புத்துணர்வு பெற்ற
வலைப்பூக்கள் போல
புலரும் புது நாளைப்போல
புது இலச்சினை அறிமுகம்
பளபள வென கட்டிடங்களையோ
பாரினிற் சிறந்த ஆசிரியர்களையோ
கொண்டதல்ல இப்பள்ளிக்கூடம்
படைக்கும் ஆசையில்
வகுப்புகள் நிறைத்த
மாணவர்களை
மட்டும் கொண்டது.
கருத்து ஓடையே
சிலிர்த்து ஓடுமிங்கு
எழுத்து நடையில்
வெளுத்து வாங்கும்
கட்டுரை எழுதுவர்
காட்டு காட்டெனக் காட்ட
கவிதை எழுதுவர்
கருக்களும் உயிர்பெற
அருவா கத்தியாலோ
அவதூறு கத்தினாலோ
அடக்க வியலா திந்த
ஆத்மார்த்தப் பயணத்தை
அதிரை நிருபர்
அமைதியின் ஆளுமை
அதிரையின் அழகு !
- சபீர்
18 Responses So Far:
நபிமொழி அறிவோம்
‘ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)’ என்றார்கள். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) , ஆதாரம் : புகாரி.
கவி தந்த
கவிக் காக்காவுக்கு
நன்றி !
அழகுற மிளிரும் இலச்சினை சொல்லும் இத்தளத்தின் இலட்சியம் !
*******
இவ்வுலகமெங்கும்
இன்று ஈத் அல்அதா
இனிப்பான உணவோடு
இல்லங்ககளிலெல்லாம்
கொண்டாட்டம்
மழை கழுவிய
அதிரையைப் போல
மனம் தெளிந்த
சகோதரர்களைப்போல
*******
இன்ஷா அல்லாஹ் !
மப்ரூக் அதிரை நிருபர்.
அனைத்து சகோதரர்களுக்கும்:
KulluAam WaAnthum BiKhair!!!
இலட்சினையும் இக்கவி(யரசுவும்)யும் இன்பமாயிருக்கிறது இப்பெருநாளிலே! வாழ்த்துக்கள்.
லட்சனமான இலச்சனை
கவித்துவம் வாய்ந்த
கவிதை
அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும். சகோதர சகோதரிகளுக்கு இதயம் கனிந்த ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.
"SELAMAT HARI RAYA AIDIL ADHA"ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
சபீரின் கவிதையில் அதிரை நிருபரின் தனித்தன்மை. புதிதாக வந்திருக்கும் வெப் வேலைப்பாடுகள் புதுமையிலும் புதுமை.
அடுத்து சாகுல் எழுதிய ஆர்டிக்கிள் & போட்டோக்கள் பின்னியெடுக்கப்போகிறதா?
அனைவர்களுக்கும்:
KulluAam WaAnthum BiKhair!!!
அஸ்ஸலாமு அலைக்கும். சரியான வரிகள் ! இவ்வளவு எளிதாக விளக்கம். இப்படித்தான் அதிரை நிருபரின் பயணம் நாள்களை சுகமாக்கியும். சுவையாக்கியும் பயனுள்ளதாக்கியும் கழிகிறது. எல்லா புகழும் அல்லாஹுக்கே! புது இலச்சினை இனி இளய எழுத்தருக்கு புத்துணர்சி பாய்சிடும். மெச்சிடும் அளவில் உள்ளது இந்த இலச்சினை! இனி நாம் அடைய வேண்டிய இலக்கினை இனிதாய் அடைந்து சமூகம் மேல் பட மேலும் . மேலும் தொண்டாற்றவேண்டும். அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் மனம் கனிந்த இனிய ஈகைப்பெருனாள் வாழ்த்துக்கள்
""பாரினிற் சிறந்த ஆசிரியர்களையோ
கொண்டதல்ல இப்பள்ளிக்கூடம்""சகோதரர் சபீர் அவர்களே நீங்கள்தான் பின்னூட்டமிட்டீர்கள் நல்ல அபுபக்கர், எங்கே ஓய்வு எடுக்கிறது? அதான் இங்கேகூட இப்ப பேப்பர் திருத்துகிறார்களே!!! வாவன்னா சாரை மறந்திட்டீங்களே
Awesome Logo.
My Feedback:
* Inside "A(Green Color)" u can remove Grey Border. If this contains any meaning let it be. Otherwise my suggestion is to remove and go with A(green) and N(blue)alone.
அஸ்ஸலாமு அழைக்கும்
அமேஜான் வாட்டர் ப்யுரிபயர் சார்பாக அனைவருக்கும் ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்துக்கள்.
நல்ல (முன்னே)(மா)ற்றம்....அழகான இலச்சினை...அந்த இலச்சினையும் / இலக்கையையும் எளிதாக விளக்கி சொன்ன ஆஸ்தான கவியின் வைர வரிகள்..வாழ்துக்கள் அ.நி...உன் அமைதி என்றும் ஆளுமை படுத்தட்டும் இங்கு வரும் பதிவர்களையும்,பார்ப்பவர்களையும்
Bro. MSM(mr):
Jazakallaah hair for your comment.
Inside grey border "inner glow which need to expose transparent look, if logo only used for external any other purpose".
///அருவா கத்தியாலோ
அவதூறு கத்தினாலோ
அடக்க வியலா திந்த
ஆத்மார்த்தப் பயணத்தை///நிச்சயம் இன்ஷா அல்லாஹ்...
அனைவருக்கும் ”ஹஜ்ஜூப்பெருநாள் வாழத்துக்கள்”
அழகான் சொற்களை சிலேடையுடன் கூடிய கவிதை, வாழ்த்துக்கள் சபீர் காக்கா
Post a Comment