Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எங்கே நேரம்? 38

அதிரைநிருபர் பதிப்பகம் | February 11, 2015 | , , , ,

நேரம்
சிலரிடம்
கால் முளைத்து நடக்கிறது,
சிலரைத்
துரத்தி பிடிக்கச்சொல்லி ஓடுகிறது

இறக்கை முளைத்துச்
சிலர் வாழ்வில் பறந்தாலும்
கட்டில் மெத்தையிட்டு
சிலரது நேரம்
படுத்துக் கொண்டு
அடுத்தவர் நேரத்தைக்
கெடுக்கிறது

என்றாலும்
எனக்கான நேரம் மட்டும்
ஏனோ
இரண்டு எந்திரங்கள் பொருத்தி
தீராத எரிபொருளோடு
என்னேரமும்
இயங்கிக்கொண்டே இருக்கிறது

உண்ணவும் உடுத்தவும்
உபத்திரவமின்றி உறங்கி எழவும்
வரையறுக்கப்பட்ட அளவில்
சொற்பம்கூட தருவதில்லை
எனக்கான நேரம்

கடிகாரத்துள்
கொடுங்காற்று வீசியதுபோல்
கடும்வேகமாய்ச் சுழன்ற
முட்கள்
குற்றுயிரும் குலையுயிருமாகவே
எனக்கான் நேரத்தைத் தருகின்றன

என் செயல்களுக்கெல்லாம்
நியூட்டன் சொன்னதுபோல்
எதிர்வினை அமைந்தாலும்
அவை அக்கூற்றின்படி
சமமாக அமையாமல்
நேரம் குறைத்தோ
பாரம் கூட்டியோ நகர்கின்றன

எல்லா பூனைகளுக்கும்
என் நேரத்தைப்
பங்கு வைத்துக் கொடுத்துவரும்
குரங்குகளோடுதான்
நகர்கின்றன நாட்கள்

கடும் முயற்சிக்குப் பிறகு
வாய்க்கும்
என்
கனவுகளில்கூட
யாராவது வந்து
கதவைத் தட்டுகிறார்கள்
திறந்தால்
பின்னிரவு நேரம்
பிடறி முடி பிடித்து
உலுக்கி
எழுப்பிவிட்டு விடுகிறது

முன் உச்சி
முடிக்கற்றைப்  பிடித்து
இழுத்துச் செல்கிறது
என் நேரம்
நான் கடந்து சென்ற
பாதையெல்லாம்
சிதறிக் கிடக்கின்றன
என் பெயர் எழுதப் பட்ட
சோற்றுப் பருக்கைகள்!

**எனக்காக இதை எழுதித்தந்தது**
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

38 Responses So Far:

Iqbal M. Salih said...

கேள்வி: சபீர் என்ற அந்த double decker jetலிருந்து மட்டும் எழுத்துகள் எவ்வாறு நினைத்தவாறெல்லாம் சிதறிப்பறக்கின்றன?

sabeer.abushahruk said...

பதில்:

ஸுபுஹுக்கான ஜமாத்திற்கு முன்பே தொழுதுவிட்டு, பிள்ளைகளின் புத்தகப்பைகள் சுமந்து காரில் இட்டு பள்ளிக்குச் செல்லும் துபை நோக்கிய வழியெல்லாம் வாய்க்கும் சிக்னல்களில் வந்துவிழும் வாழ்க்கையை வரிசைப் படுத்தி எழுதியது - டா!

crown said...

நேரம்
சிலரிடம்
கால் முளைத்து நடக்கிறது,
சிலரைத்
துரத்தி பிடிக்கச்சொல்லி ஓடுகிறது
----------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.பலருக்கு பலவாறு நேரும் அனுபவத்தை விளக்கும் விதமாய் ஆரம்பித்துள்ளார் கவிஞர்!

crown said...

இறக்கை முளைத்துச்
சிலர் வாழ்வில் பறந்தாலும்
கட்டில் மெத்தையிட்டு
சிலரது நேரம்
படுத்துக் கொண்டு
அடுத்தவர் நேரத்தைக்
கெடுக்கிறது
---------------------------------------------------------
ஊரெங்கும் விழித்து ஆலாய் பறக்க சிலர்மட்டும் உறங்குவததில் முதல் ஆளாய் இருக்க அடுத்தவர் நேரத்தை எடுத்துத்தான் கொ(ல்)ள்கிறது.

crown said...

என்றாலும்
எனக்கான நேரம் மட்டும்
ஏனோ
இரண்டு எந்திரங்கள் பொருத்தி
தீராத எரிபொருளோடு
என்னேரமும்
இயங்கிக்கொண்டே இருக்கிறது
------------------------------------------------------------------
கவிஞரின் இயல்பான வாழ்கை முறையை 'டச்'சிங்கா எழுதியிருக்கிறார் இது தான் சமயோகிதம்!

crown said...

கொஞ்ச " நேரம்" கழித்து வரவா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆமா கிரவ்னு நேரம் கழித்து // கொஞ்ச//(வர)வும் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒவ்வொரு வரியும் வாசிப்பவருக்கான சொந்த வரியாக வசப்படுத்திய செழுமை அனைத்தும் கவிக் காக்காவுக்கு மட்டுமே சாத்தியம் !

'நல்ல' நேரம் காக்கா...!

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்…

க்ரவுன்,

இந்த நேரம் குறித்த கவலை வேலை பளுவால் அவதியுறும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் என்ற கணிப்பில்தான் தன்மையில் எழுதியுள்ளேன். உங்களுக்கும் பொறுந்தியிருக்கும்.

இருப்பினும், உலகில் பொழுதுபோக்குச் சாதனங்களும் நூதனங்களும் நீக்கமற நிறைந்திருப்பதைப் பார்த்தால் நிறைய நேரம் வைத்திருந்து போக்குபவர்கள்தான் அதிகம் என்று தோன்றுகிறது.

நேரத்தைப் போக்குபவர்களைவிட உபயோகிப்போரே வெல்கின்றனர்.

கொஞ்ச ‘நேரம்’ கழித்து வாருங்கள். கெஞ்ச நேரம் வைத்து விடாதீர்கள்.

crown said...
This comment has been removed by the author.
crown said...
This comment has been removed by the author.
crown said...

உண்ணவும் உடுத்தவும்
உபத்திரவமின்றி உறங்கி எழவும்
வரையறுக்கப்பட்ட அளவில்
சொற்பம்கூட தருவதில்லை
எனக்கான நேரம்
------------------------------------------------------------
நேரத்தில் கடமையை செய்ய எத்தனித்தாலும் நேரம் அதன் கடமையை செய்ய அனுமதிக்காவிடில் எந்த முயற்சியும் கைகூடாது! நேரம் காலமாக கனிக்கபடுவதால் அதை நிந்திக்கவும் இயலாது .காலத்தின் மீது இறைவனே சத்தியம் செய்வதால் அது வாய்க்க வேண்டிய தருணம் இறைவன் தரணும் என வேண்டி நிற்பதே பலன் அளிக்கும்!

crown said...

கடிகாரத்துள்
கொடுங்காற்று வீசியதுபோல்
கடும்வேகமாய்ச் சுழன்ற
முட்கள்
குற்றுயிரும் குலையுயிருமாகவே
எனக்கான் நேரத்தைத் தருகின்றன
------------------------------------------------------------------
இறையருள் வேண்டி நின்றால் எல்லா நேரமும் உயிர் பிழைத்து ஜீவனை நடத்திச்செல்லும் அதற்கு பொருமையும், இறை வணக்கமும் கை கொடுக்கும்! எல்லா நாளும் அமாவாசையும் அல்லவே! எல்லா நாளும் பவுர்ணமி இல்லாது போனாலும் இருள் துன்பம் நீங்கும்.

crown said...

என் செயல்களுக்கெல்லாம்
நியூட்டன் சொன்னதுபோல்
எதிர்வினை அமைந்தாலும்
அவை அக்கூற்றின்படி
சமமாக அமையாமல்
நேரம் குறைத்தோ
பாரம் கூட்டியோ நகர்கின்றன
---------------------------------------------------------------------
நத்தைக்கு அதன் ஓடு கேடு இல்லை !அந்த ஓட்டினால் தான் அது மெதுவாக ஊர்கிறது என நினைப்பது தவறு அது அதன் இயல்பு அது போல் பழக்கபடாத நேரத்தை நாமும் பழக்கிகொண்டால் அது இயல் பாகிவிடும் ஆனாலும் சில இழப்புகள் தவிர்க்கவும் முடியாது ஆனாலும் பழக்கப்படுத்திக்கொண்டால் பெரும் இழப்புகள் நேராது!

crown said...

எல்லா பூனைகளுக்கும்
என் நேரத்தைப்
பங்கு வைத்துக் கொடுத்துவரும்
குரங்குகளோடுதான்
நகர்கின்றன நாட்கள்
--------------------------------------------------------
உங்கள் நேரத்தை(cat)கேட்டு வாங்குவோரை கணக்கிடப்பழகினால் சில சந்தர்ப குரங்குகளினால் உங்கள் வாய்ப்பு "மங்கி" விடாது!

crown said...

கடும் முயற்சிக்குப் பிறகு
வாய்க்கும்
என்
கனவுகளில்கூட
யாராவது வந்து
கதவைத் தட்டுகிறார்கள்
திறந்தால்
பின்னிரவு நேரம்
பிடறி முடி பிடித்து
உலுக்கி
எழுப்பிவிட்டு விடுகிறது
---------------------------------------------------------
எழுத்தோவியம்! மயிர் சிலிர்க்க வைக்கும் கற்பனை !இருந்தாலும் சொல்ல வந்ததை சொல்லும் விதம் எப்படி இந்த வித்தை?அல்ஹம்துலில்லாஹ்! இப்படியெல்லாம் எழுதினால் பாராட்டாமல் கையை வாயில் வைத்து சும்மா சூப்பிக்கிட்டா இருக்கமுடியும்????பிடறி பிடித்து எழுப்பி விடும் சில தோசம் இருந்தாலும் இன்னும் நேரத்தில் விடியல் இருக்கு என்கிற நம்பிக்கையே இடரி விழாமல் இருக்க செய்யும் ஊன்றுகோல்!பின் உலகோடு நாமும் கலந்து ஐக்கியமாகிவிடுவோம்.

crown said...

முன் உச்சி
முடிக்கற்றைப் பிடித்து
இழுத்துச் செல்கிறது
என் நேரம்
நான் கடந்து சென்ற
பாதையெல்லாம்
சிதறிக் கிடக்கின்றன
என் பெயர் எழுதப் பட்ட
சோற்றுப் பருக்கைகள்!
---------------------------------------------------
ரசனை மிக்க வார்தை பிரயோகம் ! அதே நேரம் இயல்பாய் நடக்க கூடிய ,எல்லாருக்கும் நிகழக்கூடிய நிஜத்தை இப்படி செல்லும் வழியெல்லாம் சொல்லி செல்லும் எதார்தம் அருமை! வெகு நாட்களுக்கு பிறகு தமிழ் தம்மை சுய பரிசோதனை செய்து கொண்டுள்ளது!வாழ்துக்கள் காலத்தில் இது போல் அரிய ஆக்கம் கான நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்!
---------------------------------------------------------------

Yasir said...

காக்கா எனக்கும் மிக பொருந்தும் இக்கவிதை ..இப்பவெல்லாம் நேரம் இருக்கின்றது என்று சொல்பவர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கின்றது காக்கா...

Anonymous said...

இந்தக் கவிதை அர்த்தமுள்ள, நடைமுறைக்கேற்ற கவிதை.

இக்காலத்திற்கு உழைக்காதவர்களைத் தவிர அனைவர்களுக்கும் பொருந்தும்.

இறைவனின் துணை நம்
அணைவர்க்கும் போதுமானது!

-அல்நூர் - முகமது அலி

ZAKIR HUSSAIN said...

பாஸ்...ரொம்ப புழுங்கிட்டீங்கன்னு நினைக்கிறேன்.

ZAKIR HUSSAIN said...

பாஸ்..இது உங்களுக்கும், இதை படிப்பவர்களுக்கும், எனக்கும் சேர்த்துதான் எழுதுகிறேன்.

நேரம் இல்லை என்று பல காரணம் சொல்லப்பட்டாலும், அல்லது நேரமில்லாமல் உடலை அளவுக்கு அதிகமாக வருந்த வருந்த அலைக்கழிப்பவர்கள் அல்லது அளவுக்கு அதிகமாக ஓய்வு கொடுக்காமல் உடலை வருத்துபவர்கள்

பின்னாளில் ஒரு மருத்துவரின் வருகைக்காக அல்லது ஒரு டோக்கனுக்காக அல்லது ஒரு பார்மசியின் மருந்துதர அழைக்கும் நம்பருக்காக காத்திருப்பதே எழுதப்படாத விதி.

யாருக்காக உழைத்தோமோ எல்லோரும் வாழ்க்கையில் தூரப்போகும் கட்டாயத்திலும், நமக்கு உதவி செய்ய நினைப்பவர்களுக்கே உதவி தேவைப்படும்நிலையில் .....மிஞ்சுவது என்னவோ விரக்தி தத்துவம்தான்.


மாயம்போல் கரையும் மனித வாழ்க்கையில் சொந்தங்கள் சொல்லிச்செல்லும் சேதி என்ன???Take Care your health. No body can replace it.

Ebrahim Ansari said...

// எல்லா பூனைகளுக்கும்
என் நேரத்தைப்
பங்கு வைத்துக் கொடுத்துவரும்
குரங்குகளோடுதான்

நகர்கின்றன நாட்கள்//

Hahahahahahaaaaaaa

சிரிப்போம்! சிந்திப்போம்!

Ebrahim Ansari said...

// எல்லா பூனைகளுக்கும்
என் நேரத்தைப்
பங்கு வைத்துக் கொடுத்துவரும்
குரங்குகளோடுதான்

நகர்கின்றன நாட்கள்//

Hahahahahahaaaaaaa

சிரிப்போம்! சிந்திப்போம்!

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother AbuShahruk,

Nice thoughtful poem on time.

24 hours time is equal to all.
If the same time is seeming different for different people then the time is personalised. So it is an individual perception.

Every moment given to everyone in this world is most valuable. Lets make it pleasurable and useful one.

The time of 24 hrs is the calculation of earth completes revolving itself once. There will be different timing for different planets.

There will be entirely different timing in the judgment day and in heaven and hell.

May Almighty God bless us with great time.

B. Ahamed Ameen from Dubai.

sabeer.abushahruk said...


//நத்தைக்கு அதன் ஓடு கேடு இல்லை !அந்த ஓட்டினால் தான் அது மெதுவாக ஊர்கிறது என நினைப்பது தவறு அது அதன் இயல்பு அது போல் பழக்கபடாத நேரத்தை நாமும் பழக்கிகொண்டால் அது இயல்பாகிவிடும்//

இயல்பாகித்தான் போய்விட்டது கிரவுன். நான் நகர்வதைவிட நகர்த்தப்படுகிறேன்; செல்வதைவிட செலுத்தப்படுகிறேன்; எந்த விஞ்ஞானத்தையும் கொண்டு நிறுத்தி வைக்க முடியாத நிமிடங்கள் நொடிகளைப்போல் சட்டென கடந்து விடுகின்றன.

//உங்கள் நேரத்தை(cat)கேட்டு வாங்குவோரை கணக்கிடப்பழகினால் சில சந்தர்ப குரங்குகளினால் உங்கள் வாய்ப்பு "மங்கி" விடாது!//

catம் மங்கியும் உங்கள் சிந்தனையில் ஜாலம் செய்கின்றன. கலக்கல் கமெண்ட்.

sabeer.abushahruk said...

//ஒவ்வொரு வரியும் வாசிப்பவருக்கான சொந்த வரியாக வசப்படுத்திய செழுமை//

அபு இபு,

அட, நமக்காகவல்லவா எழுதியிருக்கிறான் என்ற ஃபீல் உங்களுக்கும் வந்திருக்குமே?

மற்றொரு குழுமத்தில் இதை நான் வாசிக்கத்தர, வாசித்துவிட்டு ' எனக்காக இதை எழுதித்தந்தது' என்று என் பெயரைப் போட்டிருப்பேன் அல்லவா அதைப்பற்றி கேட்கப்பட, நம் அன்பிற்குரிய காக்கா ஒருவர் சொன்னது என்னைக்கவர்ந்தது.

"இதையெல்லாம் எழுத அவருக்கு நேரம் இல்லாததால் இவரிடம் எழுதி வாங்கியிருக்கார்"

sabeer.abushahruk said...

//காக்கா எனக்கும் மிக பொருந்தும் இக்கவிதை//

எனக்குத் தெரியும் யாசிர்.

இந்த ஓட்டம் நமக்குத் தவிர்க்க முடியாதது.

sabeer.abushahruk said...

ஜாகிர்,

நேரத்தோடான இந்த இழுபறியானது வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டதல்லடா. நிர்பந்திக்கப்பட்டுச் சிக்கிக் கொண்டது. இது பந்தயக் குதிரை நிற்காது. நிற்கவும் கூடாது.

மருத்துவத் தேவை என்னுள் திணிக்கப்படும் காலங்களில் ஓட்டமும் சற்றுத் தணிந்திருக்கும். டோக்கன் வாங்கிக்கொண்டு வரிசையில் காத்திருப்பது பழகிய நேரமாகிப்போகும்.

//மிஞ்சுவது என்னவோ விரக்தி தத்துவம்தான்.//

எனக்கென்னவோ விரக்தி ஏற்படாது என்றே தோன்றுகிறது. காரணம் அதுபோது என் எதிர்பார்ப்புகள் வெகுவாகக் குறைந்து போயிருக்கும்.

கொண்டுபோக வழியில்லாததால் வைத்துகொள்வதிலும் ஆர்வம் இல்லை. எனவே கொடுப்பதில் வருத்தம் இல்லை.

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் தம்பி B.Ahamed Ameen,

Thanks for ticking it with me.

//Every moment given to everyone in this world is most valuable. Lets make it pleasurable and useful one.//

true!

முகமது அலி, ஈனா ஆனா காக்கா,

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

அதிரை.மெய்சா said...

நேரமும் காலமும்
நேர்த்தியாய்ச் செல்லனும்
நிகரில்லா நேரத்தை
நிம்மதியாய் கழிக்கனும்

வீணாகும் பொழுதுகள்
வீசி எறியும் வைரங்கள்
காணாமல் போகுமுன்
கழித்திடு நல் வழியில்

தேனாக இனித்திடும்
திகட்டாத நேரத்தை
தீர்ந்திடுமுன் செலவிடுவோம்
தீய வழி தவிர்த்திட்டு

பொன்னான நேரத்தை
பொறுப்போடு நாம் கழிப்போம்
புண்ணியங்கள் பல செய்து
புதுமைகள்
பல படைப்போம்

Ebrahim Ansari said...

நேரம் ஒதுக்கி திரும்பத்திரும்பப் படித்து மனதில் துண்டு போட்டு இடம் பிடித்து வைக்க வேண்டிய கவிதை. கவிதைகளிலும் கருத்துரைகளிலும் தத்துவங்கள் தடுமாற்றமின்றி தன்னிலை விளக்கங்களைச் சொல்ல வைத்துள்ள கவிதை.
உங்கள் கவிதைகளில் எதை மாஸ்டர் பீஸ் என்று சொல்வதே இப்போது எங்கள் எல்லோருக்கும் உள்ள குழப்பம். இதைப் பற்றி விவாதிக்க நேரம் வேண்டும்.

sabeer.abushahruk said...

மெய்சா,

அருவியென கொட்டுகின்றன உன் வார்த்தைகள். அதில் அறிவுறுத்தும் கருத்துகள் நேர்மையானவை.

நானும் நேரத்தை பிரயோஜனமாகத்தான் உபயோகிக்கிறேன். ஆனால், அதில் பெரும்பான்மையான நேரம் கடமைக்காகக் கழிய சொற்ப நேரமே நான் விரும்பும் வகையில் எனக்கு வாய்க்கின்றன என்பதே என் நிலைபாடு.

இதுதான் வாழ்க்கையின் நியதி என்பதையும் நான் அறிவேன். நன்மைக்குச் செலவு செய்யவே நேரம் போதவில்லை இதில் வீண்விரயம் செய்ய விநாடிகள்கூட என் வசம் இல்லை.

நீ இந்த உன் கவிதையை இன்னும் சற்று விசாலப்படுத்தித் தனி கவிதையாக்கித் தா அல்லது எங்கேனும் பதி, பகிரங்கப்படுத்த வேண்டிய கருத்துகள் இதில் உள்ளன.

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய ஈனா ஆனா காக்கா,

ஜாகிரின் எதார்த்தமான கருத்திற்கு, ப்ராக்டிக்கலான நினைவூட்டலுக்கு என் கீழ்க்கண்ட பதில் எமோஷனலாகவோ ஊனாமானாத்தனமாகவோ தோன்றினாலும் நான் உண்மையைத்தான் சொன்னேன்:

//கொண்டுபோக வழியில்லாததால் வைத்துகொள்வதிலும் ஆர்வம் இல்லை. எனவே
கொடுப்பதில் வருத்தம் இல்லை.//

என் பதில் விபரீதமானதாகத் தோன்றினால் அவன்தான் விவாதிக்க வேண்டும்.

தங்கள் அன்பிற்கு நன்றி.

(எனக்கு இதுபோன்ற 10 நிமிடங்களில் எழுதத் துவங்கி சட்டென முடிந்துபோகும் கவிதைகளின்மீது 'செல்லப்பிள்ளை' பாசம் உண்டு. ஆனால், புரிந்து கொள்ளப்படாமல் போய்விடுமோ என்று அதிகம் எழுதுவதில்லை. முன்னர் இதுபோல் நிறைய திண்ணை டாட் காமில் எழுதி வந்தேன்.)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

எங்கே நேரம் எல்லார்க்கும் உரியதே! அருமை.

முன்பு போல் இங்கே வர முடியாமல் எங்கே நேரம் போனதோ!!

அப்துல்மாலிக் said...

யார் யாருக்காக எழுதினாலும், நேரம் என்னவோ ஒவ்வொருவரின் வாழ்வியல் பாடத்தின் முதல் பாராகிராப்பாகவே தலமைதாங்கி இருக்கிறது... ஷபீர் காக்கா வாழ்த்துக்கள்

sabeer.abushahruk said...

எம் ஹெச் ஜே / அப்துல் மாலிக்,

எவ்ளோவ் நேரமானாலும் எப்படியாவது நேரம் ஒதுக்கி இந்நேரத்திற்கு வந்திருக்க வேண்டுமே என நினைத்தேன். நல்ல நேரம். வந்து விட்டீர்கள்.

எதை வேண்டுமானாலும் மேனேஜ் செய்யலாம் போலிருக்கிறது ஆனால் இந்த ட்டயம் மேனேஜ்மெண்ட்தான் கடினமாக இருக்கிறது.

ஜாகிர், படிக்கட்டுகள் தொடரில் ட்டயம் மேனேஜ்மெண்ட்பற்றி சொன்னதாக நினைவு. மறுபடியும் படிக்கனும்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

வாவன்னா சாரின் உடல் சுகக் குறைவால் தஞ்சையில் இருந்ததால் உடனடியாக கருத்திட நேரமில்லாமல் போனது.

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் எல் எம் எஸ்,

வாவன்னா சாரின் உடல்நேரம் தேறிவர இந்நேரத்தில் இறைவனிடத்தில் துஆச்செய்து கொள்கிறேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு