சிட்னியில் வசிக்கும் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவை சார்ந்த சஹோதரர்கள் சஹோதரர் பஷீர் வீட்டில் சஹோதரர் மீராசாஹிப் தலைமையில் கூடி உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.அந்த கூட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்து உயர் கல்வியை தொடர வசதியில்லாத இஸ்லாமிய மாணவ மாணவியர்க்கு உதவித்தொகை வரும் கல்வியாண்டில் இருந்து வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.
உயர் கல்விக்கான உதவித் தொகையினை எவ்வாறு, யாருக்கு, எந்த அடிப்படையில் வழங்குவதென்ற ஆலோசனைகளையும் உங்கள் அனைவரிடமிருந்தும் வரவேற்கிறோம். குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மற்றும் சமுதாய தொண்டில் உள்ளவர்களிடம் இருந்தும் எதிர்பார்க்கிறோம். உங்கள் மேலான ஆலோசனைகளை எங்களுக்கு கீழ்கண்ட ஈமெயிலுக்கு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள். நாங்கள் எடுக்கும் முடிவை ஆலோசனை வழங்கிய அனைவருக்கும் முன்கூட்டியே ஈமெயில் மூலமாக தெரியப்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்.
இந்த அறிவிப்பை வலைத்தளங்களில் பார்க்கும் சகோதரர்கள் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த முயற்சியில் வெளிநாட்டில் வாழும் ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள் பங்கேற்க விரும்பினால் எங்களை இமெயிலில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள்,
சிட்னி, ஆஸ்திரேலியா
Email: sismaadirai@gmail.com
தகவல் : மீராசாஹிப், சிட்னி, ஆஸ்திரேலியா.
52 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்
மிகவும் வித்தியாசமான ஒரு ஏற்ப்பாடு
அல்லாஹ் இப்படி ஒரு முயற்ச்சியை மேற்கொள்ளும் உங்கள் அணைவர்களுக்கும் என்ணுடைய வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்
சிட்னிவாழ் அதிரை நன்பர்கள் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் மென்மேலும் பரக்கத்தை கொடுத்து இதுபோன்ற நற்காறியங்களில் உங்கள் எண்ணம்போல் உங்களுடைய உழைப்பில் வரும் பணங்களிலிருந்து நல்லறங்களுக்காக செய்யும் செலவுகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக.
தற்போது அதிராம்பட்டினத்தில் கல்விக்காக குறிப்பாக இஸ்லாமிய கல்விக்காக ADT தன்னை அற்பனித்து வருகின்றது உங்களது எண்ணங்களை செயல் வடிவம் கொண்டுவர எம்.பி அஹ்மது காக்கா அவர்களை அமீரா ஏற்று செயல்படும் ADTயை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
ஏற்கனவே கல்வி சம்பந்தபட்ட விசயங்களில் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.அவர்களை தொடர்பு கொண்டால் இன்ஷா அல்லாஹ் உங்கள் எண்ணங்கள்100% பூர்த்தியடையும்
அதிரைமன்சூர்
ரியாத்
எம்.பி அஹ்மது காக்காவின் கைபேசி இலக்கம்+919894989230
ஜமீல் காக்காவின் கைபேசி இலக்கம் +919043727525
'உயர்கல்விக்கு உதவித் தொகை' வழங்கும் உங்களுக்கு அல்லாஹ் உரிய நற்கூலியையும் பயனாளிகளுக்கு அதற்குரிய நற்பலனையும் வழங்குவானாகவும்.
அன்பு சகோதரர் மீராசா காக்காவுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் தங்கள் தொலை பேசி என்னையும் இ மெயில் முகவரியையும் அனுப்பவும் தாங்கள் ஆஸ்த்ரேலியாவில் செட்டிலான விபரம் அறிந்தேன் .16 ஆண்டுகளுக்கு முன்னாள் கலிபோர்னியாவில் வல்லேகொவில் முதன் முதலில் எனக்கு இ மெயில் க்ரியேட் செய்து தந்ததை இன்றளவும் நினைத்து கொண்டுள்ளேன் பாஸ்வோர்ட் கூட உங்களுக்கு நினைவு இருக்கலாம் அதே தான் என்னோட வங்கி கணக்குகளுக்கும் மற்ற எல்லா மெஇல்கலுக்கும். அதற்கு பிறகு நான் நூற்று கணக்கான பேருக்கு இ மெயில் கிரியேட் செய்து கொடுத்திருந்தாலும் எனக்கு கிரியேட் செய்த உங்களை மறக்க முடியாது ...பாத்திமா சிஸ்டர் எப்படி இருக்கான்க பசங்க நல்லா இருக்காங்களா எல்லாருக்கும் என் சலாம் சொல்லவும்..சமீபத்தில்
தான் நாம் மெரின வோர்ல்ட் ஆப்பிரிக்காவில் எடுத்த புகைபடைதை பார்த்தேன் .ஆறுமுகம் கலிபோர்னியாவில் தான் உள்ளாரா. போன் நம்பர் அனுப்பவும் நான் இப்ப வல்லேகொவில் தான் இருக்கிறேன் போன் நம்பர் 707-655-5183 இன்ஷா அல்லாஹ் சந்திப்போம் ஒரு நாள்
வரவேற்க தக்க நல்ல முடிவு, அல்ஹம்துலில்லஹ்
ஒருவருக்கு கல்வி வழங்குவதே சிறந்த உதவியாக கருதப்படுகிறது
இந்த முயற்சி சரியாக போய் சேர்ந்து பயனடைய வாழ்த்துக்கள்
சிட்னியில் வாழும் நம் சகோதரர்களின் நல்லதொரு முயற்சியை அல்லாஹ் நிறைவேற்றித்தந்தருளட்டும்...ஆமீன்.
பல ஆண்டுகளுக்கு முன் நம் வாழ்வில் எங்கோ ஓரிடத்தில் நடந்தேறிய சில நல்ல பல நிகழ்வுகளை உருண்டோடும் இக்காலச்சக்கரத்தில் அறைத்து தொலைத்து விடாமல் அதை அவ்வப்பொழுது நன்றியுடன் நினைவு கூறும் மனித இயல்பே மகத்தானது.
சிறுவயது முதல் இந்நரை (முடி) வயது வரை நடந்தவைகளை எப்படித்தான் தன் கொள்ளளவைத்தாண்டி இந்த மூளை வாழ்வில் பல வசந்த, கசந்த சூறாவளிக்காற்றுகள் அடித்து போயிருந்த போதிலும் இன்றும் பதிவு செய்து வைத்துள்ளது மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அற்புதமான விலைமதிக்க முடியா "ஹார்ட் ட்ரைவ்" ஆகும். சுபஹானல்லாஹ்...நேற்று முகப்புநூலில் (ஃபேஸ் புக்) மைத்துனன் ஜஹபர் சாதிக் அவர் இருந்து வரும் இங்கிலாந்தின் க்ரொய்டன் பகுதியில் மிடில் ஸ்டீரீட் (நடுத்தெரு) என குறிப்பிடப்பட்ட பெயர்ப்பலகையை நம்மூர் நடுத்தெருவுடன் ஒப்பிட்டு வெளியிட்டிருந்தார் எதேச்சையாக.
அதை பார்த்த சமயம், அவர் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் ஊரில் அவர் வீடு இருக்கும் சந்தில் உள்ள சக நண்பர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து சந்திந்தில் மூலையில் நடுத்தெரு "முக்கிய சந்து" என்று எழுதி ஒட்டி வைத்திருந்தனர். காரணம், காலப்போக்கில் நாம் கூடுதலாக நம் சந்திற்கு நாம் வைத்த அந்த பெயர் "முக்கிய சந்து" இனி வரும் காலங்களில் கடிதப்போக்குவரத்திற்கும், விலாச முகவரிக்கும் எல்லோராலும் பயன்படுத்தப்படும் என்ற நல்ணோக்கில் தான். என்றோ ஒரு நாள் நண்பர்கள் செய்த ஒரு சிறு காரியம் இது. இருப்பினும் இந்த நிகழ்வு விலை மதிக்க முடியா இறைவனின் அற்புத படைப்பு மூளை என்ற "ஹார்ட் ட்ரைவில்" இன்னும் வைரஸ் ஏதும் ஏறாமல் அழிக்கப்படாமல் அப்படியே இருப்பது படைத்தவனின் அற்புதமல்லவா??? சுபஹானல்லாஹ்..
சமீபத்தில் நாகையின் ஒரு தனியார் கல்லூரியில் (1989 1991) மூன்றாண்டுகள் பயின்ற மாணவர்கள் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்குப்பின் பல முயற்சிகள் செய்து பல அலுவல்களால் பல ஊர்களில் பிரிந்து கிடந்த அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். தங்கள் அன்பான விசாரிப்புகளையும், சந்தோசங்களையும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். முகம் தெரியாத யாரோ, எவராகவோ இவர்கள் நமக்கு இருந்தாலும் இதை தொலைக்காட்சி சிறப்பு செய்தியில் பார்த்த எனக்கு ஒரு இனம் புரியாத உள்ள வெளிப்பாட்டில் கண்கள் அதை ஏற்று சில துளி கண்ணீராய் அதை வழிமொழிந்தது. பொருளாதார, வசதி வாய்ப்புகள் தராத அந்த பரவசத்தை எங்கோ நடந்த ஒரு நிகழ்வு எனக்கு தந்தது எதனால் என என்னாலேயே காரணம் கூற முடியவில்லை ஆயிரம் தொல்லைகளையும், சல்லைகளையும் தாண்டி நம் மண்ணில் மத துவேசங்கள் பரவி அதன் தாக்கம் நம்மை சூழ்ந்து அதையும் தாண்டி நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதும்......
"எல்லாப்புகழும் இறைவனுக்கே" என்று கூறுவது கூட அந்த குறிகிய மனப்பாண்மையுடையோருக்கு ஒரு தீவிரவாத சொல்லாக ஆக்கப்பட்டுள்ளது அவர்களை ஆட்டிப்படைப்போர் மூலம். அவர்கள் எப்படியோ இருந்து விட்டு போகட்டும். அவர்கள் கண் மூடி மண் மூடுமுன் அல்லது பின் நிச்சயம் தங்கள் செயல்களுக்கு வருத்தப்படத்தான் போகிறார்கள்.
யா அல்லாஹ்!!! நமக்குள் நல்ல சகோதரத்துவத்தையும், அவர்களுக்கு இஸ்லாம் பற்றிய நல்ல புரிந்துணர்வையும் தந்தருள நீயே போதுமானவன்.....
நல்ல நினைவுகள் எளிதில் அழிந்து விடுவதில்லை.......
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
சிட்னியில் வாழும் நம் சகோதரர்களின் நல்லதொரு முயற்சியை அல்லாஹ் நிறைவேற்றித்தந்தருளட்டும்.
அவர்களுக்கு அல்லாஹ் தொடர்ந்து பரகத் செய்யட்டுமாக.ஆமீன்.
----------------------------------------------
நெய்னா:
அந்த face book கில் சொன்ன நினைவுகளை இங்கும் நினைவுபடுத்தி "முக்கிய சந்து"க்கு முக்கியத்துவம் தந்தமைக்கு நன்றி.
அதைப்பார்க்க சுட்டி;
https://www.facebook.com/photo.php?fbid=314429055368636&set=a.134810456663831.39256.100004046320187&type=1&theater
//இந்த முயற்சியில் வெளிநாட்டில் வாழும் ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள் பங்கேற்க விரும்பினால் எங்களை இமெயிலில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். //
எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குறியது இதில் ஊர் காரர்கள் அனைவரும் ( வேறு சங்கங்கள் மற்றும் தெருக்கள் )சேர்ந்து செயல் பட்டால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்பது என் கருத்து
சம்சுல் இஸ்லாம் சங்க வாசிகளின் முயற்சி பாராட்டுக்குரியது.
//பள்ளிப் படிப்பை முடித்து உயர் கல்வியை தொடர வசதியில்லாத இஸ்லாமிய மாணவ மாணவியர்க்கு உதவித்தொகை வரும் கல்வியாண்டில் இருந்து வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.// நல்லது . ஆனால்
//இந்த முயற்சியில் வெளிநாட்டில் வாழும் ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள் பங்கேற்க விரும்பினால் எங்களை இமெயிலில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். //
சிட்னியில் வேறு முஹல்லாவாசிகள் யாரும் வசிக்கவில்லையா? அல்லது அழைத்தும் அவர்கள் பங்கெடுக்க மறுத்தார்களா?
புனிதமான நல்ல முயற்சியில் ஒரு சிறு நெருடல் தென்படுகிறது. ஏன்?
நமதூரில் முஹல்லக்களில் ஏற்படுத்தப்பட்ட சங்கங்கள் முஹல்லா வாசிகளின் நலனுக்கே ஆகவே முதலில் முஹல்லா நலனை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வெளிநாட்டு நண்பர்கள் செய்தால் அதுவே பாராட்டுக்குரிய செயல் .
//நமது ஊரில் முஹல்லாக்களில் ஏற்படுத்தப்பட்ட சங்கங்கள் முஹல்லா வாசிகளின் நலனுக்கே! ஆகவே......../// இது அபுபக்கர் [கனடா] சொன்னது.
இது நடு ஊரில் காய்த்த நச்சு மரத்துக்கு சமம். நடு ஊரில் ஊறிய குடி தண்ணீர் கிணற்றில் ஊற்றிய விசத்துளி!
ஆஸ்திரேலியாவோ அல்லது கனடாவோ சம்சுல் இஸ்லாமிய சங்கத்தின் கட்டுப்பாட்டிலா இருக்கிறது? ஏதோ ஒரு நாட்டில் சம்பாதிக்கிறோம். அதில் பசித்து கிடக்கும், தேவையில் இருக்கும் நம் சகோதரனுக்கு 'புசி' / இந்த எடுத்துக் கொள் என்று கொஞ்சம் கொடுத்தால் என்ன?
நம் எதிரி நமக்கு நாலு கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து சங்கு ஊதும் ஓசை காதில் கேட்கும் வேளையில் நாம் நம் சொந்த சகோதரனுக்கு எதிராக வாளையும் வேலையும் தீட்டுகிறோம்!.
கொடுக்கிற கரத்தை தடுப்பது பாவம்!.
''சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் ஆழ்தல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே!
ஈன ஜனங்களடி! கிளியே!
ஈன ஜனங்களடி''
[நெறியாளருக்கு ஒரு வேண்டுகோள்: மேற்சொன்னது பாரதியாரின் கவிதை!' சினிமா பாடல்' என்று கத்தரிக் கோல் போட்டு விடாதீர்கள்.'' இதுவும் பாவக் கணக்கில்தான் சேரும்?'' சும்மா ஒரு பூச்சாண்டி காட்டுறதுதான்!.]
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
//புனிதமான நல்ல முயற்சியில் சிறு நெருடல் தென்படுகிறது //
புரியவில்லையா? அபூபக்கர் [கனடா] அவர்களுடய கமெண்டைப் பார்த்தால் புரியும்!.
S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்.
இதைப் பிரச்னை ஆக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் சம்பாதித்த காசு அதை அவர்கள் விருப்பத்துக்கு செலவு செய்ய அவர்களுக்கு உரிமை இருக்கிறது. மற்றவர்களும் தாங்கள் தாங்கள் முஹல்லாவில் உள்ளவர்களை கை தூக்கிவிட முடிந்தால் முயலுங்கள்.
அதற்கு முன் அனைத்து முஹல்லா என்று இருக்கும் அமைப்பின் காரணத்தையும் நோக்கத்தையும் விளக்கிவிடுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
// அந்த கூட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்து உயர் கல்வியை தொடர வசதியில்லாத இஸ்லாமிய மாணவ மாணவியர்க்கு உதவித்தொகை வரும் கல்வியாண்டில் இருந்து வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. //
என்றுதான் குறிப்பிட்டு உள்ளது (இதில் உள்ளூர் வெளியூர் இரண்டுமே சேரும்)
ஆனால் சிலர் பின்னுட்டத்தில் கருதுவது போல்
"குறிப்பிட்ட முஹல்லா வாசிகள் மட்டும்" பயன் பெறுவார்கள் என்று மேலே எங்கும் குறிப்பிட வில்லை தயவு செய்து கண்ணு மூக்கு வைத்து பிரச்சனையாக உருவக படுத்திட வேண்டாம்
ஷாகுல் ஹமித் காக்க, இப்ராஹிம் அன்சாரி காக்க போன்றவர்கள் ஆதங்கப் படுவதுபோல் அனைத்து முகல்லாவாசிகள் இன்ஷா அல்லாஹ் கூடியவிரைவில் இந்த நல்ல முயற்சியில் சேர்ந்து கொள்வார்கள் என நம்புகின்றோம் இவைதான் அனைவரின் விருப்பமும்
வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் ஆனால் கட்டுரையின் சாராம்சம் வேறு
நன்றாக கவனிக்கவும் அவை :
//உயர் கல்விக்கான உதவித் தொகையினை எவ்வாறு, யாருக்கு, எந்த அடிப்படையில் வழங்குவதென்ற ஆலோசனைகளையும் உங்கள் அனைவரிடமிருந்தும் வரவேற்கிறோம். குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மற்றும் சமுதாய தொண்டில் உள்ளவர்களிடம் இருந்தும் எதிர்பார்க்கிறோம். உங்கள் மேலான ஆலோசனைகளை எங்களுக்கு கீழ்கண்ட ஈமெயிலுக்கு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள். நாங்கள் எடுக்கும் முடிவை ஆலோசனை வழங்கிய அனைவருக்கும் முன்கூட்டியே ஈமெயில் மூலமாக தெரியப்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்.///
உங்கள் அனைவரின் மேலான கருத்துக்களை வரவேற்கின்றோம்
கருத்துக்களை பின்னுட்டமாகவோ அல்லது sismaadirai@gmail.com என்ற முகவரிக்கோ அனுப்பி தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றோம்
சகோ .முகமது பாருக் அவர்களுக்கு .......தொலை நோக்கு பார்வையுள்ள நண்பர்கள் ஒரு முஹல்லா வின் சங்கத்தை பயன்டுத்துகின்றனர் அப்படியே இந்த சங்கத்தின் மூலம் நாங்கள் எல்லோரும் சேர்ந்து இதைவிட அதிகமாக நமதூருக்கு செய்ய தயாராக உள்ளோம் .முழு ஊரும் எங்களின் கட்டுபாட்டில் வரத்தயாரா ?ஊரில் முதலில் ஆரம்பித்ததே இதுபோன்ற சில சங்கங்கள் மட்டுமே பிரகுஅதன் கட்டுபாட்டை தாண்டி எத்துனையோ அமைப்புகளும் எத்துணையோ சங்கங்களும் வந்தனவே அது பிரிவினை இல்லையா ?
சகோதரர் அபூபக்கர் அவர்களுக்கு மூத்த பெரியவர் பாரூக் காக்கா அவர்கள் 75 வயதை கடந்தவர்கள் உங்களை விட என்னை விட 30 ஆண்டுகால கூடுதல் அனுபவம் உடையவர்கள் மனதில் பட்டதை கேட்க கூடியவர்கள் வாசிக்கும் பழக்கத்தில் நம் அனைவருமே அவர்கள் அருகில் நிக்க முடியாது இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்தாலா அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நோய் நொடியற்ற வாழ்வையும் தந்து நம் போன்றோருக்கு நல்ல ஆலோசனைகளை தர அல்லாஹ்விடம் துவ செய்வோம் .ஆமின்.அவர்கள் கேட்டதற்கு சகோதர் ஹாலித் அவர்களின் கண்ணியமான விளக்கம் போதுமானது நீங்கள் சொல்வது போல் ஊரே உங்கள் கட்டுப்பாட்டில் வர வேண்டிய அவசியம் இல்லை .நம் அனைவருமே ஒரே ஒருவன் கட்டுப்பாட்டில் தான் அது வல்ல அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் ,,,,,,,உதவி செய்ய நினைபவர்கள் தங்கள் கட்டுபாட்டில் அனைவரையும் கொண்டுவரவேண்டும் என்று நினைத்தாலே அது உதவி அல்ல அடிமைத்தனம் படுத்துவது
அகமது காக்கா அவர்களுக்கு ஊரில் உள்ள அனைத்து சங்கங்களும் அந்த முஹல்லாக்காளின் கட்டுப்பாட்டில் உள்ளதுவே .நானும் ஒரு முஹல்லாவாசி என்ற உரிமையில் எனது சொந்தகருத்தையே நான் பந்திந்தேன் அதுவும் வெளி பதிவாக இவைகள் வெளியிட பட்டதால் .எனக்கு அறிவுரை கூறியதற்கு நன்றி ஆனால் எனது கருத்து நீர் ஊற்றில் கலந்த விஷம் என்ற வார்த்தை சரியானதா ? இதே நான் மற்ற தெரு சங்கங்களில் எனது கருத்தை வெளியிட முடியுமா ? மேலும் பெரியவர்களில் கருத்திற்கு நான் மதிப்பளிப்பவனே.ஊரில் உள்ள பள்ளிவாசல்களில் அதிக எண்ணிக்கை கொண்டபள்ளிகளும் இதே சங்கத்தில் தான் மேலும் பைத்துல்மால் போன்ற பொது நிறுவனங்களுக்கு அதிகம் பெறப்படும் உதவிகளும் இந்த சங்க மற்றும் முஹல்லா மூலமே.இதற்கு மேல் ஊரில் அமைப்புகள் இருந்தால் உங்களிலும் சிறியவனாகிய அடியேனுக்கு அறியத்தருக .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கருத்தாடலில் ஈடுபடும் சகோதரர் M.B.A.அஹமது என்பவர் நம் சகோதரர்கள் நினைப்பது போன்று "அதிரை அறிஞர் - அதிரை அஹ்மது" அவர்கள் அல்ல !
இதே பதிவில் ஒரே பிளாக்கர் ஐடியில் (http://www.blogger.com/profile/14467495459027303148) இரண்டு பெயர்களில் அதாவது M.B.A.அஹ்மது மற்றும் M.M.S.பகுருதீன் என்ற பெயரில் கருத்தாடல்கள் பதியப்பட்டிருக்கிறது.
அதிரைநிருபர் நெறிமுறைப்படி சுயஅறிமுகமில்லாதவர்களின் கருத்துகள் நீக்கப்படும் என்பதை நன்கறிவீர்கள், M.B.A.அஹ்மது என்ற பெயரில் அவர்களின் கருத்தாடல் பதிவர்களோடு இருந்ததாலும் அதோடு அல்லாமல் தனி மின்னஞ்சலில் அவர்களோடு அறிமுகப் படுத்திக் கொண்டதாக அறியப்பட்டதால் அனுமதிக்கப்பட்டது.
தயைகூர்ந்து நன்னோக்கு கருத்தாடலில் ஈடுபடும் சகோதரர்கள் புரிந்துணர்வுடன் அறிமுகப் படுத்திக் கொள்வதன் அவசியத்தை உணர்ந்து செயல்படுங்கள்.
ஜனாப் ஹாலித் முஹம்மத் அவர்களுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும்!
தாங்கள் கொடுத்த விளக்கம் ஏற்றுக் கொள்ள கூடியதும் பாரபட்ச மற்றதுமாகும். தாங்கள் தொடங்கிய இந்நற்பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் துணை செய்யவும், எண்ணதில் உறுதியும் செல்வத்தில் பெருக்கத்தையும் அல்லாஹ் அருள்வானாக!
நாம் செய்யும் தர்ம காரியங்களுக்கு நாமே ஒரு எல்லைக்கோடு போட்டுக் கொள்வது நல்லதாக தோன்றவில்லை. நாமே அதற்கு முதலாளி என்று எண்ணாமல் அல்லாஹ் நம் கையில் கொடுப்பதில் ஒரு பகுதியே பசித்தோர்க்கும் கொடுத்து பசி போக்கும் நண்மையான அமல்கள் செய்ய அல்லாஹ் மீண்டும் மீண்டும் நம் எல்லோர்க்கும் அருள்வானாக! [கல்வியும் ஒரு பசி; அது ஏணியும்கூட] இதில் பங்கேற்கும் எல்லா சகோதரர்களுக்கும்
அல்லாஹ் அருள்வானாக! ஆமீன்.
அன்புடன்
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
[குறிப்பு : அன்புத் தம்பி M.B.A.அஹமத், அஸ்ஸலாமுஅலைக்கும்., மணி 11.00மேல் ஆகிவிட்டதாலும் சொந்தத்தில் ஒருவர் மரணித்து விட்டதாலும் இன்றே கடிதம் எழுத முடியவில்லை! நாளை எழுதுகிறேன். ]
நெறியாளரின் நண்பகதன்மைக்கு நன்றி என்னை அறிமுகபடுதியதர்க்கும் நன்றி என் பெயரை பார்த்தவுடன் என் முளுபெயரும் என் நண்பர்கள் அனைவருக்கும் தெரியும் தெரியாத அதிரை நிருபர் வாசகர்களுக்கு M Bahurudeen Ali Ahamed. அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்றான அஹமது என் லாஸ்ட் பெயராக இருப்பதால் M B A AHAMED என்று என் பெயரின் சுருக்கத்தில் தான் கருத்திட்டு வந்தேன் மற்றபடி யார் பெயரிலும் அல்ல
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்புச் சகோதரர் M.பஹுருதீன் அலி அஹ்மது (மறைந்த முன்னாள் ஜனாதிபதி அவர்களின் பெயர்) அவர்களுக்கு:
தங்களின் புரிந்துணர்வுக்கும், பெருந்தன்மைக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்...!
அன்புடன்
நெறியாளர்
www.adirainirubar.in
அன்புள்ள சகோதரர் M.B.A.அஹமத் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] தாங்கள் சகோதரர் அபூபக்கர் [கனடா] எழுதிய பின்னூட்டம் படித்தேன். அதில் என் எண்ணத்தை அல்லது பதிலை பிரதிபளித்திருக்கிறீர்கள். எடுத்துக் கொண்ட சிரமத்திற்கு நன்றி!
நேற்று இரவு சகோதரர் ஹாலித் அவர்களுக்கும் ஒரு பின்னூட்டும் எழுதினேன். அது இன்று காலையில்தான் பின்னூட்டத்தில் பதிவாகியிருக்கிறது. ஒருவேளை நெறியாளர் பார்வைக்கு தமதமாக பட்டிருக்கலாம்.
/சகோதரர் அபுபக்கர் அவர்கள் கவனத்துக்கு /
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரர் M.B.A.அஹமத் அவர்கள் எழுதிய பதிலே என்பதிலும். சகோதரர். ஹாலித் எழுதிய தெளிவான பின்னூட்டமும் தாங்கள் படித்திருக்கலாம்.
அன்புடன்,
.S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்.
உண்மையிலேயே ஜனாதிபதியின் பெயரை தான் எங்கள் அப்பா எனக்கு வைத்தார்கள் எங்கள் குடும்பத்தில் மூன்று ஜனாதிபதியின் பெயரையும் வைத்துள்ளார்கள் ஹிதாயத்துல்லா .ஜாகிர் ஹுசேன் .பஹுருதீன் அலி அகமது ...முன்னால் ஜனாதிபதி பஹுருதின் அலி அகமதின் குடும்பத்தினர் யாரவது உள்ளார்களா என்ற முயற்சியில் சென்ற ஆண்டு ஈடுபாட்டபோது அவர் ஜனாதிபதியாக இருந்தபோதே வபாத்தாகிவிட்டதால் அவருக்கு இரு ஆண் குழந்தைகள் ஒருவர் பர்வேஜ் அகமத் நியுயார்க்கில்
மருத்துவராக உள்ளார் .அவரை சென்ற ஆண்டு நியுயார்க்கில் சந்தித்தேன் மற்றொருவர் துரெஜ் அஹமத் டெல்லி உயர்நிதிமன்றதில் நீதிபதியாக உள்ளார் . அவருடன் தொலைபேசியில் பேசினேன் எப்போது டெல்லி வந்தாலும் வந்து சந்திக்க சொல்லி உள்ளார் .ஜனாதிபதியின் மனைவி பேஹம் ஆபிதா அஹ்மத் இரண்டு முறை 80-84 ,, 84-88 பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் .இரண்டாண்டுகளுக்கு முன் அவர்களும் வபாத்தாகிவிட்டர்கள்.
முகமது பாருக் காக்கா அவர்களுக்கு .......முதியவராகிய உங்களின் கருத்துக்களில் ஏதே சய தான்தோன்றிய நிலை தெரிகிறது மேலும் ஒரு நபி மொழியுடன் அல்லது சஹாபாக்களின் ஹதீஸ் போன்றவைகள் கூறப்பட்டால் அதை பெருமையுடையதாக எடுத்துக்கொள்ளலாம் மாறாக பாரதியின் கவிதைகள் உவமை காட்டி உள்ளீர்கள் ...அவைகள் உங்கவர்களுக்கும் உங்களை சேர்ந்த வர்களுக்கும் தேவ வாக்காக இருக்கலாம் குறிப்பாக ' காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்' என்ற பாடல் இதே பாரதியால் பாடபட்டவைகளே......
அஸ்ஸலாமு அலைக்கும், அபூபக்கர் காக்கா,
உங்களிடமிருந்தா???????? இந்த கருத்து என்பதை என்னால் நம்ப முடியவில்லை...
நம் மூத்த சகோதரர் ஃபாருக் காக்கா அவர்கள் நபி மொழிகளை மறுத்து பாரதியின் பாடலை முன்னுறுத்தியிருப்பது போன்ற கருத்தை சொல்லியிருப்பதை தவிர்த்திருக்கலாம்.. சாதாரணமாக பேச்சு வழக்கில் எடுத்துச்சொன்ன விசயத்தை தவறான அர்த்தம் கர்ப்பிப்பது சரியா? பாரதியின் கவிதை பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு போயிருக்கலாம், தேவையற்ற வாசகங்களை தவிர்த்திருக்கலாம்..
சகோதரர் ஹாலித் அவர்களின் விளக்கம் பலரின் சந்தேகத்திற்கு பதிலாக இருந்தும், இந்த பதிவுக்கு தொடர்பே இல்லாதவைகளை வைத்து கருத்திடுவது சரியா?
நீங்கள் சொன்ன //நமதூரில் முஹல்லக்களில் ஏற்படுத்தப்பட்ட சங்கங்கள் முஹல்லா வாசிகளின் நலனுக்கே ஆகவே முதலில் முஹல்லா நலனை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வெளிநாட்டு நண்பர்கள் செய்தால் அதுவே பாராட்டுக்குரிய செயல் ./// இந்த கருத்து சரிதான் என்பதை ஒரு குர்ஆன் வசனம், அல்லது ஒரு நபி மொழி மூலம் நியாப்படுத்துங்களேன்..
இனி தனி நபர் சாடல்கள் இல்லாமல் கருத்திட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.
அல்லாஹ் நம் எல்லோரையும் நேர்வழி படுத்துவானாக.
//உயர் கல்விக்கான உதவித் தொகையினை எவ்வாறு, யாருக்கு, எந்த அடிப்படையில் வழங்குவதென்ற ஆலோசனைகளையும் உங்கள் அனைவரிடமிருந்தும் வரவேற்கிறோம். குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மற்றும் சமுதாய தொண்டில் உள்ளவர்களிடம் இருந்தும் எதிர்பார்க்கிறோம். உங்கள் மேலான ஆலோசனைகளை எங்களுக்கு கீழ்கண்ட ஈமெயிலுக்கு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள். நாங்கள் எடுக்கும் முடிவை ஆலோசனை வழங்கிய அனைவருக்கும் முன்கூட்டியே ஈமெயில் மூலமாக தெரியப்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்.///
அஸ்ஸலாமு அலைக்கும்..\
இன்ஷா அல்லாஹ் விரைவில் என்னுடைய ஆலோசனைகளை தெரிவிக்கிறேன்.. நல்ல அருமையான செயல்திட்டங்கள் தீட்டலாம். கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் ஏற்படுத்தி ஊருக்கு ஒரு முன்னுதாரனமாக செயபடுத்தலாம். ஆஸ்திரேலியாவில் உள்ள சகோதரர்கள் போல் பிற நாடுகளில் உள்ள ஒத்த கருத்துடைய சகோதரர்களை ஒன்றிணைத்து ஆக்கப்பூர்வமான கல்வி உதவி திட்டத்தை ஏற்படுத்தலாம்.
தூய எண்ணத்தில் சமுதாயத்திற்கு கல்வி உதவி செய்ய துடிக்கும் உங்களோடு இணைந்து செயலாற்ற நானும் என்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
To Brother Aboobakr , can
//ஏதே சய தான்தோன்றிய நிலை தெரிகிறது//
//உங்கவர்களுக்கும் உங்களை சேர்ந்த வர்களுக்கும் தேவ வாக்காக இருக்கலாம் //
Can you explain on this please
சகோ.தாஜிதீன் அவர்களுக்கு அடியேனின் கருத்துக்கு மூத்தவர் ......முகமது பாருக் அவர்களின் கருத்துக்கள் .....'நடு ஊரில் காய்த்த நச்சு மரம் ' நடு ஊரில் ஊறிய குடி தண்ணீர் கிணற்றில் ஊற்றிய விசத்துளி 'இவைகள் தனிமணித சாடலே ......மேலும் ஊர் நலன் கருதி முதலில் தோன்றிய தர்ம சிந்தனை உடைய அமைப்புகளில் நாம் ஒன்று சேராமல் ஜமாஅத்துக்களை பிரிப்பதும் முஸ்லிம்களின் செயல் அல்ல .இதனன்று அன்றை வீட்டார் பசித்திருக்க புசித்தல் ஆகாது .தனக்கு மிஞ்சியே தானம் ...... சகோ .ஜாகிர் ஹுசைன் அவர்களுக்கு ......தங்களின் கேள்விக்கும் இதுவே அடியேனின் பதில் ......
//Aboobakkar, Can. சொன்னது… முகமது பாருக் அவர்களின் கருத்துக்கள் .....'நடு ஊரில் காய்த்த நச்சு மரம் ' நடு ஊரில் ஊறிய குடி தண்ணீர் கிணற்றில் ஊற்றிய விசத்துளி 'இவைகள் தனிமணித சாடலே //
அஸ்ஸலாமு அலைக்கும், அபூபக்கர் காக்கா,
நம் மூத்த சகோதரர் ஃபாரூக் காக்கா சொன்னது உங்களை அல்ல நீங்கள் சொன்ன கருத்தை. அது தனி மனித சாடல் அல்ல..உங்கள் எண்ணம் நல்ல எண்ணமாக இருக்கலாம். ஆனால் உங்கள் கருத்து தான் பிரிவினை தூண்டும்விதமாக உள்ளது.
உங்கள் பார்வையில் பிற ஜமாத்துக்கள், சங்கங்கள் பிரிவினை தூண்டியது, பிரித்தது என்று ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டால், நீங்கள் சார்ந்திருக்கும் முஹல்லாவின் உதவி அந்த முஹல்லாவை சார்ந்தவர்களுக்கு மட்டும் என்று பிரித்தாலும் சொல் சொல்லுவது எந்த வகையில் நியாயம்? இங்கு நீங்களும் பிரிவினை ஏற்படுத்தும் வாதத்தைதானே வைக்கிறீர்கள்?
ஏன் கல்வி உதவியில் எல்லோருக்கும் உதவி செய்து சம்சுல் இஸ்லாம் ஆஸ்திரேலியா அதிரைக்கு முன்னுதாரணமாக இருக்கக்கூடாது?அந்த பெருந்தன்மையான ஒரு வார்த்தை சொன்னால் நாம் மேன்மையடைவோமே தவிரை தாழ்ந்துவிடமாட்டோம்.
சகோதரர் ஹாலித் அவர்களின் விளக்கத்துக்கு ஒரு கருத்து போடாமல், தனிமனித சாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் வேதனையே...
நீங்கள் உங்கள் கருத்தை நியாயப்படுத்த அநியாயமான காரணத்தை சொல்லுவதை தவிர்த்து. குர்ஆன் நபி மொழியின் மூலம் எடுத்துரைத்து நியாயப்படுத்துங்கள்... காக்கா...
இதை தவிர்த்து சாதரணமாக வழக்குச் சொல்லில் சொல்லும் உதாரண கவிதைகளை வைத்து உங்கள் நியாமற்ற கருத்தை மறைக்க விழைவது எவறாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆக்கப்பூர்வமான கருத்தை எதிர்ப்பாத்து சமூகத்துக்கு நல்லது செய்ய துடிக்கும் ஆஸ்திரேலிய சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர்களை ஊக்கபபடுத்துங்கள் இந்த பதிவின் மூலம். அர்த்தமற்ற பிரச்சினைகளை இங்கு விவாதித்து அவர்களின் ஆர்வத்தை தடுக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
Assalamu Alaikkum
Dear brothers,
The educational initiatives of our brothers from Australia is appreciated. And may Allah reward for their service. InshaAllah.
Mr. Aboobacker said
//நமது ஊரில் முஹல்லாக்களில் ஏற்படுத்தப்பட்ட சங்கங்கள் முஹல்லா வாசிகளின் நலனுக்கே! //
Alms begins at home. - Brother Mr. Aboobacker's thoughts which should Not be interpreted as selfish poisonous thoughts. Its his own opinion for the sake of his Muhalla. He is little bit possessive about his own Muhalla and the brothers from the same Muhalla.
Mr. Mohammed Farook said
//ஆஸ்திரேலியாவோ அல்லது கனடாவோ சம்சுல் இஸ்லாமிய சங்கத்தின் கட்டுப்பாட்டிலா இருக்கிறது? ஏதோ ஒரு நாட்டில் சம்பாதிக்கிறோம். அதில் பசித்து கிடக்கும், தேவையில் இருக்கும் நம் சகோதரனுக்கு 'புசி' / இந்த எடுத்துக் கொள் என்று கொஞ்சம் கொடுத்தால் என்ன?//
Left hand should not know what right hand gives. And brother Mr. Mohammed Farook is expressing his opinion in extreme way.
Please brothers, for the sake of Allah forgive each other if you feel aby bitterness because of the words went out of norm. And relieve yourselves from egos so that the arguments not growing unnecessarily as it(anger) drains energy.
Take care.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
சகோ .தாஜுதீன் அவர்களுக்கு ......சம்சுல் இஸ்லாம் சங்க கட்டுப்பாட்டில் உள்ள பல பள்ளிவாசல்களுக்கு நிதி பற்றாக்குறை உள்ளது ...மேலும் முஹல்லா பள்ளிகளில் பெறப்படும் திருமண பதிவு தொகை கூட அந்த பள்ளிகளுக்கு கிடைக்க பெறவில்லை மாறாக அதுவும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தினறாலே வசூல் செய்ய படுகின்றது ........இதன் முஹல்லாவில் உள்ள பள்ளி இமாம்களுக்கு சம்பளம் கொடுக்ககூட கஷ்டப்படுகின்றனர் .........தர்ம சிந்தனை உடையோர்களிடம் தமிழ்நாடு அளவிலான நமது அமைப்புகளால் தர்மம் பெறப்பட்டும் வேறு வகையில் செலவிடப்படுகிறது ........நோன்பு நாட்களில் இந்த சங்க அமைப்பினால் உள்பட்ட ஒவ்வொரு பள்ளிகளிலும் பல ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் வந்து கட்டமுடியாமல் சிரமம் ஏற்பட்டது இப்படி இந்த முஹல்லாவில் ஏக பட்ட அடிப்படை தேவைகள் இருக்கும் போது கூடுதல் செலவுகள் தவிர்க்கப்பட வேண்டியவைகளே .........மற்றபடி பிரிவினை எனபது அடியேனின் கருத்தில் கிடையாது அண்ணன் தம்பிக்கு செய்வது கடமை அதே அண்ணன் பிறருக்கு செய்வது உதவி .........கடமைகள் முடிந்தே உதவிகள் கொடுக்க பட வேண்டும் .
To Brother Aboobakr , can
நான் மறுபடியும் இதைத்தொடர்ந்து எழுத காரணம் இருக்கிறது.
உங்கள் பதிலில்
//உங்கவர்களுக்கும் உங்களை சேர்ந்த வர்களுக்கும் தேவ வாக்காக இருக்கலாம் //
இதில் சகோதரர் ஃபாரூக் அவர்கள் உங்களைச்சாராமல் இருக்க தடையாக இருப்பது எது?- எந்த விசயத்தில் உங்களுக்கு சகோதரராக இருக்கும் வாய்ப்பை இழக்கிறார்?
பாரதியாரை ரெஃபரன்ஷாக எழுதினால் சரியாகாது எனும் உங்கள் பதிலில் 'தேவ வாக்கு" எந்த விசயத்தில் இஸ்லாத்துடன் பொருந்தும்?
இது என் மனதில் பட்டதுதான் , தவறு இருந்தால் மன்னிக்கவும்.
பல தளங்களிலும் தன் கருத்துக்களை அச்சமின்றி எடுத்து வைத்துக்கொண்டிருக்க்கும் சகோ.அபூபக்கர் அவர்கள் இங்கு கொஞ்சம் தடுமாறி இருப்பது நெருடலாக இருக்கின்றது...எங்கள் மூத்த சகோதரர் பாரூக் மாமாஅவர்களின் கருத்துக்களை உள் வாங்காமல் நீங்கள் உளறி இருக்கும் ”தேவ வாக்கு / தான் தோன்றி ” உங்களைப் போன்றோர்க்க்கு பொருத்தமாக இருப்பதாக தெரியவில்லை
அஸ்ஸலாமு அலைக்கும், அபூபக்கர் காக்கா,
நீங்கள் சார்ந்திருக்கும் முஹல்லாவின் நிதி பற்றாக்குறை பற்றிய உங்கள் ஆதங்கம் நியாயமானது, ஆனால் இங்கு கல்வி உதவி என்பதை ஏன் ஒரு வட்டத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்திட்டவர்களின் கேள்வி.
கல்வித்துறையில் காதர் முஹைதீன் அப்பா அப்படி எண்ணித்தான் கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தார்களா?
என்னைப் பொறுத்தவரை தெரு, குடும்பம், முஹல்ல அடிப்படையில் பிரித்தாலும் போக்கு எந்த குர்ஆன் ஹதீஸ்படி நியாயப்படுத்த முடியும் என்பதை அந்த கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் சகோதரர்கள் தான் பதில்தர வேண்டும்.
தெரு குடும்பம் முஹல்லா என்ற எல்லைத் தாண்டி அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்கள் என்ற எண்ண ஓட்டத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்த பெருந்தன்மையான சிந்தனையே அநேக பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும் இன்ஷா அல்லாஹ்..
நம்ம ஊரில் ஏதாவது நல்லது செய்தாலும் அதில் குறை காணும் போக்கு என்றைக்கு தொலையுமே தெரியவில்லை. அல்லாஹ் பாதுகப்பானாக.
ஆக்கப்பூர்வமான கருத்தை எதிர்ப்பாத்து சமூகத்துக்கு நல்லது செய்ய துடிக்கும் ஆஸ்திரேலிய சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர்களை ஊக்கபபடுத்துங்கள் இந்த பதிவின் மூலம். அர்த்தமற்ற பிரச்சினைகளை இங்கு விவாதித்து அவர்களின் ஆர்வத்தை தடுக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
சகோ .ஜாகிர் ஹுசைன் அவர்களுக்கு ........அடியேனின் கருத்தை கடும் வார்த்தைகளால் விமர்சித்ததின் காரணமாக மூத்தவர் முகமது பாருக் அவர்கள் என்னிடம் சகோதரத்துவ முறையை இழந்தவராகவே நான் கருதுகிறேன் .நான் ஒரு சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லா வாசி அடியேனின் எங்க முஹல்லா கருத்துக்களை சொல்ல எனக்கு மற்ற முஹல்லா வாசிகளால் கேள்விகள் எழுப்ப படுவதற்கு நானும் அனுமதித்து இங்கு பதில்கள் சளைக்காமல் தந்து கொண்டு இருக்கிறேன் இதேபோல் உங்க முஹல்ல சங்க பிரைச்சனைகளுக்கும் உங்கவர்களை இப்படி குறுக்கு கேள்விகள் கேட்க என்னை அனுமதிக்க வேண்டுமாய் மாற்று சங்க சகோதரர்களை கேட்டு கொள்கிறேன் .
//மூத்தவர் முகமது பாருக் அவர்கள் என்னிடம் சகோதரத்துவ முறையை இழந்தவராகவே நான் கருதுகிறேன்//
இப்படிப்பட்ட பக்குவமற்ற கருத்தோடாவது அதிரை நிருபர் இந்தக் கருத்துப்பெட்டியை மூடுதல் நலம்.
பி.கு.: சம்சுல் இஸ்லாம் சங்கம் உள்ளடக்கிய தெருக்கள் தம்மைச் சுற்றி சுவர் எழுப்பி சுகமாக சீவிதம் நடத்த விரும்புவதில் எனக்கொன்றும் கைசேதமும் இல்லை வருத்தமும் இல்லை. நானோ அதிரைக்காரன்.
எக்ஸ்கியூஸ்மீ.. ??????????????? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! .............................. ( )
பதிவில் ஆலோசனை கேட்டார்கள் ! நானும் இந்த பதிவின் படத்தில் இருக்கும் ஒருவருக்கு அனுப்பிவிட்டேன் !
அப்போ நீங்க இன்னும் அனுப்பலையா ?
தனி மின்னஞ்சலிலும் அனுப்புவேன்...
'Can' you !?
To Brother Aboobakkar, can
//இதேபோல் உங்க முஹல்ல சங்க பிரைச்சனைகளுக்கும் உங்கவர்களை இப்படி குறுக்கு கேள்விகள் கேட்க என்னை அனுமதிக்க வேண்டுமாய்//
You are most welcome
//மூத்தவர் முகமது பாருக் அவர்கள் என்னிடம் சகோதரத்துவ முறையை இழந்தவராகவே நான் கருதுகிறேன் //
"We are all brothers" - இது உங்களைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொண்ட வாசகம் [ In Bloggers Front introduction]...
அப்படி என்ன கோபம் சகோதரரே.???
அனைத்து பின்னூட்டங்களையும் ஆஸ்த்திரேலியாவுக்கு அனுப்பி விட்டு இந்த பகுதியிலிருந்து தூக்கிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்
இப்படிக்கு
சுவர் எழுப்பி பிரிவு படாமல் ஒற்றுமை நாடும்
அதிரைக்காரனில் ஒருவன்.
sabeer.abushahruk சொன்னது…
//மூத்தவர் முகமது பாருக் அவர்கள் என்னிடம் சகோதரத்துவ முறையை இழந்தவராகவே நான் கருதுகிறேன்//
//இப்படிப்பட்ட பக்குவமற்ற கருத்தோடாவது அதிரை நிருபர் இந்தக் கருத்துப்பெட்டியை மூடுதல் நலம்.
பி.கு.: சம்சுல் இஸ்லாம் சங்கம் உள்ளடக்கிய தெருக்கள் தம்மைச் சுற்றி சுவர் எழுப்பி சுகமாக சீவிதம் நடத்த விரும்புவதில் எனக்கொன்றும் கைசேதமும் இல்லை வருத்தமும் இல்லை. நானோ அதிரைக்காரன்.//
அத்தோடு பக்குவப்படாதவர்களின் கருத்துக்களையும் களைவது நல்லது
நானும் அதிரைகாரன்தான்
//சிட்னியில் வசிக்கும் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவை சார்ந்த சஹோதரர்கள் சஹோதரர் பஷீர் வீட்டில் சஹோதரர் மீராசாஹிப் தலைமையில் கூடி உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்து உயர் கல்வியை தொடர வசதியில்லாத இஸ்லாமிய மாணவ மாணவியர்க்கு உதவித்தொகை வரும் கல்வியாண்டில் இருந்து வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. //
பதிவின் ஆரம்பத்தில் முதல் பத்தியை மீண்டும் மீண்டும் வாசிக்கவும் !
'Can' you !?
எங்கள் மூத்த சகோதரர் பாரூக் காகா அவர்கள் தற்போது சம்சுல் சங்க முகல்லாவை சேர்த்தவர்கள் தான்
சகோ .சபீர் அபு சஹ ருக் அவர்களுக்கு தங்களை தாங்கள் அதிரை காரன் என்று அறிமுக படுத்திய அடுத்தகணமே உங்களை தொடுக்கும் அடுத்த கேள்வி நீங்க எந்த தெருவு என்ற வினாவே ????? வெளிநாடுகளில் பொருள் உதவி செய்யும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தை சிபாரிசு செய்யும் நண்பர்கள் இதன் தலைமை அலுவலக நிர்வாகிகளின் ஆலோசனையை கேட்டு அதன்படி நடக்கலாமே ?
தம்பி அகமது அவர்களுக்கு ......மூத்தவர் முகமது பாருக் காக்கா அவர்கள் தற்போது சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவை சார்ந்து இருப்பது பெருமைக்குரிய விசயமே ... நம்மின் மூதாதையர்கள் அனைவரும் கடல் கரை தெரு வாசிகளே ...........அடியேனின் தகப்பனார் ஹாபில் ..முகமது அப்துல் காதர் அவர்களும் 1912 ல் கடல்கரை தெருவில் பிறந்தவரே ......கருத்து ஒற்றுமையில் சில வெளிப்படையாக சொல்லிவிடுவதால் நான் விமர்சனத்திற்கு ஆளாக்க படிக்கிறேன் .......நண்பர்கள் மனம் புண்படும் படி அடியேனின் கருத்தை எண்ணினால் மன்னிக்க வேண்டுகிறேன் .
சகோ அபூபக்கர்,
தாங்கள் இறங்கி வர முனையும்போதே உயர்ந்து விட்டீர்கள்.
ரொம்ப சந்தோஷம். வாங்க அடுத்தப் பதிவுக்குப் போய் கொஞ்சம் பள்ளிக்காலங்களை நினைவுகூர்வோம்.
//சகோதரர் அபூபக்கர்! இறங்கி வர முனையும் போதே உயர்ந்து விட்டீர்கள்//
.அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]
மருமகனே சபீர்! சிந்தியது வார்த்தையல்ல முத்துக்கள்!
[மின் தடை காரணமாக பகல் முழுதும் கணினி திறக்க முடியவில்லை!. [அதுவும் நன்மைக்கே!.] சகோதரர் அபூபக்கர்! நடந்தவை மறந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!'' வாருங்கள்!
நாமெல்லாம் நெஞ்சோடு நெஞ்சணைத்து மிலாகத்து செய்து கொள்வோம்!.
.கருத்தாடல்களில்' கனத்தவார்த்தைகள்' பறிமாறப்பட்டிருந்தால் பரஸ்பரம் மன்னிப்போம். மறப்போம்!.
''யாதும் ஊரே!: யாவரும் கேளிர்!.
முகலாக்கள் இருந்தபடியே இருக்கட்டும்;
அதற்கு சீனத்து நெடுஞ்சுவர் வேண்டாம்!.
''ஒற்றுமை என்னும் கையிற்றை பற்றி பிடித்துக் கொள்வோம்!. பயணத்தை தொடர்வோம்.
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
மதிப்பிற்குரிய முகமது பாருக் காக்கா அவர்களுக்கு நான் .....ஊரில் இருப்பவர்களை உரிமையுடனும் வெளிப்படையாகவும் பேசி பழக்க பட்டவன்.மேலும் கடந்த ஏப்ரலில் கனாடாவில் இருந்து வந்த சமயம் ஜெர்மனியை காண நேர்ந்தது அப்போது பெர்லின் சுவர்தான் எனக்கு ஞாபகம் வந்தது .... சீன சுவரையும் பெர்லின் சுவர்போல் இடித்து மங்கோலியாவை சீன ஒன்று சேர்க்கும் காலம் வராத என்ற நெருடல் அடியேனின் மனதில் ஏற்பட்ட தாக்கம்.
இவர்களும்
அவர்களும் - சீன பெர்லின்
சுவர்கள் இடிப்புப் பற்றிப் பேச - இனி
எவர்கள் ஆனாலும் ஒன்றே!
ஒற்றைக் குச்சி ஒடியும்
கட்டுக்குச்சிகள் கடினம்
தனித்தப் பசுவைக் கொல்லும் நரி
மந்தைப் பசுக்கள் புலியை வெல்லும்
மெலிந்த அலைகள் கரையில் உடைய
திரண்ட அலையோ கரையை உடைக்கும்
வீசும்வரை தென்றலாய் இருப்போம்
வீறுகொண்டால் புயலெனச் சாய்ப்போம்
சிட்னியில்
புள்ளியெனத் துவங்கினாலும்
மெல்ல மெல்ல
ஆரங்கள் கூட்டி
தூரங்கள் கடந்தவொரு
வட்டமென விரிய
திட்டங்கள் வகுப்போம்!
//மெலிந்த அலைகள் கரையில் உடைய
திரண்ட அலையோ கரையை உடைக்கும்
வீசும்வரை தென்றலாய் இருப்போம்
வீறுகொண்டால் புயலெனச் சாய்ப்போம்//
Wowwwwww ! [கவிக் காக்கா... இன்று அதிகலை வருடிய வரிகள் மட்டுமல்ல வாழ்த்தும் வரிகளாகவும் காண்கிறேன்]
வெள்ளியன்று பதிக்கப்பட்ட பதிவிலும் சொல்லப்படுவது....
"விரட்டியடிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்"
நானும் தற்போது கணினி திறந்தவுடன் மிக்க சந்தசமான கருத்து பரிமாற்றங்கள் எனது ஒரு வார்த்தை சகதோரர் அபூபக்கர் அவர்களும் எங்கள் மூத்த ஆசான் பாருக் காக்கா அவர்களும் பரஸ்பரம் நட்பு பரிமாறிகொண்ட அந்த பின்னூட்டங்கள் மிக சந்தோசமான தருணங்கள் .நம் அனைவரும் இதுபோல் நட்பு பாராட்டியே கருத்து பரிமாறுவோம் .வல்ல ஆல்லாஹ் துணை புரிவானாக ஆமின்
"அற்புத வரிகளின்ஆசானே வருக!
சொற்பதம் தந்தெங்கள் நெஞ்சங்கள்குளிர !"
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
Post a Comment