Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

புகைப்பட பொழுதுகள்.... 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 09, 2012 | , , ,


தமிழ் இலக்கணங்கள் படிக்கும் காலங்களில் தலைக்கனமாக இருந்தபோது இல்லாத ஆர்வம், இன்றைய இணைய வலைவீச்சில் சிக்கிய நம்மவர்களில் பெரும்பாலோருக்கு எழுதத் தூண்டும் வேட்கை எழுந்தது வியப்பே.

இதற்கு தடையற்ற இணையம் மட்டுமல்ல, தட்டுத் தடுமாறி தட்டினாலும் அழகு தமிழை தட்டச்சுக் கோர்வையாக காண எழுத்துருக்களை கண்டெடுத்து கொடுத்த கொடையாளிகளின் பெருந்தன்மையும் அவர்களின் தன்னலமற்ற சேவையுமே இப்படி நம்மை எழுதவும் வாசிக்கவும் வைத்திருக்கிறது.

ஏனிந்த பீடிகை என்று யோசனையில் ஆழ்ந்திட வேண்டாம்...

கவிதையானாலும், கட்டுரையானாலும், வாழ்வியல் நெறியானாலும் அதனை எழுத்தில் கொண்டுவருவதில் அதிரையர்களின் ஆர்வமும் அவர்களின் பங்கும் அதிகமே. அப்படியென்றால் அவ்வாறான திறன் கொண்ட சகோதரார்களிடையே இரண்டு புகப்படங்களை கொடுத்து அதனைக் கண்டதும் அல்லது ரசித்ததும் என்ன தோன்றியது என்ன சொல்ல எத்தனிக்கிறீர்கள் என்று கேட்டு வைக்கலாமே என்ற தைரியத்தில்தான் இங்கே அதனை பதிந்திருக்கிறோம்.



இனி உங்கள் பாடு, கவிதையானாலும், கலக்கல் வரிக் கோர்வையானாலும், நகைச்சுவையின் நெடி தூக்கலாக இருந்தாலும், சாரலின் வருடலாக இருப்பினும் எதுவாக இருந்தாலும் வரம்புக்குள் வேலியடைத்து உங்களின் எழுத்தாற்றலை பின்னூட்டங்களாக பின்னியெடுங்களேன்... 

வண்டுக்கு சொல்லித்தான் கொடுக்கனுமா தேன் எங்கிருக்கிறது என்று !?

நெறியாளர்
புகைப்பட கலைஞர் : Sஹமீது

13 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"இயற்கைப்பனி மூட்டமா? அல்லது செயற்கை புகைமூட்டமா? யார் கண்டது? மாசில்லா மரங்களும், தூசியில்லா உலகமும் இன்னும் தொலைந்து போய் விடவில்லை. இயற்கையின் அழகை இணையத்தில் கண்டேன். இன்னோவ்வா கூட என்னம்மா ரசிக்கிறது???"

சீறிப்பாயும் சூரியக்கதிர்கள்
இலையினூடே ஊடுருவுகிறது
உள்ளத்தைக்கொள்ளை கொள்கிறது.......

இரண்டு படங்களை வைத்து இருநூறு பின்னூட்டங்களை பெறும் உங்களின் ரசனையே ஒரு கலை தான் போங்கள்.....

Abdul Razik said...

தானாக உதித்த சூரியனும்
தானாகவே பூத்த பூவும்
தானாகவே வீசும் காற்றும்
தானாகவே தாங்கி நிற்கும் ஆகாயம்
போன்ற இறைவனின் படைப்பிற்கு
எந்த மனித உதவியும் தேவை இல்லை
என்பது போல இயற்கையாக ரம்மியமாய்
காட்சியலிக்கும் அழகிய சோலைவனத்துக்கிடையில்
பல மனிதர்களின் முயற்சியால் உருவாக்காப்பட்டு
தானாக இயங்க முடியா வாகனம் எப்படி ஒப்பாகும்.
இயற்கையே சொல்கிறது
இறைவனின் படைப்பிற்க்கு இணை இல்லை என்று.

Abdul Razik
Dubai

Anonymous said...

through the woods
sunlight peeps like
torchlight

searches like
searchlight
though the road
shines in daylight

swords of light
cut the wind
but the wood

I wonder
if the photographer
had the guts
to
leave the woods
where
eyes had
sights of carnival!

Sabeer Ahmed

இப்னு அப்துல் ரஜாக் said...

முதல் படம்


சூரியக் கதிர்களை
மரங்கள்தான்
மறைக்க முடியுமா?

அதேபோல,
இஸ்லாத்தின் மேன்மைதன்னை
அணைபோட்டு
தடுக்க முடியுமா?

ஏகன் அல்லாஹ்வின்
அத்தாட்சிகள்
எங்கும் விரிந்து கிடக்க
நாங்கள் உறுதியாய்,
அறுதியாய்
சொல்லுவோம்,
நாங்கள் முஸ்லிம்கள் என்று.
--------------------------------------------
இரண்டாம் படம்

இவ்வுலக வாழ்க்கை
ஒரு
சிறிய பயணம்,
அவ்வளவே

அப்பயணத்தின் இடையே
வெளிச்சம் வரும்
பசுமை வரும்
தென்றலும் வீசும்
எல்லாமே
புதுசாகத் தெரியும்
இந்தக் காரைபோல,

ஐயகோ,ஒருநாள் வரும்
ஒவ்வொரு
வீட்டு வாசலுக்கும்
மையத்துக் கார் (சந்தூக்கு)

அப்போது புரியும்
எது நிஜம் என்றும்
எது பொய் என்றும்

அதுக்கு முன்னே
தொழுது கொள்வோம்
அல்லாஹ்வை -
தஞ்சம் பெறுவோம்
அவனிடம்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கவிதை என்றாலே கம்பெடுத்து வந்து காதைத்திருகும் அர.அல.வை கூட கவிதை எழுத வைத்து விட்டீர்களே??? சும்மா சொல்லக்கூடாது உங்களின் சித்துமத்து.......

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அர.அல.வை கூட கவிதை எழுத வைத்து விட்டீர்களே??? //

MSM(n) இதையும் தானே எதிர்பாத்தேன் ! :)

நம்மவர்களின் ரனையை மிஞ்ச எதுவுமே இல்லை !

sabeer.abushahruk said...

வெளிச்ச விழுதுகள்
தொங்குகின்றன
களித்த விழிகள்
கொஞ்சுகின்றன

இந்நிலை
இருப்பதைவிட
படமாகப்
பதித்ததே அழகு

உற்றுப்பார்கும்
உச்சிச் சூரியன்
காட்டுக்குள்
கத்திவீசிப் பழகுகிறதா

யாராவது
இக் கதிர்களை
வளைத்துத் தாருங்களேன்
வர்ணமேறி வானவில்லாகட்டும்

இந்தப்
புது டிஸைன்
பெண்டிரின்
புடவைக்கா 
பொன்னகைக்கா?

Ebrahim Ansari said...

காட்சிகள் தந்த மயக்கத்திலிருந்து விடுபடவில்லை அதனால் கவிதையும் தோணலே கருத்தும் தோணலே.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நீ எங்கு மறைந்திருப்பினும் உன் செயலை நான் கண்காணிக்கிறேன் என்று அவன் படைப்பில் ஒன்றாகிய கதிரவன் மூலம் இறைவனின் அத்தாட்சியாக இக் காட்சி ஒளிர்கிறது.

இலையே நீ மறைத்தாலும் மழை நீரைக் குடிக்க உன்னுள் ஊடுருவியும் கதிரவனாகிய என்னால் முடியும்!

காரே! நீ கவர்ச்சியாயிருக்கக் காரணம், கதிரவனாகிய நான் கொடுக்கும் ஒளிக்கதிர்ப் பாய்ச்சலே!

KALAM SHAICK ABDUL KADER said...

தோன்றி மறையும் தொலைதூரச் சூரியனும்
ஊன்றியே நிற்பதாய் உள்ளம் பதியும்
மரங்களும் பின்னர் மடியத்தான் போகும்;
தரமிகு நன்மை தவிர்த்து


சுற்றுப் புறத்தின் சுகமெலாம் கெட்டழியத்
கற்று கொடுத்திடவா கானகத்தில் வாகனம்?
தொற்றும் புகையும் தொடர்ந்திடு மாதலால்
சற்று நிறுத்தவே சாற்று

அதிரை சித்திக் said...

கார் பேசுகிறது ...
இந்த வெயில் தொல்லை
தாங்க முடியலன்னு கொஞ்சம்
ஒதிங்கி நின்னா லும் .
சூரிய கதிர்கள் சுளீர்னு
குத்துதப்பா ...நமக்கு கார் செட்டுதான்
கதி ..

KALAM SHAICK ABDUL KADER said...

//

காட்சிகள் தந்த மயக்கத்திலிருந்து விடுபடவில்லை அதனால் கவிதையும் தோணலே கருத்தும் தோணலே.//

உண்மை தான் காக்கா. எனக்கும் சட்டென “ஸ்தம்பிக்க”வைத்து விட்டன;நம் கவிதை இந்தக் காமிரா கவிதையை விஞ்சி நிற்காதென்று அறிந்தும், எல்லாரும் எழுதிய பின்னர் எஞ்சி நிற்பது நானே என்று நினைத்தேன்;வெண்பாவினத்தில் செய்யுள் வனைந்தேன்!

ஊருக்குச் சென்ற சகோதரர் ஷா.ஹமீத் இப்படிச் சுட்டும் விழிச் சுடரால் (காமிராவால்) சுடச் சுட சுட்டனுப்புவதால், நாமும் ஊரிலிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டது இவரின காமிராக் கவிதை.

செந்தமிழும் நாப்பழக்கம்;
சித்திரமும் கைப்பழக்கம்;
சுட்டும் இவரின் சுந்தர படப்புழக்கம்;
கொட்டும் புகழின் முழக்கம்! (இன்ஷா அல்லாஹ்)

Yasir said...

உங்களின் மூன்றாம் கண் கிளிக்கின் அழகில் வழுக்கி விழந்துவிட்டேன்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு