SRINIVASAN M.Com.M.Ed.,
ஒரு உரையாடல் With சீனிவாசன் சார்.
இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது அப்துல்காதர் சார் [ அப்போது எங்களுக்கு பொருளாதாரம் போதித்த ஆசிரியர் ] சீனிவாசன் சாரை அழைத்துக்கொண்டு வந்து இனிமேல் இவர் உங்களுக்கு வணிகவியல், கணக்கியல் [Commerce & Accountancy ] நடத்தப்போகும் ஆசிரியர் என்று அறிமுகப்படுத்திய நாள். ஆனால் சமீபத்தில் கேள்விப்பட்டேன் அவர் ஒய்வு பெற்றுவிட்டார் என...காலம் ஒடிவிட்டாலும் நம்ப முடிய வில்லை.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது ஒரு நண்பரிடம்
பேசிய உணர்வுதான். வழக்கமான நலவிசாரிப்புகளுடன்...
"வேலையில் சேர்ந்தது 11- 09 -1979, ..M.Com படித்தது பூண்டி புஸ்பம் கல்லூரி , M.Ed படித்தது அண்ணாமலை பல்கலைக்கழகம். ..ஒடி விட்டது ஏறக்குறைய 31 வருடம் 7 மாதம்...26 ஏப்ரல் 2011 ல் ஓய்வு பெற்றேன்...ஏறக்குறைய 31 set of students படிக்கவைத்து உயர்கல்விக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது'
இந்த 31Set Of students ல் யாராவது உங்களுக்கு நல்ல பழக்கமான மாணவர்கள் என்று...
எல்லோரும் பழக்கம்தான்... இன்னும் சொல்லப்போனால் நான் இந்த ஊரிலேயே தங்கிவிட்டதால் மாணவர்க்களின் பெற்றொர்களும், அவர்களது குடும்ப சூழ்நிலையும் தெரிய வாய்ப்பு இருந்தது..பிறகு மாணவர்கள் தவறு செய்ய நேர்ந்தாலும், படிப்பில் கவனம் குறைந்தாலும் அவனது குடும்ப சூழ்நிலையையும் அவனது பெற்றோர்களின் எதிர்பார்ப்பையும் எடுத்து சொல்லி அவனை நேர்வழிப்படுத்தவும், படிப்பில் நல்ல மார்க் எடுக்க வைக்கவும் என்னால் முடிந்தது. இப்படி பல மாணவர்களை நல் வழிக்கு கொண்டு வந்திருக்கிறேன்.
ஆனாலும் உங்கள் காலங்களில் உள்ள மாணவர்கள் மாதிரி பணிவன்பும் , மரியாதையும் இப்போதைய மாணவர்களில் குறைவுதான் ...காரணம் இப்போதைய கலாச்சாரமா , இல்லை வாழ்க்கை முறையா என எனக்கு தெரியவில்லை...மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் உள்ள நெருக்கம் இப்போது மிக மிக குறைவு'
'சார்...இதையே தான் ஹாஜாமுகைதீன் சார் அவர்களும் சொன்னார்கள்'
' அப்படியா....உண்மைதான்...எல்லோரும் இதைத்தான் சொல்வார்கள்'
இத்தனை வருடங்களின் உங்கள் பணியை பற்றி...
' இந்த ஆசிரியர் பணியை ஆத்மார்த்தமாக நான் ஏற்றுக்கொண்டதுதான்...அதனால் தான் மாணவர்களின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க முடிந்தது...உன்னைப்போல் மாணவர்களும் இன்னும் என்னை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்."
சார் என்னிடம் நாம் இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோ இன்னும் இருக்கிறது
ஒ..அதுவா...நான் தங்கியிருந்த வீட்டில் எடுத்ததா?...அப்போது நீ ஒரு Instant Camera [Polaride Brand] வைத்திருந்தாய்...அதில் எடுத்ததுதானே..அப்போது அது போல் Instant Camera வந்த சமயம். போட்டோ எடுத்த இடம் கூட நான்
தங்கியிருந்த வீட்டின் கிணற்று மேடு..
"சார் உங்கள் ஞாபக சக்தி ஆச்சர்யப்பட வைக்கிறது..
மறக்க முடியாத நிகழ்வுகள் ஏதாவது...
' இன்று வரை என் மனதில் மறக்கமுடியாத நினைவு எதுவென்றால் நீங்கள் எல்லோரும் செய்தSocial break up தான். அன்று ஒரு மெழுகுவர்த்தியை தலைமைஆசிரியர் விளக்கேற்ற அந்த தீபத்திலிருந்து வகுப்பாசிரியர்கள், வகுப்பாசிரியர்களிடமிருந்து மாணவர்கள் தீபத்தை ஏற்றிச்சென்ற அந்த நிகழ்வு இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது..அதற்க்கு பிறகு யாரும் அப்படி செய்யவில்லை’
கொஞ்சம் Flash back போவோமா...18 / 03 / 1981ல் நாங்கள் ஹையர் செக்கன்டரி முடித்தோம். [ஹையர் செக்கன்டரி ஆரம்பித்தபோது நான் 2 வது செட் மாணவர்கள்..] அந்த கடைசிநாளில் 18/03/1981 ல் Social Break Up [or] Farewell Party வழிநடத்தவும் , நெறியாள நான் தேர்ந்தெடுக்கப்பட்டு..எனக்கு மிகவும் உதவியாக என்னோடு படித்த இக்பால், சரபுதீன் [ சரபுதீன் நூஹு ] ,AES சாகுல் [ இப்போது துபாயில் ], ஹாஜி முஹம்மது, AHஅமானுல்லாஹ் ,AH மீராசா, அபுல்கலாம், அப்துல் ஃபத்தாஹ் , ரவிச்சந்திரன், மோகன், விஜேந்திரன், திருஞானம், குணசேகரன் , ரவி, சத்யமூர்த்தி, இப்படி ஏராளமான நண்பர்கள் அனைவரின் உதவியுடன்அழகாக செய்து முடித்தோம் [சிலரை குறிப்பிட மறந்திருப்பேன்...மன்னிக்கவும்]
சார் உங்கள் பிள்ளைகள் பற்றி...
எனக்கு 3 மகன்கள். எல்லோரும் நான் வேலை பார்த்த அதே ஸ்கூலில்தான் படித்தார்கள். அதற்க்காக எந்த சலுகையும் அவர்களுக்கு நான் காட்டவில்லை. மற்ற பிள்ளைகளைப்போல்தான் நடத்த வேண்டும் என பிடிவாதமாக எல்லா விசயங்களிலும் இருந்தேன் பசங்களும் இப்போது நல்லபடியாக படித்து முதல் மகன் IT Group Company [ Overseas Established] பெங்களூரில் வேலை, இரண்டாவது மகன் Communication Engineering துறையில் வேலை. மூன்றாவது மகன் இப்போது Final year B.Tech.
ரொம்ப நன்றி சார்...உங்களிடம் பேசியதில் நான் மாணவனாக இருந்தகாலம் அதிகம் ஞாபகம் வருகிறது.
- ZAKIR HUSSAIN
19 Responses So Far:
சீனிவாசன் சார் எங்களுக்கு வகுப்பு எடுக்கவில்லையென்றாலும் ,பள்ளியிலே நன்கு படிக்ககூடிய மாணவன் என்ற முறையில் எனக்கு நன்கு பழக்கம்...சார் அவர்களிம் சாந்தமான முகமும்...சத்தம் குறைவாக சஃப்ட்டாக பேசும் வார்த்தைகளும் இன்றும் பசுமை நினைவுகளாய் மனதில் உள்ளது..
> தான் சிரிக்காமலேயே மாணவர்களை சிரிப்பூட்டி சிந்திக்க தூண்டும் நல்ல வாத்தியார் சீனிவாசன் சார் அவர்கள்.
> அவர்கள் ஆயுள் முழுக்க ஆரோக்கியமான அனைத்தையும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
> அவர்களுடன் பேசி நினைவூட்டிய சகோதரர் ஜாஹிர் அவர்களுக்கு சலாமும், நன்றியும், வாழ்த்துக்களும்.
என்ன காக்கா லண்டன் பிடிட்டிஸ் மியூசியத்தில் கூட காணமுடியாத கலெக்கஷன்கள் உங்களிடம் இருக்கு...ஆர்வமும்,பத்திரப்படுத்தும் பழக்கமும் இல்லையேல் இது சாத்தியம் இல்லை...வாழ்த்துக்கள்
அட ! நம்ம சார் !
எங்களையும் மறந்திருக்க மாட்டீங்க ! பிரிவு உபச்சார விழாவில் (1987) ! எங்களில் ஒருவன் பேசியதையும்... !
வணிகவியலும் / கணக்கியலும் பாடம் இண்டரஸ்டிங்க இருப்பதற்கு நீங்களும் ஓர் காரணமே !
அதெப்படி மறக்க முடியும் !
கினற்றடி ஃபோட்டோ, ஆட்டோகிராஃப் கையெழுத்து - வழக்கமாக சீரின்வாசன் சார் நிற்கும் ஸ்டைல் (எப்போதுமே) !
அசத்தல் காக்கா(வின்) அசத்தலே !
நிச்சயம் இது ஒரு ஆசானுக்கு செய்யும் மரியாதை, நிச்சயம் அவருடைய ஆசிரியர் வேலை பார்த்தமைக்கு பெருமைபட்டிருப்பார்
உரையாடல் மனத்துக்கு ஒரு இதமாகவும் போட்டோ எடுத்த நினைவுகள் ஆச்சர்யமாகவும் போட்டோ வை இது நாள் வரை பாது காத்து வைத்திருந்தது பிரமிப்பையும் ஏற்படுத்திவிட்டது
என்னனமோ வரலாருலாம் பேசிரியோவுல, எனக்கு ஒன்னும் புரியலயே.. நான் பிறந்ததே 1985லதான்கிறதால அதிகபட்சம அபுஇபுறாஹீம் காக்காவின் 1987 நாள்படி பார்த்தா எனக்கு இப்பதான் ரெண்டு வயசும் ஐந்து நாளும் ஆகுது. அதான் ஒன்னும் புரியல போல.
எது எப்படியோ 2003இல் +2 முடிக்கும்போது பசங்களோடு ஒரே ஒரு புகைபடம் எடுத்தோம்.அதக்கூட எங்களால பத்திரமா வச்சிக்க முடியல. ஆனா நீங்க polaroidல் எடுத்து android காலம் வரை வைத்திருந்திருக்கிரீர்கள்..என்ன ஒரு ஆச்சரியம்!! நம்மூர்ல வலைப்பூக்கள் ஆரம்பிப்பார்கள் அதில் பதியலாம் என்று யாரவது உங்க காதுக்குள் வஹியைபோல்அன்றே சொல்லிட்டாங்களா?!?
'ஒரு போடோவையே நீ பத்திரபடுத்தி வச்சிக்க தெரியலயே!, நீயெல்லாம் போய் எங்கத்த _________ ________ போற'ன்னு யாரோ குசும்பா கேக்குறாப்புல இருக்கு!! .நா கிளம்புறேன்..இதுக்குமேல இங்க இருந்தா என் வருங்கால வாழ்க்கைக்கே வேட்டு வச்சிருவாங்க போல.
a sweet course of memories.
email sent by Vaavanna Sir(வாவன்னா)
நண்பர் சீனிவாசன் சார் அவர்களைப் பற்றிய பேட்டிக் கட்டுரை படித்தேன். மகிழ்ந்தேன்.
நான் எம்.எ. தேர்வு எழுதுவதற்காக சண்முகம் சாருடன் பூண்டி புட்பம் கல்லூரி சென்றபோது, நண்பர் சீனிவாசன் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார்.
முன் பின் அறிமுகமில்லாத எங்களுக்கு அறையில் இடம் தந்தார். சண்முகம் சார் ஊருக்கு வந்த பிறகு என்னை மிகவும் கனிவுடன் கவனித்தார்.
அந்த நன்றிக்காகவே, எங்கள் தாளாளர் அவர்களிடம் அவரை அழைத்துச் சென்று வேலைக்காக அறிமுகப்படுத்தினேன். அந்த நன்றியை பல மடங்கு வெளிப்படுத்தினார்.
நண்பர் சீனிவாசன் சிறந்த ஆசிரியர்; சிறந்த பெற்றோர்; சிறந்த நண்பர்; இவற்றுக்கெல்லாம் முன் உதாரணம்! இவர் இனிப்பனவர்; சீனி அல்லவா!
உமர்தம்பிஅண்ணன் (வாவன்னா)
அஸ்ஸலாமு அலைக்கும். யேங்க ! உங்களுக்கு சீனிவாசானைப்பிடிக்குமா? என்ன கேள்வி இது? சீனி சுவைதான் பிடிக்கும்,வாசனை பூக்கள் பிடிக்கும். அப்பசரி உங்களுக்கு சீனிவாசன் சாரை பிடிக்குமா? அவரா சீனியாட்டம் இனிக்க பேசுவார் பழக நல்லவர். சரியா சொன்னிங்க அவரப்பத்திதான் இன்று அதிரை நிருபருல வந்திருக்கு. அப்படியா சரி,சரி வீட்டுக்கு போன் உடனே படிச்சிடுறேன். எங்க நீக்காம போறியோ? அதான் சாரைபற்றி படிக்கத்தான்.
சாரிடம் நான் படித்தவன் இல்லையென்றாலும் அவரின் நடவடிக்கை தன்மை எல்லாவற்றையும் பார்த்து பரவசபட்டிருக்கேன். சினிமா கதானாயகனாட்டம் இருப்பார். பொருப்புள்ள ஆசிரியர்களில் ஒருவர்.
மின்னஞ்சல் கருத்து...
ஸ்ரீனிவாசன் ஐயா, மிக்க மகிழ்ச்சி உங்களையும் இங்கே நினைவு கூர்வதற்கு உங்களால் உருவாக்கப்பட்ட மாணாக்கள் இருக்கிறதை நினைத்து.
இங்கே குறிப்பிட்டிருந்ததுபோல் 1987ம் வருட பிரிவு உபச்சார விழாவை மட்டுமல்ல இன்னும் ஏராளமாக மறக்க முடியாத நினைவில் வைத்திருக்கிறோம், எங்களுக்கு வகுப்பு ஆசிரியராக இருந்து வழிநடத்தியதை வாழ்நாளில் மறக்க முடியாத நினைவு.
சமீபத்தில் SKMH சாரைப் பற்றியும் இங்கே எழுதியிருந்ததை நண்பர்கள் மூலம் அறிந்து தேடி வந்து வாசித்தேன், இன்று உங்களைப் பற்றியும் எழுதிய நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
நீங்கள் பல்லாண்டு நீடூழி வாழ வாழ்த்துக்கள் !
நண்பர்களே பள்ளிக்கூட வசந்தங்களை நினைவில் வைத்து பதிவதில் அருமை, தொடருங்கள் உங்களின் எழுத்துப் பணி.
முன்னாள் மாணவி
கோயம்புத்தூரிலிருந்து...
வகுப்பில் வணிகவியலும், கணக்கியலும் மதிப்பிற்குரிய சீனிவாசன் சார் பாடம் நடத்தும் பொழுது பெரும், பெரும் தொழில் வர்த்தக நிறுவனங்களை நாமே தொடங்கி அதன் நெளிவு, சுளிவுகளை நேரே கண்ட ஒரு அனுபவம் கிடைக்கும். அவர் பாடம் நடத்தும் பொழுது மிகவும் ஆர்வமாகவும் கவனச்சிதைவு எதுவும் யாருக்கும் ஏற்படாது. அந்தளவுக்கு மிகவும் சிறப்பாக பாடம் நடத்தக்கூடிய ஆசான் ஆவார்கள்.
அவர் கணக்கியலில் சொல்லித்தந்த சூத்திரம் இன்றும் எம் நினைவுகளில் நிழலாடுகிறது. அவற்றிலிருந்து சில இதோ:
"பெறுபவருக்கு பற்று வை; தருபவருக்கு வரவு வை"
"உள் வருவனவற்றிற்கு பற்று வை; வெளிச்செல்வனவற்றிற்கு வரவு வை"
"செலவு, நட்டங்களுக்கு பற்று வை; ஆதாயம், வருமானங்களுக்கு வரவு வை"
சிறுவனாக (போதிய அளவு இல்லாமல்) இருக்கும் பொழுது நமதூர் ஜாவியாவிற்குள் நுழைய நாம் எடுத்துக்கொண்ட சிரத்தைகளெல்லாம் ஞாபகம் இன்றும் இருக்கும் பொழுது எமது மதிப்பிற்குரிய ஆசான்கள் ஹாஜி முஹம்மது சார், அஹமது தம்பி சார் மற்றும் சீனிவாசன் சார் நடத்திய பாடங்களெல்லாம் எளிதில் மறந்து விடுமா என்ன? (என்னா இது சின்னப்புள்ளத்தனமா இருக்குது?)
இது போன்ற நல்லாசிரியர்களின் ஆயுட்காலம் நீண்டு அவர்கள் மக்களுக்கு செய்ய வேண்டிய தொண்டுகள் தொடரட்டுமாக மற்றும் அவர்கள் போல் இன்னும் பல ஆசிரியப்பெருமக்கள் நம்மூரில் உருவாக வேண்டும் என இறைவனைப்பிரார்த்தித்தவனாக.
மு.செ.மு. நெய்னா முஹம்மது
சவுதியிலிருந்து
பதினொன்றாம்/பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் (வணிகவியல்)
வருடம் : 1990/1992
MSM(n): நம்ம சீனிவாசன் சார் நடத்தும் வணிகவியலில், சரக்குப் பெட்டகம் - Container கப்பல் வழி வர்த்தகம் இப்போது(ம்) கண் முன்னால் கண்டு வருவதையும் அப்படியே reconcilation செய்வதுபோல் இருக்கிறது தானே !
கடல் சார்பு வர்த்தகம் நிகழுமிடத்தில் இருப்பதனால் !
இதுவரை கருத்தை பதிந்த Yasir, abu ibrahim, Thajudeen,. Sabeer, Shahul . MH Jahabar Sadhik,முன்னாள் மாணவி
[கோயம்புத்தூரிலிருந்து]Crown , Naina Mohamed எல்லோருக்கும் என் நன்றி...இந்த உரையாடலையும் உங்கள் கருத்துக்களையும் ப்ரின்ட் எடுத்து போஸ்ட்டில் சீனிவாசன் சார் அவர்களுக்குஅனுப்ப இருக்கிறேன். இதைப்போல் முன்பு எழுதிய உரையாடலையும் ஹாஜா முஹைதீன் சார் & வாவன்னா சார் இருவருக்கும் அனுப்பி பிறகு அவர்களிடம் பேசியதில் அந்த ப்ரின்ட் பார்த்ததில் சந்தோசப்பட்டதாக சொன்னார்கள்.
sweet memories.............photo is adding more value for this article......
"எல்லோருமா எல்லோர் பொருட்டு எவரேனும் ஒரு சிலரோ செய்து கொள்ளும் தொழிலில் இடைப்பட்ட நவர்களிடையே நிலவும் உறவாகும்", கூட்டன்மையின் இலக்கணம்
விளக்கம் எப்படியோ ஆனால் இலக்கணம் இப்படித்தான் என, என் (எங்கள்)
மெமோரியில் ஏற்றிய அந்த 'மொமொரீஸ்' இன்றும் 'சீனி'யாய் இனிக்கிறது
தரையை பார்த்துதானே பாடம் நடத்துகிறார் என ஏதேனும் குசும்பு செய்துவிட்டால் சரியாக ஆளை கண்டுபிடித்து தண்டிக்காமலேயே தண்டிக்கும் பக்குவம் சீனிவாசன் சாரின் சிறப்பு
நன்றி ஜாகிர் காக்கா
Jafar
Jeddah
எழுத்து பிழை 'நபர்'என்பதற்கு பதிலாக 'நவர்' என ஆகிவிட்டது மன்னிக்கவும்
இதுபோன்ற பிழை நான் +2 பயின்ற 1990 லும் ஏற்பட்டது அதையும் திருத்தியவர் சீனிவாசன் சார்தான்.
மின் அஞ்சல் வழி கருத்து
========================
"Mr. Srinivasan is such a wonderful teacher I ever seen in my life. He always showed a special care on me during my school and college days. I can't believe it that he is retired now. His handsome look in those days goes my mind in live now. I wish him for long & peaceful life.
Mr. Zahir Hussain is doing a tremendous job to interviewing some of our school days teachers in time to time. Whenever I I have an opportunity to read as such interviews my memories are going back to remember those golden days, and I am really enjoying lot".
A.H.AMANULLAH
BAHRAIN
Post a Comment